எனது பூமிப் பந்தின் புதிர்கள் புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்.



எழுபது பூமி எடையுள்ள கிரகம்.



பூமியில் இருந்து 250 ஒளி வருட தூரத்தில் இருக்கும் ஹெச் டி 149026 என்ற நட்சத்திரத்தின் ஒளி 2.87 நாளுக்கு ஒரு முறை பூமிக்கு வருவதில் இருந்து 0.3 % மறைக்கப் படுகிறது.

இந்த ஒளி மறைவின் மூலமாக ஒரு வால் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தை வலம் வருகிறது என்று தெரிகிறது.

அந்த வால் நட்சத்திரத்தின் தலைப் பகுதியில்,எழுபது பூமி எடையுள்ள திட மையம் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

தூசித் தட்டில் உள்ள தூசிகள் ஒன்று திரண்டு உருவாகும் முறையின் மூலமாக பத்து பூமி எடையுள்ள கிரகம் மட்டுமே உருவாக வாய்ப்புகள் இருப்பதாகக் கணினி மாதிரிகள் தெரிவிக்கின்றன.

அப்படியிருக்க எழுபது பூமி எடையுள்ள திட மையத்தைக் கொண்ட வால் நட்சத்திரக் கிரகம் எப்படி உருவாக முடியும்?

எனவே நிச்சயமாக இந்த வால் நட்சத்திரக் கிரகம் மற்றொரு நட்சத்திரத்தால் கவர்ந்திழுக்கப் பட்டு வாயுக்கள் ஆவியாகிக் கொண்டு இருக்கும் ஒரு நட்சதிரமேயாகும்.

நம்முடைய வியாழன் கிரகத்தின் மத்தியில் மூன்று பூமி எடையுள்ள திட மையம் இருப்பதாக காசினி செயற்கைக் கோள் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

வியாழன் கிரகத்தைச் சுற்றியுள்ள அதிக அளவுள்ள வாயுக்களை அது கவர வேண்டும் என்றால் குறைந்த பட்சம் பத்து பூமி எடையுள்ள திட கோளம் அதற்குள் இருக்க வேண்டும்.

எனவே வியாழன் கிரகமும் எரிந்து முடிந்த நட்சதிரமே ஆகும்.

ஹெச் டி 149026 என்ற நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரகம் பற்றி
ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள்.

இந்தக் கிரகம் சூரியனை பூமி சுற்றி வரும் தூரத்தைக் காட்டிலும் இருபத்தி ஐந்து மடங்கு குறைவான தூரத்தில் அதன் நட்சத்திரத்தை வலம் வருகிறது.இது போன்ற கிரகங்கள் உருவாகும் என்பதற்கு எங்களிடம் மாதிரிகள் இல்லை.

-கிரெக் லாகின்,கலிபோர்னியா பல்கலைக் கழகம்,நியூ சயின்டிஸ்ட் வலை தளம்.

ஈர்ப்பு விசை சம நிலை சீர் குலைவு

எழுபது பூமி எடையுள்ள கிரகம் பெரிய வாயு மேகங்களுடைய ஈர்ப்பு விசையின் சம நிலை திடீரென்று சீர் குலைந்து கிரகங்கள் உருவாகும் கொள்கையின் படி உருவாகி இருக்க முடியாது.

-கிரெக் ஹென்றி,ஆராய்ச்சியாளர்,சயின்ஸ் டெய்லி.

இவ்வாறு ஒரு கிரகம் உருவாகக் கூடும் என்று எந்தக் கொள்கையும் கூற வில்லை.

-புனி சாட்டோ,டாக்டரேட் ஆராய்ச்சியாளர்,ஒக்கேயாமா பல்கலைக் கழகம்
ஜப்பான்,ஸ்பேஸ் டெய்லி வலைத் தளம்.

தூசித் தாத்தில் சமநிலை சீர் குலைவு ஏற்படுவது ஒன்றும் பிரச்சினை இல்லை,ஆனால் போதுமான அளவுக்கு சமநிலைச் சி குலைவு ஏற்படுவது கடினம்,மிகவும் நிலையற்ற தூசித் தட்டு கிரகங்களை உருவாக்கும்,

ஆனால் அதற்கு தூசித் தட்டு அசாதாரணமான அளவில் இருப்பதுடன் திடீரென்று குளிர்ச்சி அடையாவும் வேண்டும்.தூசித் தட்டில் சமநிலை சீர் குலைவு சரியா என்று தெரிய வில்லை.

-ஜாக் லிசாயர்,நாசா ஆராய்ச்சியாளர், ஸ்பேஸ் டாட் காம் வலைத் தளம்.

ஆலன் பாஸ் மற்றும் ஜாக் லிசாயர் இருவரும் தூசித் தட்டு சமநிலையில் சீர் குலைவு மற்றும் தூசித் தட்டில் தூசிகள் திரளுதல் ஆகிய இரண்டு முறைகளையும் இணைத்து ஆராய்ச்சி செய்கிறார்கள்.இந்த முறை பல பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று கருதுகிறார்கள்.

ஆனால் ஒரு கார் அளவுப் பாறை எப்படி ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும்?
ஆகவே இது கிரகங்களை வேகமாக உருவாக்கும் என்று அவர்கள் கருதவில்லை.

முக்கியமாக வியாழன் சனி போன்ற கிரகங்களின் மத்தியில் இருக்கும் சிறிய மையக் கோளம் எப்படி வேகமாக அதிக அளவு வாயுக்களுடன் உருவானது என்ற சிக்கலை அவர்கள் தீர்க்க வில்லை.

நமது நட்சத்திர மண்டலத்தில் இருபதாயிரம் கோடி நட்சத்திரங்கள் இருக்கின்றன.கோடானு கோடி கிரகங்கள் இருக்கலாம்.

-ஜியா பிரி மார்சி.

ஒரு வானம் இரண்டு சூரியன்கள்.






பெரிய நட்சத்திரங்களின் வெப்பக் கதிர் வீச்சால் ஆவியாக்கப் பட்ட நட்சத்திரங்கள்தான் கிரகங்கள் ஆகின்றன என்பதை நிரூபிக்கும் வண்ணம் ஓர் அதிசய கிரக அமைப்பு விளங்குகிறது.

பூமியில் இருந்து 45 ஒளி வருட தொலைவில் நமுடைய சூரியனைப் போன்ற இரட்டை நட்சத்திரங்கள் நெருக்கமாக இருக்கின்றன.அவை காமா செபி என்று குறிப்பிடப் படுகின்றன.

வியாழன் கிரகத்தை விட 1.76 மடங்கு பெரிய வாயுக் கோள கிரகம் ஒன்று இந்த இரண்டு நட்சத்திரங்களையும் சூரியனையுரேனஸ் வலம் வந்து கொண்டு இருக்கும் தொலைவில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

இரண்டு நட்சத்திரங்கள் நெருக்கமாக இருக்கும் அதி வெப்ப சூழ்நிலையில் இக்கிரகம் அமைந்து இருக்கிறது.

அதி வெப்ப இந்த கிரகம் இருக்கிறது எனவே கவர்ந்திழுக்கப்பட்டு ஆவியாக்கப் பட்ட நட்சத்திரங்கள்தான் கிரகமாகி வலம் வருகிறது என்பகாற்கு சிறந்த எடுத்துக் காட்டாக இந்த கிரக அமைப்பும் இருக்கிறது.

ஒரு வானம் மூன்று சூரியன்கள்







பூமியில் இருந்து 149 ஒளி வருட தூரத்தில் இருக்கும் ஹெச் டி 188753 என்ற நட்சத்திரத்தை வியாழன் போன்ற ஒரு ராட்சத வாயுக் கோள கிரகம் மிகவும் நெருக்கமாக மூன்றரை நாளுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.

இந்த கிரகம் சூரியனில் இருந்து பூமி இருக்கும் தூரத்தைக் காட்டிலும் இருபது மடங்கு குறைவான தூரத்தில் அதன் நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கிறது.

இந்த கிரகம் வலம் வந்து கொண்டு இருக்கும் வேறொரு ஜோடி நட்சத்திரங்கள் சுற்றுகின்றன.

இதில் அதிசயம் என்னவென்றால் அந்த இரு நட்சத்திரங்களும் ஒன்றையொன்று 156 நாட்களுக்கு ஒரு முறை சுற்றிக் கொண்டு இருக்கின்றன.இந்த இரட்டை நட்சாதிரங்கள் சூரியனை சனி-யுரேனஸ் கிரகங்கள் சுற்றி வரும் தொலைவில் அந்த மைய நட்சத்திரத்தை 25.7 வருடத்துக்கு ஒரு முறை சுற்றுகிறது.

இந்த கிரக மைப்பை ஆராய்ச்சியாளர்கள் விண்வெளி சர்க்கஸ் என்று அழைக்கின்றனர்.

மேலும் இந்த மூன்று நட்சத்திரங்களும் வெவ்வேறு நிறமாக இருக்கின்றன.பிரதான நட்சத்திரம் மஞ்சள் நிறத்திலும் தொலைவில் வலம் வந்து கொண்டு இருக்கும் நட்சத்திரங்கள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்திலும் இருக்கின்றன.

எனவே இந்த வாயுக் கோள கிரகத்தின் சந்திரனில் இருந்து பார்ப்போருக்கு வானில் அதிசயக் காட்சியாக மூன்று சூரியன்கள் தெரியும்.

மேலும் மூண்று சூரியன்களும் மஞ்சள்,சிவப்பு மற்றும் ஆராஞ்சு என்று வெவ்வேறு நிறத்தில் இருப்பதால் வானம் வர்ணஜாலமாகக் காட்சியளிக்கும்.

தினமும் மூன்று முறை சூரிய உதயங்களும் அஸ்தமனங்களும் நிகழும்.அதைப் போல வெப்பமும் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.

மூன்று நட்சத்திரங்களின் வெப்பக் கதிர்வீச்சு இருக்கும் இந்த சூழ் நிலையில் எந்த தூசி மண்டலமும் இருக்க வாய்ப்பில்லை.

மேலும் பிரதான நட்சத்திரத்தை வாயுக் கோள கிரகம் வலம் வந்து கொண்டு இருப்பதோடு சற்று தொலைவில் கிரகங்களைப் போல் நட்சத்திரங்களும் வலம் வந்து கொண்டு இருப்பதால் நட்சத்திரங்கள்தான் இறுதியில் கிரகங்கள் ஆகின்றன என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

மைய நட்சத்திரத்துக்கும் அதை வலம் வந்து கொண்டு இருக்கும் இரட்டை நட்சத்திரத்துக்கும் இடையில் உள்ள தூரம்,சூரியனுக்கும் சனி கிரகத்துக்கும் இடையில் உள்ள தூரமே என்பதே இந்தக் கிரக அமைப்பில் இருக்கும் வினோதம் ஆகும்.

இதைப் போன்ற நட்சத்திர அமைப்புகள் பல இருந்தாலும் மூன்று நட்சத்திரங்களின் நடுவில் ஒரு கிரகமும் மாடிக் கொண்டு இருப்பது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப் படுத்தி இருக்கிறது.

ஆனால் இந்தக் கிரக அமைப்பில் மைய நட்சத்திரத்திலிருந்து தொலைவில் இரட்டை நட்சத்திரங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதால்,அந்த இடத்திலும் ஒரு வாயுக் கோள கிரகம் உருவாக சாத்தியம் இல்லை.

எனவே நட்சத்திரத்திலிருந்து வெகு தூரத்தில் வாயுக் கோள கிரகங்கள் உருவாகி நட்சத்திரத்தை நெருங்குகிறது என்ற கருத்தும் அடிபட்டுப் போகிறது.



ஹெச் டி 188753 கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள்.
மூன்று நட்சத்திரங்கள் உள்ள அமைப்பில் ஒரு வாயுக் கோள கிரகம் உருவாகி இருப்பது புதிராக இருக்கிறது.

காரணம் மற்ற இரண்டு நட்சாதிரங்காளின் ஈர்ப்பு விசையின் ஆதிக்கம் மைய நட்சத்திரத்தின் அருகே ஒரு கிரகம் உருவாகுவதைத் தடுக்கும்.

மேலும் கிரகத்தின் தோற்றத்தைப் பற்றி விளக்கும் தற்போதைய கொள்கை இதைப் போன்ற பல நட்சத்திர அமைப்பில் கிரகங்கள் உருவாக இயலாது என்று கூறுகிறது.

இதைப் போன்ற ஒரு வெப்ப வியாழன் கிரகம் ஏற்கனவே கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

தற்போது இதைப் போல இருபது ராட்சத வாயுக் கோள கிரகங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.

இதைப் போன்ற கிரகங்கள் நட்சத்திரத்தின் அருகே அதாவது சூரியனை பூமி வலம் வரும் ஒன்பது கோடியே முப்பது லட்சம் மைல் தூரத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு தொலைவில் உருவாகலாம் என்று கருதப் படுகின்றன.

அங்குதான் வெப்ப நிலை குறைவாக இருப்பதால் பனிக் கட்டிகள் தூசிகள் திரண்டு பூமி போன்ற கிரகங்கள் உருவாகி பிறகு இக்கிரகம் அங்கிருக்கும் வாயுக்களைக் கவர்ந்து வியாழன் போன்ற கிரகங்களாக உருவாகும்.

-மாசெய்ஜ் கொனக்சி, டாக்டரேட் ஆராய்ச்சியாளர்,கலிபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலாஜி,பிளானெட்டரி ஆர்க் இணையதளம்.

ராட்சத வாயுக் கோள கிரகங்களின் தோற்றத்தைப் பற்றி நாம் புரிந்து கொண்டவைகளைப் பரிசோதித்துப் பார்க்க இது மற்றொரு வித்தியாசமான அமைப்பு.

மைய நட்சத்திரத்தை வலம் வரும் இரட்டை நட்சதிரங்கள் நீள் வட்டப் பாதையில் வலம் வருகின்றன.

இந்த இரட்டை நட்சத்திரங்கள் மைய நட்சத்திரத்தை, சூரியனை பூமி சுற்றி வரும் தொலைவைக் காட்டிலும்,ஆறு மடங்கு அந்த நட்சத்திரத்தை நெருங்கிப் பிறகு விலகிச் செல்கிறது.

இதனால் மைய நட்சத்திரத்துக்கு அருகே அதாவது சூரியனை பூமி சுற்றி வரும் தூரம் வரை தூசி மண்டலம் நிலையாக இருக்க வாய்ப்பில்லை.

ஏனென்றால் அந்த இடத்தில் தூசி மண்டலமும் அதிக அடர்த்தியாக இல்லை.அதிக வெப்ப நிலையும் நிலவுகிறது.

-ஆலன் பாஸ்,கிரகங்களின் தோற்றத்தை ஆராய்பவர் மற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வு மைய தலைவர்.

ராட்சத கிரகமா? இடை நிலை நட்சத்திரமா?





ஹெச் டி 168443 என்ற ஒரு நட்சத்திரத்தை ஹெச் டி 168443 -பி என்ற பெரிய ராட்சத வாயுக் கோள கிரகம் ஒன்று மிகவும் குறுகிய சுற்றுப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

ஒப்பிட்டுப் பார்த்தால்,சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கிரகம் சூரியனை ஆறு கோடி கி மீ தொலைவில் எண்பத்தி எட்டு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி முடிக்கிறது.

ஆனால் அந்தக் கிரகம் அதன் நட்சத்திரத்தை நான்கு கோடியே நாற்பது லட்சம் கி மீ தூரத்திலேயே ஐம்பத்தி எட்டு நாளுக்கு ஒரு முறை சுற்றுகிறது.

பூமியை விட, 317 மடங்கு பெரிய கிரகமான வியாழன் கிரகமே சூரிய மண்டலத்தில் தூசிகள் திரண்டு உருவாகும் முறை மூலம் உருவாக வாய்ப்பிலாத நிலையில்,அதை விடக் குறைந்த தூரத்தில்,அதன் நட்சத்திரத்தின் வெப்பக் கதிர் வீச்சு அதிகம் இருக்கும் இடத்தில்,வியாழன் கிரகத்தை விட 7.7 பெரிய கிரகம் எப்படி உருவாக முடியும்.

இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக அதே நட்சத்திரத்தை 43 கோடி கி மீ தொலைவில் வியாழன் கிரகத்தை விட பதினேழு மடங்கு பெரிய ராட்சத வாயுக் கோளம் 4.8 வருடத்துக்கு ஒரு முறை சுற்றுகிறது.

வியாழன் கிரகத்தை விட பதின் மூன்று மடங்கு பெரிய அளவில் ஒரு வாயுக் கோளம் இருந்தாலே அதில் இருக்கும் டியூட்ரியம் போன்ற ஹைட்ரஜன் அணுக்கள் பிணைந்து அணுகரு வினையில் ஈடுபடுவதால் வாயுக் கோளம் நட்சத்திர நிலையை அடைந்து விடுகிறது.

இந்த ராட்சத வாயுக் கோளங்கள் கிரகங்களை விட மிகவும் பெரியதாக இருப்பதாலும் அதே சமயத்தில் நட்சத்திரங்களை விட மிகவும் சிறியதாக இருப்பதாலும்,இவை இடை நிலை நட்சத்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன.

எனவே ஹெ ச் டி 168443 என்ற நட்சத்திரத்தை வெகு அருகில் ஒரு ராட்சத வாயுக் கோள கிரகம் சுற்றி வருவதும்,அதே நட்சத்திரத்தை கிரகங்கள் வலம் வரும் தொலைவில் ஓர் இடை நிலை நட்சத்திரம் வலம் வந்து கொண்டு இருப்பதும்,நட்சத்திரங்கள்தான் பின்பு கிரகங்கள் ஆகின்றன என்பதையே நிரூபிக்கின்றன.

இந்தக் கிரகம்,கிரகம் என்று சொல்ல முடியாத அளவுக்குப் பெரியதாக இருக்கிறது.ஆனால் நட்சத்திரம் என்று சொல்ல இயலாத அளவுக்குச் சிறியதாக இருக்கிறது.

இக்கிரகம் எங்களது எதிர்பார்ப்புக்கு மாறாக இருக்கிறது.இது இடை நிலை நட்சத்திரமா அல்லது புது கலப்பினமா?

-ஜியோப்ரி மார்சி,நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட வேற்று கிரகங்களைக் கண்டுபிடித்தவர்.பி பி சி செய்தி வலைத் தளம்.

கிரகம் வலம் வரும் நட்சத்திரத்தை,தொலைவில் வலம் வரும் இடை நிலை நட்சத்திரங்கள்.



பூமியில் இருந்து முப்பத்தி ஆறு ஒளி வருட தூரத்தில்,மீனா ராசி நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும் ஹெச் டி 3651 என்று அழைக்கப் படும் சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை மூன்று கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.

அந்த நட்சத்திரத்தை சனி கிரகம் போன்ற ஒரு வாயுக் கோளம்,சூரியனை புதன் கிரகம் சுற்றி வரும் தொலைவில் 62 நாட்களுக்கு ஒரு முறை சுற்றுகிறது.

இரண்டாவதாக வியாழன் கிரகத்தை விட 20 முதல் 60 மடங்கு பெரிய ஹெச் டி 3651 -பி ,என்ற துணை நிலை நட்சத்திரம்,சூரியனை நெப்டியூன் சுற்றி வரும் தொலைவக் காட்டிலும் 16 மடங்கு அதிகத் தொலைவில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

இந்தத் துணை நிலை நட்சத்திரத்தின் வெப்ப நிலை 500 முதல் 600 செல்சியஸ்.இந்தத் துணை நிலை நட்சத்திரம் நேரடியாகப் படம் பிடிக்கப் பட்டு இருக்கிறது.

இந்தக் கிரக அமைப்பைக் கண்டு பிடித்த ஆராய்ச்சில் குழுவினர் வேறு இரண்டு நட்சத்திரங்களை எரிந்து முடிந்த நட்சத்திரங்கள் இரண்டு வலம் வந்து கொண்டு இருப்பதையும் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

கிரகங்கள் வலம் வரும் நட்சத்திரத்தைத் துணை நிலை நட்சத்திரங்களும் வலம் வந்து கொண்டு இருப்பதால்,நட்சத்திரங்கள்தான் கிரகங்களாக உருவாகுகின்றன என்று தெரிகிறது.

ஹெச் டி 3651 கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
கிரகங்களும் இடை நிலை நட்சத்திரங்களும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி உருவாகக் கூடும் என்பதை ஹெச் டி 3651 நிரூபிக்கிறது.

-மார்க் மக்ராயர்,இக்கிரகதைக் கண்டு பிடித்தவர்.

சி ஹெச் ஆர் எக்ஸ் -73 என்ற நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கும் ஒரு ராட்சத வாயுக் கோள கிரகம் வியாழன் கிரகத்தை விட 12 மடங்கு பெரியதாக இருக்கிறது.



வியாழன் கிரகத்தை விட இவ்வளவு மடங்கு பெரியதாக இருப்பதால் இந்தக் கிரகம் இடை நிலை நட்சத்திரம் என்றே கருதப் படுகிறது.

எனவே இந்தப் புதிய கிரகத்தை கிரகம் என்று அழைப்பதா அல்லது நட்சத்திரம் என்று அழைப்பதா என்று சர்ச்சை நீடிக்கிறது.

மேலும் இது வரை கண்டு பிடிக்கப் பட்ட ராட்சத வாயுக் கோள கிரகங்கள் எல்லாம் உண்மையிலேயே கிரகங்கள்தானா? என்ற சந்தேகத்தையும் எழுப்பி இருக்கிறது.

நட்சத்திரங்கள்தான் கிரகங்கள் ஆகின்றன என்பதை நிரூபிக்க மிகச் சிறந்த ஆதாரமாக ஏ பி பிக்டோரிஸ் என்ற கிரகம் விளங்குகிறது.



பூமியில் இருந்து 150 ஒளி வருட தூரத்தில் இருக்கும் ஏ பி பிக்டோரிஸ் என்ற நட்சத்திரத்தை சூரியன் பூமி சுற்றி வரும் தொலைவைக் காட்டிலும் 270 மடங்கு தொலைவில் வியாழன் கிரகத்தை விட 13 முதல் 14 மடங்கு வரை அதிக எடை உள்ள வாயுக் கோளம் ஒன்று வலம் வந்து கொண்டு இருக்கிறது.

வியாழன் கிரகத்தை விட 13.6 மடங்கு அதிக எடையுடன் ஒரு வாயுக் கோளம் இருந்தால் அதில் அணுக்கரு வினை நடை பெறுவதால் நட்சத்திர நிலையை அடைந்து விடுகிறது.

ஏ பி பிக்டோரிஸ் நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கும் வாயுக் கோளம் இடை நிலை நட்சத்திர நிலைக்கும் கிரக நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பதால் நட்சத்திரங்கள்தான் கிரகங்கள் ஆகின்றன என்பது நிரூபணமாகிறது.

நட்சத்திரத்தை வலம் வரும் இடை நிலை நட்சத்திரம்.

மைகேல் லியூ என்ற ஆராய்ச்சியாளர் 15 சாஜிடேரியன் நட்சத்திரத்தின் அருகில் ஓர் ஒளிப் புள்ளி இருப்பதைக் கண்டு பிடித்தார்.

பூமியில் இருந்து 58 ஒளி வருடத் தூரத்தில் இருக்கும் 15 சாஜிடே என்ற நட்சத்திரத்தை வியாழன் கிரகத்தை விட 55 - 78 மடங்கு அதிக எடையுள்ள ராட்சத வாயுக் கோளம் ஒன்று சூரியனை சனி கிரகம் சுற்றி வரும் தூரத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

நட்சத்திரங்களைப் போல இந்த இடை நிலை நட்சத்திரமும் வெப்பத்தை உற்பத்தி செய்வதால் இந்தக் கிரகம் இடை நிலை நட்சத்திரம் என்றே அழைக்கப் படுகிறது.இந்தக் கிரகங்கள் எப்படி உருவாகின்றன என்று தற்பொழுது உள்ள எந்த கொள்கையாளரும் விளக்கம் தர இயலவில்லை.

மேலும் 70 வர்ஜினிஸ், 16 சைக்னஸ், ஹெச் டி-114762 ஆகிய நட்சத்திரங்கள் வலம் வரும் கிரகங்கள் வால் நட்சத்திரங்களைப் போல நீள் வட்டப் பாதையில் வலம் வருகின்றன.



இவ்வாறு கிரகங்கள் நீள் வட்டப் பாதையில் வலம் வருவதற்கு தாய் நட்சத்திரத்தின் முன் நோக்கிய பயணமே பிரதான காரணமாகும்.விலகிச் செல்லும் கிரகம் திரும்பவும் ஈர்க்கப் பட்டு நட்சத்திரத்துக்கு அருகில் வருவதற்குள் நட்சத்திரம் வெகு தூரத்துக்கு சென்று விடுவதால் கிரகங்கள் நீள் வட்டப் பாதைக்குத் தள்ளப் படுகின்றன.

15 சாஜிடே கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இந்தக் கண்டு பிடிப்பு நம் சூரியன் போன்ற சராசரி நட்சத்திரங்களை,வெளி வட்டக் கிரகங்கள் வலம் வரும் தொலைவில் இடை நிலை நட்சத்திரங்களும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்பதைக் குறிக்கிறது.

ஆனால் இந்தத் துணைக் கோள்கள் தூசித் தட்டில் இருந்து கிரகங்கள் உருவாகுகின்றன என்ற நம்பிக்கையைத் தகர்க்கிறது.

சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் நட்சத்திரங்களை வலம் வரும் கிரகங்களைத் தேடுகிறார்கள்.ஆனாலவர்கள் தேடலில் அதிகத் தொலைவில் அதிக எடை உள்ள இடை நிலை நட்சத்திரங்கள் மாட்டுகின்றனவே தவிர கிரகங்கள் மாட்டவில்லை.

மைகேல் லியூ,ஹவாய் பல்கலைக் கழகம்,அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்,பி பி சி செய்தி வலைத் தளம்.

இப்போது நாங்கள் ராட்சத கிரகங்கள் உருவாகும் இடத்தில் இடை நிலை நட்சத்திரங்கள் இருப்பதை அறிகிறோம்.

விண்வெளியில் இந்த வினோத ஜோடிகள் எப்படி ஏற்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம்.அது சூரியன் போன்ற நட்சத்திரத்தைச் சுற்றி கிரகங்களின் தோற்றத்தையும் சூரிய மண்டலத்தின் தோற்றத்தைப் பற்றியும் வேறு புதிய முறைகளைத் தெரிவிக்கும்.

- மைகேல் லியூ, ஸ்பேஸ் டாட் காம் வலைத் தளம்.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?