குளோபல் வார்மிங் ரகசியம்.
pv78.jpg
உலக அமைதிக்காக யாகம் வளர்த்துத் தங்களை உலகைக் காக்க வந்த இரட்சகர்களாக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் சிலருக்கு இருக்கிறது.
அமெரிக்காவில் யாகம் வளர்த்தால் யாரும் நம்ப மாட்டார்கள்.
அய்யய்யோ! கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது...
அய்யய்யோ! துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருகிக் கொண்டு இருக்கிறது...
அய்யய்யோ! தொழிற் சாலைகளில் இருந்து புகை வெளியேறிக் கொண்டு இருப்பதால் பூமி வெப்பமடைந்து கொண்டு இருக்கிறது.
எனவே உலகைக் காக்கக் கார்பன் வரி கட்டுங்கள்!
தற்பொழுது இந்த வரி, அமெரிக்கா, இந்தியா,ஜப்பான்,ஆஸ்திரேலியா தைவான்,டென்மார்க்,பின்லாந்து,பிரான்ஸ்,அயர்லாந்து,நெதர்லாந்து ,ஸ்வீடன்,நார்வே,சுவிட்சர்லாந்து,மற்றும் ஆகிய நாடுகளில் வசூலிக்கப் படுகிறது.

இந்தப் பிரச்சாரத்திற்காக , அரசியல் வாதியும்,அமெரிக்காவின் துணை அதிபருமான ,அல் கோர் மற்றும் கால நிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசுகளின் அமைப்பின் (Intergovernmental Panel on Climate Change) தலைவரான, டாக்டர் ராஜேந்திரக் குமார் பச்சோரி, ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு 2007 ஆம் ஆண்டு வழங்கப் பட்டது.

இவர்களுக்குச் சாதகமாக நாசா போன்ற அமைப்புகளும் அவ்வப் பொழுது செயக்கைக் கோள் படங்கள்,புள்ளி விவரங்கள் மற்றும் அறிக்கைகளை வெளியிடுகின்றன.
உதாரணமாகக் கடந்த 2013 ஆம் ஆண்டில் வட துருவப் பகுதியில் இருக்கும் பனிப் படலங்கள் எல்லாம் உருகி விடும் என்று நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அறிவித்து இருந்தனர்.
ஆனால் அந்த ஆண்டு வட துருவப் பகுதியில் பனிப் படலங்கள் 29 சதவீதம் அதிகரித்து இருந்தது செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்தது.
உடனே எங்கள் கணிப்பில் ஏற்பட்ட ஒரு சிறிய தவறு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்றும், ஆனாலும் உலகம் வெப்பமடைந்து கொண்டுதான் இருக்கிறது என்றும், அதனால் 2016 ஆண்டு முதல் 2050 ஆண்டுக்குள் வட துருவப் பகுதியில் கடலில் இருக்கும் பனிப் படலங்கள் காணாமல் போய் விடும் என்று, அந்த ஆராய்ச்சியாளர்கள் சப்பைக் கட்டு கட்டினார்கள்.








இந்த நிலையில் 1997 ஆம் ஆண்டில் இருந்து கடந்த 17 ஆண்டு காலமாக உலக அளவில் வெப்ப நிலை உயராமல் இருப்பதைக் கால நிலையை பதிவு செய்யும் 30,000 நிலையங்களின் தரவுகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் பிரிட்டனைச் சேர்ந்த வானிலையாளர்கள் கண்டு பிடித்தனர்.இதை லண்டனின் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் அம்பலப் படுத்தியது.



இது தொடர்பாக அல் கோருடன் நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்ட டாக்டர் ராஜேந்திர பச்சோரியிடம் கேட்கப் பட்டதற்கு அவரும் ஆமாம் ஆனாலும் நீண்ட காலமாக நிலவிய குளோபல் வார்மிங் ட்ரெண்டை உடைக்க ,குறைந்த பட்சம் இன்னும் 30 முதல் 40 ஆண்டுகள் வெப்ப நிலை உயராமல் இருக்க வேண்டும் என்றுகருத்து தெரிவித்து இருக்கிறார்.இது குறித்து ஆஸ்திரேலிய நாளிதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
ஆனாலும் இந்த பதினேழு ஆண்டு காலமாக இவர்கள் உலகம் வெப்பமடைந்து கொண்டு இருந்ததாகத்தான் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தனர்.பதினேழு ஆண்டு காலம் வெப்ப நிலை உயராமல் இருந்தது பற்றி அறியாமல் இருந்திருக்கின்றனர்.உண்மையில் இவர்களுக்கு அறிவியலில் ஆர்வம் அல்லது மக்கள் நலனில் அக்கறை இருந்திருந்தால், பதினேழு ஆண்டு காலம் ஏன் வெப்ப நிலை உயராமல் இருந்தது? என்பது குறித்து ஆராய்ச்சி செய்யப் போகிறோம்,என்று கூறி இருப்பார்கள்.ஆனால் அவர்கள் அப்படிக் கூற வில்லை.ஏனென்றால் அவர்கள்
அறிவியலில் ஆர்வமுள்ள அறிவியலாளர்களும் அல்ல.அதே போன்று மக்களின் நலனில் அக்கறை உடையவர்களும் அல்ல.

உண்மையில் உலகம் வெப்பமடைந்து கொண்டு இருக்கிறதா?









Comments