எப்படி உருவானது கல் மரப் பூங்கா?

தமிழகத்தில் திருச்சிக்கு அருகில் சாத்தனூரில் டைனோசர்களின் காலத்தில் வளர்ந்த ஒரு மரமானது கல்லாக மாறி இருப்பது, காட்சிக்காக வைக்கப் பட்டு இருக்கிறது.

அதே போன்று, வட அமெரிக்கக் கண்டத்தின் தென் மேற்குப் பகுதி மாகாணமான அரிசோனாவில்,அறுநூறு கிலோ மீட்டர் பரப்பளவில் ஏராளமான கல் மரங்கள் காணப் படுகின்றன.

இந்தப் பகுதியானது கல்மரப் பூங்கா என்று அழைக்கப் படுகிறது.

தற்பொழுது,வறண்ட பாலை வானமாகத் தென்படும் கல் மரப் பூங்காப் பகுதியில்,கயோட்டி என்று அழைக்கப் படும் ஓநாய்கள்,பாம்புகள்,சிறிய ஊர்வன வகைப் பிராணிகள் காணப் படுகின்றன.

ஆனால்,இந்தப் பகுதியில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வாழ்ந்த,பைட்டோ சாராஸ் என்று அழைக்கப் படும் முதலை போன்ற ஊர்வன வகை விலங்கு மற்றும் தவளைகளின் புதைப் படிவங்களும்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இந்தக் கால கட்டத்தில்தான்,டைனோசர்கள் முதலை போன்ற ஊர்வன வகை விலங்கினத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றதால்,ஆதி கால டைனோசர்கள் போன்ற விலங்கினங்களின் புதைப் படிவங்களும், இந்தப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கல் மரப் பூங்காவானது,வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய பகுதிகளில் காணப் படும், சதுப்பு நிலக் காடாக,ஆறுகளுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே சதுப்பு நிலக் காடானது, வறண்ட பாலை வனமாக மாறியதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

இந்தக் கேள்விக்குத் தற்பொழுது புவியியல் வல்லுனர்கள்,கண்டத் தட்டு நகர்சிக் கொள்கையின் அடிப்படையில்,விளக்கம் கூறுகின்றனர்.

அதாவது,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட அமெரிக்கக் கண்டமானது,தற்பொழுது இருக்கும் இடத்தில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் தெற்கே,இருந்ததாகவும்,அதனால்,அரிசோனா பகுதியானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்ததாகவும்,அதன் பிறகு,வட அமெரிக்கக் கண்டமானது,வடக்கு திசையை நோக்கி நகர்ந்ததால்,அரிசோனா பகுதியானது,மித வெப்ப மண்டலப் பகுதிக்கு வந்து விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

அத்துடன்,காட்டாறு வெள்ளத்தால்,மரங்கள் வேருடன் பிடுங்கப் பட்டு அடித்துக் கொண்டு வரப் பட்டதாகவும்,அந்த நீரில் ,அந்தப் பகுதியில் சீறிய எரிமலைகளின் சாம்பல் இருந்ததாகவும்,அந்த சாம்பலில் இருந்த சிலிக்கன் டை ஆக்சைடு, நீரில் கரைந்த நிலையில்,மண்ணுக்குள் புதைந்து கிடந்த மரங்களுக்குள் இறங்கியதால்,காலப் போக்கில் கல் மரங்களாகி விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

குறிப்பாகக் கல்மரப் பூங்காவானது,கொலராடோ பீட பூமிப் பகுதியில் அமைந்து இருக்கிறது.

அதன் அடிப்படையில்,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்த நிலப் பகுதியானது உயர்ந்ததாகவும்,அப்பொழுது உயர்ந்த நிலப் பகுதியானது, அதிக அளவில் அரிக்கப் பட்டதாகவும்,அதனால் கல் மரங்கள் வெளிப் பட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

எனது விளக்கம்.
நான் மேற்கொண்ட ஆய்வில்,
கண்டங்கள் நிலையாக இருப்பதைக் கண்டு பிடித்து இருக்கிறேன்.

டைனோசர்கள் காலத்தில்,கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பது,நார்வே நாட்டுக் கடல் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள, கடல் தரையைத் துளையிட்ட பொழுது,கிடைத்த பாறைப் பகுதிகளில், இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வாழ்ந்த டைனோசர்களின் புதைப் படிவங்கள், கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

எனவே,கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால்,கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது,அதனால் அரிசோனா பகுதியில், அதிக வெப்ப நிலை நிலவியிருந்திருக்கிறது.

அதன் பிறகு,கடல் மட்டம் உயர்ந்ததால்,கடலின் பரப்பளவும் அதிகரித்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால்,அரிசோனா பகுதியில்,மித வெப்பக் கால நிலையாக மாறி இருக்கிறது.

இந்தப் பகுதியில் தற்பொழுது,குளிர் காலத்தில்,பனிப் பொழிவும் ஏற்படுகிறது.

குறிப்பாகக் கல் மரப் பூங்காப் பகுதியில் அதிக அளவில்,அடுக்குப் பாறைகளால் ஆன மலைகளும் குன்றுகளும் காணப் படுகின்றன.

எனவே ,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகள் மேல் நோக்கி உயர்ந்ததால் ஏற்பட்ட, நில அதிர்ச்சியின் காரணமாக,அந்த மரங்கள் சாய்ந்து,மண்ணில் புதையுண்ட பிறகு,மழை நீர் கரைத்த மண்ணானது, மரங்களுக்குள் இறங்கியதால்,அந்த மரங்களானது,கல் மரங்களாகக் காலப் போக்கில் மாறி இருக்கிறது.

(My explanation for the formation of the Arizona petrified forest-There are many layer cake rock mountains formed in the petrified forest region.therefore the earthquake caused by the uplifting of rocks, uprooted the trees and later petrified by the usual process)

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?