தெற்காசிய சுனாமிக்கு முன்னுக்குப் பின் முரணான விளக்கங்கள்.
கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதும் ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.
ஆனால் இந்தியப் பெருங் கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்றே உறுதியாகத் தெரியாத நிலையில் ,தெற்காசிய சுனாமி ஏன் ஏற்பட்டது? என்ற கேள்விக்குப் புவியியல் வல்லுனர்கள் முன்னுக்குப் பின் முரனான விளக்கங்களை, யூகத்தின் அடிப்படையில் தெரிவித்து இருப்பது அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆனால் இந்தியப் பெருங் கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்றே உறுதியாகத் தெரியாத நிலையில் ,தெற்காசிய சுனாமி ஏன் ஏற்பட்டது? என்ற கேள்விக்குப் புவியியல் வல்லுனர்கள் முன்னுக்குப் பின் முரனான விளக்கங்களை, யூகத்தின் அடிப்படையில் தெரிவித்து இருப்பது அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
உதாரணமாக, கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட சுனாமிக்கு நாசாவைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் கிராஸ் என்ற புவியியல் வல்லுநர், இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் இந்தியக் கண்டத் தாட்டின் கடல் தளமானது நகர்ந்து சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவானது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இந்த விளக்கமானது நாசாவின் இணைய தளத்தில் 1.10.2005 அன்று வெளியிடப் பட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆனால் 27.04.2005 அன்று, நாசா வெளியிட்ட அறிக்கையில், இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில்,ஆஸ்திரேலியாக் கண்டத்தின் கடல் தளமானது நகர்ந்து சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
இந்த இரண்டு விளக்கங்களுமே அடிப்படை ஆதாரமற்ற யூகம் என்பதற்கு சான்று உள்ளது.
தற்பொழுது கண்டங்களுக்கு இடையில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதி நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதாகவும், பின்னர் குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இந்தக் கருத்தின் அடிப்படையில், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஆஸ்திரேலியா உள்பட தென் அமெரிக்கா ,ஆப்பிரிக்கா ஆகிய தென் பகுதிக் கண்டங்கள் எல்லாம், தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்துடன் இணைந்து கோண்டுவானா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெருங் கண்டமாக இருந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
பின்னர் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி, ஏற்கனவே கூறிய படி புதிய கடல் தளம் உருவாகி வடக்கு மற்றும் தெற்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும், அதனால் தென் பகுதிக் கண்டங்கள் எல்லாம் வட பகுதியை நோக்கி நகர்ந்த கடல் தளத்துடன் நகர்ந்து, தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
குறிப்பாக பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தென் துருவப் பகுதியில் அருகருகே இந்தியாவும், பின்னர் அங்கிருந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த கடல் தளத்துடன், இந்த இரண்டு கண்டங்களும் நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
தற்பொழுது இந்த இரண்டு கண்டங்களும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ளது.அதுமட்டுமல்லாது ஆரம்பத்தில் அண்டார்க்டிக் கண்டத்துடன் இணைந்து இருந்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தற்பொழுது அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து வெவ்வேறு தொலைவில் உள்ளது.எனவே இந்த இரண்டு கண்டங்களும் தனித் தனியாக நகரும் இரண்டு கடல் தளத்துடன் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
குறிப்பாக கண்டங்கள் கடல் தளத்துடன் பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும் அதனால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
ஆனால் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் உள்ள கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படவில்லை என்பது நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ,உலக அளவில் ஏற்பட்ட லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து வரைந்த நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன் அடிப்படையில் அவர்கள், இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப் பட்ட கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்றும் நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
அதாவது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கருதுவதற்கு அடிப்படையில் ஆதாரம் இல்லை.
இந்த நிலையிலேயே, நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் முன்னுக்குப் பின் முரணாக யூகத்தின் அடிப்படையில், இந்தியக் கண்டத்தின் கடல் தளம் நகர்ந்து சென்றதால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்றும், பின்னர் அதை மறுக்காமல் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் கடல் தளம் நகர்ந்து சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை வெறும் யூகத்தின் அடிப்படையில் தெரிவித்து இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
எனவே உண்மையில் தெற்காசிய சுனாமி ஏன் உருவானது ? என்பது இன்று வரை விடையளிக்கப் பட வேண்டிய கேள்வியாகவே இருக்கிறது.
எனது ஆய்வில், பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததால் தெற்காசியாவிலும் ஹைத்தி தீவிலும் ஹோண்சு தீவிலும் சுனாமிகளை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது, செயற்கைக் கோள் படங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது.
பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைக்குள் பாறைக் குழம்பு திரளும் பொழுது அந்த எரிமலைக்கு மேலே உள்ள தரைப் பகுதியானது பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயர்கிறது.
இந்த நிலையில் அந்தப் புவியடி எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறி எரிமலையின் உயரம் குறையும் பொழுது, அந்த எரிமலைக்கு மேலே உயர்ந்த தரைப் பகுதியானது மறுபடியும் கீழ் நோக்கி இறங்குகிறது.
இவ்வாறு ஒரு புவியடி எரிமலைக்கு மேலே உள்ள தரைப் பகுதியானது பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உயர்ந்து இறங்குவதால், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வளைய வடிவில் வரப்புகள் வெட்டியதைப் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன.
இவ்வாறு எரிமலையைச் சுற்றி உருவாகும் வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகியுள்ளது.
உதாரணமாக இத்தாலி நாட்டில் லா அகுலா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததுடன், நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அப்பகுதியில் எரிமலைகளில் இருந்து வெளிப் படும் ரேடான் என்ற வாயு பூமிக்கு அடியில் இருந்து கசிந்து இருந்ததையும் ஒரு ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்து இருக்கிறார்.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதே போன்று தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சியின் பொழுது சுமத்ரா தீவுக்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவின் கடற் கரைப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி உயர்ந்து இருந்தது.
அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் 20.2.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வளைய வடிவில் வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
எனவே தெற்காசிய சுனாமியின் பொழுது சிமிழு தீவின் கடற்கரை உயர்ந்ததற்கும், நில அதிர்ச்சி மற்றும் சுனாமி உருவானதற்கும் தீவுக்கு அடியில் இருந்த எரிமலை வெடித்து உயர்ந்ததே காரணம்.
எனவே உண்மையில் தெற்காசிய சுனாமி ஏன் உருவானது? என்ற கேள்வி இன்று வரை விடையளிக்கப் படாத கேள்வியாகவே இருக்கிறது.
இந்த நிலையில் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் தெற்காசிய சுனாமி உருவாகி இருப்பது , இணைய தளங்களில் வெளியான ,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதும் ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.
குறிப்பாக இந்தியாவிற்கு மேற்குப் பகுதியில் உள்ள அரபிக் கடல் பகுதியில் உள்ள எரிமலைத் தீவுகளான லட்சத் தீவுகள் மற்றும் தீகோ கார்சிகாத் தீவுகள் சற்று வளைவான பாதையில் உருவாகி இருக்கின்றன.
இதே போன்று இந்தியாவிற்கு கிழக்குப் பகுதியில் உள்ள வங்காள விரி குடாக் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் நேர் கோட்டுப் பாதையில் ஒரு எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது.குறிப்பாக இந்தக் கடலடி எரிமலைத் தொடரானது தொண்ணூறு கிழக்கு தீர்க்க ரேகைக்கு இணையாக நேர் கோட்டுப் பாதையில் உருவாகி இருப்பதால் இந்தக் கடலடி எரிமலைத் தொடரானது தொண்ணூறு கிழக்கு கடலடி மேடு என்றும் அழைக்கப் படுகிறது.
இவ்வாறு இந்தியாவுக்கு இரு புறமும் உள்ள கடல் தரையின் மேல் இரண்டு எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதற்கு புவியியல் வல்லுனர்கள் ஒரு விளக்கத்தைக் கூறுகின்றனர்.
அதாவது இந்தியக் கண்டமானது தென் துருவப் பகுதியில் இருந்து கடல் தளத்துடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த பொழுது,கடல் தளத்துக்கு அடியில் இருந்த இரண்டு எரிமலைப் பிளம்புகளால் தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டதாகவும் அதனால் கடல் தளத்தின் மேல் எரிமலைகள் தொடர்ச்சியாக உருவானதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
உண்மையில் இவ்வாறு இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் கடல் தளத்துக்கு அடியில் இருந்த எரிமலைப் பிளம்புகளால் தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்ட்டு இந்த இரண்டு எரிமலைத் தொடர்களும் உருவாகி இருந்தால் ,இந்த இரண்டு எரிமலைத் தொடர்களும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.
ஆனால் இந்தியாவுக்கு இரு புறமும் உள்ள கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் இந்த இரண்டு எரிமலைத் தொடர்களும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருகிறது.எனவே இந்தியக் கண்டமும் கடல் தளமும் நேர் கோட்டுப் பாதையில் நகர்ந்து வந்ததா அல்லது வளைவான பாதையில் நகர்ந்து வந்ததா ?என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு கிழக்கு பகுதியில் உள்ள வங்காள விரிகுடாக் கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் தொண்ணூறு கிழக்கு கடலடி மேடு என்று அழைக்கப் படும் எரிமலைத் தொடரானது நேர் கோட்டுப் பாதையில் வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.
இதன் படி இந்தியக் கண்டமானது வடக்கு திசையில் இருந்து தெற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக அமைகிறது.
ஆனால் தொண்ணூறு கிழக்கு கடலடி மேட்டுப் பகுதிக்கு கிழக்குப் பகுதியில் கடல் தளமானது வடமேற்கு திசையில் இருந்து தென் மேற்கு திசையை நோக்கி பிளவு பட்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுவது ஏற்கனவே கூறிய விளக்கத்திற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது.எனவே உண்மையில் இந்தியக் கண்டமானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது?என்ற கேள்வி எழுகிறது.ஆனால் இந்தியக் கண்டத்திற்கு இரு புறமும் உள்ள கடல் தளத்தின் மேல் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் இந்தியக் கண்டமும் கடல் தளமும் நிலையாக இருப்பது ஆணித் தரமான ஆதாரம் மூலம் நிரூபணமாகியுள்ளது.
எனவே தெற்காசிய சுனாமியானது இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்ததால் உருவானது என்றும் ,ஆஸ்திரேலியக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்ததால் உருவானது என்றும்,புவியியல் வல்லுனர்கள் கூறிய விளக்கம் ஏற்கத் தக்கதல்ல.
கண்டங்கள் நிலையாக இருப்பதற்கு ஆணித் தரமான ஆதாரம்.இதே போன்று அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளமானது தொடர்ந்து உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் ஆப்பிரிக்கக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
அதே போன்று அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி புதிய கடல் தளம் உருவாகி வட-தென் பகுதிகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இவ்வாறு அட்லாண்டிக் கடல் தளம் நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் கடல் தளமானது ஒரு புவியடி எரிமலைப் பிளம்பால் தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டதால் அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் கானரி எரிமலைத் தொடர்கள் மற்றும் கேமரூன் எரிமலைத் தொடர்கள் உருவானதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.உண்மையில் கடல்தளும் கண்டமும் நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு எரிமலைத் தொடர்களும் ஒன்றுக் கொன்று இணையயாக உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறில்லாமல் இந்த இரண்டு எரிமலைத் தொடர்களும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.எனவே எப்படி ஒரு கண்டம் ஒரே நேரத்தில் இருவேறு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க இயலும்? என்ற கேள்வி எழுகிறது.நிச்சயம் ஒரு கண்டம் ஒரே நேரத்தில் இரு வேறு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க சாத்தியம் இல்லை.எனவே கடல் தளத்தின் மேல் ஒன்றுக்கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருக்கின்றன என்பதே உண்மை.
எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகியது என்று தெரியவில்லை.
இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் உருவாகி இருக்கும் அனாகிம் எரிமலைத் தொடர்,வெல்ஸ் கிரே எரிமலைத் தொடர் மற்றும் ஸ்டிக்கைன் எரிமலைத் தொடர்களும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன.இந்த எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகியது என்ற கேள்விக்குப் புவியியல் வல்லுனர்களிடம் விடை இல்லை .இது குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக விக்கிப் பீடியா தகவல் தெரிவிக்கிறது.
'' எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகியது என்று தெரியவில்லை ''
எனவே நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்கள் முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைத் தெரிவிப்பதில் வியப்பேதும் இல்லை.
Comments