நில அதிர்ச்சி மறைக்கப் பட்ட உண்மை

  


  
கண்டங்களின் மேலும் கடல் தரையின் மேலும் ஒன்றுக் கொன்று
இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் கண்டங்களும் கடல் தரையும் நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
கண்டங்களும் கடல் தரையும் பல கிலோ மீட்டர் ஆழத்திற்கு பாறை அடுக்குகளால் ஆனது.இந்தப் பாறை அடுக்குகளுக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது, பாறைப் பகுதிகளைத் துளைத்துக் கொண்டு மேல் நோக்கி உயர்வதால் கண்டத்தின் மேலும் கடல் தரையின் மேலும் எரிமலைகள் உருவாகின்றன.
இந்த நிலையில் கண்டங்களும் கடல் தரையும் நகர்ந்து கொண்டு இருந்தால், கண்டங்களின் மேலும் கடல் தரையின் மேலும் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு இல்லாமல் கண்டங்களின் மேலும் கடல் தரையின் மேலும் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.
உதாரணமாக வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள காஸ் கேட் எரிமலைத் தொடர், அனாகிம் எரிமலைத் தொடர், மற்றும் ஸ்டிக்கின் எரிமலைத் தொடர் என்று அழைக்கப் படும் எரிமலைத் தொடர்களானது ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்தில் ஒன்றுக்கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் வட அமெரிக்கக் கண்டமானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
இதே போன்று பசிபிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் ஹவாய் எரிமலைத் தீவுத் தொடரும், லைன் எரிமலைத் தீவுத் தொடரும்,லூயிஸ் வில்லி எரிமலைத் தீவுத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.எனவே பசிபிக் கடல் தளமும் நிலையாக இருப்பது பசிபிக் கடல் தளத்தின் மேல் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் நிரூபணமாகிறது.
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash3/582370_405050856200664_2067268455_n.jpg
 இதே போன்று கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையிலும் கண்டங்கள் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றியுள்ள கடல் தளத்துடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அவ்வாறு நகரும் பொழுது அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடதுருவப் பகுதியில் இருந்து, தெற்கில் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கக் கண்டத்தின் தென் பகுதி வரை ஒரு கடலடி எரிமலைத் தொடரானது ராட்சஸ மலைப் பாம்பு போன்று நீண்டு வளைந்து ஒரு உருவாகி இருக்கிறது.
அந்தக் கடலடி எரிமலைத் தொடரின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளத்தின் மேல் இருந்தபடி, அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும், விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
குறிப்பாக அட்லாண்டிக் கடலுக்கு அடியில் நீண்டு இருக்கும் அந்தக் கடலடி எரிமலைத் தொடரின் மத்தியப் பகுதியில், பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பானது மேல் நோக்கி உயர்ந்து வந்த பிறகு,குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகுவதாக நம்பப் படுகிறது.
sfsx.jpg
இதே போன்று மறுபடியும் அதே இடத்திற்குப் பாறைக் குழம்பு வரும் பொழுது, ஏற்கனவே அப்பகுதியில் உருவாகி இருந்த பழைய கடல் தளப் பாறைகளை கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி பக்க வட்டாக நகர்த்தி விட்டு, மத்தியப் பகுதியில், புதிய கடல் தளமாக உருவாகுவதாக விளக்கம் கூறப் படுகிறது.
இதே போன்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடலடி எரிமலைத் தொடரின் மத்தியப் பகுதியில் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருக்கும் கடல்தளத்துடன் கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இதே போன்று எல்லாக் கண்டங்களும் தனித் தனியாக கண்டங்களைச் சுற்றியுள்ள கடல் தளத்துடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு  நகரும் பொழுது அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
ஒரு கண்டமும் அந்தக் கண்டத்தைச் சுற்றியுள்ள கடல் தளமும் கண்டத் தட்டு என்று அழைக்கப் படுகிறது.
ptpic.gif
இதில் குறிப்பாக வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் தொடர்ந்து உருவாகி கிழக்கு மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,இதில் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும், அதே போன்று கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் கடல் தளத்துடன் யூரேசியாக் கண்டமானது ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்கள், கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இதே போன்று தெற்கு அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து புதிய கடல்தளம் உருவாகி வட மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளை நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் கடல் தளத்துடன், தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும் ,அதே போன்று வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
உண்மையில் வடக்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி வட அமெரிக்கக் கண்டத்துடன் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருக்கும் நிலையில், தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி தென் அமெரிக்கக் கண்டத்துடன் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல்தரைப் பகுதியில் இருந்து ,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
1circle
ஆனால் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து, நாசா என்று அழைக்கப் படும் அமெரிக்காவின் அறிவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு வரை படத்தைத் தயாரித்து வெளியிட்டனர்.
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் இருந்து ,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு கிழக்குப் பகுதியில் உள்ள அட்லாண்டிக் கடல்தளமானது தனித் தனியாகப் பிரிக்கப் படாமல் ஒரே தொடர்ச்சியாக இருக்கிறது.
எனவே அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளத்துடன் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்களால் நம்பப் படும் கருத்து அடிப்படை ஆதாரம் அற்ற கற்பனைக் கருத்து.
இந்த நிலையில் united states of giological society (usgs ) என்று அழைக்கப் படும் அமெரிக்க நாட்டின் புவியியல் கழகம் கண்டங்களின் எல்லைகளைக் குறிப்பதாக  கூறப் படும் ஒரு வரை படத்தை வெளியிட்டது.
அந்த வரை படத்தில் வட அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையில் கற்பனையாக ஒரு கோட்டை வரைந்து அந்த இரண்டு கண்டங்களும் தனித் தனிக் கண்டங்களாக இருப்பது போன்று காட்டப் பட்டுள்ளது.
அதாவது அமெரிக்கக் கண்டங்களுக்கு கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக உள்ள அட்லாண்டிக் கடல் தளமானது இரண்டு பகுதிகளாக இருப்பது போன்று சித்தரித்துக் காட்டப் பட்டுள்ளது.
1round


கண்டங்களின் ஓரப் பகுதிகளில் ஏற்படும் நில அதிர்ச்சிகளுக்கு விளக்கம் கூறப் படுவதற்காக பயன் படுத்தப் படும் இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படையில், ‘’கண்டங்களின் மத்தியப் பகுதியில் ஏன் நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன? என்ற கேள்விக்கு சரியான பதிலைக் கூற இயலாத நிலையில் புவியியல் வல்லுனர்கள் இருக்கின்றனர்’’ என்று இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சேத் ஸ்டெய்ன் என்ற புவியியல் வல்லுநர் ‘’கண்டங்களின் மத்தியப் பகுதியில் ஏற்படும் மர்ம நில அதிர்ச்சிகள்’’ என்ற புத்தகத்தில் தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக அவர் ‘’இருபதாம் நூற்றாண்டின் புரட்சியான பிளேட் டெக்டானிக்கானது  கண்டங்களின் ஓரப் பகுதிகளில் ஏற்படும் நில அதிர்ச்சிகள் குறித்து அழகாக விளக்குகிறது.ஆனால் கண்டங்களின் மத்தியப் பகுதியில் ஏன் நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன? என்பதை பிளேட் டெக்டானிக் கால் விளக்க முடிய வில்லை.
அதனால் அமெரிக்காவின் மத்தியப் பகுதி,மேற்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் ஏற்படும் நில அதிர்ச்சிகள் குறித்து ஆய்வு செய்து கொண்டு இருக்கும் புவியியல் வல்லுனர்களால்,அப்பகுதிகளில் ஏற்படும் நில அதிர்சிகளுக்கான காரணம் குறித்து தெரியாமல் இருக்கின்றனர் என்று தெரிவித்து இருக்கிறார்.
 ( The plate tectonics revolution of the 20th century elegantly explained why most earthquakes occur where they do – at Earth's plate boundaries. It didn't explain, however, the occurrence of intraplate quakes and the deformation processes that give rise to them.


As a result, geologists studying areas like the central U.S., western Europe, and Australia, don't know what causes these quakes, how often they will happen in the future, and how dangerous they are.

Continental Intraplate Earthquakes: Science, Hazard, and Policy Issues
Seth Stein and Stéphane Mazzotti (eds.)
Geological Society of America Special Paper 425
)
ஆனால் உண்மையில் கண்டங்களின் ஓரப் பகுதியில் ஏற்படும் நில அதிர்சிகளுக்கும் கூட இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயலவில்லை என்பதே உண்மை.
உதாரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி பனிரெண்டாம் நாள் வட அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையில் அதாவது கண்டங்களின் ஓரப் பகுதியில் அமைந்திருக்கும் ஹைத்தி  தீவில் கடுமையான நில அதிர்ச்சியும் சிறிய அளவிலான சுனாமியும் ஏற்பட்டது.
அந்த நில அதிர்ச்சி குறித்து அமெரிக்கப் புவியியல் வல்லுனர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.அந்த அறிக்கையில் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் வட அமெரிக்கக் கண்டப் பாறைத் தட்டுக்கும் ஹைத்தி தீவுப் பாறைத் தட்டுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டதால் நில அதிர்ச்சி ஏற்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆனால் ஹைத்தி தீவுப் பகுதியானது நகர்ந்து கொண்டு இருக்கிறதா/ அல்லது நிலையாக இருக்கிறதா/ என்று தெரிவிக்கப் படவில்லை.
ஏனென்றால் புவியியல் வல்லுனர்களைப் பொறுத்த வரையில் வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, முறையே மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் கடல் தளத்துடன் நகர்ந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ஹைத்தி தீவு அமைந்திருக்கும் கரீபியன் தீவுக் கூட்டம் எப்படி உருவானது? எங்கே உருவானது? எப்படி இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் வந்து சேர்ந்தது? என்ற கேள்விகள் எழுந்தது.
இதற்கு சில புவியியல் வல்லுனர்கள் ஹைத்தி தீவானது பசிபிக் கடல் தளமானது மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்த பொழுது ஒரு எரிமலைப் பிழம்பால் துளைக்கப் பட்டதால் உருவான தீவுக் கூட்டம் என்று நம்புகின்றனர்.
அத்துடன் அந்தத் தீவுக் கூட்டமானது சற்று இலேசான பாறைத் தட்டின் மேல் உருவாகியதாகவும், அதனால் கடல் தளத்துக்கு அடியில் பாறைக் குழம்பு சுழற்சியால் கிழக்கு திசையை நோக்கி தனியாக நகர்ந்து கொண்டு இருந்ததாகவும், அப்பொழுது மேற்கு திசையை நோக்கி தனித் தனியாக நகர்ந்து வந்த வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் நுழைந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் நம்புகின்றனர்.
இந்தக் கருத்தாக்கமானது ‘பசிபிக் கடல் மாதிரி’ என்று அழைக்கப் படுகிறது.
குறிப்பாக அந்த எரிமலைப் பிளம்பானது தற்பொழுது பசிபிக் கடல் பகுதியில் உள்ள காலபாகஸ் தீவுக் கூட்டத்திற்கு அடியில் இருப்பதாக நம்பப் படுகிறது.ஆனால் கால பாகஸ் தீவுக் கூட்டமானது பதினைந்து தீவுகளுடன் நாற்பத்தி ஐயாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உருவாகி இருக்கிறது.ஆனால் கரீபியன் தீவுக் கூட்டமோ எழாயிரம்  தீவுகளுடன் இருபத்தி ஏழு லட்சத்தி ஐம்பத்தி நாலாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்து இருக்கிறது.
எனவே சிறிய தீவுக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிளம்பால் எப்படி பெரிய அளவில் இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கியது? என்ற கேள்வி எழுகிறது.
பொதுவாக எரிமலைச் செயல் பாட்டால் உருவாகும் தீவுகளானது கூம்பு வடிவில் இருக்கும்.ஆனால் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள சில தீவுகளானது எரிமலைச் செயல் பாட்டால் உருவாகாமல் சமதளப் பரப்புடன் இருக்கின்றன.
குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள பெரிய தீவான கியூபாவில் எரிமலைகள் இல்லை.எனவே பசிபிக் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் உள்ள ஒரு எரிமலைப் பிளம்பால் கரீபியன் தீவுக் கூட்டம் உருவானது என்று கூறப் படும் விளக்கம் தவறு.
எனவே தற்பொழுது சில புவியியல் வல்லுனர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து இருக்கலாம் என்று ஒரு புதிய விளக்கத்தை முன் வைக்கின்றனர்.
ஆனால் பசிபிக் கடல் பகுதியில் இருப்பதைப் போன்று அட்லாண்டிக் கடல் பகுதியில் எரிமலைப் பிளம்புகள் இருப்பதற்கான ஆதாரமாக தீவுக் கூட்டம் எதுவும் இல்லை.
இந்த நிலையில் வேறு சில புவியியல் வல்லுனர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்ற புதிய கருத்தையும் கொண்டிருக்கின்றனர்.அப்படியென்றால் கரீபியன் தீவுக் கூட்டம் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது?ஏன் நகர்கிறது? என இன்று வரை விடை கூறப் படாத கேள்விகள் எழுந்திருக்கின்றன.
எனவேதான் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கு அமெரிக்கப் புவியியல் கழகத்தினர் வெளியிட்ட அறிக்கையில்,ஹைத்தி தீவு உண்மையில் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று குரிபிட்டால் சிக்கல் வரும் என்பதால் அதைத் தவிர்க்கும் வண்ணம்,பொத்தாம் பொதுவாக வட அமெரிக்கக் கண்டம் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதால்... வட அமெரிக்கக் கண்டத்திற்கும் ஹைத்தி தீவுக்கும் இடையில் ஏற்பட்ட உரசலால் நில அதிர்ச்சி ஏற்பட்டது என்று உண்மையான நிலையை தெரிவிக்காமல் உண்மைக்குப் புறம்பான ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த விளக்கத்தின் மூலம், உண்மையில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏன் ஏற்படுகிறது? எப்படி ஏற்படுகிறது? என்று புவியியல் வல்லுனர்களுக்கு தெரிய வில்லை என்பது வெளிப்பட்டு இருக்கிறது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?