கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தாக்கம் முற்றிலும் தவறானது.
(கண்டங்களுக்கு இடையில் கண்டங்களை சுற்றிய படி இருக்கும் மத்திய கடலடி மலைத் தொடர்.)
ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு மேற்கு பகுதியிலும் கிழக்கு பகுதியிலும் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து சென்றால் ஆபிரிக்கக் கண்டதால் கிழக்கு திசை நோக்கியும் நகர இயலாது.அதே போன்று மேற்கு திசை நோக்கியும் நகர இயலாது.எனவே ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றியுள்ள கடல் பகுதியில் உள்ள கடலடி மலைத் தொடரின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து செல்வதாகக் கூறப் படும் விளக்கம் முற்றிலும் தவறு.
அதே போன்று அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றி உள்ள கடல் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து செல்லவும் சாத்தியம் இல்லை.
(கண்டத் தட்டு நகர்ச்சி விளக்கப் படம் நன்றி நேட்சர்.
ஏனென்றால் ஒரு கண்டத்தை சுற்றி குறைந்த சுற்றுவட்டப் பகுதியில் உருவாகும் கடல் தரையால் அதிக சுற்றுவட்டப் பகுதியை நிரப்ப இயலாது.
அதே போன்று ஒரு கண்டத்தை சுற்றி அதிக சுற்றுவட்டப் பகுதியில் உருவாகும் கடல் தரையால் குறைந்த சுற்றுவட்ட பகுதியை நோக்கி நகர்ந்து செல்ல சாத்தியம் இல்லை.ஏனென்றால் அதிக சுற்றுவட்டப் பகுதியில் உருவாகும் கடல் தளப் பாறைகள் குறைந்த சுற்றுவட்டப் பகுதியை நோக்கி நகரும் பொழுது இட நெருக்கடி ஏற்பட்டு கடல் தரை நொறுங்கி விடும்.
எனவே கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் கடலுக்கு அடியில் கண்டங்களை சுற்றியபடி உருவாகி இருக்கும் கடலடி மலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தட்டின் மேல் இருந்த படி கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படும் கருத்தாக்கம் முற்றிலும் தவறானது.
-விஞ்ஞானி.க.பொன்முடி.
Comments