நில அதிர்சிக்குப் பிறகு எரிமலைகள் இறங்கியது ஏன்?




பெரிய நில அதிர்சிக்குப் பிறகு அப்பகுதிகளில் உள்ள எரிமலைகளின் உயரம் தாழ்வடைந்து இருப்பது, சிலி மற்றும் ஜப்பான் நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட செயற்கைக் கோள் ஆய்வுகளின் மூலம் தெரிய வந்தள்ளது.

 

நில அதிர்சிக்குப் பிறகு எரிமலைகளில் இருந்து வாயுக்கள் வெளிப்படுவதை விஞ்ஞானி.சார்லஸ் டார்வின் உட்பட பல ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே கவனித்து இருக்கின்றனர்.

 

இந்த நிலையில் ஜப்பான் மற்றும் சிலி நாட்டில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட பிறகு அப்பகுதியில் உள்ள எரிமலைகள் ஏதேனும் சீறத் தொடங்குகிறதா என்று ஜப்பான் மற்றும் சிலி நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தனித் தனியாகச் செயற்கைக் கோள்கள் மூலம் ஆய்வு  செய்தனர்

 

குறிப்பாக  நில அதிர்ச்சி ஏற்பட்ட பகுதியில் உள்ள எரிமலைக்குள் பாறைக் குழம்பு திரண்டு பெருக்கிறதா என்று கண்காணித்தனர்.

 

ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக நில அதிர்ச்சி ஏற்பட்ட பகுதியில் உள்ள எரிமலைகளானது ஆறு அங்குல அளவிற்கு தாழ்வடைந்து இருப்பதைக் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

 

குறிப்பாக கடந்த 2011 ஆம் ஆண்டுஹோண்சு தீவில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்சிக்குப் பிறகு,நில அதிர்ச்சி மையத்தில்  இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு எரிமலைத் தொடரின் உயரமானது 15 சென்டி மீட்டர் இறங்கி இருப்பதை,கியாட்டோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புவி இயற்பியலாளர்,யூசிரோ தகட்டா கண்டு பிடித்து இருக்கிறார்.

 

இதே போன்று கடந்த 2010 ஆம் ஆண்டு, சிலி நாட்டில் மாலேகா பகுதியில் ஏற்பட்ட கடுமையான நில அதிர்சிக்குப் பிறகு ,நில அதிர்ச்சி மையத்தில்  இருந்து 220 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐந்து எரிமலைகளானது ஆறு அங்குலம் இறங்கி இருப்பதை,கார்னெல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புவி இயற்பியல் வல்லுநர்,மாத்யூ மாத்தியூ பிரிச் சார்ட் கண்டு பிடித்து இருக்கிறார்.

 

குறிப்பாக அந்த எரிமலைத் தொடரில் 400 கிலோமீட்டர் தூரத்திற்கு இறக்கம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

 

குறிப்பாக ஜப்பானிலும் சிலி நாட்டிலும் நில அதிர்சிக்குப் பிறகு அப்பகுதியில் 30 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 15 கிலோ மீட்டர் அகலதுடன் நீள் வட்ட வடிவில் நிலமானது இறங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

 

இவ்வாறு நில அதிர்சிக்குப் பிறகு எரிமலைகளும் நிலப் பகுதிகளும் இறங்குவதற்கு ,நில அதிர்ச்சியால் அடைக்கப் பட்டு இருந்த பிளவுகள் திறக்கப் பட்டு அதன் வழியாக பூமிக்குள் இருக்கும் சுடு நீர் ஊற்று நீர் வெளியேறியதால் இறக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்று மாத்தியூ பிரிச் சார்ட் கருதுகிறார்.

 

அதாவது ஒரு சோடாவை குலுக்கும் பொழுது அதிலிருந்து அழுத்தமுடன் வாயு வெளியேறுவதைப் போல என்று மாத்தியூ பிரிச் சார்ட் தெரிவிக்கிறார்.

 

ஆனால் அதிக அளவில் செயற்கைக் கோள்களைப் பயன் படுத்தி ஆய்வு மேற்கொண்ட யூசிரோ தகட்டா, தற்பொழுது நில அதிர்ச்சிக்கும் எரிமலையில் இறக்கதிற்கும் உள்ள தொடர்பு எங்களுக்கு தெரியவில்லை என்றும் பாறைக் குழம்பின் இயக்கம் குறித்து அறிய வேண்டியது அவசியம் என்று தெரிவித்து இருக்கிறார்.

 

இருப்பினும் நில அதிர்சிக்குப் பிறகு,பூமிக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பின் மட்டம்  குறைந்து இருந்ததாகவும்,அதே போன்று அப்பகுதியில் இருந்த வெப்பமான பாறைகள் உருக்குலைந்து இருந்ததாகவும் அதனால் இறக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.

 

தற்பொழுது இரு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் இந்த இரண்டு நிகழ்வுக்கும் வெவ்வேறு விளக்கங்களைக் கொண்டிருந்தாலும்,இந்த இரண்டு நிகழ்வையும் கட்டுப் படுத்தும் ஒரே செயல்பாட்டை விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பார்கள் என்று ஒத்துக் கொள்கின்றனர்.

 

 இது குறித்து கருத்து தெரிவித்த சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்த கிங் அப்துல்லா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சிகுர்ஜோன் ஜான்சன் என்ற புவி இயற்பியல் வல்லுநர்,தொடர்ந்து ஆராய்ச்சி செய்தால் தற்பொழுது கூறப் பட்ட இரண்டு விளக்கத்தில் எது சரி? என்பது தெரியவரும் அல்லது இரண்டுமே தவறாகக் கூட இருக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறார்.

 

பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்ற எனது கண்டு பிடிப்புடன் இந்த ஆய்வுத் தகவல்கள் ஒத்துப் போகிறது.எப்படியென்றால் பூமிக்குள் எரிமலை வெடிக்கும் பொழுது பாறைகள் உருக்குலைவது இயல்பு.

 

அதே போன்று பூமிக்கு அடியில்  திரண்டு இருக்கும் பாறைக் குழம்பில் இருந்து வெப்பமான வாயுக்களும் நீராவியும் வெளியேறும் பொழுதும் அப்பகுதியில் உள்ள தரைப் பகுதியானது இறங்குவதும் இயல்பானதே.

 

 

எனவே நில அதிர்ச்சிக்கு காரணம் பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகளே என்பது உறுதியாகிறது.
 

 புவி இயற்பியலாளர்கள் ஏன் குழம்புகின்றனர் ?


ஜப்பான் மற்றும் சிலி பகுதிகளுக்கு அடியில் பசிபிக் கடல் தளமானது  நகர்ந்து செல்வதால்தான் அப்பகுதிகளில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகத் தற்பொழுது புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

 
அதாவது பசிபிக் பெருங் கடலின் தென் கிழக்குப் பகுதியில் கிழக்கு பசிபிக் கடலடி மேடு என்று அழைக்கப் படும் ஒரு கடலடி எரிமலைத் தொடர் உள்ளது.


அந்த கடலடி எரிமலைத் தொடரில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகுவதாக நம்பப் படுகிறது.

 
இதே போன்று மறுபடியும் அதே இடத்திற்கு பாறைக் குழம்பானது வருவதாகவும், அவ்வாறு வரும் பாறைக் குழம்பானது ஏற்கனவே மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த பழைய கடல் தளப் பாறைகளை , தென் கிழக்கு மற்றும் வடமேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல் தளமாக உருவாகுவதாகவும் நம்புகிரார்கள்.

 
இதனால் அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல்தளமானது தொடர்ந்து உருவாகி, முறையே தென் கிழக்கு மற்றும் வடமேற்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகவும் நம்புகிரார்கள்.

 
இதில் தென் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல்தளமனது தென் அமெரிக்கக் கண்டத்திற்கு அடியிலும், அதே போன்று வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்வதாக நம்பப் படும் கடல் தளமானது ஜப்பான் தீவுகளுக்கு அடியிலும், சென்று கொண்டு இருப்பதாக நம்புகிரார்கள்.


ஆனால் பசிபிக் கடல் தளத்திற்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது பசிபிக் கடல் தளத்தை பொத்துக் கொண்டு கடல் தளத்திற்கு மேலே எரிமலைகளாக உருவாகி இருக்கின்றன.

 இந்த  நிலையில், உண்மையில் பசிபிக் கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருந்தால் பசிபிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.


ஆனால் அவ்வாறில்லாமல் பசிபிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.
 

எனவே பசிபிக் கடல் தளமானது நிலையாக இருப்பது கண்கூடான உண்மை.
 

ஆனால் பசிபிக் கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் நம்புவதால் அவர்கள் நில அதிர்ச்சிக்கு தவறான கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.

 
அதனால் நில அதிர்சிக்குப் பிறகு அப்பகுதியில் உள்ள எரிமலைகளின் இறக்கத்திற்கான காரணத்தையும்  புரிந்து கொள்ள இயலாமல் குழம்புகின்றனர்.

 
-விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?