பத்திரிக்கைச் செய்தி வெளியீடு.


வணக்கம்.
பொருள்:கடந்த 2013 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஆர்க்டிக் பகுதியில் உருவான அதிகப் படியான பனிப் படலங்களால் ,கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில்,அமெரிக்காவைத் தாக்கிய பனிபொழிவு உருவாகி இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில் அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களில் கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டது.
எதிர்பாராத அந்த நிகழ்வால் அமெரிக்காவே முடங்கிப் போனது.
இந்த நிலையில்,இணைய தளங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், நான் மேற்கொண்ட ஆய்வில், அமெரிக்காவைத் தாக்கிய அந்தப் பனிப் பொழிவுக்கு,ஆர்க்டிக் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் உருவான, பனிப் படலங்களே காரணம் ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
தற்பொழுது அமெரிக்காவைத் தாக்கிய பனிப் பொழிவுக்கு 'குளோபல் வார்மிங்' கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூறப் படுகிறது.
குறிப்பாக உலகின் வெப்ப நிலை உயர்ந்ததால், வட துருவப் பகுதிக் கடலின் மேற்பரப்பில் இருந்த பனிப் படலங்கள் உருகி விட்டதாகவும், அதனால் வட துருவப் பகுதியில் ,கடலின் மேற்பரப்பில் இருந்த கடல் நீரானது, சூரிய ஒளியால் ஆவியாகி மேல் நோக்கி உயர்ந்ததாகவும், அதனால் வழக்கமாக துருவப் பகுதியில், வளி மண்டல மேலடுக்கில் வீசும் துருவச் சூறாவளியில் பாதிப்பு ஏற்பட்டதால்,அந்தத் துருவச் சூறாவளியின் பாதை மாறி, வட அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவலாகப் பரவிப் பனிப் பொழிவை ஏற்படுத்தியதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் பிரிட்டனின் வானிலை ஆய்வு மையத்தினர்,வெப்ப நிலையைப் பதிவு செய்யும் 30,000 நிலையங்களின் பதிவுகளின் மூலம்,கடந்த 1997 ஆம் ஆண்டு முதல், 2014 ஆம் ஆண்டு வரையிலான,பதினேழு ஆண்டு காலத்தில், உலகின் வெப்ப நிலை உயராமல் இருந்திருப்பதைக் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
எனவே கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில் அமெரிக்காவில் பரவலாகப் பனிப் பொழிவு ஏற்பட்டதற்கு, குளோபல் வார்மிங்' கருத்தின் அடிப்படையில் கூறப் பட்ட விளக்கம் சரியல்ல.
குறிப்பாகக் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் , வட துருவப் பகுதியில் பனிப் படலங்களே இருக்காது என்று, பேராசிரியர் டாக்டர்,விஸ்லாவ் மாஸ்லோவ்ஸ்கி மற்றும் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருப்பதாகக் கடந்த 2007 ஆம் ஆண்டு, பி பி சி செய்தி நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டது.
ஆனால் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததற்கு முற்றிலும் மாறாகக் கடந்த 2013 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், வழக்கத்திற்கு மாறாக ஆர்க்டிக் பகுதியில், 533,000 சதுர மைல் பரப்பளவுக்கு, அதாவது 29 சதவீதம் அதிகமாகப் பனிப் படலங்கள் உருவாகி இருந்திருப்பது, நாசாவின் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
எனவே அமெரிக்காவில் பரவலாகப் பனிப் பொழிவு ஏற்பட்டதற்கு, ஆர்க்டிக் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் உருவான பனிப் படலங்களே காரணம் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
நன்றி,
தங்களின் நம்பிக்கையுள்ள,
விஞ்ஞானி.க.பொன்முடி.
சென்னை.
20.02.2015

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?