கண்டத் தட்டுக் கொள்கைக்கு வந்த சோதனை.

உயிரினங்கள் எவ்வாறு ஓரிடத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்குப் பரவியது, என்பது குறித்து ஆராயும் அறிவியல் பாடப் பிரிவுக்குப் பயோஜியோகிராபி (Biogeography ) என்று பெயர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில்,பீகிள் கப்பலில் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்ட இளம் ஆராய்ச்சியாளரான டார்வின்,தென் அமெரிக்கக் கண்டத்தில் இறங்கி ஆராய்ச்சி செய்த பொழுது,அங்குள்ள ஆறுகளிலும் குட்டைகளிலும்,ஏற்கனவே அவர் ஐரோப்பாக் கண்டத்தில் பார்த்த நன்னீர் உயிரினங்கள் காணப் படுவதைக் கண்டு எப்படி இந்த உயிரினங்கள் பல்லாயிரம் மைல் கடல் பகுதியைக் கடந்து இந்தக் கண்டத்துக்கு வந்திருக்க முடியும் என்று வியப்படைந்தார்.

குறிப்பாக அவர் குளம் குட்டைகளில் இருக்கும் நத்தைகளானது, பறவைகளின் காலில் ஒட்டிக் கொண்டு கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று நம்பினார்.

இது போன்று, பெருங் கடல் பகுதியைத் தாவர வகைகள் மற்றும் விலங்கினங்கள் தற்செயலாகக் கடந்தன என்று கூறப் படும் விளக்கமானது, 'பரவல் முறை' (dispersal) என்று அழைக்கப் படுகிறது.

ஆனால், வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்கள் வட அமெரிக்கா,தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில், கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து, ஒரே கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

இது போன்ற விளக்கமானது 'நிலப் பிரிவு முறை' ( vicariance ) என்று அழைக்கப் படுகிறது.

இந்த விளக்கத்தின் படி,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமியில் ஒரே ஒரு பெரிய கண்டம் இருந்ததாக நம்பப் படுகிறது.அந்தப் பெருங் கண்டமானது பாஞ்சியா என்று அழைக்கப் படுகிறது.

அதன் பிறகு, பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பெருங் கண்டம் இரண்டாகப் பிரிந்து,லாரேசியா மற்றும் கோண்டுவாணா என இரண்டு கண்டங்களாக உருவாகி,வடக்கு தெற்காக, நகர்ந்ததாக நம்பப் படுகிறது.

அதே போன்று,எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,லாரேசியாக் கண்டமானது இரண்டாகப் பிரிந்து, கிழக்கு மேற்காக நகர்ந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியக் கண்டங்கள் உருவானதாக நம்பப் படுகிறது.

இதே போன்று, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் பகுதிக் கோண்டுவாணாவும்,பல பகுதிகளாகப் பிரிந்து, வடக்குப் பகுதியை நோக்கி நகர்ந்தது,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு, வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.

அதன் பிறகு,மரபணு மற்றும் கார்பன் காலக் கணிப்பு பற்றிய, அறிவியல் பிரிவுகளின், வளர்ச்சிக்குப் பிறகு,மேற்கொள்ளப் பட்ட ஆய்வில், பல்வேறு கண்டங்களிலும்,தீவுகளிலும்,காணப் படும்,பல தாவர வகைகளும்,விலங்கினங்களும்,கண்டங்கள் பிரிந்ததாக நம்பப் படும் காலத்துக்குப் பிறகு,பரிணாம வளர்ச்சியில் உருவாகி இருப்பது தெரிய வந்தது.

உதாரணமாகத் தென் பகுதிக் கண்டங்களில்,புரேட்டியேசியே என்று அழைக்கப் படும், தாவர வகைகள் ,காணப் படுவதற்கு, முதலில்,கண்டத் தட்டு நகர்சிக் கொள்கையின் அடிப்படையில் ( vicariance ) விளக்கம் கூறப் பட்டது.

ஆனால், தற்பொழுது மேற்கொள்ளப் பட்ட மரபணு ஆய்வில்,அந்தத் தாவர வகைகளானது,கண்டங்கள் மற்றும் தீவுகள் பிரிந்ததாக நம்பப் பட்ட காலத்துக்குப் பிறகு,பரிணாம வளர்ச்சியில் தோன்றி இருப்பதைத் தாவரவியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

குறிப்பாக,ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப் படும்,புரேட்டியேசியே வகைத் தாவரங்களானது,நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பரிணாம மாற்றத்தில் தோன்றி இருப்பதைத் தாவரவியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

எனவே, தற்பொழுது,புரேட்டியேசியே வகைத் தாவரங்களானது, தென் அமெரிக்கா,ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தீவில் காணப் படுவதற்கு,அந்தத் தாவரத்தின் விதைகளானது,காற்று மூலமாக,மற்ற கண்டங்களுக்குப் பரவி இருக்கலாம் (dispersal) என்று விளக்கம் கூறப் படுகிறது.

ஆனால்,ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப் படும்,மாக்டேமியா என்று அழைக்கப் படும், புரேட்டியேசியே வகைத் தாவர வகையானது,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது,அந்தக் கண்டங்கள் பிரிந்த ,ஐந்து கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, பரிணாம மாற்றத்தில் தோன்றி இருப்பதைத் தாவரவியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

ஆனால்,மாக்டேமியாவின் விதைகளானது,கல்லைப் போன்று
கனமாக இருப்பதால்,காற்றின் மூலமாகவும்,கடலின் வழியாகவும், ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்க முடியாது என்று,இது குறித்த ஆய்வை மேற்கொண்ட,ஆஸ்திரேலியாவின் தாவரவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டாக்டர் பீட்டர் வெஸ்டன் தெரிவித்து இருக்கிறார்.

மேலும், ''இதனை விளக்குவதற்கு எனக்கு கடினமாக இருக்கிறது'' என்றும் டாக்டர் பீட்டர் வெஸ்டன் தெரிவித்து இருக்கிறார்.

The strange case of the macadamia tree

But more puzzling is the strange case of the macadamia.

Molecular dating shows the variety found in Africa's Western Cape split from the Australian variety about 50 million years, or 50 million years after the accepted time of continental fragmentation.

Because macadamia nuts are heavy and rock-like, it's unlikely they were carried by the wind or even floated across the ocean, Weston says.

The split also predates humans, ruling out that they were distributed by hand.

"I find it hard to explain," he admits.
http://www.abc.net.au/science/articles/2006/09/20/1744327.htm

முன்னதாக,வட துருவப் பகுதியில்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, டைனோசர்களின் புதைப் படிவங்கள் காணப் படுவதற்கும்,
கண்டங்களானது கடல் தளங்களுடன், நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் புவியியல் வல்லுனர்களால், உரிய விளக்கத்தைக் கூற இயல வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

முக்கியமாக,நில அதிர்ச்சிகளுக்கும்,சுனாமிகளுக்கும் கூட,கண்டங்களானது கடல் தளங்களுடன், நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் புவியியல் வல்லுனர்களால், உரிய விளக்கத்தைக் கூற இயல வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?