பூமி குளிர்ந்தது ஏன் ?
வட துருவப் பகுதியில் அமைந்து இருக்கும் எல்லிஸ்மெர் தீவில் முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒட்டகத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் ,முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன்,அந்தக் காலத்தில் அதிகமாக இருந்த வெப்ப நிலை பின்னர் குறைந்து இருப்பதும் அதனால் பனிப் படலங்கள் உருவாகி இருப்பதும் அதனால் தாவர மற்றும் விலங்கினங்கள் அழிந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள நெப்ரஸ்கா மாகாணத்தில் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒட்டகத்தின் புதை படிவங்கள் 1848 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப் பட்டது.
இதன் மூலம் ஒட்டகம் நாலரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி பெற்று பின்னர் மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் வட அமெரிக்கக் கண்டத்தின் வட கோடிப் பகுதியில் அமைந்து இருக்கும் பனியாறுகள் உள்ள எல்லிஸ்மெர் தீவில், முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒட்டகத்தின் புதை படிவங்களை கனடா நாட்டின் அருங் காட்சியகத்தைச் சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுநர் டாக்டர்,நடாலியா ரிபிசின்க்ஸ்கி 2006 ,2008, ஆகிய ஆண்டுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டு பிடித்தார்.
ஏற்கனவே வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியான அலாஸ்காவின் யுக்கான் பிரதேசத்திலும் ஒட்டகத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
எனவே ஒட்டகங்கள் வட அமெரிக்கக் கண்டத்தின் அலாஸ்கா வழியாக ஆசியக் கண்டத்துக்கு வந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆனால் தற்பொழுது ஆசியக் கண்டதுக்கும் வட அமெரிக்கக் கண்டதுக்கும் இடையில் பெர்ரிங் என்று அழைக்கப் படும் ஆழமற்ற கடல் பகுதி உள்ளது.
எனவே முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் வட அமெரிக்கக் கண்டதுக்கும் ஆசியக் கண்டதுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்திருப்பதும் எல்லிஸ்மெர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஒட்டகத்தின் புதை படிவம் மூலமாக நிரூபணமாகிறது.
ஆனால் தாவர உண்ணி விலங்கான ஒட்டகத்துக்கு நீந்தத் தெரியாது.
எனவே முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்திருப்பதுடன் எல்லிஸ்மெர் தீவுக்கும் அலாஸ்காவுக்கும் இடையில் தரைவழித் தொடர்பு இருந்திருப்பது வட துருவப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட ஒட்டகத்தின் புதை படிவங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
அத்துடன் கடல் மட்டம் தாழ்வாக இருந்த காலத்தில் வட துருவப் பகுதியில் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருப்பதும்,தாவர வகைகளுடன் பசுமையாக இருந்திருப்பதும் தாவர உண்ணி விலங்கான ஒட்டகத்தின் புதை படிவங்கள் வட துருவப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் நிரூபணமாகிறது.
எனவே வட துருவப் பகுதியில் வெப்ப மான கால நிலை நிலவியதற்கு,கடல் மட்டம் தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததுமே காரணம் என்பதும் நிரூபணமாகிறது.
கடல் மட்டம் ஏன் உயர்ந்து ?
தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகை வளி மண்டலத்தில் கலப்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை உயர்வதாகவும், அதனால் பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதாகவும், அதனால்தான் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
ஆனால் துருவப் பகுதிகளில் இன்றும் கூட பனி உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது.
எனவே பூமி வெப்ப மடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் பனி உருகிக் கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறான விளக்கம்.
உதாரணமாக தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து நானூற்றி அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் பாக்லாந்து தீவுக்கு, 1833 ஆம் ஆண்டு,விஞ்ஞானி சார்லஸ் டார்வின் சென்ற பொழுது, அந்தத் தீவில் நரி முக ஓநாய்கள் இருப்பதைக் கண்டு, எப்படி இந்தத் தனிமைத் தீவுக்கு இந்த விலங்கினம் வந்தது !? என்று வியந்தார்.
இந்த நிலையில் தற்பொழுது ஆஸ்திரேலியா நாட்டின் அடிலெய்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆலன் கூப்பர் தலைமயிலான ஆராய்ச்சிக் குழுவினர்,மேற்கொண்ட மரபணு ஆய்வில்,பாக்லாந்து தீவின் ஓநாய்கள், ஆயிரத்தி அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தென் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்து மடிந்த, துசியஸ் ஏவஸ் என்று அழைக்கப் படும் ஓநாய் இனத்தில் இருந்து , பிரிந்ததாகத் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியிடப் பட்ட ஒரு ஆய்வறிக்கையில்,பதினாறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் பாக்லாந்து தீவானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிக பரப்பளவில் இருந்ததாகவும்,அப்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தின் கண்டத் திட்டுக்கும் பாக்லாந்து தீவுக்கும் இடையில் இருபது முதல் முப்பது கிலோ மீட்டர் இடைவெளியே இருந்ததாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
குறிப்பாக பதினாறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களின் பெரும் பகுதி பனியால் மூடப் பட்டு இருந்ததாகவும்,அப்பொழுது கடல் மட்டமானது நூற்றி முப்பது முதல் நூற்றி ஐம்பது மீட்டர் தாழ்வாக இருந்ததாகவும்,பின்னர் பனி உருகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டம் உயர்ந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அப்பொழுது கடலில் இருந்த நீரே நிலத்தின் மேல் பனியாக உறைந்து இருந்ததாக நம்பப் படுகிறது.
இது போன்று பூமியில் பல முறை பனியால் மூடப் பட்டும் பின்னர் பனி உருகிக் கடலில் கலப்பதும் நடைபெற்றதாகவும் நம்பப் படுகிறது.
இவ்வாறு நிலத்தின் மேல் பனி உருவாகுவதற்கும் பின்னர் அந்தப் பனி உருகிக் கடலில் கலப்பதற்கும் சூரியனை பூமி நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும் பொழுது சில காலம் சூரியனில் இருந்து விலகி பெரிய வட்டப் பாதையில் வலம் வருவதாகவும் அப்பொழுது பூமியின் மேல் படும் சூரிய ஒளியின் தாக்கம் குறைவதாகவும் அதனால் பூமியின் குளிர்ச்சி ஏற்பட்டு நிலத்தின் மேல் பனி உருவாகுவதகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இதே போன்று சூரியனை பூமி நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும் பொழுது சில காலம் சூரியனை நெருக்கமாக வலம் வருவதாகவும் அப்பொழுது ,பூமியில் விழும் சூரிய ஒளியின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும்,அப்பொழுது நிலத்தின் மேல் இருக்கும் பனியானது உருகிக் கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்வதாகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஆனால் இந்த விளக்கம் தவறு.
எப்படியென்றால் உண்மையில் பூமியானது சூரியனை விட்டு விலகி தொலைவில் இருந்த படி வலம் வரும் பட்சத்தில்,பூமியில் குளிர்ச்சி ஏற்பட்டால் அப்பொழுது ஏற்கனவே நிலப் பகுதியின் மேல் உள்ள நீர் மற்றும் நீராவிதான் நிலத்தின் மேல் பனியாக உறையும்.அதே போன்று வெப்ப நிலை குறைவால் கடலில் உள்ள நீர் ஆவியாகுவதும் நின்று விடும்.
எனவே கடலில் உள்ள நீர் கடலிலேயே இருக்கும்.எனவே பூமியில் வெப்ப நிலை குறைவதால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்பட சத்தியம் இல்லை.
அதே போன்று பூமியானது சூரியனை நெருக்கமாக வலம் வரும் பட்சத்தில்,பூமியின் வெப்ப நிலை அதிகரித்தால்,நிலத்தின் மேல் உள்ள பனி உருகிக் கடலில் கலக்கும் அதே நேரத்தில் கடல் நீரும் ஆவியாகத் தொடங்கும்.
எனவே நிலத்தின் மேல் உள்ள பனி உருகிக் கடலில் கலப்பதால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்பட சாத்தியம் இல்லை.
எனவே கடல் மட்டம் தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு சூரியனைச் சுற்றி வரும் பூமியின் சுற்று வட்டப் பாதையில் மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப் படும் விளக்கம் தவறான விளக்கம்.
எனவே கடல் மட்டம் உயர்ந்ததற்கு கடலுக்கு அடியில் இருக்கும் லட்சக் கணக்கான சுடு நீர் ஊற்றுகள் மூலம் வெளிவந்த நீர் கோடிக் கணக்கான ஆண்டுகளாக கடலில் கலந்ததே காரணம் என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.
பூமியின் ஆழமான பகுதியில் இருந்து வந்த சுடு நீர் ஊற்று நீர்
பூமியின் பல இடங்களில் சுடு நீர் ஊற்றுக்கள் காணப் படுகின்றன.சுடு நீர் ஊற்றுக்கள் பொதுவாக பூமிக்குள் இறங்கும் மழை நீரானது பூமிக்குள் இருக்கும் வெப்பமான பாறைக் குழம்புப் பகுதியை நெருங்கும் பொழுது சூடாக்கப் பட்டு மறுபடியும் மேல் நோக்கி கசிவதாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில் ஜப்பானின் மத்தியப் பகுதியில் உள்ள மாட்சு சிரோ நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டபொழுது உருவான சுடு நீர் ஊற்றுக்களில் இருந்து வெளி வந்த நீரை,டாக்டர் யோசிதா என்ற ஆராய்ச்சியாளர் சேகரித்து அதன் வேதித் தன்மையை அறிவதற்காகப் பகுப்பாய்வு செய்தார்.
அந்த ஆய்வில்,அந்த சுடு நீர் ஊற்றின் நீரானது புவியோட்டுக்கு அடியில் இருக்கும் மாண்டில் என்று அழைக்கப் படும் பகுதியில் இருக்கும் பாறைக் குழம்பில் இருந்து உருவான நீர் என்று அறிவித்து இருக்கிறார்.
அதே போன்று ஜப்பானில் உள்ள அரிமா ஸ்பா மற்றும் காசியோ ஸ்பா என்று அழைக்கப் படும் சுடு நீர் ஊற்றுக் குளியல் குளங்களில் உள்ள நீரும் மாட்சு சிரோ பகுதியில் சேகரிக்கப் பட்ட நீரின் வேதித் தன்மையை ஒத்து இருப்பதாகவும் யோசிதா தெரிவித்து இருக்கிறார்.
எனவே பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகும் பொழுது அதிலிருந்து பிரியும் நீரே சுடு நீர் ஊற்றாக பூமிக்கு மேல் வெளிப் படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
சமீபத்தில் கூட கடலில் இருக்கும் நீரை விட மூன்று மடங்கு அதிகமான நீர் பூமிக்கு அடியில் அறுநூற்றி அறுபது கிலோ மீட்டர் ஆழத்தில் ரிங்க்வூடைட் என்று பெயர் சூட்டப் பட்ட பாறையில் கலந்து இருப்பதாக,அமெரிக்காவின் நார்த் வெஸ்டர்ன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஜாக்கப்சென் என்ற புவியியல் வல்லுநர் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் நில அதிர்ச்சிகளை ஆய்வு செய்யும் கருவிகள் மூலமாக பூமிக்குள் ஏற்படும் அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் பூமிக்கு அடியில் நீர் பெருமளவில் இருப்பது தெரிய வந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலம் பூமிக்கு மேல் இருக்கும் கடலானது தற்பொழுது பூமிக்கு அடியில் இருந்தே மேற்பகுதிக்கு வந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு முன்பு கடலானது, விண்வெளியில் இருந்து பூமியில் மேல் விழுந்த லட்சக் கணக்கான பனிப் பாறைகாளால் உருவானது என்று நம்பப் பட்டது.
ஆனால் நான் ஸ்டீவ் ஜாக்கப்சென் குழுவினரின் அறிவிப்புக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கடலானது கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்று நீரால்தான் உருவானது என்று தெரிவித்து இருந்தேன்.
கடல் மட்டம் உயர்ந்ததற்கு நிலத்தின் மேல் இருந்த பனி உருகிக் கடலில் கலந்ததே காரணம் என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
கடல் மட்டம் உயர்ந்ததால்தான் பனிப் படலங்கள் உருவானது.
இந்த நிலையில் வட துருவப் பகுதியில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கம்பளம் போன்ற மயிர்களுடன் வாழ்ந்த காண்டா மிருகம்,யானை போன்ற விலங்கினங்கள் அழிந்தன.
அதன் காரணத்தை அறிவதற்காக வட துருவப் பகுதியில் குறிப்பாக சைபீரியா,அலாஸ்கா,மற்றும் கனடா பகுதிகளில் இருந்து பனியால் மூடப் பட்ட தரைக்கு அடியில் புதைந்து இருந்த தாவரங்களின் பாகங்களை ,பிரிட்டனைச் சேர்ந்த சவுத் ஹாம்ப்டன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேல் கதுரி தலைமையிலான பன்னாட்டு விஞ்ஞானிகள் சேகரித்து ஆய்வு செய்தனர்.
அதே போன்று ஆர்க்டிக் பகுதியில் இறந்து கிடந்த கம்பள யானை மற்றும் காண்டா மிருகம்,காட்டெருமை,போன்ற விலங்கினங்களின் வயிற்றுப் பகுதியில் இருந்த உணவுப் பொருட்களையும் சேகரித்து ஆய்வு செய்தனர்.
அப்பொழுது ஆர்க்டிக் பகுதியில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்திருப்பது தெரிய வந்தது.
ஆனால் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பூக்கும் தாவரங்கள் அழிந்து, சத்துக் குறைவான புற்கள் மட்டும் இருந்திருப்பதும் தெரிய வந்தது.
பனிப் பொழிவின் காரணமாக தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழிந்து இருப்பது ஆதார பூரவமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமும் உயர்ந்து இருக்கிறது.
அதே போன்று துருவப் பகுதிகளில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவும் ஏற்பட்டு இருக்கிறது.
எனவே கடல் மட்ட உயர்வும் பனிப் பொழிவும் ஒரே கால கட்டத்தில் ஏற்பட்டு இருப்பதால் வட துருவப் பகுதியில் பனிப் படலங்கள் உருவானதற்கு கடல் மட்டம் உயர்ந்ததே காரணம் என்பதும் நிரூபணமாகிறது.
எனவே பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் படலங்கள் உருகிக் கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்ததாகக் கூறப் படும் விளக்கம் தவறு.
உண்மையில் கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளி வந்து கொண்டு இருக்கும் நீரால் கடல் உருவாகி இருக்கின்றன.
அதே போன்று சுடு நீர் ஊற்று நீர் கடலில் தொடர்ந்து கலந்து கொண்டு இருப்பதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதுடன் கடலின் பரப்பளவும் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் பூமியின் வெப்ப நிலை குறைந்து துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன.
அதன் காரணமாக தாவர மற்றும் விலங்கினங்களும் அழிந்திருக்கின்றன.
இதே போன்று பூமியின் உயிரின வரலாற்றில் ஐந்து பெரும் அழிவுகள் ஏற்பட்டு இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அந்தப் பேரழிவுகளுக்கும் கடல் மட்ட உயர்வும் கால நிலை மாற்றமுமே காரணம் என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது.
Comments