எனது புத்தகத்தின் அத்தியாயங்கள் பற்றிய ஒரு அறிமுகம்.
எந்த ஆதாரத்தை முதலில் கூறுவது எந்த ஆதாரத்தை இரண்டாவதாகக் கூறுவது என்று நீண்ட நாளாகவே யோசித்து ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.
000000000000000000000000
முதல் அத்தியாயத்தில்...
000000000000000000000000
தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு ,பூமி வெப்பமடைந்து கொண்டு இருபதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கமானது ஒரு தவறான விளக்கம் என்பதை எடுத்துக் காட்ட...
கடந்த காலத்தில், குறிப்பாக ஒரே கால கட்டத்தில், கடல் மட்ட உயர்வால் பவள உயிரினங்கள் இறந்து புதை படிவமாகி இருப்பதைப் பற்றியும், அதே கால கட்டத்தில்,பனிப் பொழிவால் ஆர்க்டிக் பகுதியில் பனி யானை இனம் அழிந்தது பற்றியும் தெரிவித்து அதன் அடிப்படையில் கடல் மட்ட உயர்வுக்கு பனி உருகுதல் காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு, என்று தெளிவு படுத்தி இருக்கிறேன்.
00000000000000000000000000
இரண்டாவது அத்தியாயத்தில்...
00000000000000000000000000
கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் தீவுகள் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்பைப் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறேன்,அதே போன்று கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதைப் படிவங்களானது சில தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதைக் குறிப்பிட்டு,அதற்கு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததே காரணம் என்பதைத் தெளிவு படுத்தி இருக்கிறேன்.
00000000000000000000000000
மூன்றாவது அத்தியாயத்தில்...
00000000000000000000000000
வட துருவப் பகுதித் தீவில், வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய கள்ளி வகைத் தாவரங்களின் புதைப் படிவங்கள் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் அந்த தீவானது, அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு,துருவப் பகுதிக்கு நகர்ந்து வந்ததே காரணம் என்று ‘நகரும் கண்டங்கள் கொள்கையின்’ அடிப்படையில் விளக்கம் கூறப் படும் நிலையில்,ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கு, நகரும் கண்டங்கள் கொள்கையின்’ அடிப்படையில்,விலங்கியல் மற்றும் புவியியல் வல்லுனர்கள் சரியான விளக்கத்தைக் கூற இயலாமல் தலையைப் பிய்த்துக் கொண்டு இருப்பது பற்றி தெரிவித்து விட்டு...
நார்வே நாட்டுக் கடல் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் டைனோசர்களின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையிலும்,
அதே போன்று,இந்தியப் பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மரங்களின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையிலும்,
கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதைப் படிவங்களானது கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு டைனோசர்கள் காலத்தில் ,கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததுடன்,கண்டங்களுக்கும
அதன் பிறகு,
துருவப் பகுதிகளில்,பனிப் படலங்களுக்கு அடியில் டைனோசர்களின் புதைப் படிவங்கள் காணப் படுவதற்கு,டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால்,கடலின் பரப்பளவானது குறைவாக இருந்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அதிகமாக இருந்ததால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகள் இருந்தது என்றும்,அதன் பிறகு சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகப் பூமிக்குள் இருந்து வெளிவந்த நீரால் கடல் மட்டம் உயர்ந்ததால்,கடலின் பரப்பளவு அதிகரித்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைந்ததால்,துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்தது என்றும் அதனால் டைனோசர்களும் அழிந்தது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறேன்.
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
நான்காவது அத்தியாயத்தில்...
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனிப் பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது,அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அதே போன்று ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு நகர்ந்து செல்லும் பொழுது சுனாமி உருவாகுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறிக் கொண்டு இருக்கும் நிலையில்,
முப்பத்தி ஐந்து ஆண்டு காலத்தில்,உலக அளவில் ஏற்பட்ட லட்சக் கணக்கான நில அதிர்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்...
தனித் தனிக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததை எடுத்துக் காட்டி அதன் அடிப்படையில் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதை நிரூபித்து இருக்கிறேன்.
அதே போன்று, கண்டங்களும் நிலையாக இருப்பதை எடுத்துக் காட்டி இருக்கிறேன்.
அதே போன்று,இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனித் தனிக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் நம்பிக் கொண்டு இருக்கும் நிலையில்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகாமல் இருப்பதன் அடிப்படையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்று நாசா ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கும் நிலையில்...
அதே நாசாவின் வலைப் பக்கத்தில்,இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் இந்தியக் கண்டம் நகர்ந்ததால்தான் தெற்காசிய சுனாமி உருவானது என்று ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கும் நிலையில் அதே நாசாவின் வலைப் பக்கத்தில், இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் ஆஸ்திரேலியாக் கண்டம் நகர்ந்ததால்தான் தெற்காசிய சுனாமி உருவானது என்று முன்னுக்குப் பின் முரணாக அடிப்படை ஆதாரமற்ற கற்பனை விளக்கத்தைத் தெரிவித்து இருப்பதைப் பற்றி அம்பலப் படுத்தி இருக்கிறேன்.
அதே போன்று,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூடமானது ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்பிக் கொண்டு இருக்கும் நிலையில்,குறிப்பாக அந்தப் பாறைத் தட்டானது பசிபிக் கடல் பகுதியில் உருவாகி,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறதா அல்லது அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறதா என்று புவியியல் வல்லுனர்களுக்கு தெரியாத நிலையில்....
குறிப்பாகக் கரீபியன் பாறைத் தட்டு எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரிவிக்காமல்,வெறுமனே கரீபியன் பாறைத் தட்டானது நகர்ந்து வட அமெரிக்கக் கண்டத்துடன் உரசியதால் கரீபியன் தீவுப் பகுதியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று ஒரு மோசடி விளக்கத்தை என்று அழைக்கப் படும் அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருப்பதையும் அம்பலப் படுத்தி இருக்கிறேன்.
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
ஐந்தாவது அத்தியாயத்தில்...
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
எரிமலைகள் குமுறும் பொழுது அந்த எரிமலைகளைச் சுற்றி இருக்கும் தரைப் பகுதியும் உயர்ந்து இறங்குவதால் அந்த எரிமலையைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருப்பதை எரிமலை இயல் வல்லுனர்கள் குறிப்பிட்டு இருப்பதைச் சுட்டிக் காட்டி...
அதே போன்று,சுனாமிகளை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட பொழுது,அந்த நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருப்பதை சுட்டிக் காட்டி,அதன் அடிப்படையில்,சுமத்ரா,ஹைத்த
Comments