எனது கண்டு பிடிப்புக்கு ஆதாரமாக ஒரு கிரகம்.



தலைப்பைச் சேருங்கள்

முன்னுரை
தற்பொழுது ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்தின் படி,முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,சுற்றி இருந்த தட்டையான பகுதிகளில் இருந்த தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இந்த நிலையில் நான் மேற்கொண்ட ஆய்வில்,ஒரு நட்சத்திரத்தை மற்றொரு நட்சத்திரம் ஈர்க்கும் பொழுது,ஈர்க்கப் பட்ட நட்சத்திரத்தின் வாயுக்களானது,ஈர்த்த நட்சத்திரத்தால் ஆவியாக்கப் படும் பொழுது,ஆவியாக்கப் பட்ட நட்சத்திரத்தின், மையத்தில்,அணுக் கரு வினையால் உருவாகி இருந்த, கனமான அணுக்களானது,கோளமாக உருவாகி, ஈர்த்த நட்சத்திரத்தை, கிரகமாக வலம் வந்து கொண்டு இருப்பது தெரியவந்தது.
எனது கண்டு பிடிப்பை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.
00000000000000


கடந்த 2014 ஆம் ஆண்டு,அமெரிக்கா,நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள்,பூமியில் இருந்து முன்னூறு ஒளியாண்டு தொலைவில்,இருக்கும், ஹெச் டி- 106906 , என்று பெயரிடப் பட்ட ஒரு நட்சத்திரத்தை, ஒரு கிரகம் வலம் வந்து கொண்டு இருப்பதைக் கண்டு பிடித்தார்கள்.
இந்த நிலையில் கடந்த 2016, ஆண்டுதான் ,அந்த நட்சத்திரத்தைச் சுற்றி, நீள் வட்ட வடிவில், தூசிகள் மற்றும் வாயுக்களால் ஆன, தூசித் தட்டு இருப்பதை ,அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் படம் பிடித்தனர்.
குறிப்பாக ,அந்த நட்சத்திரத்தின்,தூசி மற்றும் வாயு மண்டலத்தில் இருந்து,சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தொலைவைக் காட்டிலும், அறுநூற்று ஐம்பது மடங்கு தொலைவில், அந்த கிரகம் இருந்தது.
அத்துடன், அந்த கிரகமானது,வியாழன் கிரகத்தை விட பதினோரு மடங்கு பெரிய அளவில் இருப்பதுடன்,அதன் நட்சத்திரத்தை, ஆயிரத்தி ஐநூறு ஆண்டுக்கு ஒரு முறை,நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்தது.
இவ்வாறு, அந்த கிரகமானது,அதன் நட்சத்திரத்தின் தூசித் தட்டில் இருந்து, அதிக தொலைவில் இருப்பதற்கு, கிரகங்களின் தோற்றம் குறித்த,நமது தற்போதைய கொள்கையில் விளக்கம் இல்லை என்று,அந்தக் கிரகத்தை ஆய்வு செய்த,கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, பேராசிரியரான, ஸ்மேதார் நாவோஸ் தெரிவித்து இருக்கிறார்.
பொதுவாக, இது போன்று ஒரு நட்சத்திரத்தில் இருந்து, அதிக தொலைவில் இருந்தபடி,ஒரு கிரகம் வலம் வந்து கொண்டு இருந்தால்,அந்த கிரகமானது,அதன் நட்சத்திரத்துக்கு அருகில் உருவாகிய பிறகு,வேறு ஒரு கிரகத்தால் அல்லது, தொலைவில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையால்,நட்சத்திரத்துக்கு அருகில் இருக்கும் கிரகமானது,அதிக தொலைவுக்கு தள்ளப் பட்டு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுவார்கள்.
ஆனால்,அந்த கிரகத்தின் சுற்றுப் பாதை குறித்து,கணிப் பொறி மாதிரிகள் மூலம் பரிசோதனை செய்ததன் அடிப்படையில்,அந்தக் கிரகமானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருப்பதாகவும், அந்த விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
அந்த கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது,அந்த நட்சத்திரத்தைச் சுற்றி இருக்கும் நீள்வட்ட வடிவிலான, தூசித் தட்டின் அமைப்பை, விளக்குவதாக இருக்கிறது என்றும், அந்த விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.


The research, published online in the Astrophysical Journal Letters, suggests that the planet formed outside the disk, where it's visible it today, as opposed to having been formed inside the debris disk and then having been thrust far beyond it.
Naoz said that conclusion helps explain the shape of the debris disk. "It works perfectly," she said.
அதாவது, அந்தக் கிரகத்தின் சுற்றுப் பாதையானது, நீள் வட்டமாக இருக்கிறது.
அந்தக் கிரகமானது,அதன் நட்சத்திரத்தை மிகவும் நெருங்கிய பிறகு,அதிக தொலைவுக்கு செல்கிறது.
அதனால், அந்தக் கிரகத்தின் ஈர்ப்பு விசையால்,அந்த நட்சத்திரத்தைச் சுற்றி இருக்கும் தூசித் தட்டும், நீள் வட்ட வடிவில் இருக்கிறது.
அதனால், அந்தத் தூசித் தட்டின் ஒரு பகுதியானது, அந்த நட்சத்திரத்துக்கு மிக அருகில் இருக்கிறது.
மற்ற பகுதியானது அதிக தொலைவில் இருக்கிறது.
அதனால், அந்த நட்சத்திரத்துக்கு அருகில் இருக்கும், தூசித் தட்டின் பகுதியானது, அதிக வெப்பமாகவும்,பிரகாசமாகவும் ஒளிர்கிறது.
இவ்வாறு, அந்த நட்சத்திரத்தைச் சுற்றி, நீள் வட்ட வடிவில் தூசி மண்டலம் இருப்பதற்கு, அந்தத் தூசித் தட்டில் வேறு ஏதாவது கிரகம் இருக்க வேண்டுமா என்பதைக் கணிப் பொறி மாதிரிகள் மூலம் பரிசோதனை செய்தனர்.
அப்பொழுது,வேறு ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசை இன்றியே, அவ்வாறு அந்த நட்சத்திரத்தைச் சுற்றி,நீள் வட்ட வடிவிலான தூசி மண்டலம் உருவாகும் என்பது தெரிய வந்தது.
ஆனாலும், வேறு சில ஆராய்ச்சியாளர்கள்,அவ்வாறு அந்த நட்சத்திரத்தைச் சுற்றி நீள் வட்ட வடிவிலான தூசி மண்டலம் இருப்பதற்கு,அந்தத் தூசித் தட்டில், வேறு ஒரு கிரகம் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்தக் கிரக அமைப்பானது, எனது கண்டு பிடிப்புக்கு, சிறந்த ஆதாரமாக இருப்பதாக, நான் நம்புகிறேன்.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?