பிளேட் டெக்டானிக் தியரி தவறு. பரிசோதனை முடிவு
பிளேட் டெக்டானிக் தியரி தவறு என்பதை எளிய பரிசோதனை மூலம் அறிய இயலும்.
பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா,ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் யாவும் பூமியின் தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி ஒன்றுடன் ஒன்று இணைந்து கோண்டுவானா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெருங்கண்டமாக இருந்தது என்று நம்பப் படுகிறது.
அதன் பிறகு அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி பிளவுகள் உருவாகி,அந்தப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி வடபகுதியை நோக்கியும் தென் பகுதியை நோக்கியும் விலகி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
இதில் வட பகுதியை நோக்கி நகர்ந்த கடல் தளத்தின் மேல் இருந்தபடி தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் யாவும் வடபகுதியை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
இந்தக் கருத்து உண்மையா என்பதை ஒரு எளிய சோதனை மூலம் அறிய இயலும்.
உதாரணமாக தென் அமெரிக்காவின் முனைப் பகுதியில் உள்ள பன்டா ஏரினா வுக்கும் ஆப்பிரிக்காவின் கேப் டவுனுக்கும் இடையில் உள்ள தூரத்தை அடைப்புக் குறிக்குள் உள்ள சுட்டி மூலம் அறிய இயலும்.( http://www.distancefromto.net/distance-from/South+Africa/to/Chile ) ("A" punta arena to cape town = 7024 km ).
அதே போன்று கேப் டவுனுக்கும் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்கும் இடையில் உள்ள தூரத்தையும் அறிய இயலும்.( ' B'cape town to tasmania =10,122 km).
அதே போன்று டாஸ்மேனியாவுக்கும் தென் அமெரிக்காவின் பன்டா ஏரினா வுக்கும் இடையில் உள்ள தூரத்தை அறிய இயலும்.( "C"tasmania to punta arena = 8916 km).
பின்னர் இந்த மூன்று தூரத்தையும் கூட்ட வேண்டும்.( 20,066 km).
அண்டார்க்டிக் கண்டமானது தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் வளையத்திற்குள் இருக்கிறது.இந்த அட்ச ரேகைப் பகுதியில் பூமியின் சுற்றளவானது 17,662 கிலோ மீட்டர்.
எனவே 17,662 கிலோ மீட்டர் சுற்றளவில் உருவாகும் புதிய கடல் தளமானது எப்படி வடபகுதியை நோக்கி நகர்ந்து 20,066 கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதியை நிரப்ப இயலும்? என்ற கேள்வி எழுகிறது.
நிச்சயம் சாத்தியம் இல்லை.
எனவே பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் பகுதிக் கண்டங்கள் யாவும் தென் துருவப் பகுதியில் இருந்ததாகவும் பின்னர் அப்பகுதியில் உருவான கடல் தளத்தின் மேல் இருந்தபடி, வடபகுதியை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாக கூறப் படும் கருத்து தவறு.
-விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
Comments