அமெரிக்காவை உறைய வைத்த துருவச் சூறாவளி.


Polar vortex: US deep freeze v The Day After Tomorrowhttp://metro.co.uk/2014/01/08/polar-vortex-us-deep-freeze-v-the-day-after-tomorrow-4254854/

http://en.wikipedia.org/wiki/2013–14_North_American_cold_wave
கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் ,2014 ஆம் ஆண்டு ஜனவரி வரை , வட அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப் பொழிவு ஏற்பட்டதில் அமெரிக்காவே கஷ்மீர் போன்று வெள்ளையாகக் காட்சியளித்தது.

http://www.vancouverobserver.com/blogs/climatesnapshot/climate-change-fuels-both-californias-record-drought-and-polar-vortex-storms
வழக்கமாக வட துருவப் பகுதியில் குளிர் காலத்தில் வளி மண்டல மேலடுக்கில்,எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் குளிர்ந்த காற்று மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி வீசும்.
துருவச் சூறாவளி என்று அழைக்கப் படும் அந்தக் காற்று மைனஸ் எண்பது டிகிரி வெப்ப நிலையுடன் இருக்கும்.
அந்தத் துருவச் சூறாவளியினால் வட அமெரிக்காக் கண்டத்தின் வட கோடிப் பகுதியில் மட்டும் சில நாட்கள் பனிப் பொழிவு ஏற்படும்.மழையுடன் கடுங் குளிர் நிலவும்.மற்ற படி வட அமெரிக்காவின் தென் பகுதியில் பாதிப்பு ஏற்படாது.
ஆனால் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் ,2014 ஆம் ஆண்டு ஜனவரி வரை, துருவச் சூறாவளியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ,வட அமெரிக்காவின் தென் கோடிப் பகுதியில் உள்ள புளோரிடா மாகாணம் வரையில் பனிப் பொழிவு ஏற்பட்டது.
வட அமெரிக்காவின் வட பகுதியிலும்,கனடாவிலும் பனியின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது.மைனஸ் இருபது டிகிரி வெப்ப நிலை நிலவியது.
உறைந்தது நயாகரா.
அமெரிக்காவில் ஏற்பட்ட வழக்கத்திற்கு மாறாக ஏற்பட்ட,பனிப் பொழிவில் அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களும் உறை பனி வெப்ப நிலையில் முடங்கிப் போனது.பல ஆறுகள் உறைந்தன.உலகப் பிரசித்தி பெற்ற நயாகரா நீர் வீழ்ச்சியே உறைந்து சிலையாக நின்றது.

http://www.dailymail.co.uk/news/article-2537831/Dont-winter-clothes-away-just-ANOTHER-Polar-Vortex-expected-hit-U-S-week.html

http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/usa/10552977/What-is-a-polar-vortex.html


http://www.dailymail.co.uk/news/article-2537831/Dont-winter-clothes-away-just-ANOTHER-Polar-Vortex-expected-hit-U-S-week.html

http://www.nydailynews.com/news/cold-temperatures-return-week-super-bowl-gallery-1.1593747?pmSlide=1.1595264

http://www.nydailynews.com/news/cold-temperatures-return-week-super-bowl-gallery-1.1593747?pmSlide=1.1595264
எதிரில் என்ன இருக்கிறது என்றே தெரியாத நிலையில் பனி பொழிந்ததால் சாலையைக் கடக்கவே சிரமப் பட்டார்கள்.அதனால் மைல் கணக்கில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.சாலைகளில் இருந்த பனியில் வாகனங்கள் சறுக்கிக் கொண்டு சென்றதால் விபத்துக்கள் ஏற்பட்டது.பலர் சாலைகளிலேயே வாகனங்களை விட்டு விட்டு நடையைக் கட்டினர்.விமான நிலையங்களில் உள்ள ஓடு பாதையிலும் பனி படிந்ததால்,நீர் உறைவதைத் தடுக்கப் பயன் படுத்தும் திரவமும் உறைந்து விட்டது.விமானங்களுக்குப் பயன் படுத்தும் எரி பொருளும் ,பசையைப் போன்று மாறி விட்டதால் 3,600 விமானங்கள் நிறுத்தப் பட்டது.பள்ளிகள், கல்லூரிகள்,தொழிற் சாலைகள் மூடப் பட்டது.
ஐநூறு கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பு.
ஆனால் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதாக, உலகுக்கே எச்சரிக்கை விடுக்கும் ஆராய்ச்சியாளர்கள் யாரும் இப்படி ஒரு திடீர் கால நிலை மாற்றம் ஏற்றப்படும் என்பதை, முன் கூட்டியே கணித்து ஏனோ அமெரிக்காவை எச்சரிக்கை செய்ய வில்லை.

http://www.moruq.net/s%C9%99kill%C9%99r/muxt%C9%99lif-s%C9%99kill%C9%99r/amerikada-qis-foto/

http://www.denverpost.com/nationworld/ci_24858401/dangerous-polar-air-moves-across-u-s


http://www.dailymail.co.uk/news/article-2894876/Ready-shiver-Arctic-air-America-ice.html

http://www.thehindubusinessline.com/news/international/us-shivers-in-polar-vortex/article5550081.ece
Comments