சுனாமிக்கு நாசா விஞ்ஞானிகள் கூறிய விளக்கம் தவறு.
கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையிலேயே,கடல் தளம் நகர்ந்து கண்டத்துக்கு அடியில் சென்றதால், நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாகப் புவியியலாளர்கள் தவறாக விளக்கம் தெரிவித்து இருப்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
தெற்காசிய சுனாமி குறித்து,அமெரிக்காவின் முன்னணி அறிவியல் ஆய்வு மையமான நாசா கடந்த ,10.03.2005 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், இந்தோனேசியாவுக்கு அடியில், இந்தியக் கண்டமானது, கடல் தளத்துடன், உரசியபடி நகர்ந்து சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள் விளக்கம் தெரிவித்தனர்.
ஆனால் மூன்று மாதத்திற்குப் பிறகு 27.04.2005 அன்று, அதே நாசா வெளியிட்ட இன்னொரு அறிக்கையில், இந்தோனேசியாவுக்கு அடியில், ஆஸ்திரேலியக் கண்டமானது, கடல் தளத்துடன், உரசியபடி நகர்ந்து சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள் முன்னுக்குப் பின் முரணாக விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
உண்மையில் நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்களுக்கு இந்தோனேசியக் கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்றே தெரியாது.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இணைந்த நிலையில்,தென் துருவப் பகுதியில் ,அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகப் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.
இதே போன்று தென் அமெரிக்கா,மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களும் ஒன்றாக இணைந்த நிலையில் தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு கோண்டுவாணா என்ற பெரிய கண்டமாக இருந்ததாகவும் நம்பப் படுகிறது.
அதன் பிறகு,பூமிக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பானது வெப்பத்தால் இலேசாகி மேற்பகுதிக்கு வந்த பிறகு,குளிர்ந்து கணம் அதிகரித்ததால் மறுபடியும் பூமிக்குள்ளேயே சென்றதாகவும் ,இவ்வாறு பூமிக்கு அடியில் பாறைக் குழம்பானது ஒரு சக்கரம் போன்று சுழன்றதால்,கோண்டுவாணாக் கண்டமானது,தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய காண்டங்களாகப் பிரிந்ததகவும் நம்பப் படுகிறது.
அதன் பிறகு,அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும்,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வந்த பாறைக் குழம்பானது,குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவானதாக நம்பப் படுகிறது.
இதே போன்று தொடர்ந்து நடை பெற்றதாகவும்,அதனால் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி வடக்கு மற்றும் தெற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் தென்துருவப் பகுதியில் இருந்து வட பகுதியை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடங்களுக்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.
தற்பொழுது இந்தியாவும்,ஆஸ்திரேலியாவும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருக்கிறது.
ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த இந்த இரண்டு கண்டங்களும், தற்பொழுது இருப்பது போன்று,ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு விலகி,கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களும் இரண்டு தனித் தனிக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்,
இந்த நிலையில் கண்டங்களானது கண்டங்களைச் சுற்றியுள்ள கடல் தளங்களுடன் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இந்த விளக்கம் உண்மையென்றால்,இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில், பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்குத் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள்,அண்டார்க்டிக் கண்டம் வரைக்கும் ஏற்பட வேண்டும்.
இந்த நிலையில் ,நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல்,1998 ஆம் ஆண்டு வரையிலான, முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் ஏற்பட்ட,3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டனர்.
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில்,தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு,அண்டார்க்டிக் கண்டம் வரை நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதன் மூலம் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் உள்ள கடல் தரையானது ஒரே தொடர்ச்சியாக இருப்பதுடன்,கடல் தரையும், கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில், நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள், கண்டத் தட்டுகளின் இயக்கத்தைக் குறிப்பதாகக் கூறப் படும், ஒரு வரை படத்தையும் வெளியிட்டார்கள்.
அந்த வரை படத்தில்,இந்தியாவையும்,ஆஸ்திரேலியாவையும்,தனித் தனியாக இரண்டு கடல் தளத்தின் மேல் இருப்பது போன்று,பிரித்துக் காட்டாமல்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில்,சிறு சிறு கோடுகளை மட்டும் வரைந்து,கோடிட்ட பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் மூலம்,கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்றே உறுதியாகத் தெரியாத நிலையிலேயே,இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்து இந்தோனேசியாவுக்கு அடியில் சென்றதால்தான் நில அதிர்சியும்சுனாமியும் ஏற்பட்டதாக முதலில் ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து விட்டு, பின்னர் அந்த விளக்கத்தை மறுக்கவோ நிராகரிக்கவோ செய்யாமல், ஆஸ்திரேலியாக் கண்டமானது, கடல் தளத்துடன் இந்தோனேசியாவுக்கு அடியில் ,நகர்ந்து சென்றதால்தான், நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக, முன்னுக்குப் பின் முரணாக,அடிப்படை ஆதாரம் இன்றி, ஒரு தவறான விளக்கத்தை, நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள் தெரிவித்து இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
சுனாமியை உருவாக்கியது இந்தியக் கண்டத் தட்டா? அல்லது ஆஸ்திரேலியாக் கண்டத் தட்டா?
இந்த நிலையில்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே,இந்தோனேசியா உள்பட,ஹைத்தி மற்றும் ஹோண்சு தீவுகளிலும், நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருப்பதும் ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
தொடரும்....
Comments