புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்தவைகள்.



ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் புவியியல் வல்லுனர்களால்,கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில், விளக்கம் கூற இயல வில்லை.
கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின், புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும்,தீவுகளிலும், காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும்,அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,கூறப் படும் விளக்கமானது,ஒரு தவறான விளக்கம் என்பது தெரிய வந்துள்ளது.
அத்துடன், கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின், புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும்,தீவுகளிலும், காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,கடல் மட்டமானது,பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததுடன்,அந்தக் காலத்தில்,கண்டங்களுக்கு இடையில்,காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததுடன்,அதன் வழியாக விலங்கினங்களின் போக்குவரத்து நடை பெற்று இருப்பதே காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
அத்துடன்,பூமிக்கு அடியில்,எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாலேயே,சுமத்ரா தீவிலும்,ஹைத்தி தீவிலும்,ஹோன்சு தீவிலும்,நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதும், தெரிய வந்துள்ளது.
கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு,தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகையில் இருக்கும் கரிய மில வாயுவானது,வளி மண்டலத்தில் கலப்பதால்,பூமியின் வெப்ப நிலையானது,உயர்ந்து கொண்டு  இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்களானது,உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கமானது,ஒரு தவறான விளக்கம் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில்,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரியும் பாறைக் குழம்பு நீரானது,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலப்பதாலேயே,கடல் மட்டமானது உயர்ந்து கொண்டு இருக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது.
முக்கியமாகக் கடல் மட்டமானது,தொடர்ந்து உயர்ந்து,மலைகள் உள்பட, நிலப் பகுதிகள் யாவும்,கடலால் மூழ்கடிக்கப் படும் என்பதும்,அதனால்,தரையில் வாழக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும் என்பதும், தெரிய வந்துள்ளது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?