பொறி கதவுச் சிலந்திகள் எப்படிப் பெருங் கடலைக் கடந்தன?




ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள கங்காரு தீவில் காணப் படும் ஒரு வகை சிலந்திப் பூச்சி,ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப் படுத்தி இருக்கிறது.
''ட்ராப் டோர் சிலந்தி'' என்று அழைக்கப் படும்,அந்த சிலந்திப் பூச்சியானது,தரைக்கு அடியில் சிறிய குழியை உருவாக்கிய பிறகு,அதன் மேற்பகுதியை,குச்சிகள் மற்றும் குப்பைகளால், மூடி போன்ற ஒரு கதவை உருவாக்கிய பிறகு,அதற்குள் மறைந்து கொள்கிறது.
அதன் பிறகு, அந்த வழியே சிறிய பூச்சிகள் வரும் பொழுது,திடீரென்று அந்தக் கதவைத் திறந்து வெளியே வந்து அதன் இரையைப் பிடித்து உண்கிறது.
பின்னர், இதே போன்று, மறுபடியும் ஒரு இரை வரும் வரைக்கும், அதே குழிக்குள் மறைந்து இருக்கிறது.
இவ்வாறு, தனது குழியை ஒரு கதவின் மூலம் பாதுகாப்பதால்,அந்த சிலந்திப் பூச்சியானது,பொறிக் கதவு சிலந்தி என்று அழைக்கப் படுகிறது.
இதன் அறிவியல் பெயர் ‘மாக்ரிட்ஜியா ரெயின் போவி’ ஆகும்.
குறிப்பாக,பொறிக் கதவு சிலந்தியின் தாய் ஒரு குழியை உருவாக்கிய பிறகு,அதற்குள் முட்டைகளை இடுகிறது.முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் பெரிதாகிய பிறகு,வெளியே வரும், புதிய சிலந்திகளானது, ஒரு சில அடி தூரத்திலேயே, புதிதாக ஒரு குழியைப் பொறி கதவுடன் உருவாக்கிக் கொள்கிறது.
பின்னர் அந்தக் குழியின் சுவரைப் பட்டிழை மூலம் பின்னி சொகுசு பண்ணிக் கொண்டு ,தனது பூச்சி பிடிக்கும் வாழ்க்கையைத் தொடங்குகிறது.
அதாவது,இந்தப் பூச்சியின் வாழ்க்கை முழுவதும், ஒரு சில அடி தூர எல்லைக்கு உள்ளேயே முடிந்து விடுகிறது.
இந்த நிலையில்,கங்காரு தீவில் பொறி கதவு சிலந்தியின்,இன வகைகளானது, ஆப்பிரிக்கக் கண்டத்திலும் காணப் படுகிறது.
குறிப்பாக,பொறி கதவு சிலந்திகளின் முப்பத்தி இரண்டு வகைகள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படுகிறது.
எனவே,பொறி கதவு சிலந்திகள் பூச்சிகளானது,பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கண்டங்களில் காணப் படுவதற்கு,முதலில் கண்டங்கள் பிரிந்து நகர்ந்ததே காரணம் என்று நம்பப் பட்டது.
அதாவது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமியின் தென் துருவப் பகுதியில்,கோண்டுவாணா என்ற கண்டம் இருந்ததாகவும்,அப்பொழுது அந்தக் கோண்டுவாணாக் கண்டத்தில்,பொறி கதவுச் சிலந்திகளின் இனவகைகளானது, பரவி வாழ்ந்து கொண்டு இருந்த நிலையில்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தக் அந்தக் கோண்டுவாணாக் கண்டமானது, பல பகுதிகளாகப் பிரிந்து நகர்ந்ததால்,பிரிந்து நகர்ந்த கண்டங்களுடன்,பொறி கதவுச் சிலந்திகளின் இனவகைகளும்,பயணம் செய்து இருக்கிறது, என்று நம்பப் பட்டது.
இந்த நிலையில்,ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,உயிரியல் பேராசிரியரான ஆண்ட்ரூ ஆஸ்டின் மற்றும் டாக்டரேட் மாணவியான,சோபி ஹாரிசன் ஆகியோர், கங்காரு தீவில் உள்ள,பொறி கதவு சிலந்தி இனமானது, ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும், பொறி கதவுச் சிலந்தியி இனத்தில் இருந்து, எப்பொழுது பிரிந்தது, என்று அறிவதற்காக அந்த சிலந்திகளின் மரபணுக்களை ஆய்வு செய்தனர்.
அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், கங்காரு தீவில் உள்ள,பொறி கதவு சிலந்தி இனமானது, ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும், பொறி கதவுச் சிலந்தியின் இன வகையில் இருந்து,ஒன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பிரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில்,ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டகளில், பொறி கதவுச் சிலந்தியின் இனவகைகள் காணப் படுவதற்கு,கோண்டுவாணா பிரிவு காரணம் அல்ல என்ற முடிவுக்கு , ஆராய்ச்சியாளர்கள் வந்தனர்.
மாறாக, ஒன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து,கடல் பகுதிக்குத் தற்செயலாக மிதந்து வந்த,நிலப் பகுதியுடன் வந்த மிதக்கும் தாவரங்கள் மூலம், கங்காரு தீவின் பொறி கதவுச் சிலந்திகளின் முன்னோர்கள், ஆப்பிரிக்கக் கண்டத்தின் இருந்து, பத்தாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து,கங்காரு தீவில் கரையொதுங்கி இருக்கின்றன, என்று சோபி ஹாரிசன் தெரிவித்து இருக்கிறார்.
மேலும், இது வினோதமாக இருந்தாலும்,இவ்வாறு சிலந்திகள் கடல் பகுதியைக் கடப்பது முதல் முறை அல்ல என்றும்,ஆப்பிரிக்கக் கண்டத்தின் பொறி கதவுச் சிலந்தியின் இனவகைகளானது,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து முன்னூற்றி நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கொமரோஸ் தீவில் காணப் படுவதற்கும்,சிலந்திகளின் கடல் பயணமே காரணம் என்று, சோபி ஹாரிசன் தெரிவித்து இருக்கிறார்.
இது போன்ற சிலந்திகளின் கடல் பயணங்கள் ஒன்றும் புதிதல்ல என்றும், அமரோபயாய்டெஸ் என்று அழைக்கப் படும் சிலந்தியின் இனவகைகளானது,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் பின்னர், ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆஸ்திரேலியக் கண்டத்துக்கும், தாவரங்கள் மற்றும் மரங்கள் மூலம் கடல் பயணங்கள் மூலம்,இடம் பெயர்ந்து இருப்பதற்கு,ஏற்கனவே விஞ்ஞானிகள் ஆதாரங்களைக் கண்டறிந்திருக்கின்றனர், என்றும் சோபி ஹாரிசன் மேற்கோள் காட்டுகிறார்.
இந்த நிலையில்,நான் மேற்கொண்ட ஆராய்ச்சியில்,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர் வரை தாழ்வாக இருந்தததால்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும்,இடையில்,இருந்த தரை வழித் தொடர்பு வழியாகவே,விலங்கினங்கள்,பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும், இடம் பெயர்ந்து இருக்கின்றன,என்றுஏற்கனவே தெரிவித்து இருந்தேன்.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?