மடகாஸ்கர் தீவு ரகசியம்

பாலூட்டி விலங்கினங்கள்
தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் காலபாகஸ் தீவில் காணப் படும் பதினைந்து வகையான சிட்டுகளின் அலகுகள் ஒவொன்றும் அவைகளின் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ப மாறுபட்டு இருந்தது.
அதன் அடிப்படையில், அந்த சிட்டுகள் ஒரு பொது மூததையில் இருந்தே பரிணாம மாற்றம் பெற்றிருப்பது தெரிய வந்தது.

இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் தரை வாழ் விலங்கினங்களின் இனவகைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் காணப் படுவதன் மூலம், கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

மடகாஸ்கர் தீவில் லெமூர் என்று அழைக்கப் படும் நரி முகக் குரங்குகள், டென் ரெக் என்று அழைக்கப் படும் பூச்சித் திண்ணி விலங்குகள்,போசா என்று அழைக்கப் படும் இரையுண்ணி விலங்குகள்,மற்றும் எலி போன்ற கொறித்துண்ணி விலங்குகளும் காணப் படுகின்றன.
இவ்வாறு மடகாஸ்கர் தீவில் ஒரு கண்டத்தில் காணப் படுவதைப் போன்றே பல வகையான விலங்கினங்களும் தாவரங்களும் காணப் படுவதால் அந்தத் தீவானது எட்டாவது கண்டம் என்றும் அழைக்கப் படுகிறது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவுக்கு விலங்கினங்கள் எப்படிச் சென்றன? என்பது குறித்து இன்று வரை விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
உதாரணமாக மடகாஸ்கர் தீவில் லெமூர் என்று அழைக்கப் படும் நரி முகக் குரங்குகள் காணப் படுகின்றன.லெமூர் குரங்குகள் மற்றும் தேவாங்குகளின் கீழ் தாடையின் முன் பகுதியில் உள்ள பற்கள் நெருக்கமாக அமைந்து சீப்பு போன்ற அமைப்பில் இருக்கும்.
இந்த அமைப்புடைய குரங்கின் எலும்புப் புதை படிவங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதன் அடிப்படையில் லெமூர் குரங்கின் மூதாதைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழ்ந்து இருபது தெரிய வந்துள்ளது.
எனவே லெமூர் குரங்குகள் எப்படி ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவை அடைந்தன? என்ற கேள்வி எழுந்தது.
ஆப்பிரிக்கக் கண்டமும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கின்றன.
எனவே லெமூர்கள் நிச்சயம் கடல் வழியாகத்தான் மடகாஸ்கர் தீவுக்கு வந்திருக்க முடியும் என்று தற்பொழுது நம்பப் படுகிறது.
குறிப்பாக காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்த படி இரண்டு வார காலம் கடலில் தத்தளித்த படி லெமூர்கள் மடகாஸ்கர் தீவை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
இந்த முறையில் பல குரங்குகள் வர இயலா விட்டாலும் குறைந்த பட்சம் ஒரே ஒரு கர்ப்பிணிக் குரங்காவது அரை மயக்க நிலையில் தீவில் கரை ஒதுக்கி இருக்கலாம் என்றும், அதன் பிறகு பல குட்டிகளை ஈன்ற பிறகு  மடகாஸ்கர் தீவில் லெமூர் இனங்கள் பெருகி இருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.
இதே போன்று மற்ற விலங்கினங்களும் வெவ்வேறு கால கட்டத்தில் மடகாஸ்கர் தீவில் தற்செயலாகக் கரை ஒதுங்கிய பிறகு பின்னர் அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ஆனால் மடகாஸ்கர் தீவில் வாழ்ந்த சில விலங்கினங்களுக்கு இந்த விளக்கம் அவ்வளவாகப் பொருத்த வில்லை.
குள்ள வகை நீர் யானைகள்
உதாரணமாக மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது.
அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் மிகவும் அசாதாரணமாக இருக்கிறது.
லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது.
ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது.ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது.
இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதில் ஒரு குள்ள வகை நீர் யானை மடகாஸ்கர் தீவில் இருந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
அப்படியே ஆனாலும் கூட மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது.
அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம்.
இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது.
இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது.
அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையான மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது.
எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன.
இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது.
எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது.
இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு தீவிலும் இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது  யற்கைக்கு மாறான விளக்கம்.

எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில்  காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள்  மூலம்,  கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது.

முக்கியமாக தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டதுக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் உள்ள மொசாம்பிக் கால்வாய்ப் பகுதியில் ஓடும கடல் நீரோட்டமானது மடகாஸ்கர் தீவில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை நோக்கி மேற்கு திசையை நோக்கி செல்கிறது.
எனவே எப்படி விலங்கினங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவுக்கு கடல் நீரோட்டம் மூலம் வந்திருக்க முடியும்? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் ஹாங்காங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜேசன் அலி மற்றும் மார்க் ஹுபர் ஆகியோர் பழங்காலத்தில் கண்டங்கள் இருந்ததாகக் கூறப் படும் இடங்கள் குறித்த கருத்துக்களின் அடிப்படையில்,  கணிப் பொறி மூலம் உருவாக்கிய தூண்டல் மாதிரிகளில் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீரோட்டமானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவை நோக்கி கிழக்கு திசையில் ஓடியதாகவும், அதனால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து விலங்குகளின் மடகாஸ்கர் தீவுக்கு மரக் கிளைகள் மூலம் வந்திருக்கலாம் என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இதற்கு முன்பு மடகாஸ்கர் தீவுக்கு லெமூர் குரங்குகள் எப்படிச் சென்றன என்பது யூகம் சம்பந்தப் பட்ட விஷயம் என்று கூறிய லெமூர் ஆராய்ச்சியாளரான, டியூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆனி யோடர் டாகடர் ஜேசன் அலியின் கணிப் பொறி மாதிரியானது லெமூர் குரங்குகள் குறித்த விவாதத்துக்கு முடிவு ஏற்பட்டு விட்டதாகக் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் எங்கெங்கே இருந்தன என்று யாராலும் எந்த ஒரு ஆதாரத்தின் அடிப்படையிலும் இன்று வரை உறுதியாகக் கூற இயலவில்லை.
பனிரெண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு எந்த எந்தக் கண்டங்கள் எங்கெங்கே இருந்தன என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட மாதிரிகளை  புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
எனவே உண்மையில் கண்டங்கள் எங்கெங்கே இருந்தன என்று உறுதியாகத் தெரிந்தாலே பழங்காலத்தில் ஓடிய நீரோட்டங்கள் குறித்த கணிப் பொறி மாதிரிகளை ஏற்க இயலும்.
பச்சோந்திகள்
இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்திலும் மடகாஸ்கர் தீவிலும் ஒரே இனவகையைச் சேர்ந்த பச்சோந்திகள் காணப் படுவதற்கும் பழங்காலக் கடல் நீரோட்டங்களின் அடிப்படையிலேயே விளக்கங்கள் கூறப் படுகின்றன.
உலகில் நூற்றி அறுபதுக்கும் அதிகமான பச்சோந்தி இனங்கள் உள்ளன.இதில் பாதிக்கும் மேற்பட்ட இன வகைகள் மடகாஸ்கர் தீவில் காணப் படுகின்றன.
மடகாஸ்கர் தீவில் இருந்து 1,804  கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் செஷல்ஸ் தீவிலும் பச்சோந்திகள் காணப் படுகின்றன.செஷல்ஸ் தீவில் புலிப் பச்சோந்தி என்று அழைக்கப் படும் பச்சோந்தி இனம் காணப் படுகிறது.
முதலில் செஷல்ஸ் தீவுப் பச்சோந்தியானது மடகாஸ்கர் தீவில் காணப் படும் காலுமெல்லா என்று அழைக்கப் படும் பச்சோந்தி இனத்தின் வம்சாவளி என்றும் செஷல்ஸ் தீவுக்கு பச்சோந்திகள் மடகாஸ்கர் தீவில் இருந்தே வந்திருக்கும் என்று நம்பப் பட்டது.
இந்த நிலையில் சாண்டியாகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் டவுன் சென்ட் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட மரபணு ஆய்வில்,செஷல்ஸ் தீவுப் பச்சோந்தியானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் ஆர்கயஸ் டைக்கிரிஸ் என்று அழைக்கப் படும் பச்சோந்தி இனத்தில் இருந்து இரண்டு முதல் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்திருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடல் நீரோட்டம் கணிப் பொறி மாதிரியின் படி மேற்கு திசையை நோக்கி ஓடிய பொழுது கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் பச்சோந்திகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து தீவுக்கு வந்து சேர்ந்திருக்கலாம் என்று டவுன் சென்ட் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
தற்பொழுது செஷல்ஸ் தீவானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரத்தி அறுநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.ஆனால் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு செஷல்ஸ் தீவுக்கும் ஆப்பிரிக்கக் கண்டதுக்கும் இடையில் உள்ள தூரம் குறைவாக இருந்திருக்கலாம் என்றும் டவுன் சென்ட் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

சைவ முதலை
 1998 ஆம் ஆண்டு மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகள் தொன்மையான முதலையின் புதை படிவங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தது.
மூன்று அடி நீளமுள்ள அந்த முதலையில் முகப் பகுதி நீண்டு இருப்பதற்குப் பதிலாக மிகவும் குட்டையாக இருந்தது.அதன் தாடையில் நீண்ட கூர்மையான பற்கள் இருப்பதற்குப் பதிலாக கிராம்பு போன்ற வடிவில் தாவரங்களை உண்பதற்கு ஏற்றபடி இருந்தது.
அதன் உடலின் மேற் பகுதியிலும் கால்களின் மேற் பகுதியும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.அதன் வாலும் மிகவும் குட்டையாக இருந்ததுடன் வாலும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.
எனவே அந்த வாலைக் கொண்டு அந்த முதலையால் நீந்த இயலாது.அதன் கால்களும் நடப்பதற்கு எதுவாக தரை வாழ் வாழ்க்கைக்கு ஏற்றதாக இருந்தது.
அந்த முதலையால் உடலை பக்க வாட்டில் வளைக்க இயலாத படி ஆமையின் உடலை மூடி இருக்கும் கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது.
ஏற்கனவே சீமோ சூக்கசின் இனவகைளின் புதை படிவங்கள் ஆப்பிர்க்கக் கண்டத்தில் எகிப்து பகுதிலும், ஆசியக் கண்டத்தில் சீனாவிலும், தென் அமெரிக்கக் கண்டத்தில் உருகுவே நாட்டிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது.
ஆனால் சீமோ சூக்கஸ் எப்படி மடகாஸ்கர் தீவுக்கு வந்தது என்பது குறித்து வல்லுனர்களால் சரியான விளக்கத்தை அளிக்க இயல வில்லை.



 நன்னீர் நண்டுகள்
நண்டுகள் பத்துக் காலிகள் என்று அழைக்கப் படும் ஓட்டுடலி இனத்தைத் சேர்ந்தது.இந்த இனத்தில் இறால்,லாப்ஸ்டர்,ஸ்க்ரிம்ப்ஸ் மற்றும் கிரே பிஷ் என்று அழைக்கப் படும் முதுகு எலும்பற்ற உயிரினங்கள் உள்ளன.
நண்டினங்கள் நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் தோன்றின.அதன் பிறகு கடலுடன் ஆறுகள் சங்கமிக்கும் முகத் துவாரப் பகுதிகளில் வசிக்க ஆரம்பித்த நம்ண்டுகள், பின்னர் படிப் படியாக ஆறுகள் மற்றும் குளத்திலும் வசிக்க ஆரம்பித்த பிறகு, நிலத்திலும் வசிக்க ஆரம்பித்தது.
நன்னீர் நண்டுகள் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் நண்டினத்தில் இருந்து பிரிந்து தரை வாழ் வாழ்க்கைக்கு ஏற்ற தகவமைப்புகளைப் பெற்றன.
கடல் நண்டுகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. இதற்கு காரணம் பெண் நண்டுகள் கருத்தரித்த பிறகு அதன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் முட்டைகளை கடல் அலையில் கரைத்து விடும்.அதன் பின்னர் பல மாதங்கள் மிதவை உயிரியாக வாழும் இளம் நண்டுகள் பின்னர் கரைக்கு வந்து வாழத் தொடங்கும்,
கடலில் மிதவை உயிரியாக வாழும் பொழுது கடல் நீரோட்டத்தால் மற்ற தீவுகளுக்கும் கண்டங்களுக்கும் அடித்துச் செல்வதால் கடல் நண்டுகள் உலகெங்கும் பரவி வாழ்கின்றன.
ஆனால் நன்னீர் நண்டுகளின் வாழ்க்கை முழுவதும் நன்னீர் நிலைகளிலேயே கழிவதால், நன்னீர் நண்டுகளின் பரவல் ஒரு குறிப்பிட்ட பகுதியிலேயே வரையறைப் படுத்தப் படுகிறது.இருந்தாலும் நன்னீர் நண்டினங்களும் தற்பொழுது உலகம் முழுவதும் பரவியுள்ளது.
அத்துடன் நன்னீரில் வாழும் நண்டு தவளை போன்ற பிராணிகள் அதிக உப்புள்ள கடல் நீரில் இருந்தால் நண்டு மற்றும் தவளையின் உடலில் இருந்து நீர் வெளியேறி நண்டும் தவளையும் இறந்து விடும்.
எனவே நன்னீர் நண்டு மற்றும் தவளைகளால் அதிக உப்புள்ள கடல் நீரில் வாழ இயலாது.
இந்த நிலையில் இந்தியப் பெருங் கடலில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர்,செஷல்ஸ் போன்ற தீவுகளில் நன்னீர் நண்டுகள் மற்றும் தவளைகள் காணப் படுகின்றன.
எப்படி இந்த நன்னீர் நண்டுகள் கடல் நடுவே இருக்கும் தீவுகளுக்குச் சென்றன என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடை பெற்று வருகிறது.
கோண்டுவானா நண்டு
பொட்டாமானாட்டிடே என்று அழைக்கப் படும் நன்னீர் நண்டினங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திலும்,மடகாஸ்கர் மற்றும் செஷல்ஸ் தீவிலும் காணப் படுகிறது.
நன்னீர் நண்டுகளால் கடல் பகுதியைக் கடக்க இயலாது என்பதால் மடகாஸ்கர் மற்றும் செஷல்ஸ் தீவுகளில் நன்னீர் நண்டுகள் காணப் படுவதற்கு, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலப் பகுதிகள் ஒன்றாக இணைந்து கோண்டுவானா என்ற பெருங் கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்ததே காரணம் என்று நம்பப் பட்டது.
இந்த நிலையில் மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நீல் கும்பர்லிட்ஜ், ஆப்பிரிக்கக் கண்டத்திலும் மடகாஸ்கர் மற்றும் செஷல்ஸ் தீவுகளிலும் காணப் படும் நன்னீர் நண்டுகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு மேற்கொண்டார்.
அந்த மரபணு ஒப்பாய்வில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் டெக்கானினே என்ற நன்னீர் நண்டினத்தில் இருந்து ஏழரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு செஷல்ஸ் தீவில் காணப் படும் செஷல்ஸ் அல்லுராடி என்ற நன்னீர் நண்டினம் பிரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே நன்னீர் நண்டுகள் எப்படி கடல் பகுதியைக் கடந்து தீவுகளுக்குச் சென்றன? என்று ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டது.
நன்னீர் நண்டுகள் கடல் நீரில் வைத்து சோதனை செய்யப் பட்டது.அப்பொழுது நன்னீர் நண்டுகள் இரண்டு வார காலம் கடல் நீரில் தாக்குப் பிடிப்பது தெரிய வந்தது.
எனவே நன்னீர் நண்டுகள் கடலில் மிதந்து செல்லும் மரத் தண்டில் உள்ள பொந்துகளில் இருந்த படி இரண்டு வார காலம் மிதந்த படி ஐநூறு கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடக்க இயலும் என்று உயிரியல் வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
அத்துடன் சூறாவளி மற்றும் புயல் மழையால் காற்றில் ஈரப் பதமான சூழலில் உடலின் ஈரம் காயாமல், காற்றையும் சுவாசித்த படி தீவுகளை அடைந்து பிறகு நன்னீர் நண்டுகள் குளம் குட்டை போன்ற நன்னெற நிலைகளை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ஆனால் செஷல்ஸ் தீவு நன்னீர் நன்னீர் நண்டினமானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் டெக்கானினே நண்டினத்தில் இருந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டதாக மரபணு சோதனையில் தெரிய வந்துள்ளது.
ஆனால் மடகாஸ்கர் தீவானது பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிரிந்து விட்டாதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள்.
எனவே செஷல்ஸ் தீவுக்கு நன்னீர் நண்டுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடல் வழியாகவே வந்திருக்க வேண்டும் என்று தற்பொழுது நம்பப் படுகிறது.
ஆனால் செஷல்ஸ் தீவானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரத்தி அறுநூறு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்து இருக்கிறது.
அதே போன்று செஷல்ஸ் தீவானது மடகாஸ்கர் தீவில் இருந்தும் வட மேற்கு திசையில் ஆயிரத்தி அறுநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
ஆனால் அதிக பட்சம் நன்னீர் நண்டுகள் கடலில் மிதந்து செல்லும் மரக் கிளைகள் மூலம் ஐநூறு கிலோ மீட்டர் தொலைவு வரை கடக்க இயலும் என்று உயிரியல் வல்லுனர்கள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத் தக்கது.
எனவே செஷல்ஸ் தீவில் காணப் படும் நன்னீர் நண்டினம் எப்படி ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து செஷல்ஸ் தீவுக்கு வந்து சேர்ந்தது என்பது குறித்து தற்பொழுது உறுதியான விளக்கங்கள் இல்லை.


குருட்டுப் பாம்புகள்
பல தீவுகளுக்குப் பாம்பினங்கள் எப்படிச் சென்றன என்பதும் இன்று வரை புரியாத புதிராக இருக்கின்றன.
மிகவும் தொன்மையான பாம்பின் புதை படிவம் மத்தியக் கிழக்கு நாடான ஜெருசலேம் நாட்டில் யூதேயா மலைப் பகுதியில், பதின் மூன்று கோடி ஆண்டுகள் தொன்மையான சுண்ணாம்புப் பாறைப் படிவத்தில் கண்டு பிடிக்கப் பட்டது.
பாகிராகிஸ் என்று பெயர் சூட்டப் பட்ட அந்தப் பாம்பிற்கு சிறிய அளவிலான இரண்டு பின்னங் கால்களும் இடுப்பு மற்றும் கணுக் கால் எலும்புகளும் இருந்தன.
அந்தப் புதை படிவம் பல்லி போலவும் பாம்பு போலவும் இருந்தது.
ஆனால் அந்தப் புதை படிவமானது சுண்ணாம்புப் பாறைப் படிவத்தில் இருந்ததால், பாம்பினங்கள் மொசாராஸ் என்று அழைக்கப் படும் கடல் வாழ் பல்லி இனத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று இருக்கலாம் என்று கருதப் பட்டது.
அதன் பிறகு அதே மலைப் பகுதியில் பத்து கோடி ஆண்டுகள் தொன்மையான பாம்பின் புதை படிவம் கண்டு பிடிக்கப் பட்டது.ஹாசி ஒப்பிஸ் என்று பெயர் சூட்டப் பட்ட அந்தப் பாம்புக்கும் இரண்டு சிறிய பின்னங் கால்கள் இருந்தன.
பின்னர் மத்தியக் கிழக்கு நாடான லெபனான் தேசத்தில் கண்டு பிடிக்கப் பட்ட பத்து கோடி ஆண்டுகள் தொன்மையான யூபோடாபிஸ் என்ற பாம்பின் புதை படிவத்திலும் இரண்டு சிறிய பின்னங் கால்கள் இருந்ததால் பாம்புகள் கடல் வாழ் பல்லி இனத்தில் இருந்தே தோன்றி இருக்கலாம் என்று நம்பப் பட்டது.
இந்த நிலையில் தென் அமெரிக்கக் கண்டத்தில் படகோனியா நாட்டில் கண்டு பிடிக்கப் பட்ட ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான நாஜெஸ் என்று பெயர் சூட்டப் பட்ட பாம்பின் புதை படிவத்தில் சிறிய கால்கள் இருந்ததுடன் அந்தப் பாம்பானது தரை வாழ் வாழ்க்கைக்கு ஏற்ற எலும்பு அமைப்புடன் இருந்தது.
இதன் அடிப்படையில் பாம்பினங்கள் தரை வாழ் பல்லி இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் அடைந்து இருக்கலாம் என்ற கருத்து வலுப் பெற்றுள்ளது.
பாம்பினங்களில் மூவாயிரத்தி நானூறுக்கும் அதிக இனவகைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதில் மானையே விழுங்கக் கூடிய மலைப் பாம்புகளுக்கும், மண் புழு போன்று பூந்தொட்டிகளில் காணப் படும் குருட்டுப் பாம்புகளுக்கும், சிறிய அளவிலான பின்னங்கால் எலும்புகள் இருப்பதன் அடிப்படையில், இந்தப் பாம்பினங்கள் மிகவும் தொன்மையான பாம்பினம் என்பது தெரிய வந்துள்ளது.
மலைப் பாம்புகளில் பைத்தானிடே என்று அழைக்கப் படும் முட்டையிடும் மலைப் பாம்புகள் தொன்மையன இனமாகக் கருதப் படுகிறது.
இதில் இருபத்தி ஆறு இனங்கள் உள்ளன. இவ்வகைப் பாம்புகள் பழைய உலகம் என்று அழைக்கப் படும் ஆப்பிரிக்கா ,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும்,இந்தோனேசியா ,பிலிப் பைன்ஸ் மற்றும் பாப்புவா நியூ கினியா தீவுகலிலும் காணப் படுகின்றன.

இதே போன்று போய்டே என்று அழைக்கப் படும் குட்டிகளை ஈனும் மலைப் பாம்புகள் சற்று பரிணாமத்தில் மேம்பட்ட இனமாகக் கருதப் படுகிறது.
இவ்வாகைப் பாம்புகள் புதிய உலகம் என்று அழைக்கப் படும் அமெரிக்கக் கண்டங்களிலும் ,ஆப்பிரிக்கா,இந்தியா, ஆகிய கண்டங்களிலும்  மடகாஸ்கர் தீவு,சலமன் தீவு, பிஜி போன்ற தீவுகளிலும் காணப் படுகிறது.
இதே போன்று ஸ்கோலிக்கோ பிடியா என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்புகளும் சிறிய அளவிலான கால் எலும்புகளைக் கொண்டிருக்கும் தொன்மையான பாம்பினம் ஆகும்.
இந்தப் பாம்புகள் மண் புழுக்களைப் போன்று தோற்றமளிப்பதால் புழுப் பாம்புகள் என்றும் பூந்தொட்டிகளில் காணப் படுவதால் பூந்தொட்டிப் பாம்புகள் என்றும் அழைக்கப் படுகின்றன.
குருட்டுப் பாம்புகள் ஸ்கோலெக்கோ பிடியன்ஸ் என்று அழைக்கப் படுகின்றன.இதில் மூன்று இனவகைகள் இருக்கின்றன.டைப்லோபிட்ஸ் என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,ஆசியா,மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப் படுகின்றன. இதில் இருநூற்றி ஐம்பது இன வகைகள் உள்ளன.
லெப்ட்டோடைப்லோப்ஸ் என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் அமெரிக்கா ஆப்பிரிக்கா மற்றும் தென்மேற்கு ஆசியாவிலும் காணப் படுகின்றன.
அனாமாலெபிட்ஸ் என்று  அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் அமெரிக்காவில் மட்டும் காணப் படுகின்றன. 
இந்தப் பாம்புகள் வாழ்வின் பெரும் பகுதியை தரைக்கு அடியிலேயே கழிப்பதால் காலப் போக்கில் பார்வைத் திறனை இழந்து விட்டது.
ஆனாலும் ஒளியை உணரக் கூடிய அளவுக்கு பார்வைத் திறன் உண்டு,
எனவே இந்தப் பாம்புகள் குருட்டுப் பாம்புகள் என்று அழைக்கப் படுகின்றன.இதன் பிராதான உணவு எறும்பும் கறையானும் அதன் முட்டைகளுமே.
குருட்டுப் பாம்புகளில் அறுநூற்றி நாற்பது இன வகைகள் கண்டறியப் பட்டுள்ளது.இந்தப் பாம்புகள் மண் புழுவைப் போன்று இருந்தாலும் இதற்கு முதுகெலும்பும், கபாலமும், தாடையும் அதில் கூரிய பற்களும் உண்டு
குருட்டுப் பாம்புகள் மெலிதான எலும்புகளைக் கொண்டு இருப்பதால் இதன் புதை படிவங்கள் இல்லையென்றே கூறலாம்.எனவே இந்தப் பாம்புகள் எப்பொழுது தோன்றியது என்று அறிவதற்காக பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் மற்றும் நிகோல் விடல் ஆகியோர் ,உலகெங்கும் உள்ள தொண்ணூற்றி ஆறு இனத்தைச் சேர்ந்த குருட்டுப் பாம்புகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில், குருட்டுப் பாம்புகள் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் மடகாஸ்கர் தீவும் ஒரே நிலப் பகுதியாக இணைந்து இண்டிகாஸ்கர் என்ற நிலப் பகுதியாக இருந்ததாகவும், அப்பொழுது அதில் குருட்டுப் பாம்புகள் இருந்ததாகவும் நம்பப் படுகிறது.
பின்னர் மடகாஸ்கர் தீவில் இருந்து இந்தியா பிரிந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக்  கண்டத்துடன் மோதிய பொழுது, இந்தியாவில் இருந்த குருட்டுப் பாம்புகள் ஆசியா மற்றும் ஐரோப்பாக் கண்டங்களுக்குப் பரவியதாகவும் நம்பப் படுகிறது.
அல்லது, குருட்டுப் பாம்புகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டத்திற்கு பரவி இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.
ஆனால் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் குருட்டுப் பாம்புகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாக கடல் வழியாக ஆஸ்திரேலியாக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
முக்கியமாக தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இருந்ததாகவும், பின்னர் தனித் தனியாகப் பிரிந்ததாகவும் நம்பப் படும் நிலையில்,இந்த இரண்டு கண்டங்களிலும் காணப் படும் குருட்டுப் பாம்புகள், அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து இருப்பது மரபணு ஆய்வில் தெரிய வந்துள்ளதாக டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் தெரிவித்து இருக்கிறார்.
அதாவது இந்த இரண்டு கண்டங்களும் பிரிந்த பிறகு நான்கு கோடி ஆண்டுகள் கழித்தே இந்த இரண்டு கண்டங்களில் காணப் படும் குருட்டுப் பாம்புகள் தோன்றி இருப்பதாகவும், எனவே தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் குருட்டுப் பாம்புகள் ,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாக அட்லாண்டிக் பெருங் கடலில் ஆறு மாத காலம் கடலில் மிதந்த படி தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் தரைக்கு அடியில் வாழும் குருட்டுப் பாம்புகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாகக் கடல் வழியாக பரவ இயலாது என்று மற்ற அறிவியலாளர்கள் கூறினாலும் கூட மரபணு ஆய்வு முடிவுகள் கடல் வெளிப பயணம் நடை பெற்று இருப்பதைச் சுட்டிக் காட்டுவதாக டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் தெரிவித்து இருக்கிறார்.
அத்துடன் ஆறு மாத காலம் குருட்டுப் பாம்புகள் கடலில் மிதக்கும் தாவரங்களில் இருந்த பொழுது, அவைகள் உண்பதற்கு அந்த மிதவைத் தாவரங்களில் பூச்சிகளும் இருந்திருக்கும், என்றும் டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று கரீபியன் தீவுகளில் காணப் படும் குருட்டுப் பாம்பினங்கள் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலமாக அந்தத் தீவுகளை அடைந்து இருக்கும் என்றும் டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் எதிர் பாராத வண்ணம் பல தொலை தூரத் தனிமைத் தீவுகளுக்கும் குருட்டுப் பாம்புகள் சென்று புதிய இனவகைகளாகப் பரிணாம மாற்றம் பெற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.
உதாரணமாக டைப்ளோலெபிடே என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,ஆசியா,ஆஸ்திரேலியா,ஆகிய கண்டங்களிலும் கரீபியன் ,பிலிப்பைன்ஸ் சாலமன் மற்றும் பிஜி குவாம்,மற்றும் பாலவ் ஆகிய தீவுகளிலும் காணப் படுகின்றன.
இந்த நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு வாசிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அடிசன் வைன் என்ற உயிரியல் வல்லுநர் குவாம் மற்றும் பாலவ் தீவுக்கு கிழக்கில் இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் பாசா என்ற தீவிலும் ஏன்ட் தீவிலும் இரண்டு புதிய இனத்தைச் சேர்ந்த குருட்டுப் பாம்புகளைத் தற்செயலாகக் கண்டு பிடித்தனர்.
இவ்வளவு தொலைவில் அமைந்து இருக்கும் ஒரு சிறிய தீவுக்கு குருட்டுப் பாம்புகள் பரவி இருக்கும் என்பதை அவர்கள் முதலில் நம்பவே இல்லை.
ஒரு மரத்தின் உட்பகுதியில் இருந்த அந்தக் குருட்டுப் பாம்பு ,ஏற்கனவே கண்டு பிடிக்கப் பட்ட குருட்டுப் பாம்பு இனமாக இருக்கும் என்றும் தற்செயலாக மனிதர்கள் மூலமாக அந்தத் தீவுகளுக்கு வந்திருகக் கூடும் என்றும் முதலில் நம்பினார்கள்.
அதன் பிறகு அந்தப் பாம்பின் செதில் அமைப்புகளை ஆய்வு செய்ததில் அந்தக் குருட்டுப் பாம்புகள் இது வரை கண்டு பிடிக்கப் படாத புதிய இன வகை என்பது தெரிய வந்தது.
தற்பொழுது கரோலின் தீவுக் கூட்டத்தில் உள்ள பாசா தீவிலும் ஏன்ட் தீவிலும் கண்டு பிடிக்கப் பட்ட குருட்டுப் பாம்புகள் ராம்போடைப்லோப்ஸ் அடோ சீட்டஸ் என்றும், அதே போன்று ஜிலாப்,உழுதி ஆகிய தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குருட்டுப் பாம்புகள் ராம்போடைப்லோப்ஸ் ஹாட்மாலியெப் என்றும் புதிதாகப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
இதே தீவுகளில் அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் புதிய இனத்தைச் சேர்ந்த ஜிக்கோ என்று அழைக்கப் படும் பல்லி இனங்களும் காணப் படுகின்றன என்பதுக் குறிப்பிடத் தக்கது.
2007 ஆம் ஆண்டு வரையில் குருட்டுப் பாம்பினத்தில் ஆக்டோ டைப்லோப்ஸ் என்ற குடும்பத்தில் நான்கு இனவகைகள் ,நியூ கினியாத் தீவு,பிஸ்மார்க் தீவுகள்,போகைன் வில்லா மற்றும் சாலமன் தீவுகளில் இருப்பது அறியப் பட்டது.
இந்த நிலையில் அதே ஆக்டோ டைப் லோப்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆக்டோ டைப் லோப்ஸ் பானோரம் என்ற ஐனதாவது இனம் எதிர்பாராத வண்ணம் நாலாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் பிலிப்பைன்ஸ் தீவுக் கூட்டத்தில்  உள்ள லுசான் தீவில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதே தீவுகளில் பிளாட்டி மாண்டிஸ் என்று அழைக்கப் படும் தவளைகளும் காணப் படுவதும் குறிப்பிடத் தக்கது.
ஒரு தவளை கூட்டிய பஞ்சாயத்து
புவியியல் வல்லுனர்கள் தற்பொழுது நம்பிக் கொண்டு இருக்கும் புவியியல் கருத்துக்களைப் புரட்டிப் போட்டு விட்டது மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஒரு தவளையின் புதை படிவம்.
1998 ஆம் ஆண்டு மடகாஸ்கர் தீவில் ,ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் கிராவுஸ் என்ற தொல் விலங்கியல் வல்லுநர் தலைமயிலான குழுவினர் மேற்கொண்ட அகழ்வாய்வில்,ஆறரைக் கோடி முதல் ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் தவளையின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
ஆனாலும் சில எலும்புகளே கிடைத்ததால் அந்த எலும்புகளைக் கொண்டு முழுதாக ஒரு தவளையை உருவாக்க இயலவில்லை.
அதன் பிறகு தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பட்ட அகழ்வாய்வில் அறுபதுக்கும் அதிகமான எலும்புகள் கிடைத்தது.
ஆனாலும் 2008 ஆண்டுதான் ஓரளவு ஒரு முழுத் தவளையைக் உருவாக்கும் அளவுக்கு எலும்புகள் கண்டு பிடிக்கப் பட்டது.ஆனாலும் தலைப் பகுதி முழுதாக இருந்தது.
அந்த எலும்புகளைப் பொருத்திப் பார்த்ததில் அந்தத் தவளையானது பத்து அங்குலம் நீளத்துடன் நாலு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்தது.
குறிப்பாக அதன் தலையில் கண்களுக்கு அருகில் எலும்புகள் புடைத்துக் கொண்டு கொம்பு போன்று நீண்டு இருந்தது.அதன் வாய்ப் பகுதி அளவுக்கு அதிகமாக அகன்று இருந்ததுடன் அதன் தாடையில் கூரிய பற்களும் இருந்தது.அதன் அடிவயிற்றுப் பகுதியில் ஆமைக்கு இருப்பதைப் போன்று கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது.முதுகுப் பகுதியில் முள் போன்ற நீட்ச்சிகளுடன் பார்க்கப் பயங்கராமாக இருந்ததால் அந்தத் தவளை சாத்தான் தவளை என்ற பொருளைத் தரும் பிளிசிபூபோ அபிங்ணா என்று  பெயர் சூட்டப் பட்டது.
இது போன்ற கொம்பு உடைய தவளைகள் தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் மட்டுமே காணப் படுகிறது.
மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட தவளையின் எலும்புகளை சி டி ஸ்கேன் மூலம் ஆய்வு செய்த லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுநர் டாக்டர் சூசன் இவான் மற்றும் மார்க் ஜோன்ஸ் ஆகியோர்,மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட தவளை தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் கொம்புகளுடன் காணப் படும் செரட்டோபைரிடே என்று அழைக்கப் படும் தவளைக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று அறிவித்தனர்.
தவளையினம் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியில் தோன்றி விட்டது.
தற்பொழுது உள்ள கண்டங்கள் எல்லாம் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்ற ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பாஞ்சியாப் பெருங் கண்டம் இரண்டாகப் பிரிந்ததால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் ,அதே போன்று கோண்டுவாணா என்ற கண்டம் உருவாகி தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் பகுதிக் கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டம் பிரிந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாக நம்பப் படுகிறது.
ஆனாலும் தென் அமெரிக்கக் கண்டத்தின் தென் பகுதியானது அண்டார்க்டிக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டிருந்ததாகவும் ஆனால் பதினோரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத் தொடர்பு கடலுக்குள் அமிழ்ந்து விட்டதாகவும் நம்பப் படுகிறது.
இதே போன்று மடகாஸ்கர் தீவும் இந்தியாவும் இணைந்த நிலையில் பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து விட்டதாகவும் எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கர் தீவில் இருந்து இந்தியாவும் பிரிந்து விட்டதாகவும் நம்பப் படுகிறது.
ஆனால் டாக்டர் சூசன் இவான் மேற்கொண்ட மரபணு ஆய்வில் மடகாஸ்கர் தீவின் சாத்தான் தவளையானது தென் அமெரிக்கக் கண்டத்தின் கொம்புத் தவளைக் குடும்பத்தில் இருந்து ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பிரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே தீவாக இருந்த தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவுக்கு எப்படி சாத்தான் தவளைகள் வந்திருக்க முடியும்? என்று வல்லுனர்களுக்கு இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு இருக்கிறது.
பொதுவாகக் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் ஒரே வகையான விலங்கினங்கள் காணப் படுவதற்கு காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேலிருந்த படி விலங்கினங்கள் கடலில் பல நாட்கள் தத்தளித்த படி தற்செயலாக மற்ற கண்டங்களையும் தீவுகளையும் அடைந்திருக்கலாம் என்று நமபப் படுகிறது.
ஆனால் தென் அமெரிக்காவும் மடகாஸ்கர் தீவும் அதிகத் தொலைவில் உலகின் எதிரெதிர் பகுதியில் அமைந்து இருப்பதாலும், தவளைகளின் தோல் நீர் புகக் கூடியதாக இருப்பதாலும், கடல் வழியாக சாத்தான் தவளைகள் மடகாஸ்கர் தீவுக்கு வந்திருக்கும் என்ற விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டுள்ளது.
இதே போன்று தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் எழுதிரோ டாக்டைல்ஸ் என்று அழைக்கப் படும் தவளையின் இன வகைகள் ,தென் அமெரிக்கக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் கரீபியன் தீவுகள் காணப் படுவதற்கு,அந்தத் தவளையின் மூதாதைகள் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதந்து சென்ற தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் தவளைகள் கடலில் தத்தளித்த படி கரீபியன் தீவுகளை அடைந்து இருக்கலாம் என்று,அந்தத் தவளைகளின் மரபணுவை ஆய்வு செய்த பென்சில் வேனியாப் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருந்தார்.
அத்துடன் கரீபியன் தீவுக்கு தவளைகள் கடலில் மிதக்கும் தாவரங்களில் கடல் பயணம் செய்த பொழுது அந்த மிதவைத் தாவரங்களில் தவளைகள் உண்பதற்கு பூச்சிகளும் குடிப்பதற்கு தூய குடி நீரும் இருந்திருக்கலாம் என்றும் டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் ஏற்கனவே விளக்கம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மடகாஸ்கர் தீவின் சாத்தான் தவளைகள் குறித்து டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் ,தோற்றத்தில் மடகாஸ்கர் தீவுத் தவளைகள் தென் அமெரிக்கக் கண்டத்தின் தவளைகளைப் போன்று இருந்தாலும் அவைகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.சில சமயங்களின் வெவ்வேறு பகுதிகளில் விலங்கினங்கள் ஒரே உருவ அமைப்பில் பரிணாம வளர்ச்சி அடையும் என்று தெரிவித்து இருக்கிறார்.
அப்படியே அந்தத் தவளைகள் தென் அமெரிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவகையாக இருந்தாலும் கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலமாக தவளைகள் தென் அமெரிக்காவில் இருந்து மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்கலாம் என்றும் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் டாக்டர் சூசம் இவான் சாத்தான் தவளைகள் தென் அமெரிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த தவளைகள் என்பதில் சந்தேகம் இல்லை.என்றும் தென் அமெரிக்க் கண்டதுக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் அண்டார்க்டிக் கண்டம் வழியாக ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்று டாக்டர் சூசன் இவான் நம்புகிறார். 
ஆனால் அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குனர் ரிச்சர்ட் லேன் ,தென் அமெரிக்கக் கண்டத்தின் தவளைகள் மடகாஸ்கர் தீவில் காணப் படுவதானது கோண்டுவானாக் கண்டமானது லேட் கிரேட்டேசியஸ் காலத்தில் பிரிந்திருப்பதையே ஆதரிக்கிறது என்றும்  கருத்து தெரிவித்து இருக்கிறார்.


பேபாப் மரங்கள்
மடகாஸ்கர் தீவில் மழை நீரைச் சேகரிக்கும் பாட்டில் வடிவ மரங்கள் காணப் படுகின்றன.பேபாப் மரங்கள் என்று பொதுவாக அழைக்கப் படும் இந்த மரத்தின் அறிவியல் பெயர் அடன்சோனியா
இந்த மரத்தின் உயரத்தை விட மரத்தண்டின் சுற்றளவு அதிகமாக இருப்பததுடன் கிளைகள் மரத்தின் உச்சிப் பகுதியில் மட்டும் இருப்பதால்,  இந்த மரம் பார்ப்பதற்கு ஒரு பாட்டில் வடிவத்தில் இருக்கிறது.
பெரும்பாலும் வறண்ட சூழ் நிலையில் வளரக் கூடிய இந்த மரத்தில் கிளைகளில் உள்ள பிளவுகள் மூலம் மழை நீர் சேகரிக்கப் படுகிறது. இவ்வாறு ஒரு போபாப் மரத்தில் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் வரை சேமித்து வைக்கப் படுகிறது.
வறண்ட காலத்தில் இந்த நீரை மனிதர்களும் விலங்கினங்களும் பயன் படுத்தி உயிர் வாழ பயன் படுவதால் இந்த மரம் உயிர் மரம் என்றும் அழைக்கப் படுகிறது.
இந்த இனமரங்கள் விதை மூலம் பரவுகின்றன. இந்த மரத்தின் விதைகள் தேங்காய் போன்ற நார்ப்போருளால் ஆன ஒரு பழத்திற்குள் இருக்கிறது.இந்தப் பழத்தைக் குரங்குகள் விரும்பி உண்பதால் இந்தப் பழம் குரங்குப் பழம் என்றும் அழைக்கப் படுகிறது.இந்தப் பழத்தைத் தின்ற குரங்குகள் வவ்வால்கள் மற்றும் ஆமைகளின் கழிவுகளில் இருக்கும் விதைகள் பல ஆண்டுகள் கழித்தும் முளைக்கக் கூடியதாக இருக்கிறது.
எனவே இந்த மரத்தின் பரவலுக்கு விலங்கினங்கள் முக்கிய காரணமாக இருக்கிறது.
பேபாப் என்று அழைக்கப் படும் அடன்சோனி மரத்தில் எட்டு இனவகைகள் உள்ளன.இதில் ஆறு இனவகைகள் மடகாஸ்கர் தீவில் காணப் படுகிறது.அட்டன் சோனியா டிஜிடேட்டா என்று அழைக்கப் படும் இனம் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் அரேபியா பீட பூமிப் பகுதியிலும் காணப் படுகிறது.
இந்த நிலையில் அடன் சோனியா கிரிகரி என்று அழைக்கப் படும் எட்டாவது இனம் மடகாஸ்கர் தீவில் இருந்து எழாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் காணப் படுகிறது.
ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படும் பேபாப் மரத்தின் பழத்தின் ஓடு மிகவும் மெலிதாக இருப்பதால் விரைவில் நீரில் ஊறி விடக் கூடியதாக இருப்பதால் மடகாஸ்கர் அல்லது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதந்த படி ஆஸ்திரேலியாக் கண்டத்தை அடைந்த பிறகு மரமாக முளைத்து இருக்கலாம் என்ற கருத்தை நிபுணர்களால் நிராகரித்து விட்டனர்.
மாறாக ஆஸ்திரேலியாக் கண்டத்த்தின் பூர்வீகப் பழங்குடிகளால் அடன் சோனியா கிரிகரி மரத்தின் விதைகள் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு கொண்டு செல்லப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ஆனால் அபோரிஜின்ஸ் என்று அழைக்கப் படும் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் பூர்வீகப் பழங்குடிகள் அந்தக் கண்டத்துக்கு எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் சென்று இருப்பது தொல்லியல் ஆய்வாளர்களால் கணிக்கப் பட்டுள்ளது.
ஆனால் மரபணு ஆய்வில் ஆஸ்திரேலியாக் கண்டத்திள் காணப் படும் அடன் சோனியா கிரிகரி மரங்கள், மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பேபாப் இனத்தில் இருந்து இரண்டு கோடி ஆணடுகளுக்கு முன்பே பிரிந்திருப்பது தெரிய வந்தள்ளது.
எனவே ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பேபாப் மரங்கள் எப்படி ஏழாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாக் கண்டத்தை அடைந்தது? என்ற கேள்வி விடை கூறப் படாத கேள்வியாகவே இருக்கிறது.
எழாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் பறவைகளால் கழிவை வெளியேற்றாமல் கடக்கவும் இயலாது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பேபாப் மரங்களின் இடப் பெயர்ச்சி கடல் வழியாக சென்று இருந்தால் கூட ஆஸ்திரேலியாக் கண்டத்தின் மேற்குப் பகுதியிலேயே பேபாப் மரங்கள் காணப் பட வேண்டும்.
ஆனால் விநோதமாக பேபாப் மரங்கள் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் வட மேற்குப் பகுதியில் அதாவது பசிபிக் கடல் பகுதியில் இருகிறது.
எனவே போபாப் மரத்தின் பரவல் கடல் வழியாக நடை பெற்று இருக்க வில்லை என்பதும் உறுதியாகிறதுஅத்துடன் போபாப் மரத்தின் பரவல் ஆசியக் கண்டம் வழியாக நடை பெற்று இருப்பதையே புலப் படுத்துகிறது.
ஆனால் ஆசியக் கண்டத்தில் போபாப் பரத்தின் இனவகைகளோ அல்லது புதை படிவங்களோ காணப் படவில்லை.
இவ்வாறு தொடர்ச்சியற்ற இனப் பரவல் மூலம் இடைப் பட்ட நிலப் பகுதிகள் கடல் மட்ட உயர்வையும் மூழ்கிய நிலத்தையும் புலப் படுத்துகிறது.
உதாரணமாக இந்தோனேசியக் கடல் பகுதியில் சாகுல் என்று அழைக்கப் படும் கடலடி நிலம் காணப் படுகிறது.இதே போன்று கற்கால மனிதர்களும் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு சென்று இருப்பதன் மூலமாகவும் ஆசியக் கண்டதுக்கும் ஆஸ்திரேலியாக் கண்டதுக்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதையே புலப் படுத்துகிறது.
ஏனென்றால் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் பூர்வீகப் பழங்குடிகள் கடல் பயணம் செய்ததற்கு ஆதாரங்கள் எதுவும் அறியப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
குருட்டு மீன்கள்
இதே போன்று மடகாஸ்கர் தீவு மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் உள்ள குகைகளில் காணப் படும் குருட்டு மீன்கள் ஒரே பொது மூததையில் இருந்து பிரிந்து பரிணாம வளர்ச்சி பெற்று இருப்பதும் லூசியான பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் பிரசன்னா சக்கரவர்த்தி குழுவினர் மேற்கொண்ட மரபணு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதன் அடிப் படையில் அவர் எழாயிரம் கிலோ மீட்டர் அந்தக் குருட்டு மீன்கள் கடல் வழியாக இந்த இரண்டு நிலப் பகுதிகளுக்கும் பரவி இருக்க முடியாது என்றும் நிலத் தொடர்பு வழியாகவே குருட்டு மீன்களின் இடப் பெயர்ச்சி நடை பெற்று இருக்க வேண்டும் என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
மடகாஸ்கர் தீவுக் குகைகளிலும் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் குகைகளிலும் காணப் படும் குருட்டு மீன்கள் பன்னெடுங் காலமாக சூரிய ஒளி புகாத இருட்டான குகைச் சூழலில் வாழ்ந்ததால் காலப் போக்கில் பார்க்கும் தன்மையை இழந்து விட்டு இருக்கிறது.
இந்த இரண்டு பகுதிகளிலும் காணாப் பட்ட குருட்டு மீன்கள் கோபி மீனினத்தைச் சேர்ந்தது என்பதுடன் சீக்கோ கோபியஸ் என்று அழைக்கப் படும் குருட்டு கோபி மீனினம் பிலிப் பைன்ஸ் தீவுக் குகைகளிலும்,ஆக்சி லியோட்ரிஸ் என்று அழைக்கப் படும் குருட்டு கோபி மீனினம் பாப்புவா நியூ கினியா தீவுக் குகைகளிலும் காணப் படுகிறது.
எனவே முன்னொரு காலத்தில் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் மடகாஸ்கர் தீவுக்கும் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கும் இடையில் ஆசியக் கண்டத்தின் வழியாக நிலத் தொடர்பு  இருந்திருப்பதற்கு சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.
கிரே பிஷ்
மேலை நாடுகளில் கிரே பிஷ்கள் சுவையான உணவாக பரிமாறப் படுகிறது.பல மில்லியன் டாலர் வியாபாரம் கிரே பிஷ்களை மையமாகக் கொண்டு இயங்குகிறது.
கிரே பிஷ்கள் என்பது உண்மையில் கடலில் காணப் படும் லாப்ஸ்டர்களே.
கடலில் வாழ்ந்த நண்டுகள் ஆறு குளம் ஏரி போன்ற நன்னீர் நிலைகளில் வாழ்வதற்கு ஏற்றபடி தகவமைப்புகளைப் பெற்று நன்னீர் உயிரினங்களாக மாறியது.
அதைப் போன்றே கடலில் வாழ்ந்த லாப்ஸ்டர்களும் நன்னீர் நிலைகளில் குடியேறி நன்னீர் உயிரினங்களாக மாறியது.நன்னீரில் வாழும் லாப்ஸ்டர்கள் கிரே பிஷ் என்று அழைக்கப் படுகின்றன.நன்னீர் நண்டுகளைப் போலவே கிரே பிஷ் களாலும் கடல் நீரில் உயிர் வாழ இயலாது.
கடல் நண்டுகள் மற்றும் லாப்ஸ்டர்கள் கடலில் வசிப்பதால் உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றன.
ஆனால் கிரே பிஷ்கள் கண்டங்களிலும் கண்டங்களை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில் மட்டுமே காணப் படுகின்றன.இதன் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் கிரே பிஷ்கள் இடம் பெயர்ந்து இருப்பது புலனாகிறது.
இன்று கிரே பிஷ்கள் ஆப்பிரிக்கா மற்றும் பனிக் கண்டமான அண்டார்க்டிக்கா தவிர மற்ற ஐந்து கண்டங்களிலும் உள்ள நன்னீர் நிலைகளில் காணப் படுகின்றன.அத்துடன் ஆபிரிக்கக் கண்டத்திற்கு அருகில் உள்ள மடகாஸ்கர் தீவு,ஆஸ்திரேலியா கண்டத்துக்கு அருகில்  அமைந்து இருக்கும் டாஸ்மேனியா , நியூ கினியா, நியூ சிலாந்து போன்ற தீவுகளிலும் காணப் படுகிறது.
கிரே பிஷ்களின் உறுப்புகளில் அமைப்புப் படி கிரே பிஷ்கள் அஷ்டாகாய்டியே மற்றும் பாரா அஷ்டாகாய்டியே இரண்டு பெரும் குடும்பங்களாகப் பிரிக்கப் படுகின்றன.அஷ்டாகாய்டியே குடும்ப உறுப்பினர்கள் வட கோளப்பகுதியிலும், பாரா அஷ்டாகாய்டியே குடும்ப உறுப்பினர்கள் தென் கோளப்பகுதியிலும் காணப் படுகின்றன.
கிரே பிஷ்களின் அடிவயிற்றுப் பகுதியில் ஐந்து ஜோடி நீந்தும் கால்கள் இருக்கும். ஆனால் தென் கோளப் பகுதிகளில் காணப் படும் பாரா அஷ்டாகாய்டியே குடும்பத்தைச் சேர்ந்த கிரே பிஷ்களில் முன் இரண்டு நீந்தும் கால்கள் இருக்காது.
விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் நண்பர் சர் தாமஸ் ஹக்ஸ்லி ,நன்னீரில் வாழக் கூடிய கிரே பிஷ்கள் எப்படி உலகம் முழுவதும் பரவியது? என்று வினா எழுப்பினார்.
அந்தக் கேள்விக்கு விடை காண இன்று வரை ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிரிங்ஹாம் யங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் டாக்டர் கைத் கிராண்டல் தலைமயிலான குழுவினர் மரபணு ஆய்வின் அடிப்படையில், எல்லா கிரே பிஷ்களும் ஒரே பொது மூதாதையில் இருந்தே பரிணாம மாற்றம் பெற்று இருக்கின்றன என்று அறிவித்து உள்ளனர்.
அத்துடன் கிரே பிஷ்களும் லாப்ஸ்டர்களும் சகோதர இனங்கள் என்றும் தெரிவித்து உள்ளனர்.
பொதுவாக ஒரே இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்த பிறகு,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்ததே காரணம் என்று நம்பப் படுகிறது.
அதன் அடிப்படையில் தென் கோளப் பகுதியில் அமைந்து இருக்கும் தென் அமெரிக்காக் கண்டத்திலும், மடகாஸ்கர் தீவிலும்,ஆஸ் திரேலியாக் கண்டத்திலும்,ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு அருகில் இருக்கும் நியூ சிலாந்து,நியூ கினியா போன்ற தீவுகளிலும், பாரா அஸ்டகாய்டியே குடும்பத்தைச் சேர்ந்த கிரே பிஷ்கள் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் தென் பகுதியில் உள்ள நிலப் பகுதிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து கோண்டு வாணா என்ற கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்ததே காரணம் என்று நம்பப் பட்டது.
கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவானது பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தனியாகப் பிரிந்ததாக நம்பப் படுகிறது.எனவே மடகாஸ்கர் தீவில் காணப் படும் கிரே பிஷ்கள் மற்ற நிலப் பகுதிகளில் காணப் படும் கிரே பிஷ்களுக்கு தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
இதே போன்று கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து நியூ சிலாந்து தீவானது எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து நகர்ந்ததாக நம்பப் படுவதால், நியூ சிலாந்து தீவில் காணப் படும் கிரே பிஷ்களும் மற்ற நிலப் பகுதிகளில் காணப் படும் கிரே பிஷ்களுக்கு, ஓரளவு தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து முதலில் ஆப்பிரிக்கக் கண்டம் பிரிந்து நகர்ந்ததாக நம்பப் படுகிறது. ஆனால் விநோதமாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் கிரே பிஷ்கள் காணப் படவில்லை.
இறுதியாக தென் அமெரிக்காக் கண்டமும் ஆஸ்திரேலியாக் கண்டமும் மூன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை அண்டார்க்டிக் கண்டம் வழியாக நிலத் தொடர்பு கொண்டு இருந்ததாக நம்பப் படுவதால், இந்த இரண்டு கண்டங்களிலும் காணப் படும் கிரே பிஷ்கள் நெருங்கிய சொந்தமாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால் பிரிங்ஹாம் யங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் டாக்டர் மைக்கேல் ஜோனதன் கார்ல்சன் மற்றும் டாக்டர்,கைத் கிராண்டல் மேற்கொண்ட மரபணு ஆய்வில்,தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கிரே பிஷ்களும், நியூ சிலாந்து தீவில் காணப் படும் கிரே பிஷ்களும் நெருங்கிய சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்து உள்ளனர்.
இந்த ஆய்வு முடிவானது கோண்டுவானாக் கண்டப் பிரிவுக் கருத்துக்கு முரணாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
உண்மையில் புவியியல் வல்லுனர்கள் நம்புவதைப் போன்று தென்கோள நிலப் பகுதிகள் எல்லாம் ஒன்றாக இருந்து பிரிந்து இருந்தால், நியூ சிலாந்து தீவில் காணப் படும் கிரே பிஷ்களும், தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கிரே பிஷ்களும், தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும்.
இதற்கு முற்றிலும் மாறாக, இந்த இரண்டு நிலப் பகுதிகளிலும் காணப் படும் கிரே பிஷ்கள், மற்ற நிலப் பகுதிகளில் காணப் படும் கிரே பிஷ் களை விட, நெருங்கிய சொந்தமாக இருப்பதன் அடிப்படையில் ,தென் கோளத்தின் நிலப் பகுதிகளில், பாரா அஸ்டகாய்டியே குடும்பத்தைச் சேர்ந்த கிரே பிஷ்கள் காணப் படுவதற்கு, கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு தனித் தனியாகப் பிரிந்ததே காரணம் என்று கூறப் படும் விளக்கம் சரியான விளக்கம் அல்ல என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

ராட்சத ஆமைகள்

தற்பொழுது உலகில் ராட்சத ஆமைகள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் காலபாகஸ் தீவுக் கூட்டத்திலும்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் செஷல்ஸ் தீவிலும் காணப் படுகின்றன.
காலபாகஸ் தீவு மற்றும் செஷல்ஸ் தீவில் காணப் படும் ஆமைகள் முன்னூறு கிலோ எடையுள்ள விலங்குகள்.இந்த இரண்டு ஆமைகளும் டெஸ்ட்யூடின்ஸ் என்ற ஆமைக் குடும்பத்தைச் சேர்ந்தது.இந்தக் குடும்பத்தில் இருபத்தி இரண்டு இனவகைகள் அறியப் பட்டுள்ளது.
காலபாகஸ் தீவில் காணப் படும் ராட்சத ஆமைகள் கெலோனாய்டிஸ் என்ற இனத்தைச் சேர்ந்தது.
இந்த ஆமைகளால் நீந்தவோ நீர்பரப்பின் மேல் மிதக்கவோ இயலாது.
முதன் முதலில் காலபாகஸ் தீவில் இந்த அமைகளைக் கண்ட விஞ்ஞானி சார்லஸ் டார்வின் எப்படி இந்த விலங்குகள் இந்தத் தீவுக்கு வந்திருக்கும் ? என்று வியந்தார்.
காலபாகஸ் தீவு ஆமையின் மூததையானது தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கெலோனாய்டிஸ் சிலின்சிஸ் என்ற சிறிய அளவு ஆமை என்று, மரபணு ஆய்வாளர்கள் அறிவித்து உள்ளனர்.
காலபாகஸ் தீவில் காணப் படும் ராட்சத ஆமைகள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக்கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் தத்தளித்தபடி தற்செயலாகக் காலபாகஸ் தீவில் கரை ஒதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
இந்த முறையில் இனப் பெருக்கம் செய்யும் அளவுக்கு ஒரு ஜோடி ஆமைகள் அல்லது ஒரே ஒரு கருவுற்ற பெண் ஆமையாவது தென்அமெரிக்கக் கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ராட்சத ஆமைகளின் உடலில் நிறைய கொழுப்பு இருப்பதால் பல மாதங்கள் கடலில் உணவும் நீரும் இன்றி ராட்சத ஆமைகள் பிழைத்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ஆனால் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவுக்கு வந்த சிறிய அளவுள்ள ஆமைகள் பின்னர் பெரிய ஆமையாக மாறியதா ?அல்லது ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவுக்கு பெரிய அளவுள்ள ஆமைகள் வந்ததா ? என்பது உறுதி செய்யப் படவில்லை.
மரபணு ஆய்வில் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கெலோனாய்டிஸ் ஆமைகள் முதன் முதலில் எஸ்பானலோ தீவிலும் செயின்ட் கிறிஸ்டோபல் தீவிலும் குடியேறிய பிறகு, மற்ற தீவுகளுக்கு குடியேறி இருப்பது தெரிய வந்துள்ளது.ஆமைகளின் கடல் பயணத்துக்கு கடல் நீரோட்டங்கள் காரணமாக இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
மரபணு ஆய்வில் ,தென் அமெரிக்கக் கண்டத்தின் கெலோனாய்டிஸ் ஆமைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் ஹிங்கிபேக் ஆமையின் நெருங்கிய சொந்தமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
தென் அமெரிக்கக் கண்டத்துக்கும் கெலோனாய்டிஸ் ஆமைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி, அட்லாண்டிக் பெருங் கடலில் பல மாதங்கள் தத்தளித்த படி மிதந்து சென்று, தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
குறிப்பாக காலபாகஸ் தீவுக் கூட்டமானது காலபாகஸ் பீட பூமி என்று அழைக்கப் படும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகள் ஆகும்.
அத்துடன் தென் அமெரிக்கக் கண்டத்தையும்  காலபாகஸ் தீவுக் கூட்டத்தையும் இணைக்கும் வண்ணம் கடலுக்கு அடியில் இரண்டு கடலடி மேடுகள் இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
காலபாகஸ் தீவில் நீந்தவோ மிதக்கவோ இயலாத ராட்சத ஆமைகள் காணப் படுவதன் மூலம் ,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது, தென் அமெரிக்கக் கண்டதுக்கும் காலபாகஸ் தீவுகளுக்கும் இடையில் தரைவழித் தொடர்பு இருந்திருப்பதும் அதன் வழியாக ராட்சத ஆமைகள் இடம் பெயர்ந்து இருப்பதையும் புலப் படுத்துகிறது.
இதே போன்று காலபாகஸ் தீவில் நேசோரைசோமிஸ் டார்வினி என்று பெயர் சூட்டப் பட்ட காலபாகஸ் தீவு எலிகளும் வாழ்ந்திருக்கின்றன.தற்பொழுது அந்த எலி இனம் அழிந்து விட்டது. நான்கே நான்கு மாதிரிகள் மட்டும் உள்ளன.
ராட்சத ஆமைகளைப் போல் அல்லாது சிறிய அளவுள்ள எலியின் உடலில் கொழுப்பும் நீரும் குறைவாக இருப்பதால் எலிகளால் பல நாட்கள் கடலில் உமாவும் நீரும் இன்றி தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து இருக்க இயலாது.
எனவே காலபாகஸ் தீவில் வாழ்ந்த எலியின் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக தென் அமெரிக்கக் கண்டதுக்கும் காலபாகஸ் தீவுக்கும் இடையில் தரைவழித் தொடர்பு இருந்திருப்பது உறுதியாகிறது.
இதே போன்று காலபாகஸ் தீவில் காணப் படும் இகுவானா என்று அழைக்கப் படும் ஊர்வன வகை விலங்கினங்கள் காணப் படுகிறது.இந்த விலங்குகளின் மூததையானது தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் பச்சை நிற இகுவானக்கள் ஆகும்.
இந்த விலங்குகளால் தங்களின் உடல் வெப்பத்தை சீராக வைத்து இருக்க இயலாது.தாவரங்களை உண்ணும் இந்த விலங்குகளின் உணவு செரிப்பதற்கே சூரியனின் வெப்பம் தேவை.இல்லையென்றால் இந்த விலங்குகள் குளிரில் விரைத்து இறந்து விடும்.
எனவே காலபாகஸ் தீவில் காணப் படும் இகுவானாக்கள் மூலமாகவும் தென் அமெரிக்கக் கண்டதுக்கும் காலாபகஸ் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்திருப்பது உறுதியாகிறது.
இதே போன்று இந்தியப் பெருங் கடலில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் , கொமரோஸ், செஷல்ஸ்,மாகி,பிரஸ்லின்,உள்பட மாஸ்கரீன் தீவுகள் என்று அழைக்கப் படும் மொரீசியஸ்,ரோட்ரிகஸ்,மற்றும் ரீ யூனியன் ஆகிய தீவுகளிலும் ராட்சத ஆமைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்த தீவுகளில் டெஸ்ட்யூடின்ஸ் என்ற ஆமைக் குடும்பத்தைச் சேர்ந்த சிலிண்ட்ராப்சிஸ் மற்றும் டிப்சோகெலிஸ் என இரண்டு இனத்தைச் சேர்ந்த ராட்சத ஆமைகளின் வாழிடமாக இருந்திருக்கிறது.
இதில் சிலிண்ட்ராப்சிஸ் இனம் முற்றிலும் அழிந்து விட்டது.தற்பொழுது டிப்சோகெலிஸ் என்று அழைக்கப் படும் இனத்தைச் சேர்ந்த ராட்சத ஆமைகள் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரத்திற்கும் அதிக எண்ணிக்கையில் செஷல்ஸ் தீவில் காணப் படுகிறது.
சிலிண்ட்ராப்சிஸ் இனத்தைச் சேர்ந்த ராட்சத ஆமைகளின் புதை படிவங்கள் மடகாஸ்கர் தீவு மற்றும் மாஸ்கரிணி தீவுகள் என்று அழைக்கப் படும் மொரீசியஸ் ரோட்ரிக்ஸ் மற்றும் ரீ யூனியன் ஆகிய தீவுகளில் வாழ்ந்து இருப்பதும் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
மரபணு ஆய்வில் சிலிண்ட்ராப்சிஸ் இனத்தைச் சேர்ந்த ராட்சத ஆமைகள் மடகாஸ்கர் தீவில் இருந்து மற்ற தீவுகளுக்கு இடம் பெயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தத் தீவுகள் ஒவொன்று ஐநூறு முதல் அறுநூறு கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளன.
இந்தத் தீவுகளுக்கும் ராட்சத ஆமைகள் கடலில் மிதந்து சென்ற மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் தத்தளித்த படி தற்செயலாகக் கரை ஒதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ஆனால் செஷல்ஸ் தீவில் செஷல்ஸ் தீவில் சூக்லோசஸ் கார்டினரி என்று அழைக்கப் படும் தவளைகள் காணப் படுகின்றன.தவளைகளால் கடல் நீரில் உயிர் வாழ இயலாது.தவளைகள் தோலின் மூலம் சுவாசிக்கும் பிராணிகள் எனவே தவளைகள் சுவாசிக்க அதன் தோல் ஈரப் பசையுடன் இருக்க வேண்டியது அவசியம். பல நாட்கள் தவளைகள் கடலில் தாவரங்களின் மேல் மிதந்து சென்றால் அதன் தோல் உலர்ந்து விடும்.எனவே தவளைகளால் சுவாசிக்க இயலாமல் இறக்க நேரிடும்.
இதே போன்று செஷல்ஸ் தீவில் தவளைகளைப் போலவே ஈரப் பதமான சூழலில் வாழக் கூடிய கடல் நீரில் உயிர் வாழ இயலாத சீலியன் என்று அழைக்கப் படும் பார்வைத் திறனற்ற கிராண்டி சோனியா செசலென்சிஸ் என்ற உயிரினம் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக மாஸ்கரிணி தீவுககளும் காலபாகஸ் தீவுக் கூட்டத்தைப் போலவே மாஸ்கரினி பீட பூமி என்று அழைக்கப் படும் ஒரு கடலடி பீடப் பூமியின் மேல் அமைந்து இருக்கும் தீவுகள் ஆகும்.
எனவே கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் பல நூறு கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருக்கும் மாஸ்கரினி தீவுகளில் காணப் படுவதன் மூலம், கடல் மட்டம் தாழ்வாக இருந்திருப்பதைப் புலப் படுத்துவதுடன், அதன் காரணமாகத் தற்பொழுது கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் கடலடி பீட பூமிகள், கடல் மட்டத்திற்கு மேலாக இருந்து விலங்கினங்களின் இடப் பெயர்ச்சிக்கு சாதகமாக இருந்திருப்பதையும் உறுதிப் படுத்துகிறது.

தரையில் வாழும் நத்தைகள் தீவுகளுக்குச் சென்றது எப்படி?




ஐரோப்பாக் கண்டத்தில் பேலியா பெர்வர்சா என்று அழைக்கப் படும் இனத்தைச் சேர்ந்த நத்தைகள் காணப் படுகின்றன.இந்த நத்தைகளுக்கு உப்பு நீர் ஒத்தக் கொள்ளாது என்பதுடன் இந்த நத்தைகளால் கடல் நீரில் உயிர் வாழவும் இயலாது.
இந்த நிலையில் 1824 ஆம் ஆண்டு ஜான் கிரே என்ற உயிரியல் வல்லுநர்,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் ட்ரிடான் ட குன்கா என்ற எரிமலைத் தீவில் சில நத்தைகளைக் கண்டார்.
அந்த நத்தைகள் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகளைப் போலவே இருந்தது, ஆனால் அளவில் கொஞ்சம் பெரியதாக இருந்தது.
ட்ரிடான் ட குன்கா தீவானது ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து எட்டாயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருகிறது. எனவே அவ்வளவு தொலைவு கடல் பகுதியைக் கடந்து பேலியா பெர்வர்சா நத்தைகள், ஐரோப்பாவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு வந்து இருக்க இயலாது, என்ற அடிப்படையில், ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் பட்ட நத்தைகள், புதிய இனமாகக் கருதப் பட்டு ,ட்ரிடானியா என்று பெயர் சூட்டப் பட்டது.
இந்த நிலையில் நெதர் லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் ,டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் குழுவினர் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகள் மற்றும் ஐரோப்பாவில் இருந்து ஆயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில்,வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் அசோர் என்ற எரிமலைத் தீவு,அதே போன்று ,அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா எரிமலைத் தீவு ,அதே போன்று அசோர் எரிமலைத் தீவில் இருந்து ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ட்ரிடான் எரிமலைத் தீவிலும் காணப் படும் நத்தைகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு செய்தனர்.
அந்த ஆய்வில் அசோர் தீவு நத்தைகள் ஐரோப்பாவில் காணப் படும் நத்தைகளின் வழித் தோன்றல்கள் என்பதும்.ஐரோப்பாவில் இருந்து அசோர் தீவுக்கு வந்த நத்தைகள் காலப் போக்கில் இரண்டு புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
அதே போன்று ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் படும் எட்டு வகையான நத்தைகளின் மூததையானது ட்ரிடான் ட குன்கா தீவில் இருந்து ஒண்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் அசோர் தீவில் காணப் படும் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது.
இதே போன்று அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா தீவில் காணப் படும் நத்தைகளின் மூததையும் அசோர் தீவு நத்தைகள் என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் ஐரோப்பாவில் காணப் படும் சில பேலியா நத்தைகள் நத்தைகளின் மூததையானது மதீரா தீவின் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது.
ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து அசோர்,ட்ரிடான் ட குன்கா,மற்றும் மதீரா ஆகிய தீவுகளுக்கு நத்தைகள் பரவிய பிறகு புதிய இன வகைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும் அதே போன்று மதீரா தீவில் இருந்து புறப்பட்ட இடமான ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்த பிறகும் புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
ஆனால் நத்தைகள் எப்படி பல்லாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து எரிமலைத் தீவுகளுக்கு சென்றன ? என்ற கேள்வி எழுந்தது.
பொதுவாகத தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு,அந்த விலங்குகள் கடலில் மிதந்து வந்த தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் மிதந்த படி தீவுகளில் கரையொதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.ஆனால் தரை வாழ் நத்தைகளுக்கு கடல் நீர் ஒத்துக் கொள்ளாது என்பதால் அந்த விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டு விட்டது.
விஞ்ஞானி சார்லஸ் டார்வினும் இதே போன்று நத்தைகள் உலகின் பல பகுதிகளுக்கு எப்படி பரவி இருக்கும்? என்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடு பட்டார்.அவர் சில நத்தைகளைக் கடல் நீரில் அமிழ்த்தியும் சோதனை செய்தார்.அவர் நத்தைகளால் இரண்டு வார காலத்துக்கு மேல் கடலில் ஊயிர் வாழ இயலாது என்றும் கருதினார்.
அத்துடன் அவர் நத்தைகள் பறவைகளின் காலில் ஒட்டிக் கொண்டு கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று நம்பினார்.
டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் அவர்களும், பேலியா நத்தைகள் பறவைகளின் உடலில் ஒட்டிக் கொண்டு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து மற்ற தீவுகளுக்கும்,பிறகு தீவில் இருந்து ஐரோப்பாக் கண்டதுக்கும் வந்திருக்கலாம் என்று நம்புகிறார்.
ஆனால் பறவைகள் நத்தைகளை உண்ணக கூடியவை என்றாலும் எப்படியோ சில நத்தைகள் பறவையின் இறக்கையில் ஒட்டிக் கொண்டு தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்றும் நம்புகிறார்.
ஆனால் அசோர் மற்றும் ட்ரிடான் ட குன்கா ஆகிய இரண்டு தீவுகளும்,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடரில் உள்ள எரிமலைகளின் உச்சிப் பகுதி ஆகும்.
தற்பொழுது அந்த கடலடி எரிமலைத் தொடரானது பதினாறாயிரம் அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் இருந்து எட்டாயிரம் அடி உயரத்துக்கு எழுந்து இருக்கின்றன.
ஆனாலும் அந்த எரிமலைத் தொடரானது தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் ,கடல் மட்டத்தில் இருந்து ஏழாயிரத்தி நானூறு அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்திருந்தால் ,தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரானது, கடல் மட்டத்துக்கு மேலாக ஆயிரத்தி நானூறு அடி உயரத்தில் இருந்து இருக்கும்.
எனவே அந்த எரிமலைத் தொடர் வழியாக அசோர் தீவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு நத்தைகள் எளிதாக வந்து சேர்ந்து இருக்க முடியும்.

எனவே கடல் பகுதியை எளிதில் கடக்க இயலாத நத்தைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பது உறுதியாகிறது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?