பொறி கதவுச் சிலந்திகள் எப்படிப் பெருங் கடலைக் கடந்தன?
ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள கங்காரு தீவில் காணப் படும் ஒரு வகை சிலந்திப் பூச்சி,ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப் படுத்தி இருக்கிறது. ''ட்ராப் டோர் சிலந்தி'' என்று அழைக்கப் படும்,அந்த சிலந்திப் பூச்சியானது,தரைக்கு அடியில் சிறிய குழியை உருவாக்கிய பிறகு,அதன் மேற்பகுதியை,குச்சிகள் மற்றும் குப்பைகளால், மூடி போன்ற ஒரு கதவை உருவாக்கிய பிறகு,அதற்குள் மறைந்து கொள்கிறது. அதன் பிறகு, அந்த வழியே சிறிய பூச்சிகள் வரும் பொழுது,திடீரென்று அந்தக் கதவைத் திறந்து வெளியே வந்து அதன் இரையைப் பிடித்த ு உண்கிறது. பின்னர், இதே போன்று, மறுபடியும் ஒரு இரை வரும் வரைக்கும், அதே குழிக்குள் மறைந்து இருக்கிறது. இவ்வாறு, தனது குழியை ஒரு கதவின் மூலம் பாதுகாப்பதால்,அந்த சிலந்திப் பூச்சியானது,பொறிக் கதவு சிலந்தி என்று அழைக்கப் படுகிறது. இதன் அறிவியல் பெயர் ‘மாக்ரிட்ஜியா ரெயின் போவி’ ஆகும். குறிப்பாக,பொறிக் கதவு சிலந்தியின் தாய் ஒரு குழியை உருவாக்கிய பிறகு,அதற்குள் முட்டைகளை இடுகிறது.முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் பெரிதாகிய பிறகு,வெளியே வரும், புதிய சிலந்திகளானது, ஒரு சில அடி தூரத்திலேய...