பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததால் தெற்காசிய சுனாமி உருவானது.

பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தெற்காசிய சுனாமிக்குப் பிறகு,சுமத்ரா தீவுக்கு அருகில் இருக்கும்,சிமிழு என்ற தீவின் வடமேற்குப் பகுதியானது,கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.அதனால் அந்தப் பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள்,கடல் மட்டத்துக்கு மேலாக வெளியில் தெரிந்தன.
simcoral.jpgsimcoral.jpg
தீவு ஏன் உயர்ந்தது?
sim rings.pngsim rings.png
அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் கடந்த 22.02.2008, அன்று கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்டது.அப்பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,வளைய வடிவில் வரப்புகளை வெட்டியதைப் போன்று,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது,ஆலோஸ் என்ற ஜப்பான் நாட்டின் செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட,படத்தில் பதிவாகி இருந்தது.

இதே போன்ற தரை மட்ட மாறுபாடுகள்,எரிமலைகளைச் சுற்றி உருவாகி இருப்பதைப் புவியியல் வல்லுனர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.
okmokvolcanookmokvolcano
குறிப்பாக ஆக்மோக் என்ற எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வளைய வடிவ வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் பதிவாகி இருப்பது செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.

குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு மேல் நோக்கி உயர்ந்து ஒரு எரிமலைக்குள் திரளும் பொழுது,அந்த எரிமலையின் உயரம் அதிகரிக்கிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் சில சென்டி மீட்டர் உயர்கிறது.

பின்னர் எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளிப் படும் பொழுது,எரிமலையின் உயரம் சிறிது இறங்குகிறது.அதனால் எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் சிறிது தாழ்வடைகிறது.

இவ்வாறு எரிமலையைச் சுற்றியுள்ள தரை பகுதியானது எரிமலையுடன் உயர்ந்து இறங்குவதால்,எரிமலையைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வளைய வடிவ வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன.

இந்த நிலையில்,அந்த எரிமலைப் பகுதியின் மேல் பறந்து செல்லும் செயற்கைக் கோளில் இருந்து, தரையை நோக்கி ரேடியோ கதிர்கள் அனுப்பப் படும் பொழுது, அந்த ரேடியோ கதிர்கள் தரையில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டு திரும்ப செயற்கைக் கோளை வந்தடையும் அலைகளில் உள்ள மாறுபாடுகள் மூலம்,தரை மட்ட மாறுபாடுகள் பதிவு செய்யப் படுகிறது.

இதே போன்று ஒரு எரிமலைப் பகுதியின் மேல் பல முறை பறந்து செல்லும் செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட பல பதிவுகளை கணிப் பொறி மூலம் ஒரே படமாகத் தொகுக்கப் படும் பொழுது,இடைப் பட்ட காலத்தில் அந்த எரிமலையின் சுற்றுப் புரத்தில் உள்ள தரையானது எத்தனை சென்டி மீட்டர் உயர்ந்ததது எனத் துல்லியமாகப் பதிவாகிறது.

இதே போன்ற வளைய வடிவிலான வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் ,நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும் உருவாகி இருப்பதும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
itainsar.jpgitainsar.jpg
உதாரணமாக இத்தாலி நாட்டில்,லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வளைய வடிவிலான வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
italyradondetectionitalyradondetection
அத்துடன் லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஓர் வாரத்துக்கு முன்பு,எரிமலைகளில் இருந்து வெளிப் படும் ரேடான் என்ற கதிரியக்கத் தன்மையுடைய வாயு,பூமிக்கு அடியில் இருந்து வெளிப் பட்டு இருப்பதையும் ஜியாவுலாணி என்ற தொழில் நுட்ப வல்லுநர் கண்டு பிடித்தார்.

இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

எனவே தெற்காசிய சுனாமியின் பொழுது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடிவரை உயர்ந்து இருந்த சிமிழு தீவின் மத்தியப் பகுதியில், நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுதும்,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவில் வளைய வடிவ வரப்பு மேடுகள் உருவாகி இருப்பதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
honshuring.jpghonshuring.jpg

இதே போன்று ஜப்பானில் ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வளைய வடிவ வரப்பு மேடுகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
honshuatmosphere.jpghonshuatmosphere.jpg
அத்துடன் சுனாமி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் வளி மண்டலத்தில் அசாதாரணமாக வெப்ப நிலை உயர்ந்து இருந்ததும் வானிலை செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட படங்களில் பதிவாகி இருந்தது.

இவ்வாறு வளி மண்டலத்தில் அசாதாரணமாக வெப்ப நிலை உயர்ந்ததற்கு,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்தது காரணமாக இருக்கலாம் என்று நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.

எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஜப்பானிலும் சுனாமி உருவாகி இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?