நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது?
(ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் கடல் தரை விரிவுப் பகுதிஇருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.நேட்சர் இதழில் வெளியிடப் பட்டவிளக்கப் படம்.)
நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு பொதுவாக ஒரு கண்டத் தட்டிற்கு அடியில் அடுத்த கண்டத் தட்டு உரசிச் செல்வதால் ஏற்படுகிறது என்று விளக்கம் கூறப் படுகிறது.
கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதற்கு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் புதிதாக கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தரையின் மேல் இருந்த படி கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.
குறிப்பாக அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் வட கோடிப் பகுதியில் இருந்து தென் கோடிப் பகுதி வரை நாற்பதாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு கடலடி மலைத் தொடர் அமைந்து இருக்கிறது.இந்தக் கடலடி மலைத் தொடர் பகுதியில் நாற்பதாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய கடல் தரை உருவாகி மேற்கு மற்றும் கிழக்கு என எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.
இவ்வாறு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக கடல் தரை உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதால் கடல் தரையின் மேல் இருந்தபடி கண்டங்களும் கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.
குறிப்பாக அட்லாண்டிக் கடலுக்கு மேற்கு பகுதியில் உள்ள அமெரிக்கக் கண்டங்கள் மேற்கு திசை நோக்கியும் அதே போன்று அட்லாண்டிக் கடலுக்கு கிழக்குப் பகுதியில் இருக்கும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க ஆகிய கண்டங்கள் கிழக்கு திசை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.
இவ்வாறு புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடையும் பகுதி ஆப்பிர்க்க்கக் கண்டதிற்கு தென்பகுதியிலும் இருப்பதாக கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.அத்துடன் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகரும் பகுதி ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு கிழக்குப் பகுதியில் இந்தியப் பெருங் கடலிலும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
இவ்வாறு ஒரு கண்டத்தை சுற்றிலும் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருந்தால் அந்தக் கண்டம் எந்தத் திசையிலும் நகர்ந்து செல்ல சாத்தியம் இல்லை.
எனவே கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் புதிதாக கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதால் கண்டங்கள் நகர்ந்து உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று கூறப் படும் விளக்கம் முற்றிலும் தவறான விளக்கம்.
இந்த நிலையில் எரிமலைகள் உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றிலும் உள்ள தரைப் பகுதியும் உயர்ந்து இறங்குவதால் தரையில் ஏற்படும் ஏற்ற இறக்கப் பதிவுகள் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் ஏற்படுவது செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.எனவே பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடிப்பதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
(இத்தாலி நில அதிர்ச்சி ஏற்பட்ட இடத்தை சுற்றிலும் ஏற்ற இறக்க வளையங்கள்.செயற்கைக் கோள் படம்)
உதாரணமாக கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் ஆறாம் நாள் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் ஐரோப்பாக் கண்டதிற்கும் இடைப்பட்ட மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் லா அகுய்லா என்ற நகரில் கடும் நில அதிர்ச்சி ஏற்பட்டது.
தற்பொழுது இந்த நில அதிர்ச்சிக்கு ஆப்பிரிக்கக் கண்டம் ஐரோப்பாக் கண்டத்தை நோக்கி நகர்ந்து நெருக்கிக் கொண்டு இருப்பதால் ஏற்பட்டது என்று விளக்கம் கூறப் படுகிறது.
குறிப்பாக நில அதிர்ச்சி ஏற்படும் இடங்களில் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரையில் சில அங்குலம் உயரத்திற்கு வளைய வடிவில் தரை உயர்ந்து இறங்குவதால் ஏற்படும் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
குறிப்பாக ஒரு இடத்தின் தரைப் பகுதியில் செயற்கைக் கோள் மூலம் ரேடியோ கதிர்ககளை வீசும் பொழுது அந்தக் கதிர்கள் தரையில் பட்டு மறுபடியும் செயற்கைக் கோளை வந்தடையும் பொழுது தரையின் ஏற்ற இறக்கங்கள் பல்வேறு வண்ணங்களில் பதிவாகின்றன.
இதே முறையில் அந்த இடத்தை நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு எடுக்கப் பட்ட செயற்கைக் கோள் படங்களில் தரைப் பகுதியில் புதிதாக ஏற்பட்ட மாறுபாடுகள் பதிவு செய்யப் படுகின்றன.இந்த இரண்டு படங்களையும் கணிப் பொறி மூலம் ஒரே படமாக தொகுக்கப் படும் பொழுது நில அதிர்ச்சியால் தரையில் எந்த அளவிற்கு ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு இருக்கிறது என்பது பல்வேறு வண்ணங்களாக பதிவாகின்றன.உதாரணமாக ஒரு சென்டி மீட்டர் ஏற்றம் சிவப்பு வண்ணமாகவும் அதே போன்று ஒரு சென்டி மீட்டர் இறக்கம் நீல வண்ணமாகவும் பதிவு செய்யப் படுகின்றன.
இவ்வாறு ஏற்ற இறக்கத்தைக் குறிக்கும் செயற்கைக் கோள் படங்களை ஒரே படமாக இணைக்கும் பொழுது ஒரு இடத்தில் நில அதிர்ச்சியால் தரை எவ்வளவு சென்டி மீட்டர் உயர்ந்து தாழ்ந்து இறுக்கியது என்ற விபரங்கள் தெரிய வருகிறது.
இந்த முறையில் எடுக்கப் பட்ட செயற்கைக் கோள் படங்களில் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரையில் சில செண்ட்டி மீட்டர் உயர்ந்து இருப்பதும் அதே போன்று சில சென்டி மீட்டர் தாழ்ந்து இருப்பதும் பதிவாகி இருக்கிறது.
குறிப்பாக நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் நீரில் உருவாகும் வளையங்கள் போன்று பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஒன்றிற்குள் ஒன்றாக பல ஏற்ற வற்ற வளையங்கள் உருவாகி இருக்கின்றன.
முக்கியமாக இது போன்ற ஏற்ற வற்ற வளையங்கள் எரிமலைகள் உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றிலும் உருவாகி இருப்பதும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு எரிமலைக்குள் நுழையும் பொழுது எரிமலை உயர்கிறது.அப்பொழுது எரிமலையை சுற்றிலும் உள்ள தரைப் பகுதியும் உயர்கிறது.அதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது எரிமலை இறங்குகிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் சற்று இறங்குகிறது.இவ்வாறு எரிமலையுடன் எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதி உயர்ந்து இறங்கியதற்கு அடையாளமாக வட்ட வடிவில் ஏற்ற இறக்க வளையங்கள் உருவாகின்றன.இந்த வளையங்கள் ஒரு சில சென்டி மீட்டர் உயரமே இருப்பதால் வெறும் கண்ணுக்கு தெரிவதில்லை.ஆனால் நுட்பமான செயற்கைக் கோள் படங்களில் பதிவாகின்றன.இவ்வாறு எரிமலை உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையை சுற்றிலும் உருவாகும் ஏற்ற வற்ற வளையங்கள் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் உருவாகி இருப்பது பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலை உயர்ந்து இறங்கிதால் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பதையே உறுதிப் படுத்துகிறது.
(படம்-அலாஸ்காவில் உள்ள பெலிக் எரிமலையைச் சுற்றி வளைய வடிவில் உயர்ந்த தரைப் பகுதி.) குறிப்பு;இந்த எரிமலையானது 1814 மற்றும் 1852 ஆம் ஆண்டுகளில் புகையைக் கக்கியது. கடந்த அக்டோபர் 1996 முதல் செப்டம்பர் 1997 ஆண்டு காலகட்டத்தில் பெலிக் எரிமலையின் மேல் பறந்த செயற்கைக் கோள் அனுப்பிய படங்களைத் தொகுத்துப் பார்த்த பொழுது அந்த எரிமலையைச் சுற்றியும் ஆறு வளையங்கள் வரைந்தது போன்று தரைப் பகுதி உயர்ந்து இருந்தது.ஒவ்வொரு வளையமும் 17 சென்டி மீட்டர் (ஆறரை அங்குலம்)உயரத்தைக் குறிக்கிறது.அதன் பிறகு செப்டம்பர் 1997 முதல் செப்டம்பர் 1998 ஆண்டு கால கட்டத்தில் கூடுதாலாக ஒரு வளையம் ஆறு சென்டி மீட்டர் (ஒரு அங்குலம்)உயர்ந்து இருப்பது தெரிய வந்திருக்கிறது.)
-விஞ்ஞானி.க.பொன்முடி.
Comments