புதைப் படிவங்கள் காட்டும் பூமி.

டைனோசர்கள் இந்தப் பூமியில் வாழ்ந்த காலம் வரைக்கும்,பாலூட்டி வகை விலங்கினங்களால் வெளியில் தலை காட்ட முடியாமல் இருந்தது.

தற்பொழுது, ஐயாயிரத்தி ஐநூறுக்கும் அதிகமான, பாலூட்டி இனங்கள் காணப் படுகின்றன.

ஆனால், டைனோசர்களின் காலத்தில்,மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பாலூட்டி இனங்கள் இருந்தன.

அவைகளும் ,மரங்களிலும்,தரைக்கு அடியில் வளை பறித்து வாழும் இனங்களாகவே, அதிகம் இருந்தன.

ஆனாலும் , சீனாவில் கண்டு பிடிக்கப் பட்ட புதைப் படிவம் மூலம் ஒரு விலங்கு பன்றியின் அளவு இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அதாவது டைனோசர்களின் இனம் அழிந்த பிறகு.பூமியில் மயான அமைதி நிலவியது.

உடனே பாலூட்டி விலங்கினங்கள் வெளியில் தலை காட்டத் தொடங்கின.

இந்தக் காலத்தில், காலியாக இருந்த வயல் வெளியில், பாலூட்டி வகை விலங்கினங்கள் வாழத் தொடங்கின.

மேய்ச்சல் விலங்குகளைக் கொன்று தின்னும் விலங்கினங்கள், பரிணாம வளர்ச்சியில் தோன்றின.

அவைகளிடம் இருந்து தப்பிக்கும் வண்ணம் ,வயல் வெளியில் வேகமாக ஓடக் கூடிய ,குளம்புக் கால் விலங்கினங்களும் இந்தக் காலத்திலேயே ,பரிணாம வளர்ச்சியில் தோன்றின.

ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தக் காலமானது 'இயோசீன் காலம்' என்று அழைக்கப் படுகிறது.

தற்பொழுது,வட துருவப் பகுதியில்,சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யக் கூடிய,பாலூட்டி வகை விலங்கினங்களான,பனிக் கரடிகள்,ஓநாய்கள்,ஆர்க்டிக் நரி மற்றும் முயல்கள் காணப் படுகின்றன.

ஆனால், இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில்,சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய
இயலாத, முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடிய, ஊர்வன வகை விலங்கினங்களான,முதலைகள்,பாம்புகள்,ராட்சத ஆமைகள்,நன்னீர் ஆமைகள்,வாழ்ந்து இருப்பது, ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இருக்கும்,எல்லிஸ்மர் மற்றும் ஆக்சல் ஹைபெர்க் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட,புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அத்துடன், பன்றியைப் போன்ற, டபீர் ,காண்டா மிருகத்தைப் போன்ற பிராண்டோ சாரஸ்,நீர் யானையைப் போன்ற கோரி போடான்,மற்றும் குரங்குகள்,ஆகிய விலங்குகளின் புதைப் படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.

ராட்சசப் பறவை உள்பட,வேறு சில பறவைகளின் புதைப் படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.

இதன் அடிப்படையில்,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில்,சதுப்பு நிலக் காடுகள் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.

அத்துடன்,இந்தக் காலத்தில்,வட துருவப் பகுதியில்,தற்பொழுது இருக்கும் பனிப் படலங்கள் இருந்திருக்க வில்லை,அல்லது அவ்வப் பொழுது, மிகவும் இலேசான பனிப் படர்வு இருந்திருக்கலாம், என்று ஆராய்ச்சியாளர்கள்,நம்புகின்றனர்.

குறிப்பாக,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில், தற்பொழுது இருப்பதை விட,பத்து டிகிரி சென்டி கிரேட் அதிக வெப்ப நிலை இருந்திருப்பது,ஐசோ டோப் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக,
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

அதாவது,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில்,0- 30, சென்டி கிரேட் வெப்ப நிலை இருந்திருப்பது,ஐசோ டோப் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக,ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

அத்துடன்,அந்த விலங்கினங்களானது,பனிக் கரடிகளைப் போன்று, அரி துயிலும் மேற்கொள்ள வில்லை,பனி மான்களைப் போன்று,குளிர் கால இடப் பெயர்ச்சியையும் மேற்கொள்ள வில்லை,என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

ஆனாலும்,இவ்வளவு குறைந்த வெப்ப நிலையில்,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில்,ராட்சத ஆமைகள் எப்படி வாழ்ந்தன, என்பது, புதிராக இருக்கிறது,என்று,கொலராடோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர், ஜெய்லின் எபர்லி தெரிவித்து இருக்கிறார்.

மேலும்,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில்,அடர்த்தியாக, செம்மரக் காடுகள் இருந்திருப்பதும், புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

முக்கியமாக,பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து
இருப்பதால்,துருவப் பகுதிகளில்,ஆறு மாத காலம் தொடர்ந்து பகலும்,அதே போன்று,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.

இது போன்று, மாதக் கணக்கில் நீளும், பகல் மற்றும் இரவுக் காலச் சூழலில், எப்படி,செம்மரக் காடுகள் எப்படி வளர்ந்தன,என்பது புரியாத புதிராக இருக்கிறது, என்று, கிரிகர் ஸ்கூல் ஆப் ஆர்ட் அண்ட் சயின்ஸ்சைச் சேர்ந்த,உதவிப் பேராசிரியரான, ஹோப் ஜெஹ்ரன் வியப்பு தெரிவித்து இருக்கிறார்.

இது போன்று,நான்கு மாத காலம் தொடர்ந்து,பகல் நீடிக்கும், சூழலில் மரங்களின் புதைப் படிவங்களைக் காண்பதென்பது,நான்கு மாத காலம் தொடர்ந்து தூங்காமல் இருப்பது போன்றது, என்று ஹோப் ஜெஹ்ரன் வியப்பு தெரிவித்து இருக்கிறார்.

மேலும்,நீருக்கடியில்,மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பதைக் காண்பது போல் இருக்கிறது, என்றும் ஹோப் ஜெஹ்ரன் வியப்பு தெரிவித்து இருக்கிறார்.

இயோசீன் காலத்தில் ஏன் வட துருவப் பகுதியில்,அதிக அளவில் வெப்ப நிலை இருந்தது ,என்ற கேள்விக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்களுக்கு இடையில், கருத்து வேறு பாடு நிலவுகிறது.

இந்தக் காலத்தில்,பூமியில் பல இடங்களில்,எரிமலைகளின் சீற்றம் அதிகம் இருந்ததாகவும் அதனால்,அவைகளில் இருந்து அதிக அளவில் கரிய மில வாயு வெளிப் பட்டதால்,அதிக வெப்ப நிலை இருந்திருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

அதாவது ‘குளோபல் வார்மிங்’ காரணம் என்று கூறப் படுகிறது.

குறிப்பாக,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில், வளி மண்டலத்தில்,பத்து லட்சத்தில் இரண்டாயிரம் பங்கு என்ற அளவில் கரிய மில வாயு கலந்து இருப்பது,ஐசோ டோப் ஆய்வில் தெரிய வந்ததாக, சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில்,வேறு சில ஆராய்ச்சியாளர்கள் ,பத்து லட்சத்தில் ஆயிரம் பங்கு, என்ற அளவிலேயே கரிய மில வாயு கலந்து இருப்பது, ஐசோ டோப் ஆய்வில், தெரிய வந்ததாகத் தெரிவித்து இருந்தனர்.

தற்பொழுது,வளி மண்டலத்தில்,பத்து லட்சத்தில் நானூறு பங்கு என்ற அளவிலேயே கரிய மில வாயு கலந்து இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இது ஆபத்தான அளவு, என்று அலறுபவர்களும் உண்டு,அதனை மறுப்பவர்களும் உண்டு.

குறிப்பாக, எரிமலைகள் மூலம் வெளிப் படும் கரிய மில வாயுவால், ஒரு சில ஆயிரம் ஆண்டுகள், அதிக வெப்ப நிலை நீடித்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

ஆனால்,வட துருவப் பகுதியில்,இயோசீன் காலத்தில்,வாழ்ந்த ,டபீரின் புதைப் படிவமானது,மற்ற பகுதிகளில்,கண்டு பிடிக்கப் பட்ட,டபீரின் புதைப் படிவங்களில் இருந்து, வேறுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில்,வட துருவப் பகுதியில்,இயோசீன் காலத்தில்,விலங்கினங்கள்,பரிணாம வளர்ச்சி அடைந்து மற்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து இருப்பது, தெரிய வந்துள்ளது.

ஆனால்,இந்தக் காலத்தில் ,தென்பகுதிக் கண்டங்களானது, தனித் தனியாக இருந்ததாக நம்பப் படுகிறது.

எனவே அது குறித்து , மறுபடியும் சிந்திக்க வேண்டும், என்று டாக்டர், ஜெய்லின் எபர்லி தெரிவித்து இருக்கிறார்.

Because the oldest known tapir fossils are from the Arctic, there is the possibility that some prehistoric mammals could have evolved in the circumpolar Arctic and then dispersed through Asia, Europe, and North America. “We may have to rethink the world of the early Eocene, when all of the Arctic land masses were connected in a supercontinent of sorts,” she says.

http://www.futurity.org/dark-balmy-arctic-home-to-ancient-mammals/

ஆனால்,இந்தக் காலத்தில் பரிணாம வளர்ச்சியில் உருவான சில விலங்குகள் மற்றும் பறவைகளின் புதைப் படிவங்களானது, மற்ற கண்டங்களில் காணப் படுவதற்கு,அந்த விலங்கினங்களானது,கடலில் மிதந்து செல்லும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்தபடி, கூட்டமாக மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம், என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

ஆனால், பரிணாம மாற்றம் என்பது, லட்சக் கணக்கான ஆண்டு காலத்தில் ஏற்படும் மாற்றமாகும்.

எனவே,தற்பொழுது,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில்,அதிக வெப்ப நிலை இருந்ததற்கான காரணம்,ஆராய்ச்சியாளர்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது.

இந்த இடத்தில் இன்னொரு கேள்வியும் எழுந்தது.

இயோசீன் காலத்தில் வட துருவப் பகுதியிலேயே, அதிக வெப்ப நிலை நிலவியிருந்தால்,பூமத்திய ரேகைப் பகுதியில் இன்னும் அதிகமான வெப்ப நிலை இருந்திருக்க வேண்டும்.

அப்படி என்றால்,அது பூமத்திய ரேகைப் பகுதியில் வாழும், பல உயிரினங்களுக்கு, பாதகமான அம்சம் ஆகும்.

எனவே,தற்பொழுது,பூமத்திய ரேகைப் பகுதியைத் தவிர்த்து, வட துருவப்
பகுதிகளில் மட்டும், அதிக வெப்ப நிலை நிலவிஇருப்பதற்கான,காரணம் குறித்து , பல்வேறு விளக்கங்களை, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?