ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பகுதிகளில் பனை வகை மரங்கள் வளர்ந்திருக்கின்றன.
நெதர்லாந்து நாட்டின் உத்ரெக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,அப்பி செல்யுஸ் என்ற கடல் ஆராய்ச்சியாளர், வட துருவப் பகுதியில் இருந்து, 500 கிலோ மீட்டர் தொலைவில், ஆர்க்டிக் கடலுக்கு அடியில், 1000 அடி ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட,ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான படிவுகளில்,பனைமரத்தின் மகரந்தங்களைக் கண்டு பிடித்துள்ளார்.
pm6.png
தற்பொழுது பனை மரங்கள் அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய பிரதேசங்களிலேயே காணப் படுகின்றன.பனை மரத்தின் விதைகளும் கன்றுகளும் பனியைத் தாக்குப் பிடிக்காது.இதன் அடிப்படையில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் பனி இருந்திருக்க வில்லை என்று கடல் ஆராய்ச்சியாளர் அப்பி செல்யுஸ் தெரிவித்து இருக்கிறார்.
அத்துடன் ஆர்க்டிக் பகுதியில் ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான பனை மரத்தின் மகரந்தங்கள் காணப் படுவது ,கால நிலை மாற்றம் பற்றிய எங்களின் கணிப் பொறி மாதிரிகளுக்கும், எதிர் கால வெப்ப நிலை பற்றி கணிக்கும் மாதிரிகளுக்கும் முரணாக இருக்கிறது என்று கடல் ஆராய்ச்சியாளர் அப்பி செல்யுஸ் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் அவர் கால நிலை மாற்றம் பற்றிய எங்களின் தற்போதைய புரிதலின் அடிப்படையில், எங்களால் இதை விளக்க முடிய வில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் பனை மர வண்டின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அன்டார்க்டிக்காக் கண்டத்தின் கடற் கரையில் பனை மரங்கள்.
இதே போன்று கோதி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,பேராசிரியரும் தொல் கால நிலை இயல் வல்லுனருமான ,ஜோர்க் ப்ரோஸ் தலைமயிலான ஆராய்ச்சிக் குழுவினர்,அண்டார்க்டிக் கண்டத்தின் கடற் கரையை ஒட்டி அமைந்து இருக்கும் வில்க்கி லேண்ட் பகுதியில்,கடலுக்கு அடியில் நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்து எடுக்கப் பட்ட ,ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான படிவுகளில்,பனை மரத்தின் மகரந்தங்கள் இருப்பதைக் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதன் மூலம் ஐந்து கோடி ஆண்டுகளுக்குமுன்பு அண்டார்க்டிக் கண்டத்தின் கடற் கரைப் பகுதியில் கோடை கால வெப்ப நிலையானது 27 முதல் 27 சென்டி கிரேட் வரை இருந்திருக்கிறது என்று தெரிவித்து இருக்கின்றனர்.
http://www.foxnews.com/scitech/2012/08/02/antarctica-once-covered-in-palm-trees-scientists-discover/
Comments