எரிமலை, நில அதிர்ச்சி, சுனாமி
சுனாமிக்கு தற்பொழுது கூறப் படும் விளக்கங்கள் தவறு. கடல் தரையுடன் கண்டங்கள் நிலையாக இருப்பது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது. தற்பொழுது கடல்தரையுடன் கண்டங்கள் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் கடல் தரைப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,கண்டங்களுக்கு அடியிலும் தீவுகளுக்கு அடியிலும் கடல் தரையானது நகர்ந்து செல்வதாலேயே சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது. இந்த நிலையில் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில், கடல் தளம் தொடர்ச்சியாக இருப்பதுடன், கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியாத நிலையிலேயே, நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் அடிப்படை ஆதாரமின்றி, வெறும் யூகத்தின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்கள் முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைப் தெரிவித்து இருப்பதும், அறிவியல் ஆய்வு மையங்கள் வ...