ஆதி காலக் கடல் தரையானது களிமண் பாறையால் ஆகியிருந்தது.
( ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல்தரையாக இருந்த இடம் -வட அமெரிக்கா,ராக்கி மலை )
தற்பொழுது கடல்தரையானது பசால்ட் என்று அழைக்கப் படும் கடப்பாக் கல்லால் ஆகியிருக்கிறது.
ஆனால் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல்தரைப் பகுதியில் வாழந்த உயிரினங்களின் புதை படிவங்களானது இன்று பூமியில் பல இடங்களில் களிமண் பாறை அடுக்குகளில் காணப் படுகின்றன.குறிப்பாக வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள ராக்கி மலைப் பகுதியில் உள்ள ஷேல் என்று அழைக்கப் படும் களிமண் பாறை அடுக்குகளிளும் கலிபோர்னியாவில் லாதம் ஷேலிலும் யூதா பாலைவனப் பகுதியில் உள்ள வீலர் ஷேலிலும் புதை படிவங்களாகக் காணப் படுகின்றன. இதே போன்று சீனாவிலும் ஐம்பது கோடி ஆண்டுகள் தொன்மையான கடல் உயிரினங்களின் புதை படிவங்களானது மாவோசியன் ஷேல் என்று அழைக்கப் படும் களிமண் பாறை அ
இதே போன்று ஆஸ்திரேலியாவிலும் ஈமு வளை குடா ஷேலி ல் ட்ரைலோபைட் உட்பட பல ஆதிகால கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் இந்த நிலையில் தற்பொழுது கடல் தளப் பாறையின் தொன்மையும் அதிக பட்சமாக இருபது கோடி ஆண்டுகளாகவே இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கடல் பரப்பானது முற்றிலும் வேறாக இருந்திருப்பது புலனாகிறது.தற்பொழுது உள்ள கடல் தரையானது பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இருகியபாறைக் குழம்பால் அதாவது எரிமலைச் செயல்பாட்டல் புதிதாக உருவாகி இருக்கிறது.
நிலவில் காணப் படும் கறுப்பு நிறப் பகுதிகளும் இதே போன்று ஆழமான பகுதியில் இருந்து மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகியதால் உண்டான பசால்ட் பாறைப் பிரதேசம் ஆகும்.
விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
Comments