சுனாமியை முன் கூட்டியே அறியலாம்.

vpr.gifvpr.gif
vpr1.jpgvpr1.jpg
vpr4.jpgvpr4.jpg
எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுகின்றன.எனவே எரிமலைகளின் இயக்கத்தை அறிவதன் மூலம் ,நில அதிர்ச்சியையும் சுனாமியையும் முன் கூட்டியே அறிய இயலும்.

உதாரணமாக ,வட அமெரிக்கக் கண்டத்தில்,ஓரிகன் நகரக் கடற்பகுதியில் 1981ஆம் ஆண்டு டாக்டர் ராபர்ட் எம்பிளே என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், ஓரிகன் நகரக் கடற்கரையில் இருந்து, 300 மைல் தொலைவில், கடலுக்கு அடியில் ஒரு இடத்தில், நீரில் அதிக அளவில் கனிமங்கள் கரைந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அப்பொழுது அங்கு எரிமலைகள் எதுவும் காணப்பட வில்லை.

ஆனால் ஒன்பது ஆண்டுகள் கழித்து, 1989ஆம் ஆண்டு அதே இடத்தில், பத்து மைல் தூரத்திற்குப் பத்து சிறிய எரிமலைகள் புதிதாக உருவாகியிருப்பதை அந்த ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடித்தார்கள்.

எனவே கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பகுதியில் கடல் நீரில் கனிமங்களின் அளவை அறியும் கருவிகளைப் பொருத்துவதன் மூலம் கடலடி எரிமலைகளின் இயக்கத்தை அறிய இயலும்.அதன் அடிப்படையில் நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஏற்படப் போவதையும் அறிய இயலும்.

குறிப்பாக ஒரு எரிமலை வெடிப்பதற்கு முன்பு அதிலிருந்து கந்தக வாயு உள்பட பல வாயுக்கள் வெளிவருகின்றன.உதாரணமாக பிலிப்பைன்ஸ் தீவில் உள்ள பினாடுபோ எரிமலையில் இருந்து 13.05.1991 அன்று,அதிக அளவு கந்தக வாயுக்கள் வெளிவந்தது.அதன் பிறகு ஒரு மாதத்திற்குப் பிறகு ,12.06.1991 அன்று,அந்த எரிமலை வெடித்துச் சீறியது.
இதே போன்று கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.

(Tsunami early warning system)(Tsunami early warning system)
vpr6.jpgvpr6.jpg
ஆனால் தற்பொழுது கடல் தளம் நகர்ந்து கண்டங்களுக்கு அடியிலும் தீவுகளுக்கு அடியிலும் செல்வதாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுவதாகப் புவியியலாளர்கள் தவறாக நம்புகின்றனர்.

எனவே அதன் அடிப்படையிலேயே சுனாமியை அறியும் முறையும்  மேற்கொள்ளப் படுகிறது.
tpre25.jpgtpre25.jpg
tpre22.jpgtpre22.jpg
tpre13.giftpre13.gif
vpr14.gifvpr14.gif
குறிப்பாகக் கடலுக்கு அடியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு, நில அதிர்ச்சியால் கடல் நீரானது மேல் நோக்கி உந்தப்படும் பொழுது, ஏற்படும் கடல் மட்ட உயர்வால், உருவாகும் அழுத்த அதிகரிப்பு, கடல் தரையில் பொருத்தப் பட்டு இருக்கும் கருவிகள் மூலம் (pressure sensor) அறியப் படுகிறது.

அதன் பிறகு அந்தத் தகவல்கள்  சமிங்ஞைகள் (Signal) மூலம்,கடல் மட்டத்தில் மிதந்து கொண்டு இருக்கும் மிதவைக் கருவிக்கு (tsunami buoy )அனுப்பப் படுகிறது.

அதன் பிறகு அந்தத் தகவல்களானது செயற்கைக் கோளுக்கு அனுப்பப் படுகிறது.

அதன் பிறகு அந்தத் தகவல்கள் சுனாமி ஆய்வு மையத்திற்கு அனுப்பப் படுகிறது.சுனாமி ஆய்வு மையத்தில் இருக்கும் நிபுணர்கள் அந்தத் தகவல்களை ஆய்வு செய்து சுனாமி வருமா? வராதா? என்று முடிவெடுத்து அறிவிக்கின்றனர்.

இந்த முறையில்  நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகே தகவல்கள் பெறப் பட்டு ஆய்வு மேற்கொள்ளப் படுவதால், சுனாமி வருவதற்குப் பத்து முதல் இருபது நிமிடங்களுக்கு முன்பே சுனாமி எச்சரிக்கை செய்ய முடிகிறது.

ஆனால் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடிக்கப் போவதை முன் கூட்டியே அறிவதன் மூலம், நில அதிர்ச்சியையும் சுனாமியையும் பல நாட்களுக்கு முன்பே அறிய இயலும்.

vpr8.pngvpr8.png


vpr12.pngvpr12.png

vpr15.jpgvpr15.jpg
vpr16.jpgvpr16.jpg
( Above figure - Map of the eastern Indian Ocean showing the location of: the earthquake epicentres (‘star’) and direction of the primary wave propagation for the 2004, 2005, 2006 and 2007 tsunamis; Real-time sea level measurement stations at Padang, Cocos Islands, Christmas Island and the deep water tsunameter. The plate boundary is shown by the dashed line and area of rupture for the 2004 tsunami is shown by the grey line.)
vpr17.jpgvpr17.jpg

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?