Posts

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது. இதற்கு ஆதாரமாக இந்தியாவிற்கு தெற்கே ஏழாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கெர்கூலியன் என்ற எரிமலைத் தீவில் காணப் படும் மண்புழுக்கள் விளங்குகின்றன. மண்ணுக்கு அடியில் வாழும் மண்புழுக்களால் நீந்தவோ பறக்கவோ இயலாது. இந்நிலையில் மற்ற நிலப் பகுதிகளில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தனிமைத் தீவீற்கு மண்புழுக்கள் தரை வழியாகவே சென்றிருக்க இயலும். ஆனால் கெர்கூலியன் தீவோ கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்திருக்கும் ஒரு எரிமலைத் தீவு ஆகும். இந்நிலையில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் மூழ்கி இருக்கும் அந்தக் கடலடிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்களும் விதை மற்றும் மகரந்தத் துகள்களும் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இதன் அடிப் படையில் அந...

பாலைவனங்களில் காணப் படும் மணலை உருவார்க்கியது கடல்.

பாலைவனங்களில் காணப் படும் மணலை உருவார்க்கியது கடல். பாலைவனங்களில் கடல் உயிரினங்களின் புதைபடிவங்கள் காணப் படுகின்றன. எனவே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாலைவங்கள் கடல் மட்டத்திற்கு அடியில் இருந்திருக்கின்றன. அப்பொழுது கடல் மட்டத்திற்கு மேலே இருந்த பாறைகளை கடல் நீர் அரித்ததால் மணல் உருவானது. அவைகள் காற்று மழை மற்றும் .ஆறினாலும் கூட கடலுக்கு அடியில் கொண்டுவரப் பட்டன. அதன் பிறகு நிலப் பகுதிகள் கடல் மட்டத்திற்கு மேலே உயர்ந்ததால் இன்று நிலத்தின் மேல் மணல் வெளி காணப் படுகிறது. இதற்கு ஆதாரமாக ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியிலும், வட கிழக்குப் பகுதியில் எகிப்திலும், தென்மேற்குப் பகுதியில் நமீபியாப் பாலைவனப் பகுதியிலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன. விஞ்ஞானி.க.பொன்முடி.

ஏன் நிலப் பகுதியை விட கடல் பகுதியின் பரப்பளவு அதிகமாக இருக்கிறது?

ஏன் நிலப் பகுதியை விட கடல் பகுதியின் பரப்பளவு அதிகமாக இருக்கிறது? பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாறைக் குழம்புக் கோளமாக இருந்த நம் பூமி படிப்படியாகக் குளிர்ந்து. இதனால் முதலில் புவி ஓடும் அதன் பிறகு உள் அடுக்குகளும் உருவானது. பாறைக் குழம்பு குளிர்ந்து இருகிய பொழுது அதில் இருந்து நீரும் மற்ற வாயுக்களும் பிரிந்து வெளியேறியது. பாறைக் குழம்பில் இருந்து சூடான நீரும் வாயுக்களும் வெளியேறியதால் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டாக உருவானது. அடர்த்தி அதிகமான திரவத்தில் அடர்த்தி குறைந்த பொருள் மிதக்கும்.எனவே பூமிக்கு அடியில் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் உருவான அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்தது. பூமிக்கு அடியில் உருவான புதிய பாறைத் தட்டுகள் உயர்ந்ததால் மலைகள் உருவாகின.உயராத பகுதிகள் பள்ளத் தாக்குகளாக உருவாகின. நிலப் பகுதிகள் உயர்ந்தன.ஆனால் நிலப் பகுதிகளைப் போன்று நீரால் உயர இயலாது.நீரின் பரவும் தன்மையால்,முதலில் நீர் பக்கவாட்டில் பரவிய பிறகு தான் மேல் நோக்கி உயர முடியும்.எனவேதான் நிலப் பகுதிகளை விட கடல் பகுதி அதிகமாக இருக்கிறது. விஞ்ஞானி.க.பொன்முடி.

கடலுக்கடியில் ஒரு கண்டம். விஞ்ஞானி.க.பொன்முடி.

கடலுக்கடியில் ஒரு கண்டம். விஞ்ஞானி.க.பொன்முடி இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் கடல் மட்டத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் , ஒரு நிலப் பகுதி மூழ்கியிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். கடல் தரையிலிருந்து பத்தாயிரம் அடி உயர்ந்து இருக்கின்ற அந்த கடலடிப் பிரதேசத்தின் மத்தியப் பகுதியில் , வழிந்தோடிய எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் பாகங்களும் விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. அந்த எரிமலைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதில் அந்தப் பாறைகள் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானவைகள் எனபது தெரியவந்திருக்கிறது. இதன் அடிப் படையில் தற்பொழுது கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் அடியில் மூழ்கி இருக்கும் அந்த நிலப் பகுதி ,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்திற்கு மேலே இருந்திருப்பதுடன் ,அதில் காடுகளும் இருந்திருக்கிறது என்று மைக் காபின் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார். மேலும் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலப் பகுதி கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கிறது என்றும் அவர்...

பூமி குளிர்ந்து கொண்டிருக்கிறது.

பூமி குளிர்ந்து கொண்டிருக்கிறது - விஞ்ஞானி.க.பொன்முடி. பூமிக்கு அடியில் உள்ள அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகும் பொழுது அதிலிருந்து நீர் மற்றும் வாயுக்கள் பிரிவதால் அடர்த்தி குறைவான பாறைத் தட்டுகள் உருவாகின்றன. பாறைத் தட்டுகள் உருவாகும் பொழுது பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் சுடுநீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதால் கடல் மட்டடம் உயர்கின்றது. பூமிக்கு அடியில் புதிதாக உருவாகும் பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்வதால் கடல் தரையில் இருந்து நிலப் பகுதிகள் கடல் மட்டத்திற்கு மேலாக உயர்கின்றன. ஒரு இடத்தில் மட்டும் பாறைத் தட்டுகள் உயரும்பொழுது பாறைத் தட்டுகளின் விளிம்புகளுக்கு இடையே ஏற்படும் உரசலால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது. நில மட்டம் உயர்வதாலும் , நீர்ப்பரப்பு அதிகரித்து நீர் மட்டமும் உயர்ந்து கொண்டிருப்பதால் பூமி குளிர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தோனேசியத் தீவுகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்தோனேசியத் தீவுகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. - விஞ்ஞானி க.பொன்முடி. இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்த சுனாமியை உருவாக்கிய சுமத்ரா தீவு நிலநடுக்கதிற்குப் பிறகு.அப்பகுதியில் இருந்த சிமிலு என்ற தீவின் வடமேற்குப் பகுதி கடல் மட்டத்திலிருந்து மூன்று அடி உயர்ந்து இருந்தது. இதனால் தீவில் வடமேற்குப் பகுதியில் புதிதாக கடற்கரை உருவாகி இருந்தது.மேலும் தீவைச் சுற்றிலும் கடலுக்கு அடியில் இருந்த கடல் பஞ்சுகள் கடல் மட்டத்திற்கு மேலாக வெளியில் தெரிந்தன. மேலும் 26, டிசம்பர்,2004 ,நில நடுக்கத்திற்குப் பிறகு மூன்று மாதம் கழித்து 28.மார்ச்,2005.அன்று ஏற்பட்ட நில நடுக்கதிற்குப் பிறகும் சிமிலு தீவு நான்கு அடி உயர்ந்து காணப்பட்டது. அத்துடன் தீவைச் ச்ற்றிலும் முன்னூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு,கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை கடலுக்கு அடியில் இருந்த கடல் பஞ்சுகள் வெளியில் தெரிந்தன. தீவு ஏன் திடீரென்று நான்கு அடி உயர்ந்தது? பூமிக்குள் இருக்கும் பாறைக் குழம்பு படிப்படியாகக் குளிர்ந்து கொண்டிருப்பதால் பல்வேறு அடுக்...

earthquakereason

india is not drifting .....but raising upward. this is the real reason for the earthquake. india was not an island continent before 65 million years as text books explained, fossils of an land animals which lived in that period in asian regeion also discovered in the naxal village of andrpradesh district of india. at the same time whale fossils has been unearthed in gyjarath and in simla hill of north india, therfefore the real reason for the earthquake is raising of land masses. with regards, g. ponmudi, chennai, 28.oct.2007.