கண்டத் தட்டுகள் நகர்சிக் கருத்து ஒரு தவறான கருத்து.
கண்டங்களின் மேல் தற்பொழுது நிலவும் கால நிலைக்கு முற்றிலும் முராண்பாடான கால நிலையில் வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்குக் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில், புவியியலாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.
உதாரணமாக வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய, பனை மரத்தின் மகரந்தங்கள்,ஆர்க்டிக் கடல் பகுதியில் ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான படிவுகளில் காணப் படுவது குறித்து,நெதர்லாந்து நாட்டின் உத்ரெக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,அப்பி செல்யுஸ் என்ற கடல் ஆராய்ச்சியாளர்,கால நிலை மாற்றம் பற்றிய எங்களின் தற்போதைய புரிதலின் அடிப்படையில், எங்களால் இதை விளக்க முடிய வில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாகத் தற்பொழுது கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் பல்வேறு கண்டங்களிலும் தீவுகளிலும், கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு ,முன் ஒரு காலத்தில் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் ஒன்றாக இணைந்து, ஒரே நிலப் பரப்பாக இருந்த பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம், என்று விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் கண்டங்கள் பிரிந்து தனித் தனித் தீவுகளாக நகர்ந்து கொண்டு இருந்ததாகக் கூறப் படும் காலத்தில், பரிணாம வளர்ச்சியில் தோன்றிய விலங்கினங்களின் புதை படிவங்கள், மற்ற கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு,அந்த விலங்கினங்கள் ,கடலில் மிதந்து செல்லும் மரக்கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்த படி, பல நாட்கள் கடலில் தத்தளித்த படி பயணம் செய்து, தற்செயலாக மற்ற கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் சென்று இருக்கலாம், என்று விளக்கம் கூறப் படுகிறது.
உதாரணமாகக் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டமானது ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாகக் கூறப் படுகிறது.அந்தக் காலத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சியில் குரங்கிங்கனங்களின் உருவாகின.இதே பொண்டு மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கக் கண்டமும் ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாகக் கூறப் படுகிறது.இந்த நிலையில் ,தென் அமெரிக்கக் கண்டத்தில் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குரங்குகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கு,குரங்குகள் கடலின் மிதந்த மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் அட்லாண்டிக் கடலைத் தற்செயலாகக் கடந்து ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டத்திற்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்று விளக்கம் கூறப் படுகிறது.
இதே போன்று ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் மூன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குரங்குகளின் புதை படிவங்கள் ஒத்து இருப்பதற்கும் ,குரங்குகள் ஆசியக் கண்டத்தில் இருந்து தீவுக் கண்டமாக இருந்ததாக நம்பப் படும் ஆப்பிரிக்காவிற்குக் கடலின் மிதந்த மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் தற்செயலாக அடைந்து இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இதே போன்று, குளிர் பிரதேசத்தில், வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில் அந்தப் பிரதேசமானது,பூமியில் வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய பகுதியில் இருந்ததாகவும்,பின்னர் குளிர் கால நிலை நிலவக் கூடிய பகுதிகளுக்கு நகர்ந்து சென்றதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
உதாரணமாக ஸ்பிட்ஸ் பெர்ஜன் என்ற தீவானது வட துருவப் பகுதியில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் ஆர்க்டிக் வளையப் பகுதியில் அமைந்து இருக்கிறது.ஆனால் அந்தத் தீவில் வெப்ப மண்டலப் பகுதியில் வளரக் கூடிய பெரணி மற்றும் சைகேட் வகைத் தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
இதற்கு 30 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பிட்ஸ் பெர்ஜன் தீவானது வெப்பமான கால நிலை நிலவும் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அந்தத் தீவானது வடக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்றும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை இயல் வல்லுநர் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
இந்தக் கருத்தின் படி ,ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இருக்கும் எல்லிஸ்மெர் தீவானது, கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டதாகப் புவியியலாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இருக்கும் எல்லிஸ்மர் தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலை மற்றும் பாம்புகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு ஆர்க்டிக் பகுதியில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கு கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூற இயலவில்லை.
உண்மையில் கண்டங்கள் எல்லாம் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே எப்பொழுதும் இருந்திருக்கின்றன.அதனால் குரங்குகள், ஆப்பிரிக்காவில் இருந்து ஆசியக் கண்டத்திற்கு வந்த பிறகு,ஆசியாவில் இருந்து பெர்ரிங் கடல் பகுதியில் இருந்த நிலத் தொடர்பு வழியாக, வட அமெரிக்கக் கண்டத்துக்கு வந்து சேர்ந்த பிறகு, பனமா நிலத் தொடர்பு வழியாகத் தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்திருக்கின்றன.
உண்மையில் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுகளிலும் கண்டங்களிலும் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம்.
இதற்கு ஆதாரமாக நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் டைனோசரின் எலும்புப் புதை படிவம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
டைனோசர்கள் காலத்தில் கடல்மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருக்கிறது.அதன் வழியாகவே டைனோசர்கள் அன்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கின்றன.
கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால் பூமியின் வெப்ப நிலைஅதிகமாக இருந்திருக்கிறது.அதனால் துருவப் பகுதிகளிலும் டைனோசர்கள் வாழ்ந்திருக்கின்றன.
குறிப்பாக ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கும் இன்று வரை புவியியலாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.
ஏனென்றால் டைனோசர்களும் முதலைகளைப் போலவே முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யும் ஊர்வன வகை விலங்கினமாகும்.
கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பூமிக்குள் இருந்து வெளிவந்து கொண்டு இருக்கும் நீரால்தான் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.
கடல்மட்டம் உயர்ந்து கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்பநிலை குறைந்ததால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன.
Comments