செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்...



சூரியனின் கதிர் வீச்சு காரணமாகச் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கிரகத்தில் இருந்து,சோடியம்,கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற தனிமங்களின் வாயுக்கள் வெளியேறிக் கொண்டு இருப்பது, செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டது.

இதைப் போலவே,வெள்ளி கிரகத்தில் இருந்தும் வாயுப் பொருட்கள் வெளியேறிக் கொண்டு இருப்பதும், செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டது.

இதே போன்று,நிலவில் இருந்தும், சோடியம் வாயு வெளியேறிக் கொண்டு இருப்பதும், செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டது.

அத்துடன்,பூமியில் இருந்து ஆக்சிஜன் வெளியேறிக் கொண்டு இருப்பதும், செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டது.

இந்த நிலையில்,பூமிக்கு அடுத்த படியாக இருக்கும் செவ்வாய்க் கிரகத்தில் இருந்தும்,கார்பன்,ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன்,வாயுக்களானது, வெளியேறிக் கொண்டு இருப்பது,செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.


குறிப்பாகச் செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக,அமெரிக்கா ,மாவென் என்ற செயற்கைக் கோளை ஏவியது.

அந்த செயைக்கைக் கோளானது செவ்வாயை அடைந்த நேரம்,சைடிங் ஸ்ப்ரிங் என்ற வால் நட்சத்திரமானது,செவ்வாய்க் கிரகத்தை மிக நெருக்கமாகக் கடந்து சென்றது.

அதனால் அந்த வால் நட்சத்திரத்தின் வாலில் இருந்த தூசிப் பொருட்களானது, செவ்வாய்க் கிரகத்தின் வளி மண்டலத்தின் மேற்பரப்பில் விழுந்தது.

அதனைத் தொடர்ந்து, செவ்வாய்க் கிரகத்தின் வளி மண்டலத்தின் மேற்பரப்பை, செயற்கைக் கோள் மூலம் ஆய்வு செய்த பொழுது,அந்த வால் நட்சத்திரத்தில்,சோடியம்,மக்னீசியம்,இரும்பு,பொட்டாசியம்,மாங்கனீஸ்,நிக்கல்,குரோமியம் மற்றும்,துத்தநாகம் இருப்பதும் தெரிய வந்தது.

அதே போன்று,மாவென் செயற்கைக் கோள் மூலம்,மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,செவ்வாய்க் கிரகத்தில் இருந்து,கார்பன்,ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்கள் வெளியேறிக் கொண்டு இருப்பதும்,கண்டு பிடிக்கப் பட்டது.

இந்தக் கண்டு பிடிப்பானது,முன் ஒரு காலத்தில்,சூரியனைச் சுற்றி,தூசி மற்றும் வாயுக்களால் ஆன மண்டலமானது, லட்சக் கணக்கான ஆண்டு காலமாக,சுற்றிக் கொண்டு இருந்ததாகவும்,பின்னர் அதில் இருந்த தூசிகள் மற்றும் வாயுக்கள் திரண்டதால்,நெப்டியூன் உள்பட,வியாழன்,சனி,யுரேனஸ் போன்ற ராட்சத வாயுக் கோள கிரகங்கள் உருவானதாகவும்,கூறப் படும் விளக்கத்திற்கு சவால் விடுவதாக இருக்கிறது.


எப்படிஎன்றால்,செவ்வாய்க் கிரகத்திற்கு அருகில் வந்த வால் நட்சத்திரத்தில் இருந்து வெளியேறிய,சோடியம்,மக்னீசியம்,இரும்பு,பொட்டாசியம்,மாங்கனீஸ் ,நிக்கல்,குரோமியம் மற்றும்,துத்தநாகம் ஆகிய உலோகங்கள்,பூமியிலும் காணப் படுகின்றன.

எனவே,சூரியனில் இருந்து அதிக தொலைவில் இருக்கும் செவ்வாய்க் கிரகத்துக்கு அருகிலேயே,மேலே குறிப்பிட்ட உலோகங்களானது,சூரிய ஒளியால் ஆவியாகி விடும் நிலையில்,அதே உலோகங்களுடன் எப்படி பூமியானது சூரியனுக்கு அருகில் உருவானது என்ற கேள்வி எழுகிறது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?