ஆய்வு பற்றி ஒரு அறிமுகம்


பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருக்கிறது.


தற்பொழுது நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும் சுனாமிகள் உருவாகுவதற்கும் புவியியல் வல்லுனர்கள் கண்டத் தட்டு நகர்ச்சி என்ற கருத்தின் அடிப்படையில் முன்னுக்குப் பின் முரனான விளக்கங்களைக் கூறி வரும் நிலையில் ,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருப்பது ,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
gowafo.gif
gowafo.gif

இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதாவது டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்பு வாழ்ந்த ஆதி கால ஊர்வன மற்றும் பாலூட்டிகளின் புதை படிவங்கள் பல்வேறு கண்டங்களில் காணப் பட்டதன் அடிப்படையில் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இருந்த பின்னர், பிரிந்து கடல் தரையைப் பிளந்து கொண்டு நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று நம்பப் பட்டது.
ஆனால் கடல் தரையில் கண்டங்கள் பிளந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் காணப் படவில்லை.
ptpicture.jpg
ptpicture.jpg

இந்த நிலையில் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ச்சியாக எரிமலைகள் இருப்பதும் அப்பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் கண்டு பிடிக்கப் பட்டது.


அதன் அடிப்படையில் அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு உயர்ந்து வந்த பிறகு குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருக்கலாம் என்றும் நம்பப் பட்டது.


இந்தக் கருத்தின் அடிப்படையில் நகரும் கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அதே போன்று ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு செல்லும் பொழுது சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.
hsvf.jpg
hsvf.jpg

இந்த நிலையில் கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகி இருப்பதற்கும் ஒரு விளக்கம் கூறப் பட்டது.


அதாவது கடல் தளமும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் கடல் தளமும் கண்டங்களும் பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிளம்புகளால் தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டதால் கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் எரிமலைகள் வரிசையாக உருவாகின என்று விளக்கம் கூறப் பட்டது.


உண்மையில் கடல் தளமும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிளம்புகளால் தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டு கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருந்தால் அந்த எரிமலைத் தொடர்களானது கடல் தளமும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் திசைக்கு இணையாக உருவாகி இருக்க வேண்டும்.


ஆனால் அவ்வாறில்லாமல் பசிபிக் கடல் தரையின் மேலும்,அட்லாண்டிக் கடல் தரையில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்பகுதி வரையிலும் அதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் மேலும் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது ,அந்தக் கடல் தளமும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் திசைக்கு முரணான திசையில் உருவாகி இருக்கிறது.


இவ்வாறு கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் முரணான திசையை நோக்கி எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதன் மூலம் கடல் தளமும்  கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.


ஆனால் இன்றுவரை கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் முரணான திசையை நோக்கி எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதற்கு புவியியல் வல்லுனர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.


இந்த நிலையில் நில அதிர்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் புவியியல் வல்லுனர்கள் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் அடிப்படை ஆதாரம் இன்றி யூகத்தின் அடிப்படையிலான விளக்கங்களைத் தெரிவித்து இருக்கின்றனர்.


ஆனால் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?