ஆய்வுச் சுருக்கம்.
ஆய்வுச் சுருக்கம்.
இந்த உலகமக்கள் ஆட்டுவிக்கும் ஒரு முக்கியமான பிரச்சினைக்கு காரணம் கண்டு பிடித்து இருக்கிறேன்.ஆம்...நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் முக்கியமான காரணம் புவியடி எரிமலை வெடிப்புகளே என்பதே எனது ஆய்வின் முடிவில் தெரிய வந்திருக்கிறது.
பூமியின் மேலோடானது கண்டங்களாலும் கடல் தளத்தாலும் ஆனது.கண்டங்களானது இலேசான கிரானைட் பாறையால் ஆகி இருக்கிறது.இதன் சராசரி தடிமனானது நாற்பது கிலோ மீட்டர்.கடல்தளமானது கடினமான நீரை உறிஞ்சாத கடப்பாக் கல்லால் ஆனது.இதன் சராசரி தடிமனானது ஏழு கிலோ மீட்டர்.
இந்த மேலோடானது நிலையாக இருக்கிறது.புவியடி எரிமலை வெய்ப்புகளால் நில அதிர்ச்சியிலும் சுனாமிகளும் ஏற்படுகின்றன என்பது எனது ஆய்வில் பல ஆதாரங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.'ஆனால் கண்டங்களானது கடல்தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாகக் கண்டங்களுக்கு இடையில் உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு, பாறைக் குழம்பு தொடர்ந்து வந்து, குளிர்ந்து இருகிப் புதிய கடல்தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்த கடல் தளங்களுடன், கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு கண்டங்களானது கடல் தளங்களுடன் நகரும் பொழுது,கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல்தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும் அதனால்,கடல் தரையின் மேல் தொடர்ச்சியாக நிலா அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதே போன்று,கடல்தளங்களானது, கண்டங்களுக்கு அடியிலும்,தீவுகளுக்கு அடியிலும் உரசியபடி நகர்ந்து செல்வதாகவும்,அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும்,அதனால் கடலுக்கு அடியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அதனால் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு, சுனாமி அலைகள் உருவாக்குவதாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக கிரீன்லாந்து ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் கண்டு பிடிக்கப் பட்ட பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,பூமி உருவாகி நானூற்றி ஐம்பது கோடி ஆண்களாக இருக்கலாம் என்று மதிப்பிடப் படுகிறது.
இந்த நிலையில்,புதிதாக கடல்தளங்கள் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும்,மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியின் உச்சிப் பகுதிகளாக இருக்கும், புனித பீட்டர் பாறைத்த தீவு மற்றும் புனித பால் பாறைத் தீவுகளில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது, நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே,கடல்தளமானது நிலையாக இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில்,மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,புதிய கடல்தளங்கள் உருவாகி, மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது,முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் நிலையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது, நாசா வெளியிட்ட ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' மூலம் தெரிய வந்துள்ளது.
இதன் மூலமாகவும் கடல்தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இதே போன்று, தனித்த தனியாகக் கடல் தளங்களுன், வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியிலும், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதும்,நாசா வெளியிட்ட ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல்தரையின் மேல், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதன் மூலமாகவும்,கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் எல்லாம் நிலையாக இருப்பதும்,நாசா வெளியிட்ட, உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம்,ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இவ்வாறு கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,தொடர்ந்து புதிய கடல்தளங்கள் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால்,பூமியின் அளவானது அதிகரிக்க வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது.
இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் இன்னொரு விளக்கத்தையும் கூறுகின்றனர்.
அதாவது,பசிபிக் கடல் பகுதியில்,புதிதாகக் கடல் தளங்கள் உருவாகி ,பசிபிக் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும்,கண்டங்களுக்கு அடியிலும்,தீவுகளுக்கு அடியிலும்,உரசியபடி நகர்ந்து சென்ற பிறகு,வெப்பத்தால் பாறைக் குழம்பாக உருவாகி, மேல் நோக்கி உயர்ந்து, கடல் தளத்தையும் கண்டங்களையும் பொத்துக் கொண்டு, கடல் தளத்தின் மேலேயும்,கண்டங்களுக்கு மேலேயும்,எரிமலைகளாக உருவாகுகின்றன.என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இந்த நிலையில், வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில்,ஆணாகிம் எரிமலைத் தொடர்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடர் மற்றும் கரிபால்டி எரிமலைத் தொடர்களானது, அருகருகே உருவாகி இருக்கிறது.
இதற்கு,பசிபிக் கடல் பகுதியில் புதிதாக உருவாக்கி நகரும் கடல்தளமானது வட அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் செல்வதே காரணம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
புவியியல் கூறுவதை போன்று அந்த எரிமலைகளானது உருவாகி இருந்தால்,அந்த எரிமலைகள் எல்லாம் ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறில்லாமல்,வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில்,அனாகிம் எரிமலைத் தொடர்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடர் மற்றும் கரிபால்டி எரிமலைத் தொடர்களானது,ஒன்றுக்கு கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கிறது.
இவ்வாறு,வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில்,ஆணாகிம் எரிமலைத் தொடர்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடர் மற்றும் கரிபால்டி எரிமலைத் தொடர்களானது,ஒன்றுக்கு கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதற்கு புவியியல் ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலவில்லை.
இவ்வாறு,வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில்,ஆணாகிம் எரிமலைத் தொடர்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடர் மற்றும் கரிபால்டி எரிமலைத் தொடர்களானது,ஒன்றுக்கு கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதன் மூலமாகவும்,கடல்தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணம் அகி இருக்கிறது.
இந்த நிலையில்,அட்லாண்டிக் கடல் பகுதியில், கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி, வில் போன்று வளைவான பாதையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது, எப்படி உருவானது என்ற கேள்விக்கும் புவியியல் ஆராய்ச்சியாளர்களுக்கு விடை கூறத் தெரிய வில்லை.
ஏனென்றால்,அட்லாண்டிக் கடல் தரையானது,மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், தொடர்ந்து புதிதாக உருவாகி, மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக, புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில்,பூமிக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயரும் எரிமலைப் பிழம்பால்,அட்லாண்டிக் கடல் தரையானது, தொடர்ந்து துளைக்கப் பட்டு, அந்த எரிமலைகள் உருவாகி இருந்தால்,அந்த எரிமலைகளானது, கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லமால், கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில்,உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது,வடக்கு தெற்கு திசையை நோக்கி, வில் போன்று வளைவான பாதையில் உருவாகி இருக்கிறது.
எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது, அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி இருக்க வாய்ப்பில்லை என்று சில புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
அதனால்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பசிபிக் கடல் பகுதியில்,எரிமலைச் செயல் பாட்டால் உருவாகியா பிறகு, ஒரு பாறைத் தட்டாக உருவாகி ,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்த, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்திருக்கலாம் என்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாகப் பாலம் போன்று மத்திய அமெரிக்க நிலப் பகுதி அமைந்து இருக்கிறது.
எனவே எப்படி கரீபியன் பாறைத் தட்டு, எப்படி மத்திய அமெரிக்க நிலப் பகுதியைக் கடந்து, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்தது, என்ற கேள்வி எழுந்தது.
இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருக்கிறது, என்றும் அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் விலங்குகளின் போக்கு வரத்து நடைபெற்றது, என்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இந்த நிலையில்,மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள நிகரகுவா நாட்டில், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புத் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது,
எனவே கரீபியன் பாறைத் தட்டானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பசிபிக் கடல் பகுதியில்,எரிமலைச் செயல் பாட்டால் உருவாகி, ஒரு பாறைத் தட்டாக மாறி,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்த அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்திருக்கலாம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் மாற்று விளக்கமும் சாத்தியமற்ற விளக்கம் ஆகும்.
இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, கியூபா தீவிலும் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புத் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலமாக கரீபியன் தீவுக் கூட்டமானது, பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாகப் பாலம் போன்று இருந்து இருப்பதும், அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்து நடைபெற்று இருப்பதும் உறுதியாகிறது.அத்துடன் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது, பல்லாயிரம் அடிவரை தாழ்வாக இருந்து, உயர்ந்து இருப்பதும் உறுதியாகிறது.
இந்த நிலையில் கரீபியன் தீவுகளில் கடல் உயிரினங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.இதன் மூலமாக கரீபியன் நிலப் பகுதிகளும் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
இவ்வாறு கரீபியன் நிலப் பகுதியானது, கடலுக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததால், தனித் தனிப் பகுதிகளாக உருவாகி இருக்கிறது.அத்துடன் கடல் மட்டமும் உயர்ந்ததால், கரிபியன் நிலப் பகுதிகளானது, தனித் தனித் தீவுகளாக உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு கரீபியன் நிலப் பலமானது, புவித் தரையில் இருந்து உயர்ந்த பொழுது ஏற்பட்ட பிளவுகள் வழியாக, பூமிக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பானது, வெளி வந்ததால்,கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைகள் உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு, கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைகளானது, வடக்கு தெற்கு திசையை நோக்கி, வில் போன்று வளைவான பாதையில் உருவாகி இருப்பதன் மூலமாகவும்,கடல்தலும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபனம் அகி இருக்கிறது.
இவ்வாறு,தொடர்ந்து புதிய கடல்தளங்கள் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும்,மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியின் உச்சிப் பகுதிகளாக இருக்கும், புனித பீட்டர் பாறைத்த தீவு மற்றும் புனித பால் பாறைத் தீவுகளில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது, நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பன் மூலமாகவும்,
மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,புதிய கடல்தளங்கள் உருவாகி, மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன், வட அமெரிக்கா மற்றும் தென் அமேரிக்கா ஆகியா கண்டங்களானது,முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் நிலையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பன் மூலமாகவும்,
இதே போன்று, தனித்த தனியாகக் கடல் தளங்களுன், வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியிலும், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பன் மூலமாகவும்,
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது,முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் நிலையில்,வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில்,உருவாகி இருக்கும் அனாகிம் எரிமலைத் தொடர்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடர் மற்றும் கரிபால்டி எரிமலைத் தொடர்களானது,ஒன்றுக்கு கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பன் மூலமாகவும்,
அட்லாண்டிக் கடல் பகுதியில், கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி, வில் போன்று வளைவான பாதையில் உருவாகி இருப்பதன் மூலமாகவும்,கடல்தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி,நான்கு முக்கிய ஆதாரங்கள் மூலம், நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில்,கண்டங்களின் மேலும் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதைப்படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.இதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
கடல் தரையும், கண்டங்களும் நிலையாக இருந்தால்,கடல் பகுதியைக் கடக்க இயல்த டைனோசர்களின் புதை படிவங்களானது, தீவுக் கண்டங்களாக இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா ஆகிய கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
முக்கியமாக நான்கு கிலோ மீட்டர் உயரத்திற்கு, பனிஅடுக்குகளால் மூடப் பட்டு இருக்கும் ஆண்டார்க்டிக்கா கண்டத்தில், டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
பூமியானது, தனது அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில்,சூரியனை சுற்றி வருவதால், துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் தொடர்ந்து சூரியன் உதிப்பதே இல்லை.இது போன்று தொடர்ந்து ஐந்து மாதங்கள் இரவு நீடிக்கும் காலத்தில், வெப்ப நிலையானது, மைனஸ் எண்பது டிகிரி வரை கிழே எழுகிறது
இது போன்ற சூழலில் தாவரங்கள் எப்படி வாழ முடித்து என்ற கேள்வியும் எழுகிறது.
ஏனென்றால் விலங்குகளைப் போல் அல்லாமல், தாவரங்கள் உயிர் வாழ்வதற்கும் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமான உணவான, சர்க்கரைப் பொருளை, சூரிய ஒளியின் உதவியுடன்,ஒளிச் சேர்க்கை செய்து தயாரித்து, தங்களின் உடலில் சேமித்துப் பயன்படுத்துகிறது.
எனவே தொடர்ந்து ஐந்து மாதங்கள் சூரிய ஒளி படாத துருவப் பகுதிகளில், காடுகளும் டைனோசர்களும் உயிர் வாழ்ந்து இருக்க சாத்தியமே இல்லை.
ஆனால் துருவப் பகுதிகளில் காடுகள் வளர்ந்து இருந்ததற்கு சான்றாக மரங்களின் புதை படிவங்களும்,டைனோசர்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில்,துருவப் பகுதிகளில் காடுகள் எப்படி வளர்ந்தன,டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன என்ற கேள்விகளுக்கு, புவியியல் ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயல வில்லை என்பதும் இங்கு முக்கியமாகக் குறிப்பிடத் தக்கது.
இந்த நிலையில்,கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் டைனோசர்களின் புதை படிவங்களும், மரங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம்,டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது, தற்பொழுது இருப்பதைக் காட்டிலும்,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
அத்துடன் டைனோசர்கள் காலத்தில், கண்டங்களுக்கு இடையில்,காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்து, அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்து நடைபெற்று இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
அத்துடன் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த காலத்தில், கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த காலத்தில்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்து இருப்பதும்,அதனால் துருவப் பகுதிகளிலும், அதிக வெப்ப நிலை இருந்து இருப்பதும்,உறுதியாகிறது.
அத்துடன் டைனோசர்கள் காலத்தில் பூமியின் அளவும் சியதாக இருந்து இருப்பதும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
இவ்வாறு டைனோசர்கள் காலத்தில் பூமியின் அளவானது சியதாக இருந்ததால்,பூமத்திய ரேகைக்கு இணையாக நகரும்,சூரியனின் ஒளியானது, துருவப் பகுதிகளில் அதிக அளவில் விழுந்து இருப்பதும் உறுதியாகிறது.இவ்வாறு டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில் அதிக அளவில் சூரிய வெளிச்சமும் வெப்பமும் இருந்ததால்,துருவப் பகுதிகளில் காடுகள் வளர்ந்து இருக்கின்றன. அதில் டைனோசர்களும் வாழ்ந்து இருக்கின்றன.
அதன் பிறகு கடல் மட்டமானது, படிப் படியாக உயர்ந்ததால்,கடலின் பரப்பளவும் அதிகரித்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் படிப் படியாகக் குறைந்து இருப்பதும் உறுதியாகிறது.இதன் மூலம்,பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதும் உறுதியாகிறது.
இவ்வாறு நில மட்டமும் கடல் மட்டமும் உயர்ந்ததால், பூமியின் அளவானது பெரிதானதால்,துருவப் பகுதிகளில் விழுந்த சூரிய வெளிச்சத்தின் அளவும் குறைந்து இருக்கிறது.அதன் காரணமாக துருவப் பகுதிகளில் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால்,காடுகளும் டைனோசர்களும் அழிந்து இருக்கின்றன.
இவ்வாறு துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட,டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம்,பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதும்,பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதும்,ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
தற்பொழுது கடல் மட்டமானது சராசரியாக நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.
கிரீன்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் கண்டு பிடிக்கப் பட்ட தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்று மதிப்பிடப் படுகிறது.
இதன் மூலம் கடந்த நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது, நான்கு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டமானது, இரண்டு கோடி ஆண்டுகளில், இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் பூமி மூழ்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள், நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம். குள்ள வகை நீர் யானைகளின் உடல் நீண்டு குறுகி இருப்பதுடன், கால்களும் குட்டையாக இருப்பதால், குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது.
எனவே இந்த விலங்கு எப்படி சைப்ரஸ் தீவுக்கு வந்தன என்று ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலவில்லை.
மடகாஸ்கர் தீவில், ஆப்பிரிக்காவை பூர்வீகமாக் கொண்ட, ''லெமூர்'' என்று அழைக்கப் படும் குரங்கினமும் காணப் படுகிறது.
சில ஆராய்ச்சியாளர்கள்,லெமூரின் மூதாதைகள், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து,தற்செயலாகக் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு, மடகாஸ்கர் தீவை அடைந்த பிறகு, இனப் பெருக்கம் செய்து பெருகி இருக்கலாம் என்று நம்புகின்றனர்.
ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது.ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது.
இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது, புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதில் ஒரு குள்ள வகை நீர் யானை மடகாஸ்கர் தீவில் இருந்த, ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து, பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
அப்படியே ஆனாலும் மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது.
அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் நீர் யானைகள், இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம். இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது.
இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால், அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது.
அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த, பெரிய நீர் யானை, தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால், குள்ள வகை நீர் யானையான மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது. எனவே மடகாஸ்கர் தீவுக்கு, நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன.
இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு, நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும், நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது.
இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும், குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள், ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஐந்து தீவுகளிலும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது இயற்கைக்கு மாறான விளக்கம்.
எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது.
குறிப்பாக பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி அங்கி இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. தற்பொழுது கடல் மட்டமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.இந்த நிலையில்,இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதன் மூலம், நில மட்டத்தை விட கடல் மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர்காலத்தில் கண்டங்கள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும்.
000000000000000000000
மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ''சைவ முதலை''யின் புதை படிவங்கள்.
கடந்த,1998, ஆம் ஆண்டு, மடகாஸ்கர் தீவில்,சீமோ சூக்கஸ் என்று அழைக்கப் படும்,ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகள் தொன்மையான, முதலையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
மூன்று அடி நீளமுள்ள அந்த முதலையில் முகப் பகுதியானது, நீண்டு இருப்பதற்குப் பதிலாக, மிகவும் குட்டையாக இருந்தது.அதன் தாடையில் நீண்ட கூர்மையான பற்கள் இருப்பதற்குப் பதிலாகக் கிராம்பு போன்ற வடிவில், தாவரங்களை உண்பதற்கு ஏற்றபடி இருந்தது. அதன் உடலின் மேற் பகுதியும், கால்களின் மேற் பகுதியும், எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.அதன் வாலும் மிகவும் குட்டையாக இருந்ததுடன், வாலும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.
எனவே, அந்த வாலைக் கொண்டு, அந்த முதலையால் நீந்தி இருக்க இயலாது.அதன் கால்களும், தரையில் நடப்பதற்கு ஏற்றதாக இருந்தது. அந்த முதலையால் உடலைப் பக்க வாட்டில் வளைக்க இயலாத படி, ஆமையின் உடலை மூடி இருக்கும், கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது.
ஏற்கனவே சீமோ சூக்கஸ் முதலையின் புதை படிவங்கள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் எகிப்து பகுதிலும், ஆசியக் கண்டத்தில் சீனாவிலும், தென் அமெரிக்கக் கண்டத்தில் உருகுவே நாட்டிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது. ஆனால், சீமோ சூக்கஸ் எப்படி மடகாஸ்கர் தீவுக்கு வந்தது, என்ற கேள்விக்கு வல்லுனர்களால் சரியான விளக்கத்தை அளிக்க இயல வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
நன்றி!
விஞ்ஞானி.க.பொன்முடி.
000000000000
Comments