CCTV காமிரா மூலம் சுனாமியை ஒரு மணி நேரம் முன்னதாகவே அறியலாம்.
கடந்த காலத்தில் இரண்டு முறை ,சுமத்ரா தீவுப் பகுதியில்,உருவான சுனாமி அலைகளானது, அந்தமான் தீவின் தென் கோடிப் பகுதியான, கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையைத் தாக்கிய ஒரு மணி நேரத்துக்குப் பிறகே, தமிழகத்தைத் தாக்கி இருக்கிறது.
எனவே,இதே போன்று மறுபடியும் நடப்பதற்கு சாத்தியம் இருக்கிறது.
எனவே,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற்கரையில்,கண்காணிப்புக் காமிராக்களை அமைத்துக் கடற் கரையைக் கண்காணித்தால், தமிழகத்தைத் தாக்க வரும் சுனாமி அலைகளை,ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே கண்டறிந்து, தமிழகத்தின் கடலோர மக்களுக்குச் சுனாமி பற்றிய முன்னறிவிப்பைத் தெரிவித்து, அவர்களைச் சுனாமி ஆபத்தில் இருந்து காக்க முடியும்.
Comments