சுனாமிக்கு புவியியலாளர்களால்,சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.


haitilocationhaitilocation
கடந்த 12.01.2010 ஆம் ஆண்டு,ஹைத்தி தீவில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்குக் காரணமான நில அதிர்ச்சி ஏற்பட்டதால் சிறிய அளவிலான சுனாமி உருவானது.

அந்த நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது? என்பது குறித்து அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டனர்.

haitiequsgshaitiequsgs

அதில் ஹைத்தி தீவானது வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததால், வட அமெரிக்கக் கண்டம் மற்றும் ஹைத்தி தீவின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டு இருந்தது.

228228
167167
குறிப்பாக வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும், அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில், வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும், கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, முறையே மேற்கு மற்றும் வட மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளங்களுடன், வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும்,தென் அமெரிக்கக் கண்டமானது,வட மேற்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

nature map.jpgnature map.jpg

உண்மையில் இந்த இரண்டு கண்டங்களும் இவ்வாறு தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருந்தால்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருந்து இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்டா கடல் தரைப் பகுதியில் தொடங்கி, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை, தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.

இந்த நிலையில் ,நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல்,1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் ஏற்பட்ட,3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டனர்.

ஆனால் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

1circle1circle
இதன் அடிப்படையில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் வரையறுக்கப் படாத எல்லைப் பகுதி என்றும் குறிப்பிடப் படுகிறது.


undefindboundaryundefindboundary

இதன் மூலம் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியானது,தொடர்ச்சியாக இருப்பதும்,கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த இரண்டு கண்டகளுக்கும் இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே எப்படி உருவாகி தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தது? என்ற கேள்வி புவியியலாளர்களுக்கு எழுந்தது. 

சில புவியியலாளர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது பசிபிக் கடல் பகுதியில்,கடல் தளத்துக்கு அடியில் இருந்து ஒரு எரிமலைப் பிளம்பால் துளைக்கப் பட்டதால்,கடல் தளத்துக்கு மேலாக எரிமலைத் தீவுகளாக உருவாகிய பிறகு,அந்தத் தீவுக் கூட்டமே ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,பசிபிக் கடல் தளத்துடன்,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் நுழைந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாக நம்புகிறார்கள்.இந்த விளக்கம் 'பசிபிக் மாடல்'  என்று அழைக்கப் படுகிறது.

pomopomo


175175

குறிப்பாக ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்காக் கண்டத்துக்கும் தென் அமெரிக்காக் கண்டத்துக்கும் இடையில் சிறிய இடைவெளி இருந்ததாகவும் அந்த இடைவெளிக்குள் கரீபியன் தீவுக் கூட்டமானது வளைந்து நுழைந்த பிறகு பெரிதானதாகவும் புவியியலாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

அத்துடன் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,வட அமெரிக்காக் கண்டதுக்கும் தென் அமெரிக்காக் கண்டதுக்கும் இடையில் இருக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதி உருவாகி இருக்க வில்லை என்றும்,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,மத்திய அமெரிக்க நிலப் பகுதி உருவானதாகவும்,புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

கரீபியன் தீவுகள் நிலையாக இருக்கிறது ,புதை படிவ ஆதாரங்கள்.

இந்த நிலையில், டெக்சாஸ் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறையைச் சேர்ந்த, டி டெலிவோர்யாஸ் மற்றும் லக்னோவில் உள்ள பீர்பால் சாஹினி தொல் தாவரவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த, ஷ்யாம் ஸ்ரீ வத்ஸ்சவா ஆகியோர், ஹோண்டுராஸ் நாட்டின் மத்தியப் பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களைக் கண்டு பிடித்தனர்.

இதே போன்று 1985  ஆம் ஆண்டு, ரிச்சி மற்றும் பின்ச் ஆகிய புவியியல் வல்லுனர்கள், ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சான் சுவான்சிடோ பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த, ஸ்டெபானோ செரஸ் என்று அழைக்கப் படும், அமோனிட்டிஸ் வகைக் கடல் ஒட்டுடலியின் புதை படிவங்களைக் கண்டு பிடித்தனர்.

எனவே பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே, மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது, புதை படிவ ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகிறது.

கியூபாவில் டைனோசர் புதை படிவங்கள்.

இதே போன்று டைனோசரின் புதை படிவ அதரங்கள் மூலமாகவும் கரீபியன் தீவானது கடந்த பதினைந்து கோடி ஆண்டு காலமாக அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நிலையாக இருந்திருப்பதற்கு ஆதாரமாக, பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லி இடுப்பு வகை  டைனோசரின், முதுகெலும்பின் புதை படிவங்கள், கியூபா தீவின் மேற்குப் பகுதியில் உள்ள, சியரா டி ஆர்காநோஸ் மலைப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

கியூபா நாட்டின் தேசிய இயற்கை அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்விலங்கியல் வல்லுனர்களான, மானுவேல் இல்டுரால்டி வின்சென்ட் மற்றும் ஜுல்மா காஸ்பரினி ஆகியோர், மேற்கொண்ட அகழ்வாய்வில் இந்தப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதன் மூலம் வட அமெரிக்கக் கண்டத்திற்கும், தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் உள்ள கரீபியன் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த கியூபாவில், பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே டைனோசர்கள் வாழ்ந்திருப்பது உறுதி செய்யப் பட்டள்ளது.


இது போன்ற பல ஆதாரங்கள் மற்றும் கண்டு பிடிப்புகள் மூலம் தற்பொழுது சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்ததாகக் கூறப் படும் விளக்கத்தை ஏற்க மறுக்கின்றனர்.

pomo1pomo1
அத்துடன் கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்றும்,கரீபியன் தீவுக் கூட்டமானது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கலாம் என்றும் ஒரு புதிய கருத்தை முன் மொழிந்திருக்கின்றனர்.இந்தக் கருத்து 'அட்லாண்டிக் மாடல்' என்று அழைக்கப் படுகிறது.

இன்னும் சில புவியியல் வல்லுனர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே (in situ model ) உருவாகி இருக்கலாம் என்ற கருத்தையும் முன் மொழிந்திருக்கின்றனர்.இந்தக் கருத்து 'இன் சிட்டு' மாடல் என்று அழைக்கப் படுகிறது.

pomo2.pngpomo2.png

ஆனால் இன்று வரை கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எப்படி தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தது என்பது குறித்தும் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க்ரியது என்பது குறித்தும் புவியியல் வல்லுனர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

முக்கியமாக எரிமலைச் செயல் பாட்டால் உருவாகும் தீவுகள் கோபுரம் போன்று இருக்கும்,ஆனால் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள பெரிய தீவான கியூபா தீவானது சமதளமாக இருப்பதுடன் கியூபாவில் எரிமலைகளும் இல்லை.

இந்த நிலையில், கரீபியன் தீவுக் கூட்டமானது, எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது? என்று நேரிடையாகக் கூறினால், பின்னர் அது தொடர்பாக எழும் கேள்விகளுக்குப் பதில் விளக்கம் கூற வேண்டிய சிக்கலான நிலை ஏற்படும்.

அதைத் தவிர்ப்பதற்காகவே, கரிபியன் தீவுக் கூட்டம் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது? என்று நேரிடையாகக் குறிப்பிடாமல்,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் கரீபியன் தீவுக் கூட்டமானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் வட அமெரிக்கக் கண்டம் மற்றும் கரீபியன் தீவுப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால், நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாகவும், அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச்(USGS ) சேர்ந்த புவியியலாளர்கள் ஒரு மழுப்பலான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச் (USGS ) சேர்ந்த புவியியலாளர்களுக்கு நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட கரீபியன் தீவுக் கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்று தெரிய வில்லைஎன்பதையே அவர்கள் வெளியிட்ட அறிக்கை மூலமாக வெளிப்பட்டு இருக்கிறது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?