axereport

axereport புதைப்படிவப் புதிர்களுக்கு கண்டது தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படியில் புவியியல் ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலவில்லை. இந்த நிலையில் புதைப்படிவப் புதிர்களுக்கு நிலமட்டமும் கடல் மட்டமும் உயர்ந்ததே காரணம் என்பது நான் மேற்கொண்ட தெரியவந்துள்ளது. அதே போன்று,அடிப்படை ஆதாரம் இல்லாத காரணத்தால்,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் புவியியல் ஆராய்ச்சியாளர்களால் ஆதாரங்கள் மூலம்,நிரூபிக்கப் பட்ட, விளக்கத்தைத் தெரிவிக்க இயலவில்லை. அதே போன்று தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகளுக்கு நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உறுதி படுத்தப் பட்ட விளக்கத்தைத் தெரிவிக்க இயலவில்லை. இந்த நிலையில்,இந்த இரண்டு நிகழ்வுகளும் தீவுகளுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் ஏற்பட்டு இருப்பதைத் தரைமட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் நான் கண்டு பிடித்து இருக்கிறேன். விலங்கினங்கள் தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெறுவதற்குத் தாவரங்களை அல்லது மற்ற விலங்குகளை கொன்று உண்ணுவதன் மூலம் பெறுகின்றன.ஆனால் தாவரங்கள் தங்களின் உயிர் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் தேவையான சக்தியைப் பெறுவதற்கு,சூரிய ஒளியின் உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து சர்க்கரை சத்துப் பொருளை உற்பத்தி செய்து சேமித்து பயன்படுத்துகின்றன. எனவே தாவரங்கள் உயிர் வாழவும் வளரவும் சூரிய ஒளி அத்தியாவசியமான ஒன்று. இந்த நிலையில் பூமி தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில் சூரியனை சுற்றி வருவதால்,நில நடுக் கோட்டுக்கு இணையாக நகரும் சூரியனின் ஒளி துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு ஐந்தாறு மாதங்கள் கிடைப்பதில்லை.இவ்வாறு பல மாதங்கள் சூரியன் உதிக்காத இரவு காலத்தில் வெப்ப நிலையும் மைனஸ் எண்பது டிகிரி வரை செல்கிறது இது போன்ற பாதகமான சூழ் நிலையில் தாவரங்களால் உயிர் வாழவோ வளரவோ சாத்தியமே இல்லை. அதே போன்று விலங்குகளும் இது போன்ற சூழலில் உயிர்வாழ இயலாது. அதிலும் குறிப்பாக ஊர்வன வகை விலகினினங்களால் பாலூட்டி வகை விலங்கினங்கள் போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது.எனவே துருவப் பகுதிகளில் ஊர்வன வகை விலங்கினங்களால் உயிர்வாழவே சாத்தியம் இல்லை. இந்த நிலையில்,,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய 'குளோசெப் டெரிஸ்' என்ற தாவரத்தின் புதைப்படிவங்கள் தென் துருவப் பகுதியில் அமைந்து இருக்கும் ,மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்குப் பனி அடுக்குகளால் மூடப் பட்டு இருக்கும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டது புதிராக இருந்தது. அதே போன்று இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,காட்டுப் பன்றி போன்ற நீண்ட பற்களால் மண்ணிக் கிளறி மண்ணுக்கு அடியில் இருக்கும் கிழங்கு வகைகளை உண்டு வாழ்ந்த லிஸ்டரோ சாரல் என்ற விலங்கின் புதைப்படிவங்கள்,இந்தியா,சீனா,மங்கோலியா,ஐரோப்பா,ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டதுடன், ஆழமான கடல் பகுதியாலும், வேகமான கடல் நீரோட்டத்தாலும் பிரிக்கப் பட்டு இருக்கும், அண்டார்க்டிக்கா கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டதும் புதிராக இருந்தது. முக்கியமாக அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் அமைந்து இருக்கும் கண்டங்களின் ஓரப் பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதை போன்று ஒன்றுக்கொன்று இணையான வடிவத்தில் இருப்பதை, முதன் முதலில் ஓரளவு திட்டமான உலக வரைபடத்தை தயாரித்த, ஆபிரஹாம் அர்டெலியஸ் என்ற ஆராய்ச்சியாளர் கவனித்தார். அதன் அடிப்படையில் முன்னொரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே தொடர்ச்சியாக இருந்து இருக்க வேண்டும் என்றும் பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்ற விளக்கத்தைக் கூறி இருந்தார். இந்த நிலையில், அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் அமைந்து இருக்கும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில்,ஊர்வன வகை விலங்கினமான.ஆழமற்ற கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்த, மூன்று அடி நீளமுள்ள முதலை போன்ற விலங்கின் புதை படிவங்கள்,கண்டு பிடிக்கப் பட்டதும் புதிராக இருந்தது. இந்தப் புதிர்களை விடுவிப்பதற்காக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் என்ற காலநிலை இயல் ஆராய்ச்சியாளர் ஒரு விளக்கத்தைக் கூறினார். குறிப்பாக அவர் ஒத்த கால நிலையில் வாழக் கூடிய வளரக் கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதைப்படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு உலக வரைபடத்தை வெட்டியும் ஒட்டியும் ஒரு புதிய உலக வரைபடத்தைத் தயாரித்தார். அதன் அடிப்படையில்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, பூமியின் வட துருவம் முதல் தென் துருவம் வரை தொடர்ச்சியாக இருந்ததாகவும், அந்தக் கண்டத்தைச் சுற்றி ஆழமற்ற அக்கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார். அந்தப் பெருங் கண்டத்திற்கு 'பாஞ்சியா' என்று அந்தக் கண்டதை சுற்றி இருந்த கடலுக்கு 'பாந்தலாசா' என்று பெயர் சூட்டினார். இந்த விளக்கத்தின் படி, இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அண்டார்க்டிகாக் கண்டமானது தென் துருவப் பகுதியிலேயே இருக்கிறது. எனவே தென் துருவப் பகுதியில் இருந்த,ஆண்டுக்கு ஐந்தாறு மாதங்கள் தொடர்ந்து இரவு நீடிக்கும் காலத்தில் மைனஸ் எண்பது டிகிரி வரை செல்லும் குறைந்த வெப்ப நிலை இருக்கும் அண்டார்க்டிகாக் கண்டத்தில், எப்படி குளோசெப் டெரிஸ் மரங்கள் உள்ள காடுகள் வளர்ந்தன என்பது விடுவிக்கப் பட வேண்டிய புதிராகவே இருக்கிறது. அதே போன்று இது போன்ற பாதகமான சூழல் எப்படி லிஸ்டரோ சாரல் விலங்குகள் வாழ்ந்தன என்பது விடுவிக்கப் படவேண்டிய புதிராகவே இருக்கிறது. இந்த நிலையில் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாஞ்சியாக் கண்டம் இரண்டாக்கப் பிளவுபட்டுப் பிரிந்ததாகவும், அதனால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி வடபகுதியை நோக்கி நகர்ந்ததாகவும், அதே போன்று கோண்டுவானா என்ற கண்டம் உருவாகி தென் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில்,பூமத்திய ரேகையைப் பகுதியில் 'டெதிஸ்' என்ற புதிய கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார். இந்த விளக்கத்தின் படியும் அண்டார்க்டிகாக் கண்டமானது பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவப் பகுதியிலேயே இருக்கிறது. இந்த நிலையில் வடபகுதி லாரேசியாக் கண்டமானது இரண்டாக்கப் பிளவு பட்டுப் பிறந்ததாகவும் அதனால் வட அமெரிக்கக் கண்டம் உருவாக்கி மேற்கு திசையிலும் யூரேசியாக் கண்டம் உருவாக்கிக் கிழக்கு திசையிலும் நகர்ந்ததாகவும் அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். இந்த விளக்கத்தின் படி வட அமெரிக்கா மற்றும் ஆசியக் கண்டங்களின் வடபகுதிகளானது கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே,கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது. இந்த நிலையில்,ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிரெண்டு இனவகைகளைச் சேர்ந்த டைனோசர்களின் புதைப்படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கு ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலவில்லை.ஏனென்றால் யானைக்கு கூட்டத்தை விடப் பல மடங்கு தாவரங்களை உணவாகக் உட்கொள்ளக் கூடிய டைனோசர்களின் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய அளவுக்கு காடுகள் எப்படி ஆண்டுக்கு ஐந்தாறு மகான்கள் சூரியன் உதிக்காத துருவப் பகுதியில் வளர்ந்தன என்பது விடுவிக்கப் படாத புதிராக இருக்கிறது. இதே போன்று ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இருக்கும் ஆக்ஸல் ஹைபெர்க் தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அடர்ந்த பசுமைக் காடுகள் வளர்ந்து இருந்ததற்கு சான்றாக மண்ணில் பாதி புதையுண்ட நிலையில்,மரங்களின் அடிப்பகுதியில் ஏராளமாக இருப்பதை தாவரவியல் வல்லுநர்கள் கண்டு பிடித்து ஆச்சரியத்தில் மூழ்கி விட்டனர். அந்த மரங்களின் அடிப்பகுதியை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அந்த மரங்களானது நூறு முதல் நூற்றி ஐம்பது அடி உயரம் வரை வளரக் கூடியதாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.அதே போன்று அந்த மாயன்களின் அடிப் பகுதியில் இருந்த ஆண்டு வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில்,அந்த மரங்களானது ஆயிரம் ஆண்டு காலம் வளரக் கூடியதாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் எப்படி அதைத் தீவி ல் அடர்த்த பசுமைக் காடுகள் வளர்ந்தன என்று யாருக்கும் தெரிய வில்லை. இந்தக் ஆண்டு பிடிப்பு பற்றி கருத்து தெரிவித்த ,லூசியானா பலகலைக் கழகத்தை சேர்ந்த தோல் தாவரவியல் வல்லுனரான டாக்டர் ஹோப் ஜெகரான் ஐந்து மாதங்கள் இரவு நீடிக்கும் தீவில் மரங்கள் எப்படி வளர்ந்தன என்பது மர்மமாக இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்.அத்துடன் இந்த மரங்களை பார்க்கும் பொழுது தண்ணீருக்கு அடியில் மனிதர்கள் வசிசத்துக் கொண்டு இருப்பதை பார்ப்பது போல இருக்கிறது என்றும் வியப்பு தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக பாலூட்டி விலங்கினங்கள், உணவை செரிப்பதன் மூலம் தங்கள் உடலுக்கு தேவையான வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன. அத்துடன் உடல் வெப்பத்தை பாதுகாக்க மயிர்த் தோலையும் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பாலூட்டிகளின் உடல் வெப்பமாக இருப்பதால், இரவிலும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இயங்க முடிகிறது. அத்துடன் பனிப் பிரதேசமான துருவப் பகுதிகளிலும் பாலூட்டிகளால் வாழ முடிகிறது. . அதனால்தான் தற்பொழுது ஆர்க்டிக் பகுதியில் மான்கள், கரடிகள்,'நரிகள், முயல்கள், போன்ற பாலூட்டி விலங்கினங்களே காணப்படுகிறன. ஆனால் முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக்கூடிய, பாம்புகள் பல்லிகள், முதலைகள் மற்றும் ஆமைகளால் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது. எனவே ஊர்வன வகை விலங்கினங்கள் உடல் வெப்பத்தை உயர்த்திக் கொள்ள சூரிய வெளிச்சத்தில் உடலைக் காய வைக்கின்றன. அதனால் துருவப் பகுதிகளில் ஊர்வன வகை விலங்கினங்கள் வசிப்பதில்லை. மாறாக ஊர்வன வகை விலங்கினங்கள் அதிக வெப்பம் நிலவக் கூடிய பூமத்தி யரேகைப் பகுதியிலயே அதிகம் காணப்படுகின்றன. இந்த நிலையில் ஆர்க்டிக் பகுதியில், கிரீன்லாந்து தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும் எல்லிஸ் மெர் தீவில், நாலரை முதல் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, ராட்சத பாம்புகள், முதலைகள், பல்லிகள், மற்றும் கால பாகஸ் தீவுகளில் "இந்தத் தீவு களுக்கு இந்த விலங்குகள் எப்படி வந்தன" என்று டார்வின் பார்த்து வியந்த, ராட்சத தரை வாழ் ஆமைகள், போன்ற ஊர்வன வகை விலங்கினங்களின் புதை படிவங்கள் மற்றும் ஆதிகாலக் குரங்குகள், டபிர் என்று அழைக்கப்படும் பன்றி போன்ற விலங்கினம், ஐந்து டன் எடையுள்ள நீர் யானை போன்ற "கோரி போடன்" என்ற விலங்கு மற்றும் காண்டாமிருகம் போன்ற "பிராண்டோ தீரி" ஆகிய பாலூட்டி விலங்கினங்களின் புதை படிவங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இந்தப் புதைப்படிவங்களின் அடிப்படையில் இந்த இடமானது , சதுப்பு நிலக் காடுகள்,மற்றும் மழைக் காடுகள் போல இருந்ததாக கருதப் படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த கண்டு பிடிப்பு குறித்து கருத்து தெரிவித்த, கொலராடோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, விலங்கியல் வல்லுனரான டாக்டர், ஜெயலின் எபெர்லி, ‘’எல்லிஸ் மெர் தீவில், ராட்சத தரை வாழ் ஆமைகளின் புதை படிவங்கள் காணப்படுவது குழப்பமாக இருக்கிறது’’ என்று தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் அண்டார்க்டிகாக் கண்டத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்கள் முதல் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதைப்படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. முக்கியமாக விஸ்கான்ஸிஸ் மில்வாக்கி பல்கலைக் கலகத்தைச் சேர்ந்த, தொல் சூழலியால் வல்லுனரான, பல முறை தனது குழுவினருடன் அண்டார்க்டிக் கண்டத்திற்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்ட,டாக்டர் எரிக் குல்பிரான்சன் இது வரை சேகரித்த தாவரங்களின் புதைப்படிவங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், ஒரு முக்கியமான தகவலைத் தெரிவித்து இருக்கிறார். அதாவது,அண்டார்க்டிகாக் கண்டத்தில் கடந்த நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,கடந்த ஒன்றரைக் கோடி ஆண்டு காலத்திற்கு முன்பு உள்ள காலம் வரையிலான முப்பத்தி எட்டரைக் கோடி ஆண்டு காலமாக வாழ்ந்த தாவரங்களின் புதைப்படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் கடந்த முப்பத்தி எட்டரைக் கோடி ஆண்டு காலமாகவே அண்டார்க்டிக் கண்டத்தில் சூரிய வெளிச்சமும் வெப்பமும் இருந்து இருக்கிறது என்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இவ்வாறு அண்டார்க்டிகாக் கண்டத்தில் கடந்த முப்பத்தி எட்டரைக் கோடி ஆண்டு காலமாகவே தாவர வகைகள் வாழ்ந்து இருப்பதற்குக் கண்டத் தட்டு நகர்ச்சிக் கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூற இயலாது.

Comments

Popular posts from this blog

fossils study

study

Abcd report