கடல் உருவானதற்கு ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கம் தவறு.


நிலவின் மேற்பரப்பில் குறிப்பாக துருவப் பகுதியில் நீரானது பனிக் கட்டி வடிவில் இருப்பது ஆராய்ச்சியாளர்களை மிகவும் ஆச்சரியப் படுத்தி இருக்கிறது.
அத்துடன் அந்த நீரானது எப்படி நிலவுக்கு வந்தது என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

இந்தக் கேள்விக்கு சில ஆராய்ச்சியாளர்கள்,நிலவுக்கு வால் நட்சத்திரங்கள் மூலம்,நீர் வந்து இருக்கலாம் என்று நம்புகின்றனர்.

இதே போன்று,பூமியிலும்,குறிப்பாகக் கடலில் இருக்கும் அளவில் நீர் எப்படி வந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.


ஏனென்றால்,தற்பொழுது,பூமி நிலா உள்பட அணைத்து கிரகங்களும் துணைக் கிரகங்களும்,முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ஒரு,ராட்சத விண் மேகமானது,தட்டையாகச் சுருங்கிச் சூழன்றதால்,மத்தியப் பகுதியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,அதனைத் தொடர்ந்துஇருந்த தட்டையான பகுதியில் இருந்த,தூசிகளும் வாயுக்களும் ஆங்காங்கே உருண்டு திரண்டதால் கிரகங்களும் துணை கிரகங்களும் உருவானதாக நம்புகின்றனர்.


இவ்வாறு கிரகங்கள் உருவான பொழுது,சூரியனுக்கு அருகில்,வெப்ப நிலையானது அதிகமாக இருந்ததால்,சூரியனுக்கு அருகில்,புதன்,வெள்ளி,பூமி,மற்றும் செவ்வாய் போன்ற பாறைக் கிரகங்கள் உருவானதாகவும், ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

குறிப்பாக செவ்வாய் கிரகம் இருக்கும் இடம் வரையிலும் வெப்பமானது மிகவும் அதிகமாக இருந்ததால்,புதன்,வெள்ளி,பூமி,மற்றும் செவ்வாய் போன்ற பாறைக் கிரகங்களில் நீர் உருவாக வில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.


அத்துடன் செவ்வாய் கிரகத்துக்கு அப்பால் வெப்ப நிலையானது குறைவாக இருந்ததாகவும் அதனால் அந்தப் பகுதியில் உருவான விண் பாறைகள் மற்றும் வால் நட்சத்திரங்களில் நீரானது பனிக் கட்டி வடிவில் உருவானதாகவும், ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

Understanding the distribution of water in our solar system tells us a great deal about how the planets, moons, comets and other bodies formed 4.5 billion years ago from the disk of gas and dust that surrounded our sun. The space closer to the sun was hotter and drier than the space farther from the sun, which was cold enough for water to condense. The dividing line, called the "frost line," sat around Jupiter's present-day orbit. Even today, this is the approximate distance from the sun at which the ice on most comets begins to melt and become "active." Their brilliant spray releases water ice, vapor, dust and other chemicals, which are thought to form the bedrock of most worlds of the frigid outer solar system.

Scientists think it was too hot in the solar system's early days for water to condense into liquid or ice on the inner planets, so it had to be delivered -- possibly by comets and water-bearing asteroids. NASA's Dawn mission is currently studying Ceres, which is the largest body in the asteroid belt between Mars and Jupiter. Researchers think Ceres might have a water-rich composition similar to some of the bodies that brought water to the three rocky, inner planets, including Earth.

-NASA

இந்த நிலையில்,வியாழன் போன்ற பெரிய கிரகங்களின் ஈர்ப்பு விசையின் பாதிப்பால் ,அவ்வப் பொழுது திசை மாறி,சூரியனின் ஈர்ப்பு விசையின் காரணமாக ஈர்க்கப் பட்டு, பூமி மற்றும் நிலவுக்கு அருகில் வந்த, விண் பாறைகள் மற்றும் வால் நட்சத்திரங்களானது,பிறகு,பூமி மற்றும் நிலவின் ஈர்ப்பு விசையின் காரணமாக,நிலா மற்றும் பூமியில் விழுந்த பொழுது,அந்த விண் பாறைகள் மற்றும் வால் நட்சத்திரங்களில் இருந்த பனிக் கட்டியால்,பூமியில் கடல் உருவானதாகவும்,ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

அதே போன்று நிலவிலும் நீர் படிந்ததாகவும், ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.ஆனாலும் தற்பொழுது மேற்கொண்ட ஆய்வில்,நிலா மற்றும் பூமியில் இருக்கும் நீரானது,நிலா மற்றும் பூமியின் ஆழமான பகுதியில் இருந்து மேற்பரப்புக்கு வந்திருப்பது,தெரிய வந்துள்ளது.

எனவே, நிலா மற்றும்,பூமியில் நீர் பெரும் அளவு இருப்பதற்கு, தூசித் தட்டுக் கொள்கையின் அடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் கூறிய விளக்கமானது,ஒரு தவறான விளக்கம் என்பது நிரூபணமாகிறது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?