பத்திரிக்கை செய்தி வெளியீடு.

பத்திரிக்கை செய்தி வெளியீடு.
விடுநர்
விஞ்ஞானி க.பொன்முடி,
சென்னை
பெறுனர்
ஆசிரியர்,
நாளிதழ்,வார இதழ்,தொலைக் காட்சி.
சென்னை.
வணக்கம்!
பொருள்- எரிந்து முடிந்த நட்சத்திரதின் மையத்தில் கிரகம் உருவாகுகிறது என்பதை நான் உலகுக்குத் தெரிவித்த பிறகு,அதே விளக்கத்தை ஆஸ்திரேலியா நாட்டு ஆராய்ச்சியாளர் தெரிவித்தது தொடர்பாக.
நான், கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் பூமியின் தோற்றம் மற்றும் இயக்கம் குறித்த தகவல்களின் அடிப்படையில்,ஆய்வு செய்து கொண்டு இருக்கிறேன்.
எனது ஆய்வில்,எரிந்து முடிந்த நட்சத்திரங்களின் மையத்தில் கிரகங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்தது.
அது குறித்த தகவலை, நான், 2007 ஆம் ஆண்டு,விகடன் பிரசுரம் வெளியிட்ட’எனது ‘பூமிப் பந்தின் புதிர்கள்’’புத்தகத்திலும்,2009 ஆம் ஆண்டு மின்னஞ்சல் மூலம் ஒரு விஞ்ஞானிக்கும்,தெரிவித்தேன்.
2010 ஆம் ஆண்டு இணையத்திலும் பதிவு செய்தேன்,அந்தப் பதிவானது,கூகிள் பட்டியலிலும் காணக் கிடைக்கிறது.
இந்த நிலையில்,கிரகங்களின் தோற்றம் குறித்து நான் கூறிய விளக்கத்தையே,ஆஸ்திரேலிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள்,ஊடகங்களுக்குத் தங்களின் விளக்கமாகத் தெரிவித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
எனது விளக்கம்.
பிரிட்டிஷ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் விண்வெளியில்,ஒரு எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையத்தில்,நிலவை விடப் பெரிய வைரக் கோளப் படிகம் உருவாகி இருப்பதைக் கண்டு பிடித்ததை பி பி சி வெளியிட்டது.
அதே போன்று,நமது சூரியனை விடப் பல மடங்கு வெப்பத்தைக் கதிர் வீச்சாக வெளியிடும்,ஒரு பால்சார் என்று அழைக்கப் படும்,துடிப்பு நட்சத்திரத்தை,மிக நெருக்கமாக, மூன்று சிறிய கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதைப் போலந்து நாட்டு ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்ததைத் தொடர்ந்து,எப்படி அந்தக் கிரகங்கள்,அந்தப் பால்சார் நட்சத்திரத்துக்கு அருகில்,ஆவியாகாமல் வலம் வந்து கொண்டு இருக்க முடியும்,என்ற கேள்வி எழுந்தது.
இந்தக் கேள்விக்கு, டாக்டர் மார்க் குச்சனர் என்ற விஞ்ஞானி,அந்தக் கிரகங்களானது,பல கிலோ மீட்டர் ஆழத்துக்கு,வைரப் படிகங்களால் ஆன வைரக் கிரகங்களாக இருந்தால்தான்,அந்தப் பால்சார் நட்சத்திரத்துக்கு அருகில்,ஆவியாகாமல் வலம் வந்து கொண்டு இருக்க முடியும்,என்ற விளக்கத்தை, ஆஸ்பென் நகரில் நடந்த, விண்வெளி மாநாட்டில்,கூறினார்.
அதன் அடிப்படையில்,நான்,விண் வெளியில், வெற்றிடத்தில், வைரம் உருவாக இயலாது,என்றும் ஒரு கிரகம் அளவுக்கு வைரக் கோளம் உருவாக வேண்டும் என்றால், அதற்கு பிரமாண்ட அளவில் கார்பனும்,அந்தக் கார்பனை வைரமாக்கக் கூடிய அளவுக்குப் பிரமாண்ட அளவில் அழுத்தமும் வேண்டும் என்றும்,இந்த இரண்டு அம்சங்களும் எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையத்தில் இருக்கிறது,எனவேதான் ஒரு எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையத்தில்,நிலா அளவுள்ள ஒரு வைரக் கோளம் உருவாகி இருக்கிறது என்றும்,அது போன்ற ஒரு எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் வாயு மண்டலத்தைப் பால்சார் நட்சத்திரமானது,கவர்ந்து இழுத்து ஆவியாக்கி விடும் பொழுது,அதன் மையத்தில் உருவாகி இருந்த, வைரக் கோளம் மட்டும்,ஒரு கிரகமாக, அந்தப் பால்சார் நட்சத்திரத்தை, வலம் வரத் தொடங்குகிறது, என்று விளக்கம் தெரிவித்தேன்.
அதன் அடிப்படையில்,நம் பூமி, நிலா உள்பட, அனைத்து கிரகங்களும், துணைக் கிரகங்களும்,எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையத்திலேயே உருவாகி இருக்கின்றன, என்பதைக் கண்டு பிடித்தேன்.
இந்த நிலையில்,கடந்த 2011 ஆம் ஆண்டு,ஆஸ்திரேலியா நாட்டு ஆராய்ச்சியாளர்கள்,தாங்கள் ஒரு பால்சார் நட்சத்திரத்தை, மிக நெருக்கமாக வலம் வந்து கொண்டு இருக்கும்,ஒரு கிரகத்தைக் கண்டு பிடித்து இருப்பதாகவும்,அந்தக் கிரகமானது,பால்சார் நட்சத்திரத்தால், வாயுக்களை இழந்த, ஒரு நட்சத்திரத்தின் மிச்சம் என்றும்,தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த விளக்கமானது,அச்சு அசலாக, எனது விளக்கத்தை ஒத்து இருப்பதை, தற்செயலானதாக இருக்கும், என்று நான் கருத வில்லை.
எப்படி இருப்பினும்,கிரகங்கள் எவ்வாறு உருவாகுகின்றன,என்ற கேள்விக்கு, ஆதாரங்களின் அடிப்படையில்,உலகுக்கு முதன் முதலில்,விளக்கம் கூறிய விஞ்ஞானி,என்ற பெயரை மட்டும்,என்னிடம் இருந்து யாராலும் பறிக்க இயலாது.
எனவே,தாங்கள் இது குறித்த செய்தியைத் தங்களின் மேலான ஊடகத்தில் வெளியிட்டு,உண்மையை உலகுக்குத் தெரிவிக்க வேண்டும் எனத் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!
தங்களின்,நம்பிக்கையுள்ள,
விஞ்ஞானி,க.பொன்முடி,
சென்னை.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?