நத்தைகள் எப்படி தீவுகளுக்கு சென்றன?
பறவைகளை ஏமாற்றும் இலை நரம்பு வடிவ நத்தைகள்




பறவைகளுக்கு நத்தைகள் மிகவும் பிடித்தமான உணவு.
இந்த நிலையில் தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாவிலும் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு அருகில் உள்ள ,நியூ சிலாந்து,பிஸ்மார்க் நியூ ஹெப்ரிடிஸ் ,நியூ கலடோனியா,நியூ பிரிட்டன்,பாப்புவா நியூ கினியா ஆகிய தீவுகளிலும், பார்ப்பதற்கு நரம்புகளுடன் உள்ள இலையைப் போலவே தோற்றமளிக்கும் ஓடில்லா நத்தைகள் காணப் படுகின்றன.

இந்தத் தகவமைப்பானது பறவைகளிடம் இருந்து தப்பிப்பதற்காக உதவுகிறது. இலை நரம்பு வடிவ நத்தைகள் என்று பொதுவாக அழைக்கப் படும் இந்த நத்தைகள் ஏதொராக்கோ போரிடே என்ற நத்தைக் குடும்பத்தைச் சேர்ந்தது.இந்த நத்தைக் குடும்பத்தில் முப்பது இனவகைகள் இருப்பது அறியப் பட்டுள்ளது.

குறிப்பாக ஏதொராக்கோ போரஸ் பிட்டன்டாகுலேட்டஸ் என்று அழைக்கப் படும் இலை நரம்பு வடிவ நத்தைகள் நியூ சிலாந்து தீவில் காணப் படுகிறது.

இதே போன்று பாபிலோ போடெக்ஸ் வர்கோசஸ் என்று அழைக்கப் படும் இலை நரம்பு வடிவ நத்தைகள், நியூ சிலாந்து தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும் ஆக்லாந்து தீவில் காணப் படுகிறது.

இதே போன்று ட்ரைபோனியோ போரஸ் என்று அழைக்கப் படும் இலை நரம்பு வடிவ நத்தைகள், தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படுகிறது.
இந்த நத்தைகள் எப்படி ஆஸ்திரேலியா மற்றும் நியூ சிலாந்து தீவைச் சுற்றிலும் அமைந்து இருக்கும் மற்ற தீவுகளை அடைந்தது? என்பதை நமது தற்போதுள்ள அறிவு நிலையில் தீர்மானிக்க இயலாது என்று, அடிலெய்ட் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் டி.டபிள்யூ .பர்டன் தெரிவித்து இருக்கிறார்.




நத்தைகளுக்கு கடலின் உப்புத் தன்மையுள்ள நீர் ஒத்துக் கொள்ளாது.இந்த நிலையில் ,இந்த வகை நத்தைகளுக்கு ஓடு இல்லாததால் கடலில் மிதந்து செல்லும் தாவரங்கள் மேல் இருந்த படி கடல் வழியாக மற்ற தீவுகளுக்குப் பரவி இருக்க சாத்தியம் இல்லை.
Comments