மண் புழுக்கள் எப்படி எரிமலைத் தீவுகளுக்கு சென்றன?

ew12.pngew12.png
subantarctic.pngsubantarctic.png
லண்டன் விலங்கியல் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் என்ற பேராசிரியர் மண் புழுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட பொழுது, அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றிலும் அமைந்து இருக்கும் பல எரிமலைத் தீவுகளுக்குச் சென்று, அந்தத் தீவுகளில் உலகில் வேறு எங்கும் காண இயலாத பல் அரிய வகை மண் புழு இனவகைகளைக் கண்டு பிடித்தார்.


அந்த மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோ ஸ்காலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள் என்று வகை படுத்தி உள்ளார்.

ew10.gifew10.gif

மண் புழுக்கள் தோலின் மூலம் சுவாசிக்கும் உயிரினம். காற்றில் உள்ள பிராண வாயு மண் புழுவின் தோலின் வழியாக சென்று மண் புழுவின் இரத்தத்தில் கலக்கும்.அதே போன்று மண் புழுவின் உடலில் இருந்து கரிய மில வாயு தோலின் வழியாக வெளியேறும். இதற்கு மண் புழுவின் தோல்  எப்பொழுதும் ஈரப் பசையுடன் இருக்க வேண்டும்.


எனவேதான் மண் புழுக்கள் அதிக காற்றுள்ள இடத்தையும் வெய்யிலையும் தவிர்த்து விடுகின்றன.மலைக் காலத்திலும் இரவிலுமே மண் புழுக்கள் தரைக்கு மேலே வருகின்றன.மண் புழுக்களும் ஈரப் பதமான மண்ணிலேயே வாழ்கின்றன.


தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மைக்ரோ ஸ்காலக்ஸ் மண் புழுக்கள் எப்படி அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளுக்கு சென்றன என்ற கேள்விக்குத் தற்பொழுது ஒரு விளக்கம் கூறப் படுகிறது.


அதாவது கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் இருந்த படி மண் புழுக்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி எரிமலைத் தீவுகளை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
(   டாக்டர் பிரான்க் எவரஸ்  பெட்டார்ட்)
feb.jpg(  உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் ) feb.jpg


ஆனால் இந்தக் கருத்தை உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் ஏற்க மறுக்கிறார்.அதற்கான காரணங்களையும், அவர் எழுதிய ‘ மண் புழுக்களும் அதன் இன வகைகளும்’’ என்ற நூலில் விளக்கியுள்ளார்.


சூறாவளி மற்றும் புயலின் பொழுது காற்றில் பறக்கும் இலை மற்றும் தழைகளில் ஒட்டிக் கொண்டு நத்தைகள் கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று கருதப் படுகிறது.


ஆனால் மண் புழுக்களின் உடலில் சுரக்கும் திரவதிற்கு ஓட்டும் தன்மை குறைவு.எனவே மண் புழுக்களால் காற்றில் பறக்கும் இலை மற்றும் தழைகள் மூலமாகவும் பரவி இருக்க இயலாது.


பொதுவாக மண் புழுக்கள் நீரில் மிதக்கக் கூடியதாக இருக்கிறது.ஆனாலும்  மண் மண் புழுக்கள் மண்ணில் உள்ள மட்கிய தாவரங்கள்,பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகளை மண்ணுடன் சேர்த்து விழுங்குகிறது.அதனால் அதன் எடை அதிகரிக்கிறது.இந்த நிலையில் மண் புழுவால் நீரில் மிதக்க இயலாது.


தவளைகளைப் போலவே மண் புழுக்களுக்கும் கடல் நீரின் உப்புத் தன்மை ஒத்துக் கொள்ளாது.அத்துடன் மண் புழுக்களின் முட்டைகளும் கடல் நீரின் உப்புத் தன்மை ஒத்துக் கொள்ளாது.


கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேலிருந்த படி மண் புழுக்கள் அதிக நேரம் மிதந்து கொண்டு இருந்தால் காற்றில் மண் புழுவின் தோலில் உள்ள ஈரம் காய்ந்து விடும்.எனவே சுவாசிக்க இயலாமல் மண் புழுக்கள் இறந்து விடும்.
ew1.pngew1.png
ew2.pngew2.png
ew.pngew.png


எனவே கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாகக் கடலில் பல நாட்கள் மிதந்த படி மண் புழுக்களால் தீவுகளை அடைந்து இருக்கலாம் என்ற கருத்தை ஏற்க இயலாது என்று டாக்டர் பிரான்க் எவரெட் தனது நூலில் காரணங்களுடன் விளக்கியுள்ளார்.


இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் அந்த அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் தனி வகை மண் புழுக்கள் காணப் படுகின்றன.

isew1.pngisew1.png
isew2.pngisew2.png
isew3.pngisew3.png
isew4.pngisew4.png
isew5.pngisew5.png
isew6.pngisew6.png
isew7.pngisew7.png
isew8.pngisew8.png

உதாரணமாக ஆக்லாந்து தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் ஆக்லாண்டிகஸ் என்று அழைக்கப் படும் மண் புழு இனம் காணப் படுகிறது.இதே போன்று காம்பெல் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் காம்பெல்லியனஸ்,குரோசெட் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் குரோசெட்டென்சிஸ்,பாக்லாந்து தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் பாக்லாண்டிகஸ், தெற்கு ஜார்ஜியா தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் ஜியார்ஜியானஸ்,கெர்கூலியன் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம்,மாக்குயரி தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் மாக்குயரியன்சிஸ்,சாதம் தீவில் டிப்ரோசீட்டா சாதாமென்சிஸ்,என்று அழைக்கப் படும் மண் புழு இனங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.


இந்த மண் புழுக்கள் எல்லாம் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோஸ்கோலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள்.


எனவே மைக்ரோ ஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் எப்படி தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளை அடைந்தது? என்ற கேள்வி இன்று வரை சரியான விடை கூறப் படாத நிலையிலேயே உள்ளது.


இந்த நிலையில் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் தரை வழித் தொடர்பு வழியாக மண் புழுக்கள் எரிமலைத் தீவுகளை அடைந்திருப்பது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.


குறிப்பாக அண்டார்க்டிக் கண்டத்துக்கு அருகில் உள்ள கெர்கூலியன் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம் என்று அழைக்கப் படும் மண் புழுவினம் காணப் படுகிறது.கெர்கூலியன் தீவானது கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்து இருக்கும் எரிமலையின் உச்சிப் பகுதி ஆகும்.


இந்த நிலையில் கெர்கூலியன் தீவு எப்பொழுது உருவானது என்று அறிவதற்காக, பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர்,கெர்கூலியன் தீவு அமைந்து இருக்கும் கடலடிப் பீடபூமியின் மத்தியப் பகுதியில் இருந்த எரிமலைப் பாறைப் படிவுகளைச் சேகரித்து அதன் தொன்மையை ஆய்வு செய்தனர்.
kerg.pngkerg.png
kerg1.pngkerg1.png
kerg2.pngkerg2.png


அப்பொழுது அந்த எரிமலைப் பாறைப் படிவுகள் ஒன்பது கோடி ஆண்டுகளாக இருப்பது தெரிய வந்தது.


அத்துடன் அந்த எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் அந்தக் குழுவினர் கண்டு பிடித்தனர்.


இதன் அடிப்படையில் டாக்டர் மைக்கேல் காபின், தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்தக் கடலடிப் பீட பூமியானது, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலாக இருந்ததாகத் தெரிவித்து இருக்கிறார்.

அத்துடன் அந்தக் கடலடிப் பீட பூமியானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியதாகவும் தெரிவித்து இருக்கிறார்.


இதே போன்று நார்வே நாட்டுக் கடல் பகுதியிலும் கூட கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கடலடித் தரையில் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளிலும் கூட இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோசாரஸ் என்ற டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதும் குறிப்பிடத் தக்கது.

இந்தக் கண்டு பிடிப்பனது , ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதும், அதன் காரணமாகக் கெர்கூலியன் கடலடிப் பீட பூமிக்கும் தென் அமெரிக்கக் கண்டதுக்கும் இடையில் தரைவழித் தொடர்பு இருந்து இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. 


எனவே அந்தத் தரை வழித் தொடர்பு வழியாகவே மைக்ரோஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கெர்கூலியன் பீட பூமிப் பகுதிக்கு வந்து சேர்ந்து இருக்கிறது.


அதன் பிறகு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததால் அந்தப் பீட பூமியானது கடலுக்குள் மூழ்கிய பொழுது, மண் புழுக்கள் தற்பொழுது கடல் மட்டத்துக்கு மேலாக தீவாக இருக்கும் எரிமலையின் மேற்பகுதிக்கு வந்து இருக்கின்றன.


இடைப் பட்ட காலத்தில் மைக்ரோஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் பரிணாம மாற்றத்தால் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம் என்று அழைக்கப் படும் புதிய இன வகையாக பரிணாம மாற்றம் அடைந்து இருக்கிறது.


இதே போன்று ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்தபொழுது இருந்த தரைவழித் தொடர்பு வழியாகத்  தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மற்ற எரிமலைத் தீவுகளுக்கும் வந்த மைக்ரோ ஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் காலப் போக்கில் அந்த அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் புதிய இனவகைகளாக பரிணாம மாற்றம் அடைந்து இருக்கின்றன.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?