தவறாகிப் போன ஒரு கண்டு பிடிப்பின் கதை.

தற்பொழுது,பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதிக்கப் பட்டுக் கொண்டு இருக்கும், கண்டத் தட்டுக் கொள்கையானது,ஒரு தவறான கொள்கை, என்பது புதைபடிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தற்பொழுது ,அண்டார்க்டிக்கா,ஆஸ்திரேலியா, போன்ற தீவுக் கண்டங்களில்,கடல் பகுதியைக் கடக்க இயலாத,டைனோசர்களின் புதைப் படிவங்கள் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்த பிறகு,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த விளக்கத்தை முதலில் கூறியவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் ஆவார்.

ஒரு நாள் அவர்,பணி புரிந்து கொண்டு இருந்த, கல்லூரியில் உள்ள நூலகத்தில் ,ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தார்.

அந்தக் கட்டுரையில்,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களிருப்பதைக் குறிப்பிட்டு,இதற்கு முன் ஒரு காலத்தில்,அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியிளொரு தற்காலிக நிலப் பாலம் இருந்ததே காரணம் என்றும்,பின்னர் அந்தத் தற்காலிக நிலப் பாலம் கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கலாம் என்று விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது.

வெக்னருக்கு அந்த விளக்கம் திருப்தி அளிக்க வில்லை.

அவர் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களின் ஓரப் பகுதிகள் ஒன்றுக் கொன்று இணையாக இருப்பதை கவனித்தார்.

அதன் அடிப்படையில்,முன் ஒரு காலத்தில் அந்தக் கண்டங்கள் ஒன்றாக இணைந்து ஒரே நிலப் பரப்பாக இருந்திருக்க வேண்டும் என்றும்,பின்னர்,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்று நம்பினார்.

ஆனால், அவரின் விளக்கத்தை, யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை.

மாறாகக் காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடி,விலங்கினங்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி,ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம் என்று நம்பினார்கள்.

இந்த நிலையில்,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,ஸ்வால்பார்ட் என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய கள்ளி வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதை வெக்னர் குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையில்,வெக்னர்,முன் ஒரு காலத்தில்,அந்தத் தீவானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய ,பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும்,அதன் பிறகு,வட துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து இருக்க வேண்டும் என்றும் வெக்னர் விளக்கம் கூறினார்.

வெக்னரின் இந்த விளக்கத்தை யாராலும் மறுக்க முடிய வில்லை.

உடனே வெக்னர்,ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை மாற்றி அமைத்தார்.

அதன் அடிப்படையில் ,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.

அதன் பிறகு,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,வெக்னர் கூறினார்.

அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதிக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,வெக்னர் கூறினார்.

அதே போன்று,தென் பகுதிக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார்.

அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார்.

அதே போன்று,இந்திய நிலப் பரப்பும் தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால், இமய மலைத் தொடர் உருவானதாகவும்,வெக்னர் கூறினார்.இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது.

ஆனால்,கடல் தரையைப் பிளந்து கொண்டு,கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான, தடயங்கள் எதுவும்,கடல் தரையில், காணப் படவில்லை.

இந்த நிலையில்,இரண்டாம் உலகப் போரின் பொழுது,அமெரிக்கக் கப்பல் படையில்,பணியாற்றிய புவியியல் பேராசிரியரான,டாக்டர்,ஹாரி ஹெஸ்,நீர் மூழ்கிக் கப்பல் பயணங்களுக்குப் பயன் படுத்துவதற்காக ,கடல் தரையில் இருந்த மேடு பள்ளங்கள் குறித்த வரை படத்தை,சோனார் கருவி மூலம் தயாரித்தார்.

அப்பொழுது,கண்டங்களுக்கு இடையில்,கண்டங்களைச் சுற்றியபடி,பல்லாயிரம் கிலோ மீட்டர்,நீளத்துக்கு,கடலடி எரிமலைத் தொடர்கள் இருப்பதை அறிந்தார்.

அதன் அடிப்படையில்,ஹாரி ஹெஸ் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
அதாவது, கண்டங்களுக்கு இடையில் இருக்கும்,எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில்,இருந்து வெப்பமான பாறைக் குழம்பானது, மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளங்களாக உருவாகி,எதிரெதிர் திசைகளை நோக்கி,விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன்,கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,ஹாரி ஹெஸ் கூறினார்.

இந்த விளக்கமானது ‘’கண்டத் தட்டு நகர்ச்சி’’ ( plate tectonic theory ) என்று அழைக்கப் படுகிறது.

இந்தக் கருத்தின் அடிப்படையில் தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத்தில் குறிப்பாக மித வெப்ப மண்டலக் கால நிலை நிலவும் அரிசோனா பாலைவனப் பகுதியில், இருபத்தியொரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மரங்களின் கற்படிவங்கள் மற்றும் சதுப்பு நிலப் பகுதியில் வாழக் கூடிய முதலைகளின் புதை படிவங்களும் காணப் படுவதற்கு,இருபத்தியொரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அரிசோனா நிலப் பகுதியானது, அதிக வெப்ப நிலை நிலவும் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும்,குறிப்பாக இரண்டாயிரம் கிலோ மீட்டர் தெற்கில், அதாவது தற்பொழுது கரீபியன் தீவு அமைந்து இருக்கும் பகுதியில் இருந்ததாகவும் ,பின்னர் வட பகுதியை நோக்கி வட அமெரிக்கக் கண்டம் நகர்ந்ததால், அரிசோனா நிலப் பகுதியானது தற்பொழுது உள்ள மித வெப்ப மண்டலப் பகுதிக்கு வந்து சேர்ந்ததே காராணம் என்று விளக்கம் கூறப் படுகிறது.

இந்த விளக்கத்தின் படி வட அமெரிக்கக் கண்டத்தின் வடகோடிப் பகுதிகள், கடந்த பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் இருக்கிறது.

அறிவியல் உலகில் விடை கூறப் படாத கேள்வி!

இந்த நிலையில், வட அமெரிக்காவின் வடக்கில் உள்ள அலாஸ்காவின் வட பகுதியில் உள்ள, கொல்வில்லி ஆற்றுப் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த டைனோசர்களின் எலும்புப் புபுதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

ஆனால், டைனோசர்களானது முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும் ஊர்வன வகை விலங்கினம் என்பதால், ஆர்க்டிக் பகுதியில் எப்படி டைனோசர்கள் இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? என்ற கேள்வி தற்பொழுது அறிவியல் உலகில் விடை கூறப் படாத கேள்வியாக இருக்கிறது.

ஏனென்றால்,கண்டத் தட்டுக் கருத்தின் படி,வட அமெரிக்கக் கண்டத்தின்,வட பகுதியான,அலாஸ்காவின் வட பகுதியான,நார்த் ஸ்லோப் என்று அழைக்கப் படும் பகுதியும்,அதே போன்று,ஆசியக் கண்டத்தின்,வட பகுதியான,சைபீரியாவின் வட பகுதியில், இருக்கும் காக்க நாட்டு ஆற்றுப் பகுதியும்,கடந்த ,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே,கடுங் குளிர் நிலவும்,ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள்,நகர்ந்து வந்து விட்டது.

இது போன்ற சூழலில் டைனோசர்களின் முட்டைகள் பொரியாது.

ஏனென்றால்,ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய முப்பது முதல் முப்பத்தி நான்கு சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.ஆனால் ஆர்க்டிக் பிரதேசத்தில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது,பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும்.இந்த நிலையில்,ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் இருக்கும்,சைபீரியாவின் வட பகுதியில், இருக்கும் காக்க நாட்டு ஆற்றுப் பகுதியில் ,டைனோசர்களின் முட்டைகளின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே டைனோசர்கள் காலத்தில்,ஆர்க்டிக் பகுதியில், பூமத்திய ரேகைப் பகுதியில் இருப்பதைப் போன்ற,வெப்பமான சூழல் இருந்திருக்கிறது.

அதே போன்று,டைனோசர்கள் காலத்தில்,ஆர்க்டிக் பகுதியில், பனிப் படலங்களுக்குப் பதிலாக, பூமத்திய ரேகைப் பகுதியில் இருப்பதைப் போன்ற, பசுமைக் காடுகளும் இருந்திருக்கின்றன.

இளவயது டைனோசர்களின் பற்கள்,மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்கள், கண்டு பிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து,டைனோசர்களின் வாழ்க்கை முறை குறித்து,ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டு இருக்கின்றனர்.

ஏனென்றால்,தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் ,வெப்ப மண்டலக் கால நிலையில்,காணப் படக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களானது, பனிப் பிரதேசமான ஆர்க்டிக் பகுதியில், காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,அந்த நிலப் பகுதிகள் எல்லாம்,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில்,இருந்ததே காரணம் என்றும்,அதன் பிறகு,அந்த நிலப் பகுதிகளானது,மெதுவாக நகர்ந்து,ஆர்க்டிக் பகுதிக்கு வந்து சேர்ந்ததே காரணம் என்று நம்புகின்றனர்.

குறிப்பாக, டைனோசர்கள் ஊர்வன வகையைச் சேர்ந்த விலங்கினம் ஆகும்.

ஊர்வன வகை விலங்கினங்களால்,மற்ற பாலூட்டி வகை விலங்கினங்களைப் போன்று,சுயமாக உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது.

அதன் காரணமாகவே,பாம்பு,முதலை,ஆமை போன்ற ஊர்வன வகைப் பிராணிகளானது,பனிப் பிரதேசத்தைத் தவிர்த்து,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதிகளிலேயே காணப் படுகிறது.

எனவே,ஆர்க்டிக் பகுதியில்,டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதன் அடிப்படையில்,ஒரு வேளை டைனோசர்கள்,பறவைகள் மற்றும் பாலூட்டிகளைப் போன்று வெப்ப இரத்தப் பிராணிகளாக இருந்திருக்கலாம் என்று நம்புகின்றனர்.

குறிப்பாக, பூமியானது தன அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால்,ஆண்டுக்கு நான்கு மாதங்கள் ,ஆர்க்டிக் பகுதியில்,தொடர்ந்து பகலும்,அதே போன்று ,ஆண்டுக்கு நான்கு மாதங்கள்,தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.

இது போன்று தொடர்ந்து பல மாதங்கள் இரவு நீடித்தால்,தாவர வகைகளால்,சூரிய ஒளியின்றி,ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து உயிர் வாழ்ந்து இருக்க இயலாது.

எனவே,ஆர்க்டிக் பகுதியில்,அடர்ந்த பசுமைக் காடுகள் உருவாகி இருக்க இயலாது.

ஆனால், டைனோசர்கள் யானையை விட நான்கு மடங்கு தாவரங்களை உண்ணக் கூடியது,அதே போன்று டைனோசர்களும்,யானைகளைப் போலவே,கூட்டம் கூட்டமாக வாழக் கூடியது.

எனவே,ஏழு கோடி ஆண்டுக்கு முன்பு, ஆர்க்டிக் பகுதியில், டைனோசர்கள் கூட்டம்,எதைத் தின்று உயிர் வாழ்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்தக் கேள்விக்கு, சில ஆராய்ச்சியாளர்கள்,டைனோசர்களானது,இறந்த தாவரங்களின் பாகங்களை உண்டு உயிர் பிழைத்து இருக்கலாம், என்று நம்புகின்றனர்.

ஆனால், ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய வேண்டும் என்றால்,அதற்கு முப்பது முதல்,முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.

ஆனால்,தற்பொழுது, ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது பத்து டிகிரியாக இருக்கிறது.

இந்த நிலையில்,ஆராய்ச்சியாளர்கள்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆர்க்டிக் பகுதியில்,மூன்று டிகிரியாக இருந்திருக்கிறது, என்று கணித்து இருக்கின்றனர்.

எனவே, ஆர்க்டிக் பகுதியில்,டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன?என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சில ஆராய்ச்சியாளர்கள்,டைனோசர்களானது,ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது,பனிக் காலத்தில்,தென் பகுதிக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம்,என்று கருதினார்கள்.

இவ்வாறு, குறைந்த அட்ச ரேகைப் பகுதியில்,முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்த பிறகு,மறுபடியும்,உயர்ந்த அட்ச ரேகைப் பகுதிக்கு,இடம் பெயர்ந்து இருக்கலாம் என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள்.

இந்த நிலையில்,தற்பொழுது,டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இருக்க சாத்தியம் இல்லை என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர்.

குறிப்பாக,டைனோசர்களின் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர எவ்வளவு காலம் ஆகி இருக்கும் என்பது குறித்து அறியப் படாமல் இருந்தது.

இந்த நிலையில்,அமெரிக்காவின்,புளோரிடா மாகாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,கிரிகோரி எரிக்சன் மேற்கொண்ட ஆய்வில்,டைனோசர்களின் முட்டைகளானது ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகளைப் போலவே,பொரிவதற்கு, மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் ஆகியிருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்பு,டைனோசர்களின் புதை படிவங்கள் ஆர்க்டிக் பகுதியில்,கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில்,டைனோசர்களானது,பறவைகளைப் போன்று வெப்ப இரத்தப் பிராணியாக இருந்திருக்கலாம் என்றும்,பறவைகளைப் போலவே,டைனோசர்களின் முட்டைகளும்,பதினோரு நாட்கள் முதல்,எண்பத்தி ஐந்து நாட்களில் பொரிந்து இருக்கலாம் என்றும் நம்பப் பட்டது.

இந்த நிலையில்,எரிக்சன், டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்குள் இருந்த,டைனோசர்களின் கருக்களின் பற்கள் மற்றும் எலும்புகளில் இருந்த வளர்ச்சி வளையங்களைக் கணக்கிட்டதன் அடிப்படையில்,அந்தக் கருக்களானது எத்தனை மாதக் கரு என்பதை அறிந்திருக்கிறார்.

அதன் அடிப்படையில்,அவர்,சிறிய வகை டைனோசர்களின் முட்டைகள் மூன்று மாத அளவிலும்,பெரிய வகை டைனோசர்களின் முட்டைகளானது, ஆறு மாத கால அளவிலும் பொரிந்து இருக்கின்றன, என்று தெரிவித்து இருக்கின்றார்.

குறிப்பாக சிறிய வகை டைனோசர்கள் கூட பருவ வயதை அடைய ஓராண்டு காலம் ஆகும் என்பதால் பெரிய வகை டைனோசர்கள்,பெரிதாக இன்னும் அதிக காலம் ஆகும்.

எனவே,டைனோசர்களானது,தங்களின் முட்டைகளை இட்ட பிறகு,அந்த முட்டைகளானது பொரியும் காலம் வரை, அதாவது ஆறு மாதகாலம்,அதன் முட்டைகளை,மற்ற விலங்கினங்களிடம் இருந்து பாது காக்க வேண்டும்.

அதன் பிறகும்,அதன் குஞ்சுகள் பெரிதாக இன்னும் ஓராண்டு காலம் ஆகும்.

எனவே சில ஆராய்ச்சியாளர்கள் நம்பியதைப் போன்று,டைனோசர்களானது,ஆர்க்டிக் பகுதிக்கும்,குறைந்த அட்ச ரேகைப் பகுதிக்கும்,கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இருக்க சாத்தியம் இல்லை என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கின்றனர்.

இதன் அடிப்படையில்,டைனோசர்கள் ஆர்க்டிக் பகுதியிலேயே ஆண்டு முழுவதும் குடியிருந்து குடும்பமும் நடத்தி இருக்கிறது என்ற முடிவுக்கும் தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கின்றனர்.
எனவே பனிப் பிரதேசத்தில் டைனோசர்களின் முட்டைகள் எப்படிப் பொரிந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மாயோ சாரஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் முட்டைகளானது,பறவைகளின் கூட்டில் இருப்பதைப் போன்று,வரிசையாக அடுக்கப் பட்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்,அந்த டைனோசர்,பறவைகளைப் போன்று அடை காத்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள டைனோசர்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.
அது போன்ற டைனோசர்கள் முட்டைகளை அடை காக்கும் சாத்தியம் இல்லை.

எனவே,டைனோசர்களின் முட்டைகள் ஆர்க்டிக் பகுதியில்,பொரிந்திருக்க வேண்டும் என்றால் அதற்கு ஆர்க்டிக் பகுதியில்,அதிக வெப்ப நிலை இருந்திருக்க வேண்டும்.

எனவே,டைனோசர்களின் காலத்தில்,ஆர்க்டிக் பகுதியில்,பூமத்திய ரேகைப் பகுதியில்,இருப்பதைப் போன்றே அதிக வெப்ப நிலை இருந்திருக்கிறது.

எனவே, பனிப் பிரதேசத்தில்,வெப்ப மண்டலக் கால நிலையில்,காணப் படக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,அந்த நிலப் பகுதிகளானது.அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில்,இருந்ததாகவும்,அதன் பிறகு,பனிப் பிரதேசங்களுக்கு நகர்ந்து வந்ததாகவும் கூறப் படும்
கண்டத் தட்டு விளக்கம் விளக்கம் தவறு.

அதே போன்று, பனிப் பிரதேசத்தில் இருந்து டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இருக்கலாம் என்ற விளக்கம் தவறு.

உண்மையில்,பனிப் பிரதேசத்தில்,வெப்ப மண்டலக் கால நிலையில்,காணப் படக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,அந்தத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்வாழ்ந்த காலத்தில்,துருவப் பகுதிகளில்,அதிக வெப்ப நிலை இருந்ததே காரணம் என்பது ஆர்க்டிக் பகுதியில்,கண்டு பிடிக்கப் பட்ட,டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

இதற்கு முந்தைய பதிவு -

ஒரு எதிர்பாராத கண்டு பிடிப்பின் கதை.

அடுத்த பதிவுகளில்...

நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் கூறப் படும் தவறான விளக்கங்களும்,சரியான விளக்கங்களும்.

புதைப் படிவப் புதிர்களுக்குக் கூறப் படும் தவறான விளக்கங்களும்,சரியான விளக்கங்களும்.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?