ஆர்க்டிக் பகுதியில் பனி அதிகரித்ததால் அமெரிக்காவில் பனிப் பொழிவு அதிகரித்தது.எனது விளக்கம்.

கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் ,2014 ஆம் ஆண்டு ஜனவரி வரை , வட அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப் பொழிவு ஏற்பட்டதில் அமெரிக்காவே கஷ்மீர் போன்று காட்சியளித்தது.
யாருமே எதிர்பார்க்காத அந்த உறைபனி நிகழ்வானது ,வட துருவப் பகுதியில் பனிப்படலங்கள் பெருத்ததால் ஏற்பட்டு இருப்பது செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக 2013 ஆம் ஆண்டு ,ஆகஸ்ட் மாதம், வட துருவப் பகுதியில் அறுபது சதவீதம் பனிப் படலங்கள் பெருகி இருந்ததுடன் பனிப் படலங்களின் அடர்த்தி மிக அதிகமாக இருந்திருப்பது ஐரோப்பாவின் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது..அதன் பிறகு அந்தப் பனிப் படலங்களின் அடர்த்தி படிப்படியாகக் குறைந்து இருப்பதும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் பனிப் படலங்களின் அடர்த்தி அதிகமாக இருந்த பொழுது
குளிர் காலத்தில் ஏற்படக் கூடிய துருவச் சூறாவளி ஏற்பட்டு இருக்கிறது.எனவே துருவச் சூறாவளியால் ஏற்பட்ட பனியின் தாக்கமும் அதிகமாக இருந்திருக்கிறது.
அதன் பிறகு பனிப் படலங்களின் அடர்த்தி குறைந்து விட்டதால் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் வழக்கமாக வட துருவப் பகுதியில் வீசும் துருவச் சூறாவளியால் வட அமெரிக்கக் கண்டத்தில் பாதிப்பு ஏற்பட வில்லை.

http://www.thehindubusinessline.com/news/international/us-shivers-in-polar-vortex/article5550081.ece
Comments