Posts

நில அதிர்சிக்குப் பிறகு எரிமலைகள் இறங்கியது ஏன்?

பெரிய நில அதிர்சிக்குப் பிறகு அப்பகுதிகளில் உள்ள எரிமலைகளின் உயரம் தாழ்வடைந்து இருப்பது , சிலி மற்றும் ஜப்பான் நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட செயற்கைக் கோள் ஆய்வுகளின் மூலம் தெரிய வந்தள்ளது.   நில அதிர்சிக்குப் பிறகு எரிமலைகளில் இருந்து வாயுக்கள் வெளிப்படுவதை விஞ்ஞானி.சார்லஸ் டார்வின் உட்பட பல ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே கவனித்து இருக்கின்றனர்.   இந்த நிலையில் ஜப்பான் மற்றும் சிலி நாட்டில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட பிறகு அப்பகுதியில் உள்ள எரிமலைகள் ஏதேனும் சீறத் தொடங்குகிறதா என்று ஜப்பான் மற்றும் சிலி நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தனித் தனியாகச் செயற்கைக் கோள்கள் மூலம் ஆய்வு   செய்தனர்   குறிப்பாக   நில அதிர்ச்சி ஏற்பட்ட பகுதியில் உள்ள எரிமலைக்குள் பாறைக் குழம்பு திரண்டு பெருக்கிறதா என்று கண்காணித்தனர்.   ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக நில அதிர்ச்சி ஏற்பட்ட பகுதியில் உள்ள எரிமலைகளானது ஆறு அங்குல அளவிற்கு தாழ்வடைந்து இருப்பதைக் கண்டு பிடித்து இருக்கின்றனர்.   குறிப்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு ,...

நில அதிர்ச்சி மறைக்கப் பட்ட உண்மை

Image
      கண்டங்களின் மேலும் கடல் தரையின் மேலும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் கண்டங்களும் கடல் தரையும் நிலையாக இருப்பது நிரூபணமாகிறது. கண்டங்களும் கடல் தரையும் பல கிலோ மீட்டர் ஆழத்திற்கு பாறை அடுக்குகளால் ஆனது.இந்தப் பாறை அடுக்குகளுக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது , பாறைப் பகுதிகளைத் துளைத்துக் கொண்டு மேல் நோக்கி உயர்வதால் கண்டத்தின் மேலும் கடல் தரையின் மேலும் எரிமலைகள் உருவாகின்றன. இந்த நிலையில் கண்டங்களும் கடல் தரையும் நகர்ந்து கொண்டு இருந்தால் , கண்டங்களின் மேலும் கடல் தரையின் மேலும் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு இல்லாமல் கண்டங்களின் மேலும் கடல் தரையின் மேலும் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன. உதாரணமாக வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள காஸ் கேட் எரிமலைத் தொடர், அனாகிம் எரிமலைத் தொடர், மற்றும் ஸ்டிக்கின் எரிமலைத் தொடர் என்று அழைக்கப் படும் எரிமலைத் தொடர்கள...

பிளேட் டெக்டானிக் தியரி தவறு. பரிசோதனை முடிவு

Image
பிளேட் டெக்டானிக் தியரி தவறு என்பதை எளிய பரிசோதனை மூலம் அறிய இயலும்.  பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா,ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் யாவும் பூமியின் தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி ஒன்றுடன் ஒன்று இணைந்து கோண்டுவானா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெருங்கண்டமாக இருந்தது என்று நம்பப் படுகிறது. அதன் பிறகு அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி பிளவுகள் உருவாகி,அந்தப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி வடபகுதியை நோக்கியும் தென் பகுதியை நோக்கியும் விலகி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது. இதில் வட பகுதியை நோக்கி நகர்ந்த கடல் தளத்தின் மேல் இருந்தபடி தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் யாவும் வடபகுதியை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது. இந்தக் கருத்து உண்மையா என்பதை ஒரு எளிய சோதனை மூலம் அறிய இயலும். உதாரணமாக  தென் அமெரிக்காவின் முனைப் பகுதியில் உள்ள பன்டா ஏரினா வுக்கும் ஆப்பிரிக்காவின் கேப் டவுனுக்கும் இடையில் உள்ள தூரத்தை அட...

ஆதி காலக் கடல் தரையானது களிமண் பாறையால் ஆகியிருந்தது.

Image
(  ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல்தரையாக இருந்த இடம் -வட அமெரிக்கா,ராக்கி மலை   ) ஆதி காலக் கடல் தரையானது களிமண் பாறையால் ஆகியிருந்தது. தற்பொழுது கடல்தரையானது பசால்ட் என்று அழைக்கப் படும் கடப்பாக் கல்லால் ஆகியிருக்கிறது. ஆனால் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல்தரைப் பகுதியில் வாழந்த உயிரினங்களின் புதை படிவங்களானது இன்று பூமியில் பல இடங்களில் களிமண் பாறை அடுக்குகளில் காணப் படுகின்றன.குறிப்பாக வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள ராக்கி மலைப் பகுதியில் உள்ள ஷேல் என்று அழைக்கப் படும் களிமண் பாறை அடுக்குகளிளும் கலிபோர்னியாவில் லாதம் ஷேலிலும் யூதா பாலைவனப் பகுதியில் உள்ள வீலர் ஷேலிலும் புதை படிவங்களாகக் காணப் படுகின்றன. இதே போன்று சீனாவிலும் ஐம்பது கோடி ஆண்டுகள் தொன்மையான கடல் உயிரினங்களின் புதை படிவங்களானது மாவோசியன் ஷேல் என்று அழைக்கப் படும் களிமண் பாறை அ டுக்குகளிலேயே காணப் படுவதும் குறிப்பிடத் தக்கது. இதே போன்று ஆஸ்திரேலியாவிலும் ஈமு வளை குடா ஷேலி ல் ட்ரைலோபைட் உட்பட பல ஆதிகால கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் இந்த நிலையில் தற்பொழுது கடல் தளப் ...

சிசுவான் மாகாணத்தில் எரிமலைப் பாறைகள்.

Image
சுற்றுவட்டப் பகுதியைத் தவிர்த்து சீனாவின் மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டது ஏன்? அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படும் சீனாவின் தென் மேற்குப் பகுதியில் உள்ள சிசுவான் மாகாணத்தைச் சுற்றிலும் இருபத்தி ஆறு கோடி ஆண்டுகள் தொன்மையான எரிமலைத் தீப்பாறைகள் காணப் படுகின்றன. இந்த எரிமலைப் பாறைப் பகுதியானது எமிசியான் தீப்பாறைப் பகுதி என்றும் அழைக்கப் படுகிறது.) எனவேசீனாவின் தென் மேற்குப் பகுதியில் பூமிக்கு அடியில் எரிமலைச் செயல் பாடு நடைபெற்றுக் கொண்டு இருப்பது புலனாகிறது.   ஆனால் சிசுவான் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு வினோதமான விளக்கம் கூறப் படுகிறது. அதாவது இந்திய நிலப் பகுதியானது வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து ஆசியக் கண்டத்தை நெருக்கிக் கொண்டு இருப்பதாகவும் இதனால் ஏற்படும் அழுத்தத்தால் சீனாவின் மத்தியப் பகுதியில் மட்டும் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கத்தைக் கூறும் ஆராய்ச்சியாளர்கள் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும் நம்புகின்றனர். ஆனால் ஆறரை கோடி...

காஸ்பியன் கடலின் உப்புத் தன்மை குறைவாக இருப்பது ஏன்?

Image
casp.jpg ஈரானுக்கு வட பகுதியில் உள்ள உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடல் உருவானதற்கு ஒரு வினோதமான விளக்கம் கூறப் படுகிறது. அதாவது இருபத்திஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள ஏழு கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரு ஒற்றைப் பெருங் கண்டம் இருந்ததாகவும் அந்தப் பெருங் கண்டத்தைச் சுற்றி கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது. அதன் பின்னர் அந்தப் பெருங் கண்டம் பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்து பல சிறிய கண்டங்களாக உருவாகி நகர்ந்து மறுபடியும் இணைந்த பொழுது இடையில் சிக்கிக் கொண்ட கடல் பகுதியே காஸ்பியன் கடல் என்று விளக்கம் கூறப் படுகிறது. locre.jpg ஆனால் காஸ்பியன் கடலில் உப்பின் அளவானது  பெருங் கடலில் இருப்பதை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது.இதற்கு காஸ்பியன் கடலில் ஆறுகள் கலப்பது ஒரு காரணமாகக் குறிப்பிடப் படுகிறது. casp1.png உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடலில் பல்லாயிரக் கணக்கான ஆண்டு காலமாக பல ஆறுகள் பாய்ந்தாலும் காஸ்பியன் கடலின் மட்டம் உயர்ந்திருக்க வில்லை. இடைப்பட்ட காலத்தில் காஸ்பியன் கடலின் மட்டம் தாழ்வடைந்தும் இருக்கிறது.  காஸ்பியன் கடல்மட்டம் ...