நீரால் அழியும் உலகு –விஞ்ஞானி.க.பொன்முடி.

http://www.norphil.co.uk/2006/03c-iceage.htm
தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு அறிவியல் உலகில் தவறான விளக்கம் கூறப் பட்டு இருப்பது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகையில் உள்ள கரிய மில வாயு வளி மண்டலத்தில் கலப்பதால் வளி மண்டலம் மற்றும் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்று புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

http://www.nio.org/index/option/com_projdisp/task/show/tid/2/sid/15/pid/56
ஆனால் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் இல்லாத காலத்தில் மாமல்ல புரக் கடற்கரையில் கட்டப் பட்ட ஏழு கோயில்களில் ஆறு கோயில்கள் தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பது சுனாமியின் பொழுது கடல் பின்வாங்கிச் சென்றபொழுது தெரிய வந்தது.

இதே போன்று எகிப்து நாட்டிலும் கிளியோ பாட்ரா வாழ்ந்த அலெக்சாண்ட்ரியா நகரத்தின் கட்டிட இடிபாடுகளும் கூட கடல் மட்டத்தில் இருந்து இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதைத் தொல் பொருள் ஆராராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
எனவே உண்மையில் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்ததற்கு அறிவியல் உலகில் அடிப்படை ஆதாரமற்ற விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது சூரியனை நீள் வட்டப் பாதையில் பூமி சுற்றிவரும் பொழுது, சில காலம் சூரியனை விட்டு விலகிச் சென்று பெரிய வட்டப் பாதையில் வலம் வந்ததாகவும் ,அப்பொழுது பூமியின் மேல் விழும் சூரிய ஒளியின் தாக்கம் குறைவாக இருந்ததாகவும் அதனால் ,பூமியில் குளிர்ச்சி ஏற்பட்டு துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவகியதால் கடல் நீர் மட்டம் குறைந்ததாகப் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.


http://www.giss.nasa.gov/research/briefs/gornitz_09/
இந்த விளக்கத்தில் உள்ள தவறு என்னவென்றால்,உண்மையில் பூமியானது சூரியனை விட்டு விலகிச் செல்லும் பட்சத்தில் பூமியின் மேல் விழும் சூரிய ஒளியின் தாக்கம் குறையும் பொழுது,ஏற்கனவே நிலத்தின் மேல் உள்ள நீர்தான் பனியாக உறையும்,அதே போன்று நிலப் பகுதிகளின் மேல் உள்ள வளி மண்டலத்தில் உள்ள மேகங்களில் உள்ள நீர்தான் நிலத்தின் மேல் பனியாக உறையும் ,எனவே கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்படாது.ஏனென்றால்பூமியின் வெப்ப நிலை குறையும் பொழுது கடல் நீர் ஆவியாகி மேலே செல்வதும் நின்று விடும்.
அதே போன்று பூமியானது சூரியனை நோக்கி நகர்ந்து சிறிய வட்டப் பாதையில் வலம் வரும் பட்சத்தில்,பூமியின் மேல் விழும் சூரிய ஒளியின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது,நிலத்தின் மேல் உள்ள பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் பொழுது வெப்ப நிலை உயர்வால் கடலில் இருந்தும் நீர் ஆவியாகத் தொடங்கும்.
எனவே சூரியனை வலம் வரும் பூமியின் வட்டப் பாதையில் ஏற்பட்ட மாற்றத்தால் பூமியில் பனிப் படலங்கள் உருவாகியதாலும் உருகியதாலும் கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப் படும் விளக்கம் தவறு.
எனவே உண்மையில் கடல் மட்டம் ஏன் உயர்ந்தது என்ற கேள்வி எழுகிறது.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்திருப்பதும் அப்பொழுது துருவப் பகுதியில் அதிக வெப்ப நிலை நிலவியிருப்பதும் புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக கனடா நாட்டின் அருங்காட்சியாகத்தைச் சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுநர்,டாக்டர் நடாலியா ரிபிசின்க்வி தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் வட துருவப் பகுதியில் வட அமெரிக்கக் கண்டத்தின் வட கோடிப் பகுதியில் அமைந்து இருக்கும் எல்லிஸ்மெர் என்ற தீவில் முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒட்டகத்தின் புதை படிவங்கள் இருப்பதைக் கண்டு பிடித்துள்ளனர்.

தற்பொழுது ஒட்டகங்கள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் காணப் பட்டாலும் வட அமெரிக்கக் கண்டத்தில் நாலரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஒட்டகங்கள் வாழ்ந்திருப்பதற்கு ஆதாரமாக போயிபோதீரியம் என்று அழைக்கப் படும் மூதாதை ஒட்டகத்தின் புதை படிவங்கள் வட அமெரிக்கக் கண்டத்தில் கொலராடோ,மாண்டனா,நெப்ரஸ்கா,டகோட்டா டெக்சாஸ் ஆகிய பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

எனவே ஒட்டகங்கள் வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆசியக் கண்டத்தின் வந்திருகின்றன.ஆனால் தற்பொழுது வட அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் பெர்ரிங் என்று அழைக்கப் படும் ஆயிரம் கிலோ மீட்டர் அகலமுள்ள தாழ்வான கடல் பகுதி உள்ளது.
ஆனால் தாவர உண்ணி விலங்கான ஒட்டகத்துக்கு நீந்தத் தெரியாது.

எனவே முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக வட அமெரிக்கா மற்றும் ஆசியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் பெர்ரிங் கடல் பகுதியில் காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்திருப்பது வட துருவப் பகுதியில் உள்ள எல்லிஸ்மெர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஒட்டகத்தின் புதை படிவங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
அத்துடன் முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருப்பதும் நிரூபணமாகியுள்ளது.
அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்து இருப்பதுடன் வெப்ப நிலையும் குறைந்து துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன.அத்துடன் தாவர மற்றும் விலங்கினங்களும் அழிந்திருக்கின்றன.

http://news.illinois.edu/news/14/0515genetic_RipanMalhi.html

http://geocurrents.info/place/russia-ukraine-and-caucasus/siberia/pleistocene-park-the-regeneration-of-the-mammoth-steppe

http://www.dailymail.co.uk/sciencetech/article-1360405/Scientists-make-historic-discovery-11-500-year-old-toddler-Xaasaa-Alaska.html
எனவே கடல் மட்டம் தாழ்வாக இருந்ததாலும் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததாலுமே துருவப் பகுதிகளில் அதிக வெப்ப நிலை நிலவியதற்கு காரணம்.அதே போன்று கடல் மட்டம் உயர்ந்து கடலின் பரப்பளவு அதிகரித்ததே வெப்ப நிலை குறைந்ததற்கும் பனிப் படலங்கள் உருவானதற்கும் காரணம்.
எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்குத் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கம் முற்றிலும் தவறான விளக்கம்.
இதை உறுதிப் படுத்தும் விதமாகக் கடல் மட்டம் உயர்ந்த காலத்திலேயே பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பது புவியியல் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
தற்பொழுது வட துருவப் பகுதியில் உள்ள பனிப் படலங்களில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த கம்பளி போன்ற மயிர்களுடன் வாழ்ந்த யானை,காண்டாமிருகம் காட்டெருமை போன்ற விலங்கினங்களின் உடல்கள் காணப் படுகின்றன.


http://earthsky.org/earth/what-killed-the-woolly-mammoth-new-clues

http://news.ku.dk/all_news/2014/02/a-smoking-gun-on-the-ice-age-megafauna-extinctions/
அந்த விலங்கினங்கள் ஏன் அழிந்தன? எப்பொழுது அழிந்தது? என்று அறிவதற்காக பிரிட்டனில் உள்ள சவுத் ஹாம்ப்டன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேல் கதுரி தலைமையில் பன்னாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக அவர்கள் வட துருவப் பகுதியில் பனிப் படலங்களுக்கு இடையில் புதைந்து கிடந்த விலங்கினங்களின் வயிற்றில் இருந்து செரிக்கப் படாத உணவுப் பொருட்களையும்,பல்லாயிரம் ஆண்டு காலமாக உறை நிலையில் உள்ள தரைக்கு அடியில் புதைந்து இருந்த தாவரங்களில் இருந்து மரபணுக்களையும்,விலங்குகளின் கழிவுகளையும் சேகரித்து ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வில் ,வட துருவப் பகுதியில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் மற்றும் அவற்றை யானை காண்டா மிருகம் மான் போன்ற விலங்கினங்கள் உண்டு வாழ்ந்து இருப்பதும் தெரிய வந்தது.
அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவால் பூக்கும் தாவரங்கள் குறைந்து இருப்பதும் புற்களை உண்ட விலங்கினங்கள் வாழ்ந்து இருப்பதும்,அதன் பிறகு புற்களும் குறைந்ததால் விலங்கினங்கள் அழிந்திருப்பதும் தெரிய வந்தது.
http://news.bbc.co.uk/2/hi/science/nature/7735544.stm
http://en.wikipedia.org/wiki/Doggerland
இதே போன்று ஐரோப்பா மற்றும் பிரிட்டிஷ் தீவுகளுக்கு இடையில் தற்பொழுது வட கடல் என்று அழைக்கப் படும் கடல் பகுதியில் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,டோகர்லேண்ட் என்று அழைக்கப் படும் நாற்பத்தி ஆறாயிரத்தி நானூற்றி இருபது சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் ஒரு நிலப் பகுதி காடுகளுடனும் ஆறுகளுடனும் மற்றும் யானைகள் காட்டெருமைகள் மற்றும் மான்கள் உள்பட பல வகை விலங்கினங்கள் வாழ்ந்த நிலப் பகுதி ஒன்று இருந்திருப்பதையும் புவியியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

http://www.dailymail.co.uk/sciencetech/article-2546720/Swedish-divers-unearth-Stone-Age-Atlantis-11-000-year-old-ancient-settlement-discovered-Baltic-Sea.html
http://www.huffingtonpost.com/2014/01/30/swedish-atlantis-artifacts-baltic_n_4696047.html
இந்த நிலையில் ஸ்வீடன் நாட்டுக்கு அருகில் உள்ள பால்டிக் கடலுக்கு அடியில் பதினோராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதர்கள் பயன் படுத்திய கருவிகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

http://news.bbc.co.uk/2/hi/science/nature/8099377.stm


http://news.bbc.co.uk/2/hi/science/nature/8099377.stm


http://news.softpedia.com/news/Neanderthals-were-too-smart-to-survive-15264.shtml
இதே போன்று ஐரோப்பாக் கண்டத்துக்கும் பிரிட்டிஷ் தீவுக்கும் இடைப் பட்ட பகுதியில் உள்ள வட கடல் பகுதியில் அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர்தால் என்று அழைக்கப் படும் கற்கால மனித இனம் வேட்டையாடி வாழ்ந்திருப்பதற்கு ஆதாரமாக நியாண்டர் தால் மனிதனின் மண்டை ஓட்டுப் பகுதி கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

http://ngm.nationalgeographic.com/2012/12/doggerland/clark-photography#/06-collection-of-fossils-from-north-sea-fishermen-670.jpg
அதே போன்று பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்கள் பயன் படுத்திய கற்கருவிகள் ,மர ஈட்டிகளும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

http://education.nationalgeographic.com/media/photos/000/318/31836.jpg
http://thestonehengeenigma.files.wordpress.com/2013/06/674a1-s9wik.jpg
http://thestonehengeenigma.wordpress.com/category/doggerland/

http://www.onenewspage.us/video/20140505/1787487/Ancient-Sunken-Island-in-North-Sea-Might-Have.htm

http://www.uwtsd.ac.uk/research/environment-archaeology-history-and-anthropology/inundated-landscapes-/
அவற்றை ஆய்வு செய்ததின் அடிப்படையிலும் நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையிலும் அந்த நிலப் பகுதியின் பெரும் பகுதியானது பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்ததால் மூழ்கியதாகவும் வேல்ஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த புவித் தொல் பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் மார்டின் பேட்ஸ் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு கடல் மட்டம் மேலும் உயர்ந்ததால் ஐயாயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலப் பகுதியானது முற்றிலும் மூழ்கி விட்டதாகவும் டாக்டர் மார்டின் பேட்ஸ் தெரிவித்துள்ளார்.
எனவே பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமும் உயர்ந்து இருக்கிறது.அதே போன்று பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருக்கிறது.எனவே பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறான விளக்கம் உறுதியாகிறது.
ஒரே நேரத்தில் கடல் மட்ட உயர்வும் பனிப் பொழிவும் ஏற்பட்டதற்குக் காரணம் என்ன ?அதே போன்று கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு உண்மையான காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.
http://news.bbc.co.uk/2/hi/science/nature/4950540.stm
இதே போன்று வட கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் தரையில் எண்ணெய் எடுப்பதற்காகத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோசாராஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை நார்வே மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் நிரூபணமாகிறது.
http://adsabs.harvard.edu/abs/2003AGUFM.V52B0437Y
இந்த நிலையில் ஜப்பானில் உள்ள சுடுநீர் ஊற்றுக்களில் இருந்து வெளியான நீரைப் பகுப்பாய்வு செய்த டாக்டர் யோசித்தா என்ற புவியியல் வல்லுநர் ,அந்த நீரானது பூமியின் மிக ஆழத்தில் உள்ள பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் என்பதை அதில் உள்ள ஐசொட்டோப்புகளின் அடிப்படையில் கண்டு பிடித்துள்ளார்.
இதே போன்று கடலுக்கு அடியில் எண்ணற்ற அளவில் சுடு நீர் ஊற்றுக்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது.எனவே கோடிக் கணக்கான ஆண்டுகளாக சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளிவந்த நீரால்தான் கடல் உருவாகி இருக்கிறது.எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கும் சுடுநீர் ஊற்றுக்களே காரணம்.

http://www.space.com/13185-comets-water-earth-oceans-source.html
இதற்கு முன்பு விண் வெளியில் திரிந்து கொண்டு இருந்த பனிப் பாறைகள் லட்சக் கணக்கில் கோடிக் கணக்கில் பூமியில் விழுந்ததால்தான் பூமியில் கடல் உருவானதாக நம்பப் பட்டது.

http://www.theguardian.com/science/2014/jun/13/earth-may-have-underground-ocean-three-times-that-on-surface
இந்த நிலையில் கடலில் இருக்கும் நீரை விட மூன்று மடங்கு அதிகமான நீர் பூமிக்கு அடியில் அறுநூற்றி அறுபது கிலோ மீட்டர் ஆழத்தில் இருப்பது நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் தெரிய வந்துள்ளதாக நார்த் வெஸ்ட்டர்ன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஜாக்கப்சன் என்ற புவியியல் வல்லுநர் தெரிவித்துள்ளார்.

புவிக் கோளத்தின் பெரும்பகுதி பாறைக் குழம்பால் ஆனது.எனவே பூமிக்கு மேல் திரளும் நீரின் மூலம் பூமி குளிர்ந்து கொண்டு இருப்பது புலனாகிறது.எனவே பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு தொடர்ந்து குளிர்ந்து கொண்டு இருப்பது புலனாகிறது.
எனவே கடல் மட்டம் மேலும் உயர்ந்து நிலப் பகுதிகளை மூழ்கடிப்பதும் தொடரும்,அதே போன்று கடல் மட்ட உயர்வால் பூமியின் வெப்ப நிலை குறைந்து பனிப் படலங்கள் உருவாகுவதும் தொடரும். அதனால் தாவர மற்றும் விலங்கினங்கள் அழிவதும் தொடரும்.

http://www.eldercreek.org/pre-human-california/

Comments