பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலையால் இத்தாலியில் நில அதிர்ச்சி ஏற்பட்டது.விஞ்ஞானி.க.பொன்முடி.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் இத்தாலி நாட்டில் உள்ள லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு பூமிக்கு அடியில் இருந்த எரிமலை வெடிப்பு காரணமாக இருந்திருப்பது செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு எரிமலைக்குள் நுழையும் பொழுது எரிமலையின் உயரமும் சுற்றளவும் அதிகரிக்கிறது.அப்பொழுது எரிமலை உயர்வதுடன் எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் வட்ட வடிவில் உயர்கிறது.

அதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது எரிமலை சுருங்குகிறது.அப்பொழுது எரிமலையுடன் எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் வட்ட வடிவில் தாழ்வடைகிறது.

இவ்வாறு எரிமலை உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் வட்ட வடிவில் உயர்ந்து இறங்கும் பொழுது தரை உயர்ந்து இறங்கியதற்கு அடையாளமாக எரிமலையைச் சுற்றிலும் தரையில் மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன.

இவ்வாறு எரிமலையைச் சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்களின் உயரமானது ஒரு சில சென்டி மீட்டர் உயரமே இருப்பதால் இந்த வளையங்கள் உருவாகி இருப்பது தரையில் இருந்து பார்ப்பதற்கு தெரிவதில்லை.ஆனால் நுட்பமான செயற்கைக் கோள் படங்களில் பதிவாகிறது.

குறிப்பாக ஒரு எரிமலைப் பகுதி மேல் பறந்து செல்லும் செயற்கைக் கோளில் இருந்து தரையை நோக்கி ரேடியோ கதிர்கள் வீசப் படுகின்றன.அந்தக் கதிர்கள் தரையின் மேல் பட்டு எதிரொலித்து மறுபடியும் செயற்கைக் கோளை வந்தடையும் பொழுது செயற்கைக் கோளில் உள்ள நுட்பமான படக் கருவிகளில் தரையின் மேடு பள்ளங்கள் பல்வேறு வண்ணங்களாக பதிவாகின்றன.

குறிப்பாக மேடான பகுதி சிவப்பு வண்ணத்திலும் பள்ளமான பகுதி நீல வண்ணத்திலும் பதிவாகின்றன.

இதே போன்று எரிமலை உயர்ந்து இறங்கிய பிறகு எடுக்கப் படும் செயற்கைக் கோள் படங்களிலும் எரிமலை உயர்ந்து இறங்கியதால் புதிதாக ஏற்பட்ட மேடு பள்ள மாறுபாடுகள் சிவப்பு மற்றும் நீல வண்ணத்தில் பதிவாகின்றன.

இந்த இரண்டு படங்களையும் ஒரு கணிப் பொறி மூலம் ஒரே படமாகத் தொகுக்கப் படும் பொழுது அந்தத் தொகுப்புப் படத்தில் எரிமலை உயர்ந்து இறங்கியதால் எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியில் எவ்வளவு உயரம் நிலப் பகுதி உயர்ந்தது என்பதும் அதே போன்று எந்த அளவுக்கு கீழ் நோக்கி இறங்கியது என்பது போன்ற விபரங்கள் வண்ண வேறுபாடுகள் மூலம் அறியப் படுகின்றன.

இதே முறையில் ஒரு இடத்தில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பும் பிறகும் எடுக்கப் பட்ட செயற்கைக் கோள் கதிர் வீச்சு படங்களைத் தொகுத்துப் பார்த்ததில் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது செயற்கைக் கோள் படப் பதிவுகள் மூலம் தெரிய வந்திருகிறது.

குறிப்பாக இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு முன்பும் பின்பும் எடுக்கப் பட்ட செயற்கைக் கோள் ரேடியோ கதிர் வீச்சு படங்களை கணிப் பொறி மூலம் தொகுக்கப் பட்டது.அந்த செயற்கைக் கோள் ரேடியோ கதிர் வீச்சு கணிப் பொறி தொகுப்புப் படத்தில் லா அகுய் லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்ட மையத்தை சுற்றிலும் எரிமலையைச் சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது பதிவை இருந்தது.

எனவே நிலத்திற்கு அடியில் இருந்த எரிமலை திடீரென்று உயர்ந்து இறங்கியதாலேயே இத்தாலியில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

தற்பொழுது இத்தாலி நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு ஆப்பிரிக்கக் கண்டம்

வடக்கு திசை நோக்கி நகர்ந்து ஐரோப்பாக் கண்டத்தை நெருக்கிக் கொண்டு இருப்பதே காரணம் என்று கூறப் படுகிறது.

ஆனால் இந்த விளக்கம் தவறு என்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் கடலுக்கு அடியில் கண்டங்களை சுற்றியபடி அமைந்து இருக்கும் கடலடி மலைத் தொடர் பகுதியில் புதிதாக கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தரையுடன் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.



(ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் கடல் தரை விரிவடையும் பகுதி இருப்பதாகக் கூறப் படுகிறது.படம் நன்றி நேட்சர்)

உதாரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் வட கோடியில் இருந்து தென் கோடி வரை நாற்பதாயிரம் கிலோமீட்டர் வரை நீண்டு இருக்கும் மலைத் தொடரின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.

அதனால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்து இருக்கும் மலைத் தொடரின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக கருதப் படுகிறது.


அதே போன்று மத்திய அட்லாண்டிக் கடலடி மலைத் தொடருக்கு கிழக்குப் பகுதியில் இருக்கும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.

இவ்வாறு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து செல்வதாக கருதுவதற்கும் ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு வெப்பத்தால் விரிவடைந்து மேற்பகுதிக்கு வரும் பொழுது குளிர்ந்து இறுகி புதிய கடல் தளமாக உருவகுவதாக விளக்கம் கூறப் படுகிறது.இதே போன்று மறுபடியும் அதே இடத்திற்கு வரும் பாறைக் குழம்பு ஏற்கனவே அப்பகுதியில் உருவாகி இருந்த கடல் தளப் பாறையை பக்க வாட்டு பகுதிக்கு தள்ளுவதால் மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த கடல் தளப் பாறைகள் கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி நகர்கிறது.

இதே போன்று தொடர்ந்து நடைபெறுவதால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி கிழக்கு மேற்கு என எதிரெதிர் திசை நோக்கி கடல் தளம் விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தளத்துடன் கண்டங்களும் கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.

குறிப்பாக அட்லாண்டிக் கடலின் மத்தியக் கடலடி மலைத் தொடருக்கு மேற்குப் பகுஹ்டியில் இருக்கும் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் மேற்கு திசை நோக்கியும் அதே போன்று அட்லாண்டிக் கடலின் மத்தியக் கடலடி மலைத் தொடருக்கு கிழக்குப் பகுதியில் இருக்கும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் கிழக்கு திசை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறம படுகிறது.

இந்த விளக்கத்தில் உள்ள தவறு என்னவென்றால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருக்கும் கடலடி மலைத் தொடரானது தென் கோடிப் பகுதியில் இரண்டு கிளைகளாகப் பிரிகிறது.அதில் ஒரு கிளையானது மேற்கு திசை நோக்கி வளைந்து பசிபிக் கடலுக்குள் நுழைந்து மறுபடியும் வடக்கு திசை நோக்கி வளைந்து தென் அமெரிக்கக் கண்டத்தை சுற்றியபடி நீண்டு இருக்கிறது.

அதே போன்று இரண்டாவது கிளையானது கிழக்கு திசை நோக்கி வளைந்து தென் ஆப்பிரிக்காவிற்கும் அண்டார்க்டிக் கண்டத்திற்கும் ஊடாக நீண்டு இந்தியப் பெருங் கடல் பகுதிக்குள் நுழைந்து மறுபடியும் வடக்கு திசை நோக்கி வளைந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றியபடி நீண்டு செங்கடல் பகுதியில் முடிவடைகிறது.

இவ்வாறு ஒரு கண்டத்தை சுற்றிய படி இருக்கும் கடலடி மலைத்தொடரின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து சென்றால் மத்தியப் பகுதியில் இருக்கும் கண்டத்தால் எந்த ஒரு திசை நோக்கியும் நகர இயலாது.

மேலும் ஒரு கண்டத்தை சுற்றி குறைந்த சுற்றுவட்டப் பகுதியில் உருவாகும் கடல் தளத்தால் கண்டத்தை விட்டு தொலைவில் உள்ள அதிக சுற்றுவட்டப் பகுதியை நிரப்ப இயலாது.

அதே போன்று ஒரு கண்டத்தில் இருந்து அதிக தொலைவில் அதாவது அதிக சுற்றுவட்ட பகுதியில் உருவாகும் கடல் தளப் பாறையால் கண்டத்திற்கு அருகில் உள்ள குறைந்த சுற்றுவட்டப் பகுதியை நோக்கி நகரும் பொழுது இடநெருக்கடி ஏற்பட்டு கடல் தரை நொறுங்கி விடும்.எனவே அதிக சுற்றுவட்டப் பகுதியில் இருந்து குறைந்த சுற்றுவட்டப் பகுதியை நோக்கியும் கடல் தரை நகர்ந்து செல்ல இயலாது.

எனவே கண்டங்களை சுற்றியபடி இருக்கும் கடலடி மலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து செல்வதால் கடல் தரையுடன் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் முற்றிலும் தவறான விளக்கம்.

இந்த நிலையில் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதியில் உள்ள நீண்ட பிளவு பள்ளத் தாக்குப் பகுதியில் பல எரிமலைகள் உருவாகி இருப்பதற்கும் கண்டத்திற்கு அடியில் உள்ள பாறைத் தட்டு பிளவு பட்டு பிரிந்து விலகி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தவறான விளக்கம் கூறப் படுகிறது.



(கிழக்கு ஆப்பிரிக்கப் பிளவுப் பள்ளத் தாக்கு எரிமலைகளை சுற்றி மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது செயற்கைக் கோள் படம்)

இந்த நிலையில் மியாமி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியட் பிக்ஸ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் செயற்கைக் கோள் உதவியுடன் மேற்கொண்ட ஆய்வில் அந்த பிளவுப் பள்ளத் தாக்குப் பகுதியில் உள்ள பதினோரு எரிமலைகளில் நான்கு எரிமலைகள் மட்டுமே செயல்பாட்டில் இருப்பது தெரிய வந்திருக்கிறது.


குறிப்பாக செயற்கைக் கோள் ரேடியோ கதிர் வீச்சு தொகுப்புப் படத்தில் நான்கு எரிமலைகளை சுற்றிலும் உள்ள தரைப் பகுதி உயர்ந்து இறங்கியதால் உருவான மேடு பள்ள வளையங்கள் பதிவாகி இருந்தன.

இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் ஐரோப்பாக் கண்டத்திற்கும் இடைப்பட்ட மத்திய தரைக் கடல் பகுதியில் உள்ள இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள லா அகுய்லா என்ற நாட்டில் 06.04.2009 அன்று கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்டது.

அந்த நில அதிர்ச்சி குறித்து அமெரிக்கப் புவியியல் கழகம் வெளியிட்ட அறிக்கையில் ஆப்பிரிக்கக் கண்டம் வடக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதால் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் ஐரோப்பாக் கண்டத்திற்கும் இடையில் நிலவும் நெருக்கம் நில அதிர்ச்சிக்கு ஒரு காரணமாகத் தெரிவிக்கப் பட்டு இருந்தது.

ஆனால் லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பு எடுக்கப் பட்ட செயற்கைக் கோள் ரேடியோ கதிர் வீச்சு படத்துடன் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு எடுக்கப் பட்ட செயற்கைக் கோள் ரேடியோ கதிர் வீச்சு படத்தையும் கணிப் பொறி மூலம் ஒரே படமாகத் தொகுக்கப் பட்டது.



அந்த செயற்கைக் கோள் ரேடியோ கதிர் வீச்சு தொகுப்புப் படத்தில் லா அகுய் லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்ட மையப் பகுதியை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரையில் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது பதிவாகி இருந்தது.

குறிப்பாக இத்தாலியில் லா அகுய்லா நகரில் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் நாள் நில அதிர்ச்சி ஏற்பட்டது.அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பு பிப்ரவரி மாதம் முதல் நாள் லா அகுய்லா நகரின் மேல் பறந்து சென்ற என்விசாட் என்ற செயற்கைக் கோள் லா அகுய்லா நகரத்தின் தரைப் பகுதியை ரேடியோ கதிர் வீச்சு மூலம் படம் எடுத்து அனுப்பியது.



(லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது.என்விசாட் செயற்கைக் கோள் படம்)

அதே போன்று லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு ஏப்ரல் பனிரெண்டாம் நாள் என்விசாட் செயற்கைக் கோள் மூலம் லா அகுய்லா நகரின் தரைப் பகுதியை ரேடியோ கதிர் வீச்சு முறையில் படம் எடுக்கப் பட்டது.இந்த இரண்டு படங்களையும் கணிப் பொறி மூலம் ஒரே படமாகத் தொகுக்கப் பட்டதில் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரைப் பகுதியில் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது பதிவாகி இருந்தது.

குறிப்பாக தரைப் பகுதியானது இருபத்தி ஐந்து சென்டி மீட்டர் வரை உயர்ந்து இருந்ததாக இத்தாலி நாட்டில் புவி இயற்பியல் மற்றும் எரிமலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஸ்டெபானோ சால்வி தெரிவித்து இருக்கிறார்.



எனவே இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள லா அகுய்லா நகருக்கு அடியில் இருந்த எரிமலை உயர்ந்ததாலேயே அந்த நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது செயற்கைக் கோள் படத்தில் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் உருவாகி இருந்த மேடு பள்ள வளையங்கள் மூலம் நிரூபணமாகிறது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?