எரிமலை வெடித்ததால் சுனாமி உருவானது.ஆதாரங்களை வெளியிடுதல்.

நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள்,தெற்காசிய சுனாமிக்கு, அடிப்படை ஆதாரம் இல்லாமல்,முன்னுக்குப் பின் முரணாக ,இரண்டு கற்பனை விளக்கங்களைத் தெரிவித்து இருப்பது, சான்றாவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால்,நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படப் பதிவுகள் மூலம்,ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
கடந்த 26.12.2004,அன்று,இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட நில அதிர்ச்சியால் உருவான சுனாமி அலைகள் தாக்கியதில் இரண்டு லட்சத்தி முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அந்த நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் புவியியல் வல்லுனர்கள், அடிப்படை ஆதாரமற்ற கற்பனை விளக்கங்களைத் தெரிவித்து இருப்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக அந்த சுனாமி குறித்து ,10.03.2005 அன்று அமெரிக்காவின் முன்னணி அறிவியல் ஆய்வு மையமான நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள் வெளியிட்ட அறிக்கையில்,இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்ததால்,இந்தியக் கண்டத்தின் கடல்தளமானது இந்தோனேசியத் தீவுக்கு அடியில் சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

ஆனால் மூன்று மாதம் கழித்து ,2005 ஏப்ரல் மாதம் , அதே நாசாவின் வலைத்தளத்தில் வெளியிட்ட அடுத்த அறிக்கையில்,ஆஸ்திரேலியக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்ததால்,ஆஸ்திரேலியக் கண்டத்தின் கடல் தளமானது இந்தோனேசியத் தீவுக்கு அடியில் சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று, முன்னுக்குப் பின் முரணாக ,முன்னர் கூறிய விளக்கத்தை மறுக்கவோ நிராகரிக்கவோ செய்யாமல்,விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

குறிப்பாகக் கண்டங்கள் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது, கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான், நில அதிர்ச்சி ஏற்படுவதாகப் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

அதே போன்று கடல் தளம் நகர்ந்து கண்டங்களுக்கு அடியில் செல்வதால்தான் சுனாமி உருவாகுவதாகவும் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.
ஆனால் புவியியலாளர்கள் நம்பிக் கொண்டு இருப்பதைப் போன்று,கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளமானது,தனித் தனிப் பகுதிகளாக இல்லாமல், ஒரே தொடர்ச்சியாக இருப்பதுடன், கடல் தளமும், கண்டங்களும் நிலையாக இருப்பதும்,உலக அளவில் நில அதிர்ச்சி ஏற்பட்ட இடங்களைக் குறித்துப் புவியியலாளர்கள் வரைந்த, உலக அளவிலான நிலஅதிர்ச்சி வரை பட ஆதரம் மூலம் தெரிய வந்துள்ளது.


கடந்த 1963 ஆம் ஆண்டு முதல்,1998 ஆம் ஆண்டு வரையிலான ,முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த,3,58,214 நில அதிர்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து ,நாசாவைச் சேர்ந்த ,புவியியலாளர்கள் ,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் ஒன்றைத் தயாரித்து,இணையதளத்தில் வெளியிட்டு இருக்கின்றனர்.
தற்பொழுது ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்,கடல் தளத்துடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.ஆனால் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த இரண்டு கண்டங்களும்,இணைந்த நிலையில்,தென் துருவப் பகுதியில்,அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும்,பின்னர் அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து தனியாகப் பிரிந்து,வட கிழக்கு திசையை நோக்கி கடல் தளத்துடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.
ஆரம்பத்தில் ஒன்றாக இருந்ததாக நம்பப் படும் இந்தியாவும்,ஆஸ்திரேலியாவும்,தற்பொழுது இருப்பதைப் போன்று ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு விலகி நகர்ந்து இருக்க வேண்டும் என்றால் ,இந்த இரண்டு கண்டங்களும் இரண்டு தனித் தனிக் கடல் தளத்துடன் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.ஒரே கடல் தளத்துடன் இந்த இரண்டு கண்டங்கள் விலகி நகர்ந்து இருக்க சாத்தியம் இல்லை.
ஆனால் இரண்டு கண்டங்களும் தனித் தனியாகக் கடல் தளத்துடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு,நில அதிர்சிகள் ஏற்பட வேண்டும்.
அனால் உலக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள் வெளியிட்ட ,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் .அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல்தளமானது தனித் தனிப் பகுதிகளாக இருப்பதற்கு ஆதாரமாகத் தொடர்ச்சியாக நில அதிர்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளத்தில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளமானது,தொடர்ச்சியாக இருப்பதுடன்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில் அதே நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள்,கண்டத் தட்டுகளின் இயக்கத்தைக் குறிப்பதாகக் கூறி, ஒரு வரை படத்தையும் இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றனர்.
அந்த வரை படத்திலும் கூட இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும், கடல் தளப் பகுதியைத் தனித் தனிப் பகுதிகளாகப் பிரித்துக் காட்டாமல்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில், என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை, என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.


எனவே தெற்காசிய சுனாமிக்கு நாசாவைச் சேர்ந்த புவியியலளர்கள்,இந்தியக் கண்டம் கடல் தளத்துடன் நகர்ந்து சென்றதால் சுனாமி உருவானதாகவும்,ஆஸ்திரேலியக் கண்டம் கடல் தளத்துடன் நகர்ந்து சென்றதால் சுனாமி உருவானதாகவும் கூறிய இரண்டு விளக்கங்களும் அடிப்படை ஆதாரமற்ற கற்பனை விளக்கங்கள் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம்,ஆறாம் நாள் ,இத்தாலி நாட்டில் உள்ள லா அகுய்லா என்ற நகரில் ,நில அதிர்ச்சி ஏற்பட்டது.லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு,அப்பகுதியில்,பூமிக்கு அடியில் இருந்து ,எரிமலைகளில் இருந்து வெளிப் படும்,ரேடான் என்ற வாயு,கசிந்திருப்பதை,ஜியுலியானி என்ற தொழில் நுட்ப வல்லுநர் கண்டு பிடித்தார்.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
அத்துடன்,லா அகுய்லா நகரில் ,நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவில்,வளைய வடிவில் வரப்புகள் வெட்டியதைப் போன்ற, சில சென்டி மீட்டர் ஏற்றத் தாழ்வுடைய மேடுபள்ள வளையங்கள், உருவாகி இருந்தது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
இதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் குமுறிக் கொண்டு இருக்கும், எரிமலைகளைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,வளைய வடிவில்,வரப்புகளை வெட்டியதைப் போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
இவ்வாறு எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வரப்புகள் வெட்டியதைப் போன்று, மேடு பள்ள வளையங்கள் உருவாகுவதற்கு, டாக்டர் ,ஜூலியட் பிக் என்ற எரிமலை இயல் வல்லுநர்,ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கிறார்.
அதாவது,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது,எரிமலையின் உயரம் அதிகரிக்கிறது.அப்பொழுது அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, சில சென்டி மீட்டர் உயர்கிறது.அதன் பிறகு அந்த எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறிய பிறகு,எரிமலையின் உயரம் குறைகிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றி உயர்ந்த தரைப் பகுதியானது,மறுபடியும் தாழ்வடைகிறது.
இவ்வாறு குமுறி வெடிக்கும் எரிமலைகள்,உயர்ந்து இறங்கும் எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்குத் தரைப் பகுதியானது உயர்ந்து இறங்குவதால்,எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, வளைய வடிவில் வரப்புகள் வெட்டியதைப் போன்ற, மேடு பள்ள வளையங்கள் உருவாகுவதாக டாக்டர் ஜூலியட் பிக் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

இதே போன்று தெற்காசிய சுனாமி உருவான பொழுது, நில அதிர்ச்சி ஏற்பட்ட பகுதியிலும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,வளைய வடிவில் வரப்புகள் வெட்டியதைப் போன்று,மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும்,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவுசெய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.

குறிப்பாகத் தெற்காசிய சுனாமியின் பொழுது,சுமத்ரா தீவுக்கு அருகில் இருந்த சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது,கடல் மட்டத்தில் இருந்து ,நான்கு அடி வரை உயர்ந்து இருந்ததால்,அப்பகுதியில் அது வரை கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் வெளியில் தெரிந்தது.எனவே சிமிழு தீவு திடீரென்று மேல் நோக்கி உயர்ந்ததாலேயே நில அதிர்ச்சி ஏற்பட்டுக் கடலில் சுனாமி அலைகள் உருவாக்கி இருக்கின்றன.இந்த நிலையில் அதே சிமிழும் தீவின் மத்தியப் பகுதியில்,கடந்த 20.02.2008 அன்று ,நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப் போன்று,பல கிலோ மீட்டர் சுற்றளவில்,வளைய வடிவில் வரப்புகள் வெட்டியதைப் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதை,ஜப்பான் நாட்டின் ஆலோஸ் என்ற செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட படங்களில் பதிவாகி இருக்கிறது.எனவே சிமிழு தீவுக்கு அடியில் எரிமலை வெடித்து உயர்ந்ததாலேயே தெற்காசிய சுனாமி உருவாகி இருப்பது,ஆதரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
Comments