இத்தாலி நில அதிர்ச்சிக்கு எரிமலையே காரணம்.ஆய்வில் கண்டு பிடிப்பு .
பூமிக்கு அடியில் இருந்த எரிமலை வெடித்ததால் இத்தாலி நாட்டில் ஏற்பட்ட நில அதிர்ச்சி ஏற்பட்டிருப்பது திட்டவட்ட மாகத் தெரியவந்திருகிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் நாள் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் இத்தாலி நாட்டில் கடும் நில அதிர்ச்சி ஏற்பட்டது.
குறிப்பாக இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் லா அகுய்லா என்ற நகரை மையமாகக் கொண்டு நில அதிர்ச்சி ஏற்பட்டது.
அந்த நில அதிர்ச்சியானது ஆல்ப்ஸ் மலைப் பிரதேசத்தின் மத்தியப் பகுதியில் ஏற்பட்டது.
அத்துடன் சுற்றுவட்ட பகுதியைத் தவிர்த்து மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டது.
லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சியின் வீரியம் அதிகமாகவும் சுற்றுவட்டப் பகுதியில் நில அதிர்ச்சியின் வீரியம் குறைவாகவும் இருந்தது.
அமெரிக்கப் புவியியல் கழகத்தினர் வெளியிட்ட அறிக்கையில், ஆப்பிரிக்கக் கண்டம் வடக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. அதானால் ஆப்பிரிக்கக் கண்டத் தட்டுக்கும் ஐரோப்பாக் கண்டத் தட்டுக்கும் இடையிலான உரசல் நில அதிர்ச்சிக்கு காரணமாகக் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலின் வட கோடிப் பகுதியில் இருந்து தென் கோடி பகுதி வரை கடலுக்கு அடியில் நாற்பதாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு கடலடி மலைத் தொடர் அமைந்திருக்கிறது.
மத்திய கடலடி மலைத் தொடர் என்று அழைக்கப் படும் அந்த மலைத் தொடரின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து புதிய பாறைத் தட்டு உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக கருதப் படுகிறது.
குறிப்பாக அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு வெப்பத்தால் விரிவடைந்து மேற்பகுதிக்கு வரும் பொழுது குளிர்ந்து இறுகி புதிய கடல் தரையாக உருவாகுவதாக விளக்கம் கூறப் படுகிறது.
இதே போன்று மறுபடியும் அதே இடத்திற்கு வரும் பாறைக் குழம்பு ஏற்கனவே அப்பகுதியில் உருவாகி இருந்த பழைய பாறைகளை பக்க வாட்டுப் பகுதிக்கு தள்ளி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல்தட்டாக உருவகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இதே போன்று தொடர்ந்து மத்திய பகுதியில் புதிய கடல் தரை உருவகுவதாலும் மத்தியப் பகுதியில் உருவான கடல் தரை கிழக்கு மற்றும் மேற்கு திசையை நோக்கி நகர்ந்தப் படுவதாலும் அட்லாண்டிக் கடல் தரையானது மத்தியப் பகுதியில் உருவாகி விரிவடைந்து கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக கருதப் படுகிறது.
இதனால் கடல் தரையின் மேல் இருந்தபடி அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் இருக்கும் கண்டங்களும் கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.
குறிப்பாக அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் இருக்கும் வட அமெரிக்கக் கண்டங்கள் மேற்கு திசை நோக்கியும் அதே போன்று அட்லாண்டிக் கடலுக்கு கிழக்கு பகுதியில் இருக்கும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் கிழக்கு திசை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.
இந்த நிலையில் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் மத்திய கடலடி மலைத் தொடர் அண்டார்க்டிக் கண்டத்திற்கு வடக்கே இரண்டு கிளைகளாக பிரிந்து ஒரு கிளை பசிபிக் கடலை நோக்கி நீண்டு மறுபடியும் வடக்கு திசை நோக்கி வளைந்து தென் அமெரிக்கக் கண்டத்தை சுற்றியபடி செல்கிறது.
இதே போன்று மத்திய கடலடி மலைத் தொடரின் இரண்டாவது கிளையானது கிழக்கு திசை நோக்கி வளைந்து ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் அண்டார்க்டிக் கண்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் கிழக்கு திசை நோக்கி நீண்டு இந்தியப் பெருங் கடலுக்குள் நுழைந்து மறுபடியும் வடக்கு திசை நோக்கி வளைந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிய படி செங்கடல் பகுதியில் முடிவடைகிறது.
இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் அண்டார்க்டிக் கண்டத்திற்கும் நடுவில் இருக்கும் கடலடி மலைத் தொடரின் மத்தியப் பகுதியில் புதிதாக கடல் தரை உருவாகி தெற்கு மற்றும் வடக்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தரையின் மேல் இருந்தபடி ஆப்பிரிக்கக் கண்டமானது வடக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகும் விளக்கம் கூறப் படுகிறது.
எப்படி ஒரு கண்டம் ஒரே நேரத்தில் இரண்டு திசை நோக்கி நகர இயலும்?
குறிப்பாக அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக கடல் உருவாகி கிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை சுமந்த படி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு தென் பகுதியிலும் புதிய கடல் தரை வடக்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுவது முரணாக இருக்கிறது.
இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு கிழக்குப் பகுதியில் இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி மலைத் தொடர் பகுதியிலும் புதிய கடல் உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.
இதன் படி ஆப்பிரிக்கக் கண்டம் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக அமைகிறது.
அதாவது ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றியும் புதிய கடல் தரை உருவாகி விரிவடைந்து எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுவது ஏற்புடைய கருத்தல்ல.
ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றியும் குறைந்த சுற்றுவட்டப் பகுதியில் உருவாகும் புதிய கடல் தரையால் அதிக சுற்றுவட்ட பகுதியை நிரப்ப இயலாது.
எனவே ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றியும் புதிய கடல் தரை உருவாகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறம படும் விளக்கம் முற்றிலும் தவறான விளக்கம்.
இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் உள்ள கடல் பகுதியில் அதாவது அதிக சுற்றுவட்டப் பகுதியில் கடல் தரை உருவாகி ஆப்பிரிக்கக் கண்டத்தை நோக்கி அதாவது குறைந்த சுற்றுவட்டப் பகுதியை நோக்கி கடல் தரை நகர்ந்து செல்வதாகக் கூறப் படும் விளக்கமும் ஏற்கக் கூடிய கருத்தல்ல.
ஏனென்ன்றால் அதிக சுற்றுவட்டப் பகுதியில் உருவாகும் அதிக அளவுள்ள கடல் தரை குறைந்த சுற்றளவுப் பகுதியை நோக்கி நகர்ந்தால் பாறைத் தட்டு சுருங்கி இடப் பற்றாக் குறை ஏற்படும்.
முக்கியமாக ஒரே நேரத்தில் ஒரு கண்டம் எல்லா திசையை நோக்கியும் நகர சாத்தியமே இல்லை.
எனவே ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் ஐரோப்பாக் கண்டத்திற்கும் இடைப் பட்ட மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் இத்தாலி நகரத்தின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் லா அகுய் லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு ஆப்பிரிக்கக் கண்டம் மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கம் ஏற்புடையதன்று.
இந்த நிலையில் இத்தாலி நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்ட மையப் பகுதியை சுற்றிலும் எரிமலைகள் உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உருவாகும் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது செயற்கைக் கோள் ரேடியோ கதிர் வீச்சு படங்களில் பதிவாகி இருகிறது.(படம்-1)
எனவே இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு பூமிக்கு அடியில் இருந்த எரிமலை மேல் நோக்கி உயர்ந்ததே காரணம் என்பது செயற்கைக் கோள் படங்கள் மூலம் உறுதிப் படுத்தப் படுகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.
Comments