உலகம் வெப்பமடைந்ததால் அமெரிக்காவில் பனிச் சூறாவளி பாதிப்புப் ஏற்பட்டது.ஆராய்ச்சியாளர்களின் விளக்கம்.
துருவச் சூறாவளி பாதிப்புக்கு உலகம் வெப்பமடைந்து கொண்டு இருப்பதே காரணம் என்று கொரிய நாட்டின் துருவப் பகுதி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த பீக் மின் கிம் என்ற ஆராய்ச்சியாளர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக உலகம் வெப்பமடைந்து கொண்டு இருப்பதால் ,வட துருவப் பகுதிக் கடலில் இருந்த பனிப் படலங்கள் உருகி விட்டதாகவும், அதனால் கடலானது பனியால் மூடப் படாமல் இருந்ததே, வட அமெரிக்காவில் ஏற்பட்ட பனிச் சூறாவளிக்குக் காரணம் என்று நம்பப் படுகிறது.
அதாவது கடலில் பனிப் படலங்கள் இருந்தால் சூரியனின் வெப்பமானது எதிரொலிக்கப் பட்டு விடும்.அதனால் கடல் நீர் ஆவியாகாமல் இருக்கும்.ஆனால் உலகத்தின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதால் பனிப் படலங்கள் உருகி விட்டது.அதனால் சூரிய ஒளியால் கடல் நீர் ஆவியாகி மேல் நோக்கி உயர்ந்து துருவப் பகுதியில் வீசிக் கொண்டு இருந்த துருவச் சூறாவளியில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டதால் துருவச் சூறாவளியானது திசை மாறி வட அமெரிக்கக் கண்டத்தின் தென் பகுதி வரை வீசி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்று பீக் மின் கிம் நம்புகிறார்.
Comments