ஒரு பேரழிவின் மறுபக்கம்.

கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருக்கின்றன.
 
 
 
 
 
 
தற்பொழுது கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில்,கடல் தரையானது தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் கடல் தரையுடன் கண்டங்களும் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறி இருப்பது, அவர்கள் வெளியிட்ட வரைபடம் மூலம் தெரிய வந்துள்ளது.
 
 
  
இந்த நிலையில் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில் ,உலகெங்கும் நிகழந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து புவியியல் வல்லுனர்கள் தயாரித்து வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்ட கடல் தரைப் பகுதிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
 
 
குறிப்பாக அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியானது தொடர்ச்சியாக இருப்பதன் மூலம் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது நிரூபணமாகியுள்ளது.
 
 
இதே போன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது தனித் தனியாக கடல் தரையுடன் வட கிழக்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் நிலையில் ,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரை பகுதியில் அவ்வாறு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதும் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் புலனாகியுள்ளது
 
 
இதன் மூலம் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.
 
எனவே நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்குப் புவியியல் வல்லுனர்கள் தவறான விளக்கத்தைக் கூறி இருப்பதும் புலனாகிறது.
 
 
அதே போன்று, கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதன் மூலம், நில அதிர்ச்சிகளுக்குக் காரணம் எரிமலைச் செயல் பாடே என்பதும் புலனாகிறது.
 
எரிமலைகளைச் சுற்றி உருவாகும் மேடுபள்ள வளையங்கள்.
இந்த நிலையில் எரிமலைகளுக்குள் பாறைக் குழம்பு திரண்டு எரிமலையின் உயரம் அதிகரிப்பதாலும்,எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறிய பிறகு எரிமலையின் உயரம் குறைவைதாலும், எரிமலைகளைச் சுற்றியுள்ள தரைப் பகுதியானது உயர்ந்து இறங்கும் பொழுது , எரிமலையைச் சுற்றிலும் வளைய வடிவில் வரப்புகள் வெட்டியதைப் போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, இணைய தளங்களில் வெளியிடப் பட்ட தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது .
 
குறிப்பாக அலாஸ்காவில் உள்ள ஆக்மோக் எரிமலையில் இருந்து 1945,1958 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் கரிய நிறத்தில் பாறைக் குழம்பானது வெளிப்பட்டது.
 
குறிப்பாக அந்த எரிமலையானது 1992-95 ஆண்டுகளில் 18 சென்டி மீட்டர் உயர்ந்தது.அதன் பின்னர் 1997 ஆம் ஆண்டில் சீறியதற்கு முன்பு 1995-96 ஆண்டில் 1-2 சென்டி மீட்டர் தாழ்வடைந்தது.அத்துடன் 1997 சீறியபொழுது 140 சென்டி மீட்டர் தாழ்வடைந்தது.
 
அதன் பிறகு 1997-ஆம் ஆண்டு முதல் 2003 வரை ஆண்டுக்கு 5 முதல் 15 சென்டி மீட்டர் வரை மறுபடியும் உயர்ந்து இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவானது.
 
 
(ஆக்மோக் எரிமலை)
(ஆக்மோக் எரிமலை)

 
 
இதே போன்று நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பகுதிகளிளும், நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், வளைய வடிவில் வரப்புகள் வெட்டியதைப் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும், இணை தளங்களில் வெளியிடப் பட்ட தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது .

 
( இத்தாலி நில அதிர்ச்சி மையத்தை சுற்றி உருவான மேடுபள்ள வளையங்கள் )
 
 
குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் நாள் இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் லா அகுய்லா நகரில் கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்டது.
 
அப்பொழுது  நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு எரிமலைகளைச் சுற்றி உருவாகும் வரப்பு போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலமும் தெரிய வந்துள்ளது.
( ஜியாப்ம்பாலோ ஜியாலினி )
( ஜியாப்ம்பாலோ ஜியாலினி )

அத்துடன் அந்தப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பு அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்து இருப்பதை,ஜியாப்ம்பாலோ ஜியாலினி என்ற ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்தார்.
ரேடான் வாயு வானது நிறமற்ற மணமற்ற வாயு ,இந்த வாயு எரிமலைகளில் இருந்து வெளிப்படுகிறது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததால் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
 இதே போன்று ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும் பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயுக் கசிவு ஏற்பட்டு இருப்பது ஆதாரபூர்வமாகத் தெரியவந்துள்ளது. 
( ஜப்பானில் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் உருவான மேடு பள்ள வளையங்களைக் காட்டும் செயற்கைக் கோள் படம். )
( ஜப்பானில் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் உருவான மேடு பள்ள வளையங்களைக் காட்டும் செயற்கைக் கோள் படம். )

 
 
( ஹோண்சு தீவில் நில அதிர்ச்சிக்கு மையப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கில் மார்ச் 1 முதல் மார்ச் 12 வரையிலான வானிலைப் பதிவில் நில அதிர்ச்சி ஏற்பட்ட மார்ச் 11 அன்று அசாதாரணமாக உயர்ந்த வெப்ப நிலை )
( ஹோண்சு தீவில் நில அதிர்ச்சிக்கு மையப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கில் மார்ச் 1 முதல் மார்ச் 12 வரையிலான வானிலைப் பதிவில் நில அதிர்ச்சி ஏற்பட்ட மார்ச் 11 அன்று அசாதாரணமாக உயர்ந்த வெப்ப நிலை )

 
 
ஹோண்சு தீவில் நில அதிர்ச்சி 
ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு நில அதிர்ச்சி மையத்திற்கு மேலே வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது அசாதாரணாமாக உயர்ந்து இருந்ததும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
இதற்கு அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து கசிந்த கதிரியக்கத் தன்மை உடைய ரேடான் வாயு காரணமாக இருக்கலாம் என்று நாசா ஆய்வு மையத்தைச் சேர்ந்த டிமிட்டார் ஒவ்சொனவ் என்ற புவியியல் வல்லுநர்  தெரிவித்து இருக்கிறார்.
 
குறிப்பாக அவர் ,ரேடான் வாயுவின் கதிர் வீச்சின் காரணமாக காற்றில் இருந்த மூலக் கூறுகளில் இருந்து எலெக்ட்ரான்கள் வெளியேற்றப் பட்டதால் அந்த எலெக்ட்ரான்கள் திரண்டு எலெக்ட்ரான் மேகம் உருவாகி இருக்கலாம் என்றும், இதனால் உருவான அயனிகள் நீரை ஈர்க்கும் தன்மை உடையது என்றும் இந்த வினையானது ஒரு வெப்பம் உமிழும் வினை என்பதால் வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்திருக்கலாம் என்றும் டிமிட்டார் ஒவ்சொனவ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு ஹோண்சு தீவின் வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது மறுபடியும் சாதாரண நிலைக்கு திரும்பி விட்டதும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
(  சுனாமியின் பொழுது கடல் மட்டதிற்குமேலே உயர்ந்த சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றி உருவான மேடுபள்ளவளையங்கள்)
( சுனாமியின் பொழுது கடல் மட்டதிற்குமேலே உயர்ந்த சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றி உருவான மேடுபள்ளவளையங்கள்)

 (இந்தோனேசியா சுனாமிக்குப் பிறகு சிமிழு தீவுப் பகுதியில் கடல் மட்டத்திற்கு மேலே தெரிந்த கடலடித் தாவரம்-நேசனல் ஜியாகிரபிக் வெளியிட்ட படம் )
(இந்தோனேசியா சுனாமிக்குப் பிறகு சிமிழு தீவுப் பகுதியில் கடல் மட்டத்திற்கு மேலே தெரிந்த கடலடித் தாவரம்-நேசனல் ஜியாகிரபிக் வெளியிட்ட படம் )

இதே போன்று சுமத்ரா தீவுப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுதும் (படம்-2)ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும் ,ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும் , நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 
(ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்குப் பிறகு அப்பகுதியில் கடல் மட்டத்திற்கு மேலாக தெரியும் கடல் தாவரங்கள்.)
(ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்குப் பிறகு அப்பகுதியில் கடல் மட்டத்திற்கு மேலாக தெரியும் கடல் தாவரங்கள்.)

 
( ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றி வரப்புகள் போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மூலம் தெரியவந்துள்ளது. )
( ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றி வரப்புகள் போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மூலம் தெரியவந்துள்ளது. )

எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?