எரிமலை வெடித்ததால் தெற்காசிய சுனாமி உருவானது.

தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகளுக்கு நாசா ஆராய்ச்சியாளர்கள் உறுதி படுத்தப் படாத விளக்கங்களைத் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் சுமத்ரா தீவுக்கு அருகில் இருக்கும் சிமிலு தீவுக்கு அடியில், எரிமலை வெடித்ததால், தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில் அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது, தரைமட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களை மூலம் தெரிய வந்துள்ளது. தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவ்வாறு கண்டங்கள் கடல் தளங்களுடன் நகரும் பொழுது கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும்,அதனால் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல்தரையின் மேல் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதே போன்று கண்டங்கள் கடல்தளங்களுடன் நகரும் பொழுது,கண்டங்களுக்கு அடியிலும்,தீவுகளுக்கு அடியிலும், உரசியபடி நகர்ந்து செல்வதாகவும் அதனால் பாறைத்த தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் கடலுக்கு அடியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், அதனால் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீர், மேல் நோக்கி தள்ளப் பட்டு, சுனாமி அலைகள் உருவாக்குவதாகவும், புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் துருவப் பகுதியில், அண்டார்க்டிகாக் கண்டத்துடன் இணையந்து இருந்ததாகவும், அதன் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தாற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாகவும், இன்றும் கூட இந்த இரண்டு அண்டங்களும், வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில, நாசா ஆராய்ச்சியாளர்கள், கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில், உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214,நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து "உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்" ஒன்றை, தயாரித்து இணையத்தில் வெளியிட்டனர். அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், தனித் தனியாகக் கடல் தளங்களுடன், வட கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இந்த நிலையில் அதே நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்டத் தட்டுகளின் இயக்கத்தைக் குறிப்பதாகக் கூறி, இன்னொரு வரை படத்தையும் வெளியிட்டனர். அந்த வரை படத்தில். இந்தியா மற்றும் அஸ்திரேலியா ஆகிய கண்டங்களைத் தனித் தனியாகப் பிரித்துக் காட்டாமல், இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப் பட்ட கடல் தரையில், சிறு சிறு கோடுகளை வரைந்து, அந்த இடத்தில் என்ன செயல் பாடு நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை, என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக இரண்டு கண்டத் தட்டுகள் அருகருகே இருக்கும் பகுதிகளில்,ஒரு கண்டத்திற்கு அடியில் இன்னொரு கண்டத் தட்டு நகர்ந்து செல்லும் பகுதி,இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதும் பகுதி,அல்லது ஒன்றில் இருந்து மற்றொன்று பிரிந்து செல்லும் பகுதி,மற்றும் இரண்டு கண்டத் தட்டுகள் பக்க வாட்டாக உரசிக் கொண்டு செல்லும் பகுதிகள் என நான்கு வகை செயல்பாடுகள் நடை பெறுவதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் என்ன செயல் பாடு நடக்கிறது என்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரிய வில்லை. இந்த நிலையில், இந்தியக் கண்டம் நகர்ந்ததால், இந்தியக் கண்டத்தின் கடல் தளம், இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி நகர்ந்து சென்றதால், நில அதிர்ச்சி ஏற்பட்ட தாகவும், அதனால் அந்தப் பகுதியில் இருந்த கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டதால், சுனாமி உருவானதாகவும், நாசா ஆராய்ச்சியாளர்கள், யூகத்தின் அடிப்படையில், ''உறுதிப் படுத்தப் படாத'' ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில், அதே நாசா ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலியக் கண்டம் நகர்ந்ததால், ஆஸ்திரேலியக் கண்டத்தின் கடல் தளம், இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி நகர்ந்து சென்றதால், நில அதிர்ச்சி ஏற்பட்ட தாகவும், அதனால் அந்தப் பகுதியில் இருந்த கடல் நீரானது ,மேல் நோக்கி தள்ளப் பட்டதால் சுனாமி உருவானதாகவும் நாசா ஆராய்ச்சியாளர்கள், முன்னுக்குப் பின் முரணாக,இரண்டாவதாக ஒரு ''உறுதிப் படுத்தப் படாத'' விளக்கத்தையும்,யூகத்தின் அடிப்படையில், தெரிவித்து இருக்கின்றனர். எனவே உண்மையில் தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில் தெற்காசிய சுனாமி ஏற்பட்ட பொழுது, சுமத்ரா தீவுக்கு அருகில் இருக்கும் ''சிமிலு'' என்ற தீவின் வடமேற்குப் பகுதி, கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது. அதனால் அந்தப் பகுதியில் புதிதாக கடற் கரையும் உருவாகி இருந்தது. அத்துடன், அந்தப் பகுதியில், அது வரை கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் வெளியில் தெரிந்தன. சிமிலு தீவு ஏன் உயர்ந்தது? இந்த நிலையில் சிமிலு தீவில் 20.2.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்டது. அப்பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறு பாடுகளைப் பதிவு செய்த, ஜப்பான் நாட்டின் " ஆலோஸ்" என்ற செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அந்த படம் இணையத்தில் வெளியிடப் பட்டு இருக்கிறது. இதே போன்ற தரை மட்ட மாறு பாடுகளானது, குமுறும் எரிமலைச் சுற்றிலும் உருவாகி இருப்பதும், இணையத்தில் வெளியிடப் பட்ட, செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் கற்றளவுக்கு, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறு பாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இந்தப் படமும் இணையத்தில் வெளிபடப் பட்டு இருக்கிறது. இது போன்ற தரைமட்ட மாறு பாடுகளானது, குமுறும் எரிமலையை சுற்றிலும் உருவாகி இருப்பதும்,தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஒரு எரிமலைக்கு அடியில், பாறைக் குழம்பு நுழைந்து வெளியேறும் பொழுது,அந்த எரிமலையானது, சில சென்டி மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து இறங்குவதாகவும்,அதனால்,அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் ,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, சில சென்டி மீட்டர், உயர்ந்து இறங்குவதால்,அந்த எரிமலையைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய, மேடு பள்ள வளையங்கள் உருவாகுவதாக, எரிமலை இயல் நிபுணர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இதன் மூலம்,சிமிலு தீவுக்கு அடியில், எரிமலை வெடித்ததாலேயே 20.2.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அதே போன்று,தெற்காசிய சுனாமி எற்பட்ட பொழுது, சிமிலு தீவு உயர்ந்ததற்கும்,அந்த தீவுக்கு அடியில் எரிமலை வெடிப்பே காரணம் என்பதும் உறுதியாகிறது. அத்துடன்,சிமிலு தீவுக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே,தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 000000000 தெற்காசிய சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தைத் தெரிவிக்க இயலாததைப் போலவே, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும்,ஹைத்தி தீவில், 12.01.2010 அன்று, ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிக்கும்,USGS என்று அழைக்கப்படும், அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப் பட்ட விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை. எனவே, உண்மையில்,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிக்கும் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.  அட்லாண்டிக் பெருங்கடலின்மத்தியப் பகுதியில் ,கடலுக்கு அடியில், வடக்கு - தெற்கு திசையை நோக்கி,பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது. அந்த எரிமலைத்தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, கிழக்கு-மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில் அந்த கடல் தளங்களுடன்,அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் இருக்கும் கண்டங்களும், எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அந்த கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், வட அமெரிக்கக் கண்டமானது, மேற்கு திசையிலும், கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், யுரேசியக் கண்டமானது, கிழக்கு திசையிலும் நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதே போன்று, அந்த கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப்படும், கடல் தளத்துடன், தென் அமெரிக்கக் கண்டமானது, வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். .அத்துடன் அந்த எரிமலைத்தொடர் பகுதியில் உருவாகி வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், ஆப்பிரிக்கக் கண்டமானது, வட கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கருத்தின்படி,வட அமெரிக்கக் கண்டமும், தென் அமெரிக்கக் கண்டமும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன், முறையே மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது, எப்படி உருவானது, எந்த திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று ஆராய்சியாளர்களுக்குத் தெரிய வில்லை.  இந்த நிலையில்,ஜெர்மனில் உள்ள பெர்லினில் உள்ள பிரிபெர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த, ராய்க் பாக்மன் என்ற புவியியலாளர்,கரீபியன் பாறைத் தட்டின் தோற்றம் பற்றிய, கருத்துக்களை, ஆய்வு செய்து ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு இருக்கிறார். அந்தக் ஆய்வுக் கட்டுரையானது ,அதே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர்களான,லோத்தார் ராட்ச் பாகர் மற்றும் க்ளாஸ் ஸ்டாநக் ஆகியோர்களால் மீளாய்வு செய்யப் பட்டு,இணையத்தில் வெளியிடப் பட்டு இருக்கிறது. குறிப்பாக அந்தக் கட்டுரையின் முடிவில் ,கரிபியன் பாறைத் தட்டின் தோற்றம் குறித்து,தீர்க்கமாக, எந்த ஒரு கோட்பாட்டினாலும் கூற முடியாது,என்றும் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்று தெரிவித்து இருக்கிறார், இவ்வாறு கரீபியன் தீவுக்கு கூட்டம் உண்மையில் எங்கு உருவாகி இந்தத் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றே தெரியாத நிலையில்தான், கரீபியன் பாறைத் தட்டும், வட அமெரிக்கக் கண்டப் பாறைத் தட்டும் நகர்ந்ததால்,பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலால்,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில்,அன்று, இரண்டு லட்சம் பேர் உயிரிழந்த, நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருக்கிறது, என்று ஐக்கிய அமெரிக்க புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அடிப்படை ஆதாரமில்லாத ஒரு விளக்கத்தைத் தங்களின் வலைத் தளத்தில், யூகத்தின் அடிப்படையில் தெரிவித்து இருக்கின்றனர். எனவே உண்மையில் ஹைத்தி தீவில், நில அதிர்ச்சியும்சுனாமியும் ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில்,12.02.2010 அன்று, ஹைத்தி தீவில், நில அதிர்ச்சியும்சுனாமியும் ஏற்பட்ட பொழுது, ஹைத்தி தீவில், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், குமுறும் எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப்போன்று, பல கிலோமீட்டர்சுற்றளவுக்கு சில சென்டிமீட்டர், உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ளவளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறு பாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன்மூலம், ஹைத்தி தீவுக்கு அடியில், எரிமலை வெடித்ததாலேயே, ஹைத்தி தீவில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது, ஆதாரப்பூர்வமாகமாகவும், ஆணித்த தரமாகவும் நிரூபணம் ஆகி இருக்கிறது. முக்கியமாக நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில், ,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியிலும்,அதே போன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியிலும்,தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகாமல் இருப்பதன் மூலம் ,கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல்தரை தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 000000000

Comments

Popular posts from this blog

study

fossils study

Abcd report