வால் நட்சத்திரங்கள் மூலம் ,தூசித் தட்டுக் கொள்கை தவறு என்பது தெரிய வந்துள்ளது.



வால்நட்சத்திரங்கள் சூரியனை நோக்கி வரும் பொழுது,அதில் இருக்கும்,எளிதில் ஆவியாகக் கூடிய ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள் ஆவியாகி வால் நட்சத்திரத்தில் இருந்து வெளியேறுகின்றன.

குறிப்பாக,வால் நட்சத்திரங்களானது சூரியனில் இருந்து அதிக தொலைவில் இருக்கும் பொழுது பாறையாக இருக்கின்றன.

ஆனால் சூரியனை நோக்கி வரும் பொழுது,குறிப்பாக செவ்வாய் கிரகத்தின் வட்டப் பாதைக்கு அருகில் வரும் பொழுது,வால் நட்சத்திரத்தில் இருக்கும் எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்களான ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள்,வான் நட்சத்திரத்தில் இருந்து வெளியேறுகின்றன.

அதனால் வால் நட்சத்திரத்தின் அளவும் அதிகரிக்கிறது.

இந்த நிலையில் வால் நட்சத்திரங்கள் சூரியனை நெருங்க நெருங்க அதில் இருந்து,சோடியம்,அம்மோனியா,மீத்தேன்,கார்பன் டை ஆக்சைட்,கார்பன் மோனோ ஆக்சைட்,போன்ற வாயுக்களும் வெளியேறுகின்றன.

குறிப்பாகக் கடந்த,1997 ஆம் ஆண்டு,ஹாலி பாப் என்ற வால் நட்சத்திரம்,சூரியனை நோக்கி வரும் பொழுது,சூரியனில் இருந்து,இரண்டாயிரம் மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் வரும் பொழுதே, அதாவது,சனி மற்றும் யுரேனஸ் கிரகத்தின் சுற்றுப் பாதைக்கு அருகில் வந்த பொழுதே,அதில் இருந்த எளிதில் ஆவியாக்கக் கூடிய வாயுக்கள் ஆவியானதால்,அதன் தலைப் பகுதியின் அளவு அதிகரித்தது.

இதன் மூலம்,முன் ஒரு காலத்தில் சூரியனுக்கு அருகில் இருந்த தூசிகளும் வாயுக்களும் திரண்டதால்தான்,புதன்,வெள்ளி,பூமி மற்றும் செவ்வாய் போன்ற பாறை கிரகங்களும்,அதே போன்று வியாழன், சனி போன்ற வாயுக் கோள கிரகங்கள் உருவானதாகக் கூறும் விளக்கம் தவறு என்பது தெரிய வந்துள்ளது.

ஏனென்றால், பூமியில் எளிதில் ஆவியாகக் கூடிய மீதேன்,அம்மோனியா,கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் இருக்கின்றன.

இது போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்களானது,வால் நட்சத்திரத்தில் இருந்து,குறிப்பாக அந்த வால் நட்சத்திரங்களானது,செவ்வாய்,பூமி சுற்றுப் பாதையில் வரும் பொழுதே ஆவியாகத் தொடங்கி விடுகிறது.

எனவே தூசிகள் மற்றும் வாயுக்கள் திரண்டு ,பூமி உருவாகி இருந்தால்,அம்மோனியா,மீத்தேன்,கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் பூமியில் இருக்க வாய்ப்பில்லை.எனவே,கிரகங்கள் எல்லாம் தூசிகள் மற்றும் வாயுக்கள் திரண்டு உருவாக வில்லை என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?