பத்திரிகை செய்தி வெளியீடு.

சென்னை. 30.03.2012




(மேப் விளக்கம்-அட்லாண்டிக் கடல் பகுதியில் வட அமெரிக்கக் கண்டதிற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.மேப் நன்றி நாசா )


வணக்கம் ,


பொருள்:நில அதிர்ச்சி சுனாமி காரணம் கண்டு பிடித்ததை தெரிவித்தல்.



பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது எரிமலையின் உயரம் அதிகரிக்கிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றி உள்ள தரைப் பகுதியும் உயர்கிறது.

அதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது எரிமலையின் உயரம் குறைகிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றி உள்ள தரைப் பகுதியும் இறங்குகிறது.

இவ்வாறு ஒரு எரிமலை பல முறை உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் வட்ட வடிவில் உயர்ந்து இறங்குவதால் எரிமலையைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு சில அங்குலம் உயரத்துடன் மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன.

இவ்வாறு எரிமலையைச் சுற்றி உருவாகும் சில அங்குல உயர மேடு பள்ள வளையங்கள் தரையில் இருந்து பார்க்கும் பொழுது தெரிவதில்லை.ஆனால் நுட்பமான செயற்கைக் கோள் ரேடியோ கதிர் வீச்சு படங்களில் பதிவாகின்றன.
இதே போன்ற மேடு பள்ள வளையங்கள் நில அதிர்ச்சி ஏற்பட்ட இடங்களில் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் உருவாகி இருப்பதும் செயற்கைக் கோள் ரேடியோ கதிர் வீச்சு படங்களில் பதிவாகி இருக்கின்றன.

உதாரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் ஐரோப்பாக் கண்டத்திற்கும் இடை பட்ட மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள லா அகுய்லா நகரத்தில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு ஆப்பிரிக்கக் கண்டத்தின் நகர்ச்சியால் ஐரோப்பாக் கண்டத்திற்கும் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் இடையில் ஏற்பட்ட அழுத்தம் காரணம் என்று நம்பப் படுகிறது.
இந்த நிலையில் லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்ட மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு எரிமலைகள் உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்கள் 2.8 சென்டி மீட்டர் உயரத்திற்கு உருவாகி இருப்பது இணையத்தில் வெளியிடப் பட்ட செயற்கைக் கோள் ரேடியோ கதிர் வீச்சு படப் பதிவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
எனவே நிலத்திற்கு அடியில் இருக்கும் எரிமலைகள் உயர்ந்ததாலேயே லா அகுய் லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

இதே போன்று கண்டத் தட்டுகள் நகர்ந்ததால் நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவானதாகக் கருதப் படும் எரிமலைத் தீவுகளிலும் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு எரிமலைகளைச் சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும் இணையத்தில் வெளியிடப் பட்ட செயற்கைக் கோள் ரேடியோ கதிர் வீச்சு படங்களில் பதிவாகி இருக்கின்றன.

குறிப்பாக இந்தோனேசிய சுனாமியை உருவாக்கிய சிமிழு தீவிலும் ,அதே போன்று ஹைத்தி சுனாமியை உருவாக்கிய ஹைத்தி தீவிலும் அத்துடன் ஜப்பான் சுனாமியை உருவாக்கிய ஹோண்சு தீவிலும் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு எரிமலைகள் உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றி உருவாகும் சென்டி மீட்டர் உயர மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது இணையத்தில் வெளியான செயற்கைக் கோள் ரேடியோ கதிர் வீச்சு படங்களில் பதிவாகி இருக்கின்றன.
எனவே பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் உயர்ந்த்தாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருக்கின்றன.

தற்பொழுது இந்தோனேசியா ஹைத்தி மற்றும் ஜப்பான் ஆகிய எரிமலைத் தீவுகளில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கண்டங்களை சுமந்து சென்று கொண்டு இருப்பதாகக் கருதப் படும் கண்டத் தட்டுகளின் நகர்ச்சி காரணம் என்று விளக்கம் கூறப் படுகிறது.ஆனால் இந்தக் கருத்தாக்கத்திற்கு அடிப்படை ஆதாரம் இல்லை.

குறிப்பாக கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில் உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து நாசா அமைப்பு ஒரு நில அதிர்ச்சி வரை படத்தை தயாரித்து வெளியிட்டது.
குறிப்பாக கண்டங்களை சுமந்த படி நகர்ந்து செல்லும் கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று விளக்கம் கூறப் படுகிறது.
மேலும் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் மேற்கு திசை நோக்கி தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கருதப் படுகிறது.
இந்த விளக்கம் உண்மையென்றால் அட்லாண்டிக் கடல் பகுதியில் வட அமெரிக்கக் கண்டதிற்கும் தென் அமெரிக்கக் கண்டதிற்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும் .ஆனால் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

எனவே கண்டங்கள் எல்லாம் கண்டத் தட்டுகளின் மேல் இருந்த படி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கருத்தாக்கம் அடிப்படை ஆதாரமற்ற கருத்து.
எனவே நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் உயர்வதே காரணம் என்பது இணையத்தில் வெளியான செயற்கைக் கோள் ரேடியோ கதிர் வீச்சு படங்களில் பதிவான மேடு பள்ள வளையங்கள் மூலம் நிரூபணமாகிறது .-விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?